Tuesday, May 22, 2012

ராஜாக்கலு வந்துலு, ராஜாக்கலு போயிலு....!!!

நேற்றைய தொடர்....


விபத்தில் கப்பல்கள் கடலில் மூழ்க நேரிட்டால், கப்பல் முங்கிய ஒரு மணி நேரத்தில் லைஃப் ராப்ட் எனப்படும் ரெண்டு பேர் அமரும் [[கார்களில் இருப்பது போன்று]] ரப்பர் போன்ற ஒன்று நிறைய ஆட்டோமேடிக்காக வெளியே வருமாம் அதில் ஏறி அமர்ந்து அடுத்த கப்பலோ, ஹெலிகாப்டர் மூலமாக தப்பித்து கொள்ளலாம், இதை து . கணேசன் அவரின் நண்பர் அதில் ஏறி உயிர் பிழைத்ததை சொல்லி உள்ளார்...!!!

சரி இனி அந்த ஆந்திரா'காரனை பார்ப்போம்....

இவன் இன்னொரு கப்பலில் இருந்து கிருஷ்ணாவின் கம்பெனி கப்பலுக்கு புதியதாக வந்திருக்கிறான், நல்ல குடிப்பழக்கம் உண்டாம் [[இல்லைன்னாலும்]] இங்கே வந்தவனுக்கு இங்கே இருக்கும் சக ஊழியர்களுக்கும் இவனுக்கும் ஒத்துபோகவில்லை, எல்லாமே முரணாக இருக்கவே, தலைகால் தெரியாமல் குடித்து விட்டு சலம்பல் பண்ணவே, சக ஊழியர்கள் அவனை பிடித்து கை கால்களை கட்டி போட்டு விட்டார்கள்.


கொஞ்சநேரம் கழித்து பாவம் என கட்டை அவிழ்க்கவும், ஓடிப்போயி கடலில் குதித்து விட்டான். உடனே சின்ன போட்'டில் போயி காப்பாத்தி கொண்டு வந்து கப்பலில் ஏற்ற, தொடர்ந்து தெலுங்கில் திட்டோ திட்டு என்று எல்லாரையும் திட்ட அங்கே தூத்துக்குடி அண்ணாச்சி ஒருவரும் இருக்க, அவரையும் அவர் பரம்பரையையே இழுத்து திட்டி இருக்கிறான்.


கோவம் வந்த அண்ணாச்சி, அவனை மறுபடியும் கடலில் தூக்கி வீச, கண்ட்ரோல் ரூமில் இருந்த கஸ்டம்ஸ் ஆட்கள் பார்த்துவிட, ஓடி வந்து காப்பாற்றி விட்டு கேஸ் எழுத கப்பலை விட்டு எல்லாரையும் வெளியே கொண்டு வரவும், அங்கே கிருஷ்ணா என்ட்ரி ஆகவும், தூத்துக்குடி அண்ணாச்சி காப்பாத்தும்படி அலற, இவன் அந்த ஆபீசர்களுடன் பேசி [[கவனித்து]] கேஸை இல்லாமல் செய்து, ஆந்திராக்காரனை மெண்டல் என்று சொல்லி ஆஸ்பத்திரி கூட்டிப்போகவும் அடுத்தநாள் அவனை ஊருக்கு அனுப்பவும் வெளியே கொண்டு வந்தான்.


அங்கேதான் ஏழரை சனி கிருஷ்ணாவுக்கு காத்திருந்தது, வெளியே வந்ததும், ரோட்டில் நின்று எல்லாரையும் திட்டோ திட்டு என்று திட்ட, ரெண்டுபேர் அவனை மடக்கி பிடித்தும் அவன் அசராததால் கிருஷ்ணா போயி ஒரு அப்பு அப்பிய பின் கொஞ்சம் அடங்கி இருக்கிறான், ஆனாலும் திமிர, எனக்கு இப்பமே சரக்கு வேணும்னு அலற ஆறு குவாட்டர்களை போதாது போதாதுன்னு வாங்கி குடிச்சும் மயங்கவில்லை அண்ணாகாரு...!!!

அவனை விடவும் முடியாது, விட்டால் எங்கேயாவது ஓடிவிடுவான் [[கிருஷ்ணாதான் உத்திரவாதி]] நாளைவரை இவனை பாதுகாத்து அனுப்பினாலே போதும், என்ன பண்ணலாம்னு யோசித்தவன் நேரே ஜெ ஜெ ஆஸ்பிற்றல் கொண்டு போக அங்கே நோ சான்ஸ் சொல்ல [[பேஷன்ட் நிலைமை அப்பிடி]] கிருஷ்ணாவின் கம்பெனி ஆஸ்பிற்றல் கொண்டு போனால் அங்கே டாக்டர் இல்லை நர்ஸ் மட்டுமே இருக்க...


