Friday, November 18, 2011

நண்பனிடமும் சூதனமாக இரு....!!!

எங்க அப்பா சொன்ன இன்னுமொரு கதை....

ஒரு குளத்துல ஒரு முதலையும், கரையின் ஓரத்துல இருந்த மாமரத்துல குடியிருந்த ஒரு குரங்கும் இணைபிரியா நண்பர்கள், குரங்கை முதலை அதன் மேலே ஏற்றி குளத்தை எல்லாம் சுற்றி காட்டும், இப்படி ஓடியாடி விளையாடி வந்தனர்...


ஒருநாள் மாமரத்தில் மாம்பழம் காய்த்து குளுங்கவே குரங்கு மாம்பழத்தை பறித்து சுவைத்து கொண்டிருப்பதை கண்ட முதலை எனக்கும் மாம்பழம் தருவாயா நண்பா என கேட்டது....

குரங்கும் ஒ தாராளமாக எனக்கூறி மாம்பழங்களை பறித்து கொடுத்தது, சாப்பிட்ட முதலை ஆஹா நல்ல ருசியாக இருக்கிறதே என சொல்லி இன்னும் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிட்டது....


இப்படி கொடுத்தும் வாங்கியும், விளையாடியும் இருந்த நண்பர்களின் வாழ்க்கையில் விதியும் விளையாடியது, முதலையின் மனதில் ஒரு குரூர எண்ணம் வெளிப்பட்டது......இந்த மாம்பழமே இம்புட்டு ருசியாக இருந்தால் அதை தினமும் திங்கும் குரங்கின் குடல் எம்புட்டு சுவையாக இருக்கும் என நினைத்து கொண்டு காத்து இருந்தது....!!


ஒருநாள் வழக்கம் போல முதலை குரங்கை முதுகில் ஏற்றி வலம் வரும் போது, குரங்கின் குடல் நியாபகம் வரவே குரங்கை குளத்தின் நடுவில் கொண்டு போயி நின்று கொண்டு கேட்டது, குரங்கே குரங்கே நீ பறித்து தரும் மாம்பழங்களே எவ்வளவு சுவையாக இருக்கிறது, அப்போ அதை சாப்பிடும் உன் குடல் இன்னும் சுவையாக இருக்குமல்லவா...? என கேட்க.....


இதை சற்றும் எதிர்பாராத குரங்கு சுற்றும் முற்றும் பார்க்க, தான் தப்பிக்க முடியாதபடி நடு குளத்தில் இருப்பதை உணர்ந்த குரங்கு சமாளித்துக்கொண்டு சொன்னது, அதற்கென்ன நண்பா நான் குடலை மரத்தில் அல்லவா வைத்து விட்டு வந்தேன் என்னை அங்கே கொண்டு போ எடுத்து தருகிறேன் என சொல்ல, முதலை வேகமாக குரங்கை கரையில் கொண்டு சேர்த்தது...


கரையிறங்கிய குரங்கு வேகமாக ஓடிபோயி மரத்தில் ஏறிக்கொண்டு முதலையை பார்த்து சொன்னது "போடா ங்கொய்யால"


[[எங்க அய்யா கதையை கொஞ்சம் மாத்தி சொல்லி இருக்கிறார்னு பின்னாட்களில் புத்தகங்களில்  வாசித்து தெரிந்து கொண்டேன்]]


அப்பா சொன்ன நீதி : என்னதான் நண்பனா இருந்தாலும் நாம சூதானமா இருக்கணும்....!!!

டிஸ்கி : உலக தமிழர்கள் யாவரும் அறிந்த, தமிழில் வெற்றிக்கொடி கட்டி நம் நெஞ்சில் வாழும்  மகா காமெடி நடிகரின் பேட்டி, பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக நாஞ்சில்மனோ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளி வருகிறது, 

அவர் யாரென்று நாளை பதிவில் சொல்கிறேன், பேட்டி எடுத்தது நாஞ்சில்மனோ...!!! காத்திருங்கள் திங்கள் வரை....!!!




33 comments:

  1. ஆமா ஆமா உண்மை தான்

    அது சரி யாரையா அந்த காமடியன்? பொறுமைக்கு ஒரு அளவு இல்லவே

    ReplyDelete
  2. கதைக்கு பொருத்தமான படங்கள் கலக்கல் மக்கா

    ReplyDelete
  3. நல்ல நீதிக்கதை நண்பரே....

    ReplyDelete
  4. யார் பாஸ் அந்த காமடி நடிகர் ஆவலைத்தூண்டிவிட்டீர்கள் ஒரு வேளை பதிவர் யாரையும் வைச்சு மொக்கை போட போறீங்களோ டவுட்டு
    ஹி.ஹி.ஹி.ஹி...

    ReplyDelete
  5. உங்கள் அப்பா சொன்ன நீதி அருமை

    எங்கள் ஊர்களில் இந்தக்கதையை மாம்பழம் என்பதை நாவல் பழம் என்றும் குடலுக்கு பதில் ஈரல் என்று சொல்வார்கள்.

