Saturday, July 23, 2011

ரயில்பயணத்தில் பதிவர்கள் சந்திப்பு

காலை 6 : 55 க்கு மும்பை எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டுமென்பதால் நண்பன் ராஜகுமாரிடம் காலை ஆறு மணிக்கு வந்து நாகர்கோவில் கூட்டி செல்லுமாறு சொல்லியிருந்தேன், ஏன்னா நடந்த பார்ட்டி அப்பிடி.....


அவனும் காலையிலேயே வந்துட்டான். பட படவென கிளம்பினேன் காரணம் ஆபீசர் நெல்லையில் அதே ரயிலில் என் கூட மதுரை வர [[ஆபீசியல்]] இருந்ததால் பயம் கூடி போச்சு அவர் கையில் பிரம்பு வச்சிகிட்டு காத்திருக்குறது மாதிரியே பிரம்மையா இருந்துச்சு...


ஸ்டேசன் வந்து பி என் ஆர் செக் பண்ணினேன் ஹி ஹி போன தடவை மாட்னா மாதிரி மாட்டி தொலைக்க புடாதே, நண்பன் கே ஆர் விஜயன் பக்காவாக டிக்கெட் எடுத்து தந்து விட்டார் என்ற சந்தோஷத்தில் s 3 சீட் நம்பர் 17
ல போயி பக்காவா உக்காந்துட்டேன்....


ரயில் தட தட என நெல்லை நோக்கி ஸாரி மும்பை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது, காற்று சுகமாக என்னை தழுவியது, உறக்கம் கண்ணை கிறக்க உறங்கி போனேன்...


திடீரென ஒரு இடத்தில் ரயில் நிற்கவும் பதற்