Sunday, July 24, 2011

ரயில் பயணம் தொடர்....

வசமா சிபி'கிட்டே கோர்த்து விட்டுட்டார் ஆபீசர், உடனே அவனுக்கு போனும் பண்ணிட்டார், தம்பி சிபி உன் தம்பி கரிக்ட்டா ஈரோட்டுக்கு சாயங்காலம் அஞ்சரை மணிக்கு வந்து சேருவான் மீட் [[கொல்லு]] பண்ணிக்கொன்னு சொன்னதுதான் தாமதம் பயலுக்கு பயங்கர சந்தோசம், ஆனால் விதி எனக்கு ஆதரவா சலங்கை கட்டி ஆடுனது அப்புறமா சொல்லுறேன் ஹி ஹி....

டிக்கெட் பரிசோதகர் வந்தார், என்னிடம் டிக்கெட் கேட்டவர் ஆபீசரை பார்த்ததும் சற்று ஜெர்க் ஆகி நாலு எட்டு தள்ளி நின்னு டிக்கெட்டை பார்த்துட்டு பட படவென பென்னால் மார்க் செய்துட்டு, மறுபடியும் ஆபீசரை ஒரு லுக் விட பயந்து என்னையும் ஓகே........... "சா.......ர்"........[[அவ்வ்வ்வ்வ்வ்வ்]] னு சொல்லிட்டு என்னை அழவச்சிட்டு போனார்.....!


அப்புறம் லேப்டாப் சார்ஜ் உயிரை விட்டுருச்சி ஏன்னா நான் சார்ஜர்ல வைக்க மறந்துட்டேன், அதுக்கு ஆபீசர் லேப்டாப் வச்சிருக்குற லட்சனமாய்யா இதுன்னு மனசுக்குள்ளே திட்டிட்டு ஆப் பண்ணி தந்தார் சாக்கு'குள்ளே வைக்குமாறு.....ஹி ஹி...!!!


அப்புறமா அவர் எனக்காக கொண்டு வந்த [[நெல்லை பதிவர் சந்திப்பு நடந்த ஹோட்டல் சாப்பாடு]] அதே ஜானகிராமன் ஹோட்டல் டிபன் எடுத்து தந்தார் சாப்பிடுங்க மனோ என்று, சூப்பரா பூரி பாஜி, ரெண்டு இட்லி வாவ் சூப்பர்.........!!!  ரசிச்சி சாப்பிட்டேன்.....[[நன்றி ஆபீசர்]] அப்புறம் மெதுவா பதிவுலகம், நண்பர்கள் அப்பிடி இப்பிடியா சுவாரஸ்யமா பேசிட்டே வந்தோம்.....! விருதுநகர் நெருங்கிட்டே இருந்துச்சு பாப்பா'ம்மா தனியா வந்துருப்பாளேன்னு கொஞ்சம் நெர்வசாவே இருந்துச்சி மனசுக்கு, சீட்ல இருந்து ரயில் வாசலுக்கு நான் புறப்படவும் ஆபீசர் நான் முகம் துடைக்க வச்சிருந்த துண்டை [[டவல்]] எடுத்து என் தோளில் போட்டு விட்டார் இருக்கட்டும் மனோ என்று......!!! எனக்கு கொஞ்சம் மனசு பட பட.....[[எனக்கு ஏதாவது வித்தியாசமா நடக்கும்னு தெரிஞ்சா அதாவது நான் நேசிக்கும் யாரா இருந்தாலும் சரி எனக்கு இப்படி லப்டப் அடிக்கும், எனக்கு புரிஞ்சும் போகும் நல்லதுதான் நடக்கும்னும்]]......!!! 


ரயில் விருதுநகர் பிளாட்பாரம் நெருங்கவும் ஆபீசரும் நானும் ரயில் வாசலில் நின்று கொண்டே......... பாப்பாவை நான் ஆவலாய் தேட, ஆபீசர் சொன்னார், மனோ நான் சொன்னா மாதிரி பாப்பா நம்ம கம்பார்ட்மென்ட் எங்கே நிக்குமா அங்கே நிப்பாள் பாருங்கன்னு சொன்னார்....!!! ஆபீசர் சொன்னா அப்பீல் உண்டா என்ன அவருக்குதான் எல்லாம் அத்துபடி ஆயிற்றே....!!!


அதேபோல பாப்பா'ம்மா நின்னுட்டு இருந்தாள் கையில் பெரிய பார்சலோட, ரயில் நின்றதும் நானும் ஆபீசரும் வெளியே இறங்கினோம், ஓடி வந்து கையை பிடித்துகொண்டாள் பாப்பா, நலம் விசாரிக்கும் போதே, அண்ணா உங்க மகள் எங்கே'ன்னு கேட்டாள், ஏய் நானும் ஆபீசரும்தானே வர்றதா சொன்னேம் பிள்ள, பிள்ளைங்களுக்கு ஸ்கூல் இருக்குல்ல மும்பயிலன்னதும் சாந்தமாகி அந்த பார்சலை என்னிடம் தந்து ஜாய்'கிட்டே [[என் மகள்]] குடுக்க சொல்லி தந்தாள்......!!


