Sunday, November 13, 2011

லாட்டரி சீட்டில் பல்பு வாங்குவது எப்படி....!!!

வாழ்க்கையில நடந்த நடக்கும் முதல் ஆச்சர்யமாச்சே வரலாறு ஆச்சே, வெஸ்டன் யூனியன் பேங்க்ல லாட்டரி அடிச்சதுன்னு அதை கொஞ்சம் விரிவா சொல்றேன் முதல்ல இருந்தே....


நாசமாபோச்சு போங்க....

பொதுவா வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு பணம் அனுப்பும் பேங்குகளில் நாம் பணம் அனுப்பியதும் கஸ்டமர்களை கவர்வதற்காக இப்பிடி லாட்டரி சீட்டுகள் கொடுப்பதுண்டு, எனக்கு இதில் ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை காரணம் ஒரு நாளும் லாட்டரி விழுந்ததே கிடையாது...!!!

பணம் அனுப்பியதும் அவர்கள் தரும் லாட்டரி சீட்டை பக்கத்தில் இருக்கும் இந்திய [[மொராக்கோ]] பிரஜைகளுக்கு கொடுத்து விட்டு செல்லும் என்னை லூசோன்னுதான் பார்ப்பாயிங்க நம்ம ஆளுங்க....!!!

இல்லைன்னா ரூமுக்கு வந்ததும் தூக்கி தூரப்போட்டுருவேன். இது ஒரு பன்னெண்டு வருஷமா நடக்கும் தொடர்கதை, இந்த தடவை ஊர் போயிட்டு வந்தபின் இந்த டிக்கெட்டை முன்பு போல களையாமல் எங்கோ போட்டு வைத்திருந்தேன்...

நேற்று [[அதான் முந்தாநாள்]] நான் பணியில் இருக்கும் போது, போன் வந்தது ஹலோ எனக்கு மனாசே கூட பேசணும் முடியுமா பிலிப்பயினி ஆங்கிலத்தில் பேசினாள், நான்தான் என்ன மேட்டருன்னு கேட்டதுக்கு செர் உங்களுக்கு லாட்டரியில பிரைஸ் அடிச்சிருக்கு, டிக்கெட்டையும், உங்கள் சிபிஆரையும் [[சிபி அல்ல அதுதான் எங்கள் அத்தாரிட்டி கார்ட்]] கொண்டு வந்து பரிசை பெற்று செல்லுங்கள் என்றாள்...

நான் கேட்டேன் என்ன பரிசென்று அதற்கு அவள் அது சர்பிரைஸ் செர் நீங்க நேர்ல வந்து பாருங்கள் என்றாள், நமக்குதான் மனசுக்குள்ளே ஒன்னும் வைக்க முடியாதே, பிளாக், பேஸ்புக், டுவிட்டர், பஸ் லாரி ஆட்டோ'ன்னு எல்லா ஆத்தாகிட்டேயும் சொல்லி பரப்பிட்டேன் ஹி ஹி...

போதாததுக்கு நண்பர்களிடமும் சொல்ல, ஒருத்தன் சொல்றான் தங்க பிஸ்கட் கிடைக்கும்னு, ஒருத்தன் சொல்றான், 5000 டாலர் கிடைக்கும்னு, ஒருத்தன் சொல்றான் எல் சி டி கிடைக்கும்ங்குறான், ஒருத்தன் சொல்றான் ஆயிரம் தினாராவது கிடைக்குங்குறான்....!!!


ஆக எனக்கு வேலையே ஓடவில்லை, எப்படா டியூட்டி முடியும்னு தவிச்சுகிட்டு இருக்கும் போதே, ஆமாம் எல்லாம் சரி லாட்டரி டிக்கெட்டை எங்கே வச்சோம்னு மறந்து போச்சே, வழக்கமா தூரப்போட்ட மாதிரி போட்டுட்டோமா தெரியலையேன்னு யோசிச்சு யோசிச்சு தாவு தீர்ந்து போனதுதான் மிச்சம், கொய்யால நியாபகமே இல்லை சலிப்பாக இருந்தது...

