Sunday, October 30, 2011

குத்துங்க எஜமான் குத்துங்க....!!!

முன்பு ஒரு சமயம் நான் மும்பையில் இருந்து ஊர் போன போது நடந்த சம்பவம். எங்கள் ஊரிலேயே உள்ள ஒரு பெண்ணை நண்பன் லவ்வி கொண்டிருந்தான். ஆனால் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் வீட்டில் கடுகடுமையான எதிர்ப்பு. நண்பர்கள் வழக்கம் போல சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். ஓடிப்போகவும் முடியாத நிலை. நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே...நண்பர்களை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்கு போனேன், அந்த கிணறு நாங்கள் சிறுபிள்ளைகளில் குதித்து சாடி குளித்த கிணறு அதின் ஆதி அந்தம் நல்லாவே தெரியும் எங்களுக்கு. பிளான் ரெடியானது, அதன்படி...[[ அந்த கிணற்றில் இப்போது யாருமே குளிப்பது கிடையாது, எப்பவுமே அதில் ஆறு எழு அடி தண்ணீர் இருக்கும். ஆனால் அந்த சமயம் இடுப்பளவுதான் தண்ணீர் இருந்தது]]

ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஊரே உறங்கிட்டு இருக்கும் நேரம், நண்பனின் காதலி, ஓ என அலறிக்கொண்டே ஓட....ஊராரும் எழும்ப, காதலி ஓடிபோயி கிணற்றில் குதித்து விட்டாள்....!!! [[எங்கள் நண்பர்கள் குழு தயாராய் பார்த்து கொண்டு இருந்தோம்]]  பின்னாலேயே ஓடி வந்த நண்பன், அவனும் கிணற்றில் குதிக்க ஊரே அல்லோலகல்லோல பட்டது.

அந்த பெண்ணுக்கு நீச்சல் தெரியாது. எப்பிடியோ காப்பாற்றி பெண்ணையும் நண்பனையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து பஞ்சாயத்து நடந்தது. எவ்வளவு அன்பு இருந்தால் இந்த பெண் அவனுக்காக கிணற்றில் குதித்து இருப்பாள் என்று நாங்கள் ஸ்துதி ஏற்ற [[ஹி ஹி நாடகாசிரியர் மனோ]] 

இரண்டு வீட்டாரும் சாதி மறந்து சம்பந்தி ஆனார்கள். ஊரே வாழ்த்த கல்யாணம் நடந்தது.

சரி இனி நாடகம் எப்பிடி அரங்கேறியது...??? சொல்றேன். . . . . 

இரண்டு நாள் முன்பே முதலில் நான் கிணற்றினுள் குதித்து ஆழம் எவ்வளவு என பார்த்தேன். தண்ணீர் இடுப்பளவுதான் இருந்தது. காதலனையும் குதிக்க சொன்னென் அவனும் குதித்து ஊர்ஜிதம் செய்தான். அப்புறமா காதலியை ரகசியமாக அழைத்து வந்து, செயல் முறை விளக்கினேன். அவள் பயந்துபோனாள் [[நீச்சல் தெரியாது]] , அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு...


அப்புறம்தான் அவளுக்கு தைரியம் [[என் மீது இரக்கபட்டோ என்னவோ]] வந்தது. நாடக அரங்கேற்றமும் வந்தது, அவள் கிணற்றில் குதிக்கும் போது நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சுற்றி உள்ள மரங்களின் மேலே இருந்தோம் [[ம்ஹும் குரங்கே]] ஊராருக்கு தெரியாது. 

அப்புறம் என்ன டும் டும் டும் டும்தான்....


டிஸ்கி : நண்பனின் காதலியின் அண்ணனுக்கு ஒரு டவுட்டு வர, தற்செயலாக அந்த கிணற்றை சுத்தி பார்த்திருக்கிறான். அவனுக்கு லேசாக பொறி தட்ட, என் நினைவும் வர டவுட் கிளீயராகிருச்சி. ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம்  [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். அண்ணன் காரனுக்கு எங்கள் நாடகம் புரிஞ்சி போச்சு. ஆனால் என்ன ஒரு விஷயம்னா, அதுக்குள்ளே நண்பனுக்கும் காதலிக்கும் கல்யாணம் முடிஞ்சி போயிருந்தது.

