Sunday, October 28, 2012

நாட்டாமைக்கே நாட்டாமை வச்ச அம்மிணி...!

வேலை முடுஞ்சி ஹோட்டலுக்கு வெளியே காருக்காக வெயிட் பண்ண போன நான், வெளியே வெயிலாக இருந்தபடியால் ஹோட்டலுக்கு உள்ளேயே உள்ள [[ரிஷப்சன் அருகில்]] படிகட்டில் கீழே ஒரு சோபாவில் அமர்ந்திருந்தேன்.
அந்த நேரம் பார்த்து துருக்கி யுவதி ஒருத்தி [[எங்கள் ஹோட்டல் நடன அழகி]] ஸ்கட் ஆடை அணிந்து நம்ம ரம்பா போல வாட்டசாட்டமாக "ஹைஹீல்ஸ்" காலணி அணிந்து, என்னை ஒரு லுக்கு விட்டுவிட்டு, ஒய்யாரமாக சட சடவென படியில் வேகமாக ஏறியவளுக்கு [[ஹைஹீல்ஸ் போட்டுட்டு அதுவும் படியில ஒடுறியா கொய்யால...?]] நீளசெருப்பு வினையாகிவிட, அம்மணி படியில் தடுமாறி விழுந்து "தொத்தக்கதை" என கீழே உருண்டு [[நான் கண்ணை மூடிகிட்டேன்]] வந்து என்காலடியில் கிடந்தாள்...!
அய்யோ பாவமென தூக்கிவிட்டேன், கொஞ்சநேரம் மிரண்டு.......... சுதாரித்தவள், என்னைப் பார்த்து சொன்னாள்...."நீ என்னை பார்த்ததால்தான் நான் தடுக்கி விழுந்தேன்" என்றாளே பார்க்கலாம்...?!!!

"இதென்ன வம்பாபோச்சு, நான் சும்மாதானே இங்கே உக்காந்து இருந்தேன்"

"இல்லை நீ என்னை பார்த்ததால்தான் நான் கீழே விழுந்தேன், நீ என்னை எப்படி பார்க்கலாம்..?"

"அய் இது நல்லாயிருக்கே, கிளப்ல நீ ஆடும் நடனத்தை எல்லாரும்தான் பார்கிறார்கள் அதுக்காக நீ எப்பவும் இப்படியா விழுகிறாய்...?"

"இல்லை இதை நான் ஒத்துகொள்ளமாட்டேன், கூப்பிடு மேனேஜரை"

"நான்தான் டேமேஜர் ச்சே மேனேஜர்"

"அப்போ முதலாளியை கூப்பிடு"

"ஓ இந்த பிரச்சினைக்கு இனி நான் லண்டன்ல இருக்குற முதலாளியை வேற கூப்பிடனுமா...போ போ இல்லைன்னா ஆபீஸ் ரூம்ல பஞ்சாயத்தை வச்சிருவேன் ஜாக்கிரதை"

"இந்தியாக்காரன் நீ மறந்துவிடாதே, என்னை எப்படி நீ பார்க்கலாம்...?"

ஆஹா பிரச்சினை விவகாரமாகுவதை உணர்ந்த நான் [[பெண்ணாச்சே]] செக்கியூரிட்டியை கூப்பிட்டு ஜீ எம்மை அழைப்பித்தேன், அவளோ குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டிருந்தாள் [[படியில் விழுந்த அடி பலமா இருந்துருக்கும் போல]] மேனேஜர் வர கொஞ்சம் தாமதம் ஆனது...!

மெதுவா வந்த ஜி எம் பொறுமையாக அவள் குற்றசாட்டை கேட்டார், கேட்ட மூதேவி சும்மா இருக்கவேண்டியதுதானே மேட்டரை கேட்டதும்.....ப்பூப்பூப்பூப்பூ....... என்று வாயை பொத்தி சிரித்தவன் வாயிலிருந்து எச்சில் தெரிக்கும்படியாக சிரித்துவிட்டான்...! [[நானும் கிக்கிலி காட்டுனாப்ல நிக்காம சிரிச்சிகிட்டே இருந்தேன்]]
அவளுக்கோ ஆத்திரத்துக்கு மேல ஆத்திரமாக வருகிறது, இதற்கிடையில் ஆட்களும் கூடிவிட அதுவுமல்லாமல் மற்ற நடன பெண்களும் ஸ்கட் [[அவளை விட சின்னதாக அணிந்து கொண்டு]] அணிந்து கொண்டு வந்து கொண்டிருக்க, கூடி இருந்தவர்கள் எல்லாருமே சிரிக்க ஆரம்பிக்க....!
அம்மிணி நியாயம் கேட்ட அரபி பெண்களும் அலறி சிரித்துக்கொண்டே, என்னைப்பார்த்து கண்ணடித்தவாறே  [[கொய்யால பிச்சிபுடுவேன்]] அவளை கட்டி அணைத்துக் கொண்டு சிரிக்க... அவளுக்கும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள்....! 