    இன்று நம்ம பதிவுல்க அண்ணன்களை வைத்து ஒரு மொக்கை போட்டு இருக்கேன் நேரம் இருக்கு போது பார்க்கவும்

    ReplyDelete
  6. நல்ல சிறுகதை மனோ சார்.

    ReplyDelete
  7. மனோ சார்,

    முதலை ஆசை பட்டது குரங்கோட குடலுக்கு இல்ல மக்கா. ஈரலுக்கு!

    ReplyDelete
  8. என்கிட்ட எடுத்த பேட்டிய போட போறிங்களா ?

    ReplyDelete
  9. வர வர ஓவரா நீதி கதை வருது .. நல்லது இல்ல .. சொல்லிடேன் .. நாமலாம் திருந்துனா நாடு என்ன ஆவுறது ?

    ReplyDelete
  10. அப்போ திங்கட்கிழமை வரை பொறுமைகாக்க வேண்டுமா...

    ReplyDelete
  11. கண்டிப்பாக வஞ்சனையுள்ள முதலைகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்...

    அறிவுரைக்கதைக்கு ஒரு பாராட்டு மக்கா...

    ReplyDelete
  12. இது செம நீதி.. ஆமா யாரு அந்த நடிகர்? பவர் ஸ்டாரா?

    ReplyDelete
  13. நன்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவன் வேண்டும் என்பதை நீதிக்கதை மூலம் அப்பா அறிவுரை சொல்லியிருக்கிறார்

    ReplyDelete
  14. கண்டிப்பா அது Power Star-ஆக தான் இருக்கும்...

    ReplyDelete
  15. //நண்பனிடமும் சூதனமாக இரு....!!! //

    மக்கா, தலைப்பில் சூதனமாக - சூதானமாகவா - இதிலே எதுவே கரைக்ட்டு.

    ReplyDelete
  16. நல்ல நீதிக்கதை. சிறுவயதில் பள்ளியில் படித்த கதை. சுவாரசியமா இருக்கு. //நண்பனிடமும் சூதனமாக இரு....// நைஸ்.

    ReplyDelete
  17. நல்ல நீதிக்கதை மனோ அப்பாக்கள்
    கதை சொல்லிக் கொடுத்த காலம் போய் இப்போது கம்பியூட்டரில் இருக்கும் பிள்ளைகளை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கு அப்போது கேட்ட
    கதைகள் இன்னும் ஞாபகம் இருக்கு ஆனால் இப்போதைய இளைய சமுகத்திற்கு இந்த கதை சொல்லும் நேரத்தை பொருளாதார தேடல் கொடுக்குது இல்லையே! 

    ReplyDelete
  18. யார் அந்த நடிகர் சிசர் மனோகர் ,சார்லி யாராக இருக்கும் அல்லது வடிவேல் முயல்கின்றேன் வரும் வாரம் நேரம் கிடைத்தால் பின்னூட்டம் இட!

    ReplyDelete
  19. இந்த நீதி எந்த பதிவருக்காக சொல்லப் பட்டது?
    அப்படின்னு சொல்லவே இல்லையே..
    அப்பாடா கொளுத்தியாச்சு

    ReplyDelete
  20. யோவ் அது கேட்டது இதயம்யா...அதுவும் அதோட பொண்டாட்டி கேட்டதால தான்...இப்போ எதுக்கு எல்லாத்துக்கு உங்க அப்பாவ இழுக்குரீறு ஹிஹி!

    ReplyDelete
  21. படங்களுடன் படிக்க கதை சுவாரஸ்யமாக இருந்தது
    மரத்தில் ஏறி குரங்கு சொன்னது ரொம்பப் பிடித்திருந்தது
    அதுதான் " மனோ டச் "
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. நண்பனானாலும் சூதானம் தேவை.

    உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  23. அது யாரு எனக்கு மட்டுமாவது சொல்லுங்க!

    ReplyDelete
  24. நண்பன் ஆனாலும் சூதானமா இருக்கனுமுனு அழகாக அப்பா சொல்லியிருக்கிங்க .. கதைக்கு பொருத்தமான படங்கள் அருமை மனோ சார்..

    ReplyDelete
  25. தெரிந்த கதை என்றாலும் நீங்கள் சொல்லும்போது மேலும் சுவாரஸ்யம்தான்!

    ReplyDelete
  26. அருமையான நீதிக்கதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  27. வழமைபோல கலக்கலும் சிறப்பும் நிறைந்த இடுகை சிறந்த படங்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  28. மிகவும் பொருத்தமான படங்களுடன் அருமையான நீதிக் கதை .
    என் மனதிலும் சிலரது கருத்துத் தவறியதால் ஒரு நீதி தடம் புரள்வதை
    உணர்ந்தேன் ஆதலால் ஓர் ஆக்கம் வெளிவந்துள்ளது .அதற்கு மிகவும்
    பொறுப்புடன் உங்களை கருத்திட அன்போடு அழைக்கின்றேன் சகோ .
    அவசியம் உங்கள் கருத்தினைக் கூறுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    ReplyDelete
  29. அழகான படங்களுடன் நீதிக்கதை .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!