டிஸ்கி : பெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் [[வேற எதுக்கு முதுகுல டின் கட்டத்தான் ஹி ஹி ஹி]]  அடகொன்னியா மூணு குழைந்தங்க உன் தங்கச்சிக்கு பிறந்த பிறகும் ஏன் இந்த கொலைவெறி...??? 


இப்போ இடையில் ஒரு லீவுக்கு போன போது அவனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அவன் என்னோடு பேசவில்லை நானும் பேசவில்லை, ஆனால் அவன் என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான். என் மனைவி அதை கண்டு என்னிடம் சொன்னாள். ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள், ஏன்னா நாங்களும் காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சோம் [[இரு வீட்டாரின் சம்மதத்தோடு]]....

இது ஒரு மீள்பதிவு, யார்லேய் அங்கே கல்லெடுக்க கீழே குனியுறது....?
ள்பதிவு...[[யாருலேய் 

36 comments:

 1. எவ்வளவு அன்பு இருந்தால் இந்த பெண் அவனுக்காக கிணற்றில் குதித்து இருப்பாள் என்று நாங்கள் ஸ்துதி ஏற்ற [[ஹி ஹி நாடகாசிரியர் மனோ]]

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கிரிமினல் மண்ட மக்கா உங்களுக்கு...

  ReplyDelete
 3. என்ன இரண்டு நாளா ஒரே மீள் பதிவு

  ReplyDelete
 4. அந்த ஒரு கிணத்துல மட்டும் தான் ஆழம் பார்த்திங்களா? இல்ல, அதே மாதிரி இன்னும்......?

  ReplyDelete
 5. வேல அதிகமா ? அப்படியிருக்க வாய்ப்பில்லையே

  ReplyDelete
 6. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  என்ன இரண்டு நாளா ஒரே மீள் பதிவு//

  மீள்பதிவு இல்லைய்யா. மீண்ட பதிவு...

  ReplyDelete
 7. இது ஒரு மீள்பதிவு, யார்லேய் அங்கே கல்லெடுக்க கீழே குனியுறது....?///

  விக்கி அந்த கல்ல தூக்க முடியலையே, அப்புறம் ஏன் முயற்சி செய்றிங்க....

  ReplyDelete
 8. கோர்க்கும்
  வரிகளில் எல்லாம்
  நிரம்பி வழியுது
  சுவராசியங்கள்

  அனுபவங்களை
  ரெம்ப நல்ல எழுதுறீங்க

  ReplyDelete
 9. மீள்பதிவு வாரம்... கல் எடுக்கிறது உங்களுக்கு சிலை செய்ய தலைவரே...

  ReplyDelete
 10. அண்ணன் காரனுக்கு எங்கள் நாடகம் புரிஞ்சி போச்சு. ஆனால் என்ன ஒரு விஷயம்னா, அதுக்குள்ளே நண்பனுக்கும் காதலிக்கும் கல்யாணம் முடிஞ்சி போயிருந்தது// ஹீ.ஹீ..

  ReplyDelete
 11. மக்கா, அந்த அண்ணன் பேசாம மட்டும்தான் இருந்தானா?

  வேற எதுவும் செய்யலையா?

  ReplyDelete
 12. நாடகம் நல்லா தான் இருக்கு. அந்த பொண்ண காப்பாத்தாம கிணதுலையே விட்டிருந்தா தான். நீங்க வில்லன் ஆகி இருப்பீங்க.

  ReplyDelete
 13. //அடகொன்னியா மூணு குழைந்தங்க உன் தங்கச்சிக்கு பிறந்த பிறகும் ஏன் இந்த கொலைவெறி...??? //

  பின்ன உங்களுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்யலைனா அவங்க தங்கச்சி கோவிச்சுக்க மாட்டாங்களா........