வீட்டுக்கு வந்தும் என் சிரிப்பு அடங்கவே இல்லை....!

பஞ்சாயத்து ஓவர்.....

போகும்போது "ஒரு மாதிரியா" திரும்பி என்னை பார்த்தாள் பாருங்க ஒரு பார்வை "ஆத்"தீ....." இப்பவும் அடிவயித்துல புலி ச்சே புளிகரையுது, டேய் விக்கி அண்ணே...!

ஸ்பெஷல் டிஸ்கி : இது ஐநூறாவது பதிவு, ஊக்கம் ஆக்கம் அளித்த என் உயிர் தமிழுக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி...!

26 comments:

  1. அய்யய்யோ, ஆபாசம், போலிஸ் கார் போலீஸ்கார் கமான் கமான் கி கி

    ReplyDelete
  2. டேய் ஏற்கனவே மிரண்டு போயி இருக்கேன் இன்னும் ஏண்டா அண்ணே பயங்காட்டுதே...?

    ReplyDelete
  3. 500வது பதிவு...!!! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஓசியில படம் பார்த்துவிட்டு...என்ஜாய்...

    ReplyDelete
  5. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்.....நிழல் போல தொடர்ந்து வருகிறோம்

    ReplyDelete
  6. 500 ஆ?

    வாத்துக்கள்....

    மற்றபடி, ஆபாசத்தைக் கண்ணடிக்கிறேன் சாரி, கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  7. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  8. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  9. இதுக்குதான் சிபி சார் கூட சேராதீங்கன்னா கேட்குறீங்களா? பதிவு கண் கூசுது

    ReplyDelete
  10. Congrats for your 500 article !

    Keep rocking !!

    ReplyDelete
  11. நீ பாத்துட்டு போனாலும்
    பாக்காம போனாலும்
    பாத்துக்கிட்டேதான் இருப்பேன்......

    ReplyDelete
  12. அதற்கு பின் என்ன நடந்தது என்பதை பாகம் -2 ல் அண்ணன் வெளியிடுவார்........

    ReplyDelete
  13. Congrats for 500th post. Good show. 500 is great & not many people write 500 posts

    ReplyDelete
  14. Congrats
    500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் Mano .

    ReplyDelete
  15. 500வது பதிவா? சூப்பர். இன்னும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
    உங்க கண் பட்டதால் தான் விழுந்தேன் என்று சிம்பாலிக்கா சொல்கிறாரோ அந்தம்மா.

    ReplyDelete
  16. 500 பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. 500-வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. உங்க பார்வையில் காந்தம் இருக்கு போல அதனால் தான் அவள் விழுந்தாலோ??!:)))

    ReplyDelete
  19. 500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி இன்னும் பல  பதிவு எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும்.

    ReplyDelete
  20. .."நீ என்னை பார்த்ததால்தான் நான் தடுக்கி விழுந்தேன்" ///

    என்னமா கவிதை எழுதறீங்க அண்ணே.... ஹீ ஹீ :)))

    அப்புறம் ரெண்டாவது போட்டோவில் இருப்பது நம்ம தொடையழகி ரம்பாதானே ???!!

    ReplyDelete
  21. நீங்க மட்டும் தனியா பார்ப்பது நியாயம் இல்லை அண்ணே ..
    ஐநூறுக்கு வாழ்த்துக்கள் (நேரம் கொடுக்கவும் பாசமிகு அண்ணனுக்கு பாராட்டு விழா எடுக்க )

    ReplyDelete
  22. 500வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. 500 வாழ்த்துக்கள்

    பாகம் ரெண்டை எதிர்பார்கிறேன்.....ஆங்

    ReplyDelete
  24. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!