சரி எதுக்கும் வேலை முடிந்ததும் போயி பார்க்கலாம்னு தவிப்போடு காத்து இருந்தேன். வேலை முடிஞ்சதும் டாக்ஸி பிடிச்சு நேரே ரூமுக்கு ஓடினேன் டிக்கெட்டை தேடு தேடுன்னு தேடி சலிச்சு, ஒரு மூலையில் கண்டெடுத்தேன். பேங்க் மூட அரை மணித்துளிகளே இருந்தது...!!

டிராப்பிக்கில் டாக்ஸி மெதுவாக செல்லவே, இறங்கி ஓடுனேன் ஆவலாக, நான் பேங்க் செல்லுமுன்பாகவே அந்த டாக்ஸிகாரன் சிரிச்சி தலையில் அடித்துக்கொண்டே என்னை கடந்துபோனான்...ஹி ஹி...

ஒருவழியா உள்ளே நுழைந்து டிக்கெட்டை பிலிப்பைனி ஊழியரிடம் கொடுத்ததும், வாழ்த்துக்கள் செர் என்று கைகுளுக்கினாள் அவள் முகத்தில் அப்பிடி ஒரு சிரிப்பு, எனக்கோ ஆர்வம் தாங்க முடியவில்லை, ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாள் போட்டதும், அழகான ஒரு பார்சலை தந்தாள் வாழ்த்துக்களோடு...

ஆஹா இதுக்குள்ளே என்ன இருக்குன்னு பிதுக்கி பிதுக்கி பார்த்துக்கொண்டே ரூமுக்கு ஓடி வந்தேன் [[டாக்ஸிலதான்]] ரூம் கதவை பலமா லாக் செய்துட்டு மறுபடியும் நல்லா பூட்டியிருக்கான்னு செக் பண்ணிட்டு பார்சலை பிரித்தேன், அடப்பாவிகளா இப்பிடியா ஒரு பச்சைபுள்ளையை ஏமாத்தி பல்பு கொடுப்பாயிங்க ஹி ஹி என்னான்னு கீழே பாருங்க....


ஒரு ஹேன்ட் பேக், ஒரு கேப், ஒரு கப், ஒரு கேரி பேக் இம்புட்டுதான் அயிட்டம், ஆண்டவா ஒருகிலோ தங்கமாவது மினிமம் கிடைச்சிருக்க கூடாதா ம்ம்ம்ம் இன்னும் பயிற்ச்சி வேணுமோ....???!!!

அந்த தொப்பி என் தலையில் ஹி ஹி...

டிஸ்கி : அப்பாடா இப்பதான் ஆமினா மேடத்திற்கு மனசு குளிர்ந்திருக்கும், நேற்றைக்கே பதிவுல நான் பல்பு வாங்கப்போவதை சொல்லி இருந்தாங்க ஹி ஹி....!!!

45 comments:

 1. அடடே, பல்பு வாங்குன பதிவு வந்துடுச்சா,, இருங்க படிச்சிட்டு வறேன்..

  ReplyDelete
 2. செம செம.... அந்த ஆட்டோ காரன் சிரிச்சப்பவே பல்பு எரிஞ்சிருக்கணும்...ம்ஹூம்.. ஹி ஹி...

  ReplyDelete
 3. வணக்கம் மனோ!
  ஹி ஹி நல்லாதான்யா தந்திருக்காங்க பல்பு.. அது சரி டாக்ஸி பில்லுக்காவது வந்ததா?

  இங்கும் இப்படிதான் வேண்டாத நேரத்தில டெலிபோன் அடிச்சு லொல்லு பண்ணுவாங்க..!!

  ReplyDelete
 4. மொக்கராசு மாமா said... 1 2
  அடடே, பல்பு வாங்குன பதிவு வந்துடுச்சா,, இருங்க படிச்சிட்டு வறேன்..//

  வாருமய்யா வரும்போதே எம்புட்டு சந்தோசம் பாருங்க...

  ReplyDelete
 5. மொக்கராசு மாமா said...
  செம செம.... அந்த ஆட்டோ காரன் சிரிச்சப்பவே பல்பு எரிஞ்சிருக்கணும்...ம்ஹூம்.. ஹி ஹி...//

  ஹி ஹி டாக்ஸி டாக்ஸி...

  ReplyDelete
 6. காட்டான் said...
  வணக்கம் மனோ!
  ஹி ஹி நல்லாதான்யா தந்திருக்காங்க பல்பு.. அது சரி டாக்ஸி பில்லுக்காவது வந்ததா?