  ReplyDelete
 14. உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் அதில் நடிகர்கள்.

  ஆனா உங்க நாடகம் உங்க நடிப்பு நிச்சயம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படவேண்டியதுதான்!
  (ஏதோ என்னால ஆனதுங்க)

  ReplyDelete
 15. அனுபவங்களை நல்ல எழுதுறீங்க.

  ReplyDelete
 16. //அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு...//

  ஐயோ பாவம்.

  இருந்தாலும் ஒரு நல்ல வேலை செய்து இருக்கீங்க..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. நானும் நீங்க ஒரு டெக்குனிக்க வெச்சே பல ஜோடிகளை சேர்த்து வெச்சிருக்கீங்களோன்னு நெனச்சிட்டேன்.......

  ReplyDelete
 18. காதலிக்கிற அத்தனை பசங்களுக்கும் இப்பவே இதை ஃபார்வர்டு பண்ணிடுறேன் ...

  ReplyDelete
 19. ஏதோ உங்கலால முடிஞ்சது..

  என்ன நான் சொல்றது..

  ReplyDelete
 20. கதை ,திரைக்கதை ,இயக்கம் மனோ

  ஹா ஹா அருமை ,அருமை அவர்கள் நன்றாக வாழ்ந்தால் அதுவே நீங்கள் செய்த உதவிக்கு அவர்கள் காட்டும் நன்றி .

  ReplyDelete
 21. பலே கில்லாடி,யப்பா...... எப்படியோ இளசுகளை சேர்த்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள் மக்கா

  ReplyDelete
 22. தலைப்பு?!......மக்கா, பக்கா கிரிமினல்தாம்லே

  ReplyDelete
 23. அண்ணே!
  இன்னும் ஒரு கண்ணாலம் பாக்கி...

  வாரீயளா?

  ReplyDelete
 24. காதலுக்கு மரியாதை

  ReplyDelete
 25. arumai arumai

  thalaippu arumaiyoo arumai

  ReplyDelete
 26. உங்க ஊரில இதே போல நிறைய நடக்குதே ... உபயம் நீங்கதானா ...? எங்கேயோ போயிட்டீங்க ....!

  ReplyDelete
 27. அண்ணே நீங்க மூளக்காரருன்னே!

  ReplyDelete
 28. பாதி படிக்கும் போதுதான் மீள்பதிவு என ஞாபகம் வந்தது
  ஆனாலும்சுவாரஸ்யமாக இருந்ததால் முழுவதும் படித்து முடித்தேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. எதுக்கும் ஊருக்குப் போகும்போது கொஞ்சம் சாக்கிரதையாவே இருங்க!

  ReplyDelete
 30. அட என்னா பிளான்......ஹா.ஹா.ஹா.ஹா.

  ReplyDelete
 31. //இரண்டு நாள் முன்பே முதலில் நான் கிணற்றினுள் குதித்து ஆழம் எவ்வளவு என பார்த்தேன். தண்ணீர் இடுப்பளவுதான் இருந்தது//


  .in between காப்ல நல்ல மழை பெய்திருந்தா .நினைச்சு பாக்கவே முடியல ...உங்க நிலைமையதான் சொன்னேன்

  ReplyDelete
 32. Idupu alavu thanniyila kinathu mela irrunthu kuthichangalam , apram kapathunagalam, kekurava kenaya irruntha eppadi vena alakalam pola.
  inga comments potta yarukum kinaru na enna nu thriyalanu theriyuhtu..

  ReplyDelete
 33. அப்போ நீங்க அந்த காலத்திலேயே பெரிய "களவாணி"ன்னு சொல்லுங்க...

  ReplyDelete
 34. மனோ அண்ணா, பயங்கர காமெடி கலந்த தியாகப் பதிவு.
  நீங்கள் பல முறை கிணற்றினுள் குதித்து காட்டி, ட்ரெயினிங் கொடுத்ததை நினைத்து இப்பவும் சிரிக்கிறேன்.

  இனியுமா முதுகில டின் கட்டப் போறான்..

  ஹி...ஹி...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!