Tuesday, May 15, 2012

மும்பை டெரரிஸ்ட்களின் திட்டம் நிறைவேறிய இன்னொரு அதிர்சி தகவல்...!!!

கடல் மனிதர்கள் [[sea mans]] பற்றி நாம் எல்லாருக்கும் சரியா தெரியுமா தெரியாதான்னு தெரியாது, எனவே நான் வாசித்த புத்தகங்களில் இருந்தும் நண்பர்களின் அனுவங்களில் இருந்தும் நேரில் சந்தித்தவர்கள் பற்றியும் என்னால் முடிந்தவரை சொல்லுகிறேன், இவர்களை பற்றி எழுதுங்க அண்ணே என்று சொல்லி தன் சொந்த அனுபவங்களையும் நண்பன் கிருஷ்ணா சொல்ல சொல்ல கிரகித்து கொண்டேன்.


மும்பை ஒபேரா ஹோட்டல்.

கிருஷ்ணா மும்பையில் ஒரு கப்பல் கம்பெனியில் மேனேஜராக இருப்பதால் இந்த கடல் மனிதர்கள் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளான்....!! அவன்தான் நேற்று போன் செய்து அண்ணே கொலாபா, நரிமன் பாயிண்ட், கப்பல் துறைமுகம் எல்லாம் சுற்றி பார்க்கலாம் வாங்க அண்ணே என்று உரிமையுடன் அழைத்து [[இழுத்து]] சென்றான்.

நண்பன் கிருஷ்ணா.

முதலில் சென்றது நரிமன்பாயின்ட் கடற்கரை, ஏற்கனேவே பார்த்தது என்றாலும் இப்போதும் அந்த இடம் அருமையான லோகேஷனாகவே இருக்கிறது, நெஞ்சினிலே படத்தில் டாக்டர் விஜய் அழுது அழுது காதலில் உருகி இந்த கடற்கரை படியில் அமர்ந்துதான் பாடுவார். இன்னும் அநேக ஹிந்தி, தமிழ், தெலுங்கு பட சூட்டிங்குகள் இங்கே நடைபெறுகிறது, அது மட்டுமா காதல் ஜோடிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஜெக'ஜோதி'யாக சுற்றி திரிகிறார்கள்...!!!

சிட்டுகள் ஜாலியாக...

ஏற்கனவே மும்பை வெயிலில் தகிக்க அந்த கடல் காற்று உடம்பை வருடிய சுகம் அருமை, கடலோரம் வாங்கிய காற்று சுகமாக இருந்தது'ன்னு சத்தமாக நான் பாட, எங்களை கூட்டி வந்த மராட்டி கார் டிரைவர் ஒரு மாதிரியாக பார்க்க......நான் பொத்தி கொண்டேன் வாயை.....!!!


நிறைய போட்டோ கிராபர்கள் மாடலிங் குட்டிகளை கூட்டிகொண்டு வந்து போட்டோ ஆல்பம் ரெடியாக்கி கொடுக்கிறார்கள், நடிகையாவதற்க்கு என்பதை புரிந்து கொண்டேன்...!!! குடும்பம் குடும்பமாக வந்து கடல் காற்றை ருசித்து செல்கிறார்கள், மும்பை ஜூ பீச் கடலை பார்த்தீங்கன்னா ஒரே குப்பை கூளமாக இருக்கும், கடல் நீரும் அநியாயத்துக்கு சாக்கடை கலந்தே இருககும்...!!!

சுத்தமான கடல்நீர்...!!!