  இங்கும் இப்படிதான் வேண்டாத நேரத்தில டெலிபோன் அடிச்சு லொல்லு பண்ணுவாங்க..!!//

  டாக்ஸி பில்லுக்கு கரீக்டா இருந்துச்சு ம்ஹும்...

  ReplyDelete
 7. தொப்பி நல்லாருக்கு!
  கப் ஒரு கையில்,கைப்பை ஒரு கையில்,கேரி பேக் தோளிலுமா இன்னொரு ஃபோட்டோ?!

  ReplyDelete
 8. நேற்றே படிச்சேன் .பல்புதான்னு எனக்கு நேத்தே தெரியும் .உங்க சந்தோஷத்தை பிளஸ் கனவுடன் கூடிய தூக்கத்தை ஏன் கெடுப்பானேன் என்று நேற்று ஒன்றுமே சொல்லாம போயிட்டேன் .
  better luck next time .

  ReplyDelete
 9. வெங்கட் நாகராஜ் said... 13 14
  சூப்பர் பல்பு போல....//

  பல்பேதான்யா...

  ReplyDelete
 10. சென்னை பித்தன் said...
  தொப்பி நல்லாருக்கு!
  கப் ஒரு கையில்,கைப்பை ஒரு கையில்,கேரி பேக் தோளிலுமா இன்னொரு ஃபோட்டோ?!//

  ஆமா பேக்கை தோள்ல போட்டுட்டு ஒரு போட்டோ எடுத்திருக்கலாம் ஹி ஹி..

  ReplyDelete
 11. angelin said...
  நேற்றே படிச்சேன் .பல்புதான்னு எனக்கு நேத்தே தெரியும் .உங்க சந்தோஷத்தை பிளஸ் கனவுடன் கூடிய தூக்கத்தை ஏன் கெடுப்பானேன் என்று நேற்று ஒன்றுமே சொல்லாம போயிட்டேன் .
  better luck next time .//

  அப்போ நீங்களும் பல்பு வாங்கி இருக்கீங்க இல்லையா ஹி ஹி குயின் வாழ்க....

  ReplyDelete
 12. ஓ இதுக்கு பேருதான் தொப்பி தொப்பியா ஹா ஹா ஹா...

  ஹாப்பியா சொல்வோம் தொப்பி தொப்பி

  ReplyDelete
 13. ஹா ஹா ஹா... செம சிரிப்புதான். :)

  ReplyDelete
 14. தொப்பி... தொப்பி...

  ReplyDelete
 15. அண்ணே இது கிடைச்சதே பெரிய விஷயம்... இருக்குறத வச்சி சந்தோஷப் படுங்க...

  ReplyDelete
 16. அண்ணே கலக்கல் பல்ப்பு ஹிஹி!

  ReplyDelete
 17. தலையில பல்பு எரியுது.அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.விடுங்க...மனச தேத்திக்கோங்க.

  ReplyDelete
 18. சாரி மனோ.இப்படி ஏமாத்திபுட்டாங்களே!

  ReplyDelete
 19. அவர்கள் கொடுத்திருந்த அனைத்தையும்
  அணிந்தபடி ஒரு போஸ் கொடுப்பீர்கள் என எதிபார்த்தேன்
  சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. ஹி.ஹி.ஹி.ஹி.......செம பல்ப்பு பாஸ்

  ReplyDelete
 21. செம பல்புதான் - ஹா ஹா ஹா ஹா.

  இப்படிதான் ஏமாத்துகிறார்கள் எப்படியோ அவர்கள் பொழப்பு ஓடுது

  ReplyDelete
 22. //ஒரு ஹேன்ட் பேக், ஒரு கேப், ஒரு கப், ஒரு கேரி பேக் இம்புட்டுதான் அயிட்டம், //

  கூடவே ஒரு கண்ணுக்கு தெரியாத பல்பு

  இதையும் சேர்த்திருந்தா இன்னும் அருமையா இருந்திருக்கும்

  ReplyDelete
 23. ஹா ஹா ஹா
  பல்ப் நல்லா எரியுதா அண்ணே?

  ReplyDelete
 24. ரொம்ப தலைய அலுத்தாதீங்க தல. விக்கு கழன்டுற போகுது.

