Monday, September 9, 2013

இது அமெரிக்காவின் ராஜ தந்திரமா குள்ளநரி தந்திரமா ?

இந்திய பணத்தின் வீழ்ச்சியினால் நாம் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் திட்டிக் கொண்டு இருக்கிறோம் இல்லையா ? ஏன் நமக்கும் அதில் அலட்சியம் தாங்கும் பங்கும் இருக்கிறது என்பதை எனது சிற்றறிவு மூலம் சொல்கிறேன்.

நமது இந்திய பணம் [[நோட்டு]] தங்கத்தில் இன்வெஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது, உதாரணத்திற்கு ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் பேங்கில் எனக்கு இந்த நோட்டு [[பணம்]] வேண்டாம் என்று கொடுத்தால், அதற்க்கு சரி நிகரான தங்கம் ரிசர்வ் பேங்க் தரவேண்டும், அதற்க்கு உத்திரவாதமும் நோட்டில் எழுதப் பட்டு இருக்கிறது...!
[[ I PROMISE TO PAY THE BEARER THE SUM OF TEN RUPEES ]]

அடுத்து....

வளைகுடா நாடுகள் மொத்தமும் பெட்ரோலை அமெரிக்கன் டாலரில் வர்த்தகம் செய்வதால் அமெரிக்கன் டாலர் நிலை தடுமாறாமல் மேல் நோக்கி நகர்கிறது.

 என்று சவுதியோ அல்லது குவைத்தோ அந்த டாலர் வர்த்தகத்தை ஈரோ பணத்தில் செயல்படுத்தும் பட்சத்தில் அமேரிக்கா [[டாலர்]] அட்ரசே இல்லாமல் போகும். [[குவைத் ஏற்கனவே ஈரோவில் டிக்ளேர் செய்யாமல் அங்கே வர்த்தகம் செய்வதாகவும் ரகசிய செய்திகள் உண்டு]]

வளைகுடா நாடுகளின் வர்த்தகம் காரணம் அமேரிக்கா டாலர் நோட்டுகளை அச்சடித்து கொண்டே போகிறது, இதே நான் சொன்னதுபோல இந்திய பணத்திற்கு தங்கம் கிடைக்கும், ஆனால் அமெரிக்க டாலருக்கு வேல்யூவே கிடையாது.

அமெரிக்கன் பேங்கில் டாலரை கொண்டு போயி கொடுத்துவிட்டு இதற்க்கு நிகராக என்ன தருவாய் என்று கேட்டால் "போடா கொய்யால அதை கொண்டுபோய் குப்பையில் போடு" என்றுதான் சொல்வான்.

அமெரிக்க டாலரில் அந்த பணத்திற்கு எந்த ஒரு உத்திரவாதமும் எழுதப்படவில்லை மாறாக கேரண்டி இல்லை என்றே எழுதபட்டுள்ளது.
[[THIS NOTE IS LEGAL TENTER FOR ALL DEBTS, PUBLIC AND PRIVATE]]
  
சரி அது போகட்டும் நான் சொல்ல வந்ததை சொல்லிருதேன்....

நாம் நம்முடைய [[இந்திய]] பணத்தை மேல் நோக்கி நகர்த்த என்னால் முடிந்த ஆலோசனை என்னவென்றால், நம் இந்திய மக்கள் வீடுகளில் ஒரு அறுபது சதவீதம் பைக், ஒரு நாப்பது சதவீதம் கார்கள் உள்ளவர்கள், ஒரு வாரத்திற்கு தனது காரையோ, பைக்கையோ உபயோகிக்காமல், அரசாங்க பஸ்களில் அலுவல் செல்வோம்.

கொஞ்சம் கொஞ்சம் தூரத்திற்கு போகவேண்டுமானால் பைக்கில் போகாமல் நடந்து செல்வோம், நம்மாளுங்க பக்கத்து வீட்டுக்கு போகனும்னாலே பைக்லதான் போறான் இல்லையா ?

அந்நிய நாட்டு பொருட்கள் அதாவது சோப்பு சீப்பு கண்ணாடி ஷாம்பூ பேஸ்ட் பூஸ்ட் கோலா பெப்சி மிராண்டா துணிகள் [[புரியும்னு நினைக்கிறேன்]] எதுவாக இருந்தாலும் நம் உள்நாட்டு நம்ம இந்திய பொருட்களையே உபயோகிப்போம், இந்துஸ்தான் லிவர் கம்பெனி என்று பெயர் வச்சிருப்பான் ஆனால் அது இந்திய கம்பெனி கிடையவே கிடையாது....!