இப்பிடி நானும் ஆபீசரும் பாப்பா'ம்மாகிட்டே பேசிட்டு இருக்கும் போதே [[ ரயில் அங்கே நின்னது ரெண்டே நிமிஷம்தான்னு நினைக்கிறேன்]] ஒரு இருவது வயசு மதிக்க தக்க ஒரு பையன் உரிமையோடு எங்களை நோக்கி வந்தான்............!!!.......... என் மனசு..... கட..... கட...... தட..... தட....... [[ஆபீசர்தான் எதுக்கும் பயப்படாத சிங்கமாச்சே, நான் பச்சை பிள்ளையாச்சே..!!!]]


தொடரும் தட தட ரயில் பயணம்......


டிஸ்கி : பதிவின் நீளம் கருதி சுருக்கி இருக்கேன் அடுத்த பதிவில் அதாவது நாளை இத்தொடர் முற்றும் [[அப்பாடா தப்பிச்சீங்களா]] 

22 comments:

 1. எப்படின்னே இப்படி பின்றீங்க..உங்க ரயில் பயணக்கட்டுரை சூப்பருண்ணே...பங்கு போட்டு கொடுத்ததுக்கு நன்றிண்ணே!

  ReplyDelete
 2. >>விக்கியுலகம் said...

  எப்படின்னே இப்படி பின்றீங்க..உங்க ரயில் பயணக்கட்டுரை சூப்பருண்ணே...பங்கு போட்டு கொடுத்ததுக்கு நன்றிண்ணே!

  தம்பி மனோ.. விக்கிதக்காளி, நக்கல் அடிக்கறான், அவனை நம்பாதே. ஹி ஹி

  ReplyDelete
 3. no no no

  me the firstu...

  erunga poitu padichtu varen.

  ReplyDelete
 4. பதிவுனா இது பதிவு

  அருமை அண்ணா
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 5. தமிழ்மணம் இனச்சுட்டேன்

  ReplyDelete
 6. அந்த பையன் யாருங்க... அடுத்த பதிவுக்கு காத்திருக்கனுமா?

  ReplyDelete
 7. நல்ல தொடர் யாரு அந்த சிங்கம் ஆவலுடன் காத்திருக்கின்றேன் மனோ!

  ReplyDelete
 8. // பதிவின் நீளம் கருதி சுருக்கி இருக்கேன்//

  சுருக்கனதே இவ்வளவா? நெல்லை ரயிலை விட நீளமா இருக்கு தலைவா. நாளைக்கு முற்றுமா..அப்பாடா. ஆனா அந்தப்பதிவை சீனா சுவரை விட நீளமா போடுவீங்களோன்னு திகிலா இருக்கு!!

  ReplyDelete
 9. ஆபீசரை வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்த நண்பர் வாழ்க. அந்த சமயம் நீங்க என்ன பண்ணீங்க? ஹே...ஹே...

  ReplyDelete
 10. கலக்கல் தல
  அனுபவிச்சு எழுதுறதுன்னா இது தானா?

  ReplyDelete
 11. //அதாவது நாளை இத்தொடர் முற்றும்// அருமையான வரிகள்.

  ReplyDelete
 12. தங்களுடன் நானும் ரயிலில் பயணிக்கிறேன்...


  அனுபவம் பேசுகிறது...

  ReplyDelete
 13. சஸ்பென்ஸில் நிறுத்திட்டீங்க!

  ReplyDelete
 14. அன்புள்ள சகோதர்/சகோதரி,

  மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

  பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

  தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

  நன்றி.

  அன்புடன்,
  அதிரைக்காரன்
  adiraiwala@gmail.com

  ReplyDelete
 15. பதிவின் நீளம் கருதி சுருக்கி இருக்கேன் அடுத்த பதிவில் அதாவது நாளை இத்தொடர் முற்றும் [[அப்பாடா தப்பிச்சீங்களா]]// எப்படி இப்படியெல்லாம்..

  ReplyDelete
 16. தங்கள் மகள் தங்களைப்போலவே..

  ReplyDelete
 17. எல்லாருக்கும் நன்றிகள் நன்றிகள்.....

  ReplyDelete
 18. யோ...செல்வா எப்பவுமே தூங்கிட்டுத் தான் இருப்பாரா;-))
  போட்டோவிலும் தூங்குறாரே.

  ReplyDelete
 19. ரயில் ச்ந்திப்பு, நொந்து நூலாகிய லப்டாப் சார்ஜ் அனுபவம் என சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.

  ReplyDelete
 20. ////அடுத்த பதிவில் அதாவது நாளை இத்தொடர் முற்றும் //////

  பின்னிட்டீங்க போங்க.... (ஆமா இப்பத்தான் விருதுநகரே வந்திருக்கு, அப்போ விருதுநகர் டூ மும்பை வரை பயணத்துக்கு அடுத்த தொடர் ஆரம்பிக்க போறீங்களாப்பு?)

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!