ஆனால் இங்கே கடல் நீர் சுத்தமாக அழகாக இருந்தது. எல்லாவற்றையும் நான் ரசித்து கொண்டிருக்கும்போதுதான் கிருஷ்ணா ஒரு குண்டை தூக்கிப்போட்டான், அண்ணே மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதல் நடந்ததே, அந்த தீவிரவாதிகள் கப்பலில் இருந்து [[இடங்களை காட்டுகிறான்]] சின்ன போட்டுக்கு மாறி அதோ தெரியுதே ஒரு மீனவ குப்பம் அந்த வழியாக வெளியேறி ரெண்டு ரெண்டு பேராக பிரிந்து சென்றுதான் கொலைவெறி தாண்டவமாடினார்கள், 

தீவிரவாதிகள் கப்பலில் வந்து சின்ன போட்டுக்கு மாறிய கடல் பகுதி அதாவது கப்பல்கள் நிற்கும் இடம்.

பக்கத்தில் அதோ தெரியுதே ஒபேரா ஹோட்டல் அங்கேயும் புகுந்து தாக்கினார்கள் என்று ஒவ்வொன்றாக அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே எனக்கு பலமாக இன்னொரு சந்தேகம் வந்தது ஆமாம் பல தீவிரவாதிகளை ஊடுருவ வைத்துவிட்டு இவர்கள் போலீசையும் அரசாங்கத்தையும் திசை திருப்பி விட்டார்களோ என்று, காரணம் அந்த கப்பல் நிற்கும் இடமும் வின்ஜ் அல்லது போட்டுகள் தாராளமாக நடமாடுவதையும் பார்க்கும் போது அப்படிதான் தோன்றியது....!!

தீவிரவாதிகள் கரையேறி ரெண்டு ரெண்டு பேராக பிரிந்து சென்ற மீனவ குப்பம். 

கிருஷ்ணாவிடம் சொன்னேன், ஆனால் அவன் அதை கடுமையாக மறுத்தான் இல்லை அண்ணே இல்லவே இல்லை இதுல படுபயங்கரமான ஒரு அரசியல் இருக்கு, தீவிரவாதிகள் வந்த நோக்கத்தை கன கச்சிதமாக முடித்து விட்டார்கள் அது, மும்பை குண்டு வெடிப்பில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை, ஒரு வாரத்தில் இன்வெஸ்டிகேஷன் முடித்து, அந்த பிரமுகர்கள், அரசியல்வாதிளை அம்பலபடுத்த ரெடியாக, எவ்வளவோ பன்முக மிரட்டல் வந்தும் பயப்படாமல் அனைவரையும் நீதிக்கு முன் நிறுத்துவேன் என்று சபதமெடுத்து காத்திருந்த ஒரு தைரியமான போலீஸ் அதிகாரி டி ஐ ஜி'யை போட்டுதள்ளதான் இந்த அநியாயமான நாடகம் நடந்தது.....!!!

இதுவும் கப்பல்கள் நிற்கும் கடல் பகுதிதான்.

நான் அதிர்ந்து போனேன் என்னைய்யா சொல்ற அதுக்காக இன்னொரு நாட்டில் இருந்து டெரரிஸ்டை கொண்டு வரனுமா...? ஆமா பின்னே மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துல அந்த நாட்டுக்காரன் சம்பந்தமும் இருக்கே அண்ணே யோசிச்சு பாருங்க....???

நான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....................யாரந்த அதிகாரி.......??? நாளைய பதிவில் தொடரும் மற்றும் கடல் வாழ் மக்கள் பற்றியும்......!!!

22 comments:

 1. எத்தனையோ வருடங்களுக்கு முன் பார்த்த நாரிமன் பாயிண்ட்! இப்போது பார்க்கும்போது இன்னும் அழகாகத் தெரிகிறது!
  தெரிந்திராத தகவல்கள் தெரிய வரும்போது அதிர்ச்சி தான் ஏற்படுகிறது! தொடருங்கள்!

  ReplyDelete
 2. எனக்கு பதிவு இரண்டு முறை தெரியுது ...

  ReplyDelete
 3. //யாரந்த அதிகாரி.......??? நாளைய பதிவில் தொடரும் மற்றும் கடல் வாழ் மக்கள் பற்றியும்......!!!

  //

  சஸ்பென்ஸ் வைக்க ஒரு அளவில்லையா ?