சிஸ்டர் இவனை இன்று ராத்திரி மட்டும் ஒரு ஊசி போட்டு தூங்க வையுங்க என கிருஷ்ணா கெஞ்ச, நர்ஸ், அய்யய்யோ இவன் ஏற்கனவே கப்பல்ல இருந்து காஞ்சிபோயி[!] வந்துருப்பான் நான் வேற தனியா இருக்கேன் முடியாது என்று அலற, வேறே ஒரு தனியார் ஆஸ்பிற்றல் போயி சம்திங் நிறைய கொடுத்து, உறக்கம் ஊசி போடவைக்கும் போது.....

ஊசி போட்ட டாக்டர் சொல்லி இருக்கார் இந்த ஊசி போட்டதும் பெட்டில் படுக்க வைத்து விடுங்கள் இல்லைன்னா தூக்கிட்டுதான் போகனும்னு [[மருந்து பவர் அப்பிடியாம்]] சொல்ல, ஊசி போடப்பட்டது ஆனாலும் அண்ணாகாரு அசையலையாம், டாக்டர் நொந்து போனார் கிருஷ்ணாவுக்கு சிரிப்போ சிரிப்பு [[அந்த ரகளையிலையும்]]
கிருஷ்ணாவும் நானும்.

மறுபடியும் டோஸ் கூடுதலா ஏற்றி மற்றொரு ஊசி போட்டப்புறம்தான் நிறைய புலம்பலோடு படுத்துள்ளான், கிருஷ்ணா எஸ்கேப்....!!

டிஸ்கி : இன்னும் நிறைய கேரக்டர்கள் இருக்கு அண்ணே நேரம் வரும்போது ஒவ்வொன்றாய் சொல்றேன்னு சொன்னான் கிருஷ்ணா.....[[நன்றி தம்பி]]

டிஸ்கி : நாளை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின், கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபுரம் அரண்மனை பற்றி நீங்கள் அறியாத பல தகவல்களுடன், விஜயனின் கைவண்ண போட்டோக்களுடன் வெளி வரும்.


10 comments:

 1. ஆராய்ச்சி ஆறுமுகம் வாழ்க!

  ReplyDelete
 2. என்னமோ பாஸ் நீங்க சொல்லச் சொல்ல உங்க சொந்த அனுபவத்தையே கேக்குறமாதிரி ஒரு மனப் பிராந்தி...
  :-)

  ReplyDelete
 3. அசத்துங்க, மக்கா இன்னும் வரும்மா ம்ம்

  ReplyDelete
 4. தண்ணி வண்டியா பாத்து அண்ணன் செட்டு சேத்து வெச்சிருக்காருய்யா..........

  ReplyDelete
 5. ////ஜீ... said...
  என்னமோ பாஸ் நீங்க சொல்லச் சொல்ல உங்க சொந்த அனுபவத்தையே கேக்குறமாதிரி ஒரு மனப் பிராந்தி...
  :-)////////

  மனப்பிராந்தியோ இல்ல நெஜப்பிராந்தியோ.......?

  ReplyDelete
 6. ரைட்டு கிளப்புங்க ..!

  ReplyDelete
 7. கப்பல் அனுபவம் சூப்பர். தொடருங்கள்.

  ReplyDelete
 8. கப்பல் முங்கிய ஒரு மணி நேரத்தில் லைஃப் ராப்ட் எனப்படும் ரெண்டு பேர் அமரும் [[கார்களில் இருப்பது போன்று]] ரப்பர் போன்ற ஒன்று நிறைய ஆட்டோமேடிக்காக வெளியே வருமாம் அதில் ஏறி அமர்ந்து அடுத்த கப்பலோ, ஹெலிகாப்டர் மூலமாக தப்பித்து கொள்ளலாம்,
  A life-raft can be accommodate minimum 8 pax and max 32 pas depend upon its size. But this is non scene to say the life-raft afloat after one hour. It can be launched any time as per the command of the Capt.

  ReplyDelete
 9. கப்பல் அனுபவம் வித்தியாசமாக இருக்கு அதுவும் அந்திராக்காரன் ரகலை சூப்பர் ஜோக் மனோ அண்ணாச்சி!

  ReplyDelete
 10. இன்னும் தொடருங்கோ கப்பல் கதை சுவையாக இருக்கு!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!