இதை மட்டும் செஞ்சிட்டோம்னா ஒரு வாரத்தில் டாலர் வேல்வியூ சர்ர்ர்ர்ன்னு கீழ் நோக்கி சரிவதை நேரிடையாகவே காணலாம், ஆனால் என்ன........ அமெரிக்கன் நேவி கப்பல் இந்தியா பக்கம் திரும்பலாம்....!

ராமர் பிள்ளையின் பெட்ரோல்ல என்ன பிரச்சினைன்னு யாருமே தெளிவாக இதுவரை சொல்லவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது....!

இனியும் ஒரு கோணம்....

கள்ள நோட்டுகள் அதிகமாக புழங்குவது ஆயிரம், ஐநூறு ரூபாய் நொட்டுகளில்தான் இல்லையா ? திடீரென ரிசர்வ் பேங்க் அவைகளை தடை செய்ய போகிறோம் ஆகவே பக்கத்தில் உள்ள வங்கிகளில் இத்தனாம் தேதிக்குள் உங்கள் பணம்களை மாற்றியோ, டிபாசிட்டோ செய்து விடுங்கள் என்று சட்டம் வந்தால்.....

கள்ள நோட்டுக்கும் ஆப்பு, கருப்பு பணம் பதுக்கி வச்சிருக்கவனுக்கும் ஆப்பு, சரியா இல்லையா ?

யோசிப்போம் செயல்படுவோம் நம் நாட்டை நாமே காப்போம் யார் தயவும் தேவை இல்லாமல், நன்றி....!


25 comments:

  1. இதை ஒவ்வொரு வீட்டுக்காரம்மா உணர வேண்டும்... உணர வைக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்காரம்மாகிட்டே சொன்னால் பூரிகட்டை அடிதான் கிட்டும், கொஞ்சம் நயமாக சொல்லுவோம்.

      Delete
  2. //ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் பேங்கில் எனக்கு இந்த நோட்டு [[பணம்]] வேண்டாம் என்று கொடுத்தால், அதற்க்கு சரி நிகரான தங்கம் ரிசர்வ் பேங்க் தரவேண்டும், அதற்க்கு உத்திரவாதமும் நோட்டில் எழுதப் பட்டு இருக்கிறது...//

    இந்திய நோட்டில் எழுதப்பட்ட உத்திரவாதம் ஒடும் நீரில் எழுதப்பட்டது போலத்தான்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மதுரை தமிழன் சொன்ன கருத்து சரி தான் \\\\

    இந்திய பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பதை நான் கொஞ்ச நாட்களாக பின்பற்றி வருகிறேன் இந்த விழிப்புணர்வு மக்களிடமும் வர வேண்டும்\\\\

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் அமெரிக்காவில் பல்லாண்டுகளாக வசித்தாலும் அதிக விலை கொடுத்து இந்திய சோப்புகளைதான் வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால் அதற்கு மாற்றாக இந்தியாவில் உள்ளவர்கள் வெளிநாட்டு கம்பெனி தாயரிப்புகளையே வாங்கி உபயோகிக்கிறார்கள், அந்த கம்பெனி இந்தியாவில் சம்பாதிக்கும் லாபம் வெளினாட்டிற்கு டாலராக செல்கிறது அதில் மாற்றம் ஏற்படுமா?????

      Delete
    2. நானும் முடிந்தவரை இங்கே இந்திய பொருட்களைத்தான் வாங்கி உபயோகிக்கிறேன்.

      Delete
  5. மிகச் சரியாக சொன்னீர்கள். நல்ல ஆலோசனைகள். காந்தி அடிகளின் அன்னியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு கொள்கை இப்போதும் பயன்படுவது என்ன ஆச்சர்யம். அதை தீவிர இயக்கமாக மாற்ற வேண்டும். ஸமோஅ வலைத்தளங்களை இதற்கு பயன்படுத்தி ஒரு சிறிய மாறுதல் ஏற்படுத்த முனைய வேண்டும் நடக்குமா?