  ReplyDelete
 4. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

  எனக்கும் பதிவு இரண்டு தரம் தெரியுது
  நல்ல அனுபவம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது

  ReplyDelete
 5. விஜயகாந்த் படத்தை விட மோசமான பின்னணியை கொண்டிருக்கிறதோ மும்பை தாக்குதல் ...?

  ReplyDelete
 6. எனக்கும் பதிவு இரண்டு தரம் தெரியுது//
  \
  REPEATU..

  super thirll story.

  ReplyDelete
 7. பங்காளி! மேலும் ரகஸியங்கள் அறிய பரபரப்பாகிறது மனசு! விரைவில் வெளியிடுங்கள்!

  ReplyDelete
 8. நேற்று நீதி கதை.
  இன்று நிஜ கதையா.
  விறுவிறுப்பா இருக்கு மக்கா

  ReplyDelete
 9. எலேய் மனோ துப்பறியறாரு....அடுத்த பதிவுக்கு துண்டை போட்டுட்டோம்...ஸநேக்ஸ் உடன்!

  ReplyDelete
 10. பிண்ணனியில் இத்தனை ப்யங்கரமா?

  ReplyDelete
 11. படங்கள் அருமையா இருக்கு மனோ.

  ReplyDelete
 12. படங்களுடன் பதிவு அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. பழைய கள்ளை புதிய பாட்டிலில் அடைத்து விற்பது போன்றதுதான் என்றாலும் நல்ல பதிவு..... கசாப்பிடமும் முடிந்தால் ஒரு பேட்டி எடுத்து போடவும் என் சார்பில் அவன் தலையிலும் ஒரு போடு போடவும்

  ReplyDelete
 14. ம்ம்ம்...வாரே வா ரொம்ப பிளான் பண்ணி இருக்கானுங்க!

  ReplyDelete
 15. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே இடத்துலதான் என்னோட பையன் என்னோட கேமரா பவுச்சை தூக்கி கடலில் வீசினான் ....நல்ல வேளை கேமரா தப்பியது ...

  ReplyDelete
 16. தொடர் விறு விறுப்பா இருக்கு !

  ReplyDelete
 17. மாட்சுக்கு மாட்ச், உடையும் பின் புலப் படமும் தான்

  ReplyDelete
 18. படங்கள் அருமை... சூப்பரா இருக்கு...

  பதிவும் பரபரப்பா போகுது...
  கடைசிப் பத்தி நித்தி-ரஞ்சி மேட்டர் மாதிரி சூடுபிடித்திருக்கிறது...
  ம்... தொடருங்கள் அண்ணா.

  ReplyDelete
 19. பதிவும் படங்களும் சிறப்பாக இருக்கு மனோ. இந்த கடல் பார்க்க அழகாக இருக்கு ஆனால் எனக்கு டெல்லி போக ஆசையிருக்கு ஆனால் இந்த இமிக்கிரேசன் அதிகாரியிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு இருக்கே ஸ்ப்பா அதனால் ரிஸ்க் எடுக்கமாட்டன் இனியும் !

  ReplyDelete
 20. போட்டுத் தள்ளியவர்களை விட்டு விட்டு வேற சாமானியர்களைத் தானே சல்லடை போடுவார்கள் சட்டக்காவர்கள்.

  ReplyDelete
 21. /நிறைய போட்டோ கிராபர்கள் மாடலிங் குட்டிகளை கூட்டிகொண்டு வந்து போட்டோ ஆல்பம் ரெடியாக்கி கொடுக்கிறார்கள், நடிகையாவதற்க்கு என்பதை புரிந்து கொண்டேன்....///

  ஓ......அதுதான் நீங்களும் இங்கு போட்டோ எடுத்து ஆல்பமாக வலைத்தளத்தில் போட்டு இருக்கிறீர்களோ...உங்க படத்தை தமிழ் டைரக்டர் பார்த்தால் புதிய வில்லன் உடனே ரெடி....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!