  ReplyDelete
 25. ஹா ஹா ஹா
  தொப்பி.. தொப்பி..

  ReplyDelete
 26. ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! :-)

  ReplyDelete
 27. பல்ப் வாங்குறதுக்கு ஆசையை பாரப்பா!

  ReplyDelete
 28. டாக்சிகாரன் சிரிச்சப்பவே அலார்ட் ஆகி இருக்க வேணாம்?

  ஆனா கடைசி அந்த தொப்பியை மாட்டிக்கிட்டு கொடுக்கிறீங்க பாருங்க ஒரு போஸ்... அருமை அருமை.

  ReplyDelete
 29. நானும் மனோ அண்ணாச்சிக்கு தங்கப்புதையல் கிடைத்திருக்கும் என்று விழுந்து விழுந்து படித்தேன் கடைசியில் தொப்பியை போட்டுவிட்டார்களே!ஹீ ஹீ

  ReplyDelete
 30. \\\ஆனா கடைசி அந்த தொப்பியை மாட்டிக்கிட்டு கொடுக்கிறீங்க பாருங்க ஒரு போஸ்... அருமை அருமை.\\\\\\\
  November 14, 2011 1:48 AM


  Read more: http://nanjilmano.blogspot.com/2011/11/blog-post_13.html#ixzz1dfppil5A

  இந்த போட்டாவைப் பார்க்கிறப்ப பல்பு வாங்குன மாதிரி தெரியலையே...

  செங்கல் இல்லாம தொப்பி இருந்தது நல்லதுன்னு விடுங்க...

  ReplyDelete
 31. டாக்ஸிக்கு செலவு பண்ணின காசாவது தேறுமா அந்த பொருட்கள்

  ஹா ஹா ஹா ,முன்கூட்டியே அந்த பொருட்கள்தான் என்று சொல்லியிருந்தா
  நீங்க போயிருக்க மாட்டீங்களே
  அதான் சஸ்பென்ஸ் .

  ReplyDelete
 32. மனோ அண்ணாச்சிக்கு மொட்டை என்பதால் தொப்பியைப் போட்டு நமீத்தா கூட ஒரு டூயட் பாடச் சொல்லி பிலிப்பின்சுக்காரி பல்பு கொடுத்துவிட்டால்(சும்மா உசுப்பி விடுவோம்)

  ReplyDelete
 33. இப்படி லாட்றி என்று வேலை நேரத்தில் சிலரின் ஜொல்லு அதிகம் மாப்பூ!

  ReplyDelete
 34. நல்ல விளையாட்டு,பெரியவர்காளாக சேர்ந்து நடத்தியது.

  ReplyDelete
 35. பரிசை பரிசாத் தான் பார்க்கணும்!! வாழ்த்துக்கள் பரிசுகளுக்கு! :-))

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. தம்பி
  தொப்பி தொப்பி ஹா ஹா

  ReplyDelete
 38. மனோ...ஏன் அலுத்துக்கிறீங்க.உங்க தலைக்கு பல்பு...ச்சீ...தொப்பி அளவாத்தானே இருக்கு !

  ReplyDelete
 39. அட கோவிந்தா
  கோவிந்தா.......இப்புடியா பல்பு குடுப்பாக!..............
  சரி விடுங்க சகோ மண்டையில சூடு ஏறாம பல்பு மன்னிக்கணும்
  தொப்பி தந்தாங்க இல்ல .அதுபோதும் சகோ .அடுத்த சீட்டில
  விழாமலா போகும் (கண்ணாடி ஹி...ஹி ..ஹி ...)

  ReplyDelete
 40. யோவ்! உம்மோட புரபைல் பிக்சர் பார்த்தே.. எங்க வீட்ட இருக்கிற குழந்தை ஒரு வாரம் சாப்பிடல. இதுக்குள்ளை நாலைஞ்சு போஷு வேற..

  ReplyDelete
 41. அண்ணே கிப்ட் அயிட்டங்களைக் கொடுத்தே பல்பு கொடுத்திட்டாளா!

  நீங்க பாவம் அண்ணே! ரொம்பத் தான் நம்பி ஏமாந்திட்டீங்க.

  ReplyDelete
 42. ஓகோ.. கேப்மாறி :)))

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!