    ReplyDelete
    Replies
    1. சீனப் பொருட்களை வாங்குவதை நிறுத்தினாலே போதும். காரணம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதுதான் அதிகம் ஆனால் நாம் இறக்குமதி செய்யும் அளவிற்கு சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது இல்லை அதனால் அவர்களுக்கு நம் கடனை திருப்பி தருவது அமெரிக்க டாலரில்தான். அதனால் நமக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.

      Delete
    2. சீனப் பொருட்களின் தரம் அறிந்தும் நம் மக்கள் அதில் போயி விழுகிறார்கள்....! அதனால் நம் நாட்டுக்கு லாபமில்லை, சரியாக சொன்னீர்கள்.

      Delete
    3. hai.....well said....how many people will follow what u said...any how i am proud of ur patriotism.....tks

      Delete
  6. // I PROMISE TO PAY THE BEARER THE SUM OF TEN RUPEES // ?? Note 1000 rupee.

    ReplyDelete
  7. முன்பொரு காலத்தில் இந்தியவிற்குள் பிற நாட்டுப் பொருட்களை
    உபயோகிப்பது தடை செய்யப் பட்ட ஒன்று தானே .நீங்கள் சொல்வது
    போல் வாகன ஓட்டுனர்கள் கொஞ்சம் கட்டுப் பாடாக நடந்து கொண்டால்
    நிட்சயமாக இந்த எண்ணமும் நிறைவேற அதிக வாய்ப்பு இருக்கின்றது .
    வாழ்த்துக்கள் சகோ தங்களின் தேசப்பற்று மென்மேலும் நற் கருத்தைத்
    தந்துதவட்டும் .

    ReplyDelete
  8. அண்ணனுக்கு அமெரிக்கா மேல ஏன் இவ்வளவு கோபம்??

    ReplyDelete
    Replies
    1. ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில மனுஷனையே கடிக்க வந்தா பின்னே விட்டுருவோமா என்ன ?

      Delete
  9. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பின்பற்றிய பொருளாதாரக கொள்கையின் பின்விளைவுகள் இப்பத்தான் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது மனோ அண்ணே, நிலைமை இன்னும் மோசமடையும்.

    தடையில்லா இறக்குமதி கொள்கையின் வீரியம் இப்பத்தான் மக்களுக்கு உரைக்க ஆரம்பித்திருக்கிறது.

    ஒரு பொருள், உலகத்தில் எந்த மூலையில் தயாரிக்கப்பட்டாலும் அது இந்திய மார்கெட்டை குறிவைத்துத்தான் தயாரிக்கப்படுகிறது. இறக்குமதியை தடை செய்தால் ஒரே வருடத்தில் நம் பொருளாதார மதிப்பு எங்கோ போய்விடும், முதுகெலும்பற்ற அரசியல் வா(வியா)திகள் அதனை செய்ய முன்வருவார்களா? :-(

    ReplyDelete
    Replies
    1. வரலாற்று சுவடுகள் வலையுலகம் வந்தாச்சா...? வாழ்த்துக்கள்...

      ஹே... போனை போடுப்பா... காதல் சீனுவிற்கு...!

      Delete
    2. என்னை இன்னும் ஞாபகம் வைத்திருக்கும், தங்கள் அன்பிற்கு என் வணக்கங்கள்! :-)

      Delete
  10. Good analysis:

    http://www.quora.com/Economy-of-India/What-is-the-reason-behind-recent-Rupee-depreciation-in-August-2013

    ReplyDelete
  11. இந்த மண்ணு மோகன் சிங்கும், சிவகங்கை பனா. சினாவும் வெளிநாட்டில் பொருளாதாரம்,சட்டமும் படிதவ்ர்கலாமே இவர்கள் நம் நாட்டுக்கு செய்த பாவத்தை நினைத்தால் கட்டி வைத்து தோலை உரிக்கவேண்டும். நம் சட்டம் அதற்க்கு இடம் தராது. நம்ம மனோவின் கால் தூசிக்கும் ஈடாக மாட்டார்கள் இந்த குணம் கெட்ட கயவர்கள்.

    ReplyDelete
  12. பிற நாட்டு பொருள்களை தவிர்ப்பது தவறான சிந்தனை. ஏற்றுமதி செய்ய நாம் நாட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

    Savings itself wont make one richer but earning more.

    America is not richer just because the oil is dealt with Dollar. You can count how many world class products America manufactures. They make money by selling thousands of good products (from Microsoft, Google, Apple, etc) We dont have many products to offer to the world other than coffee, tea and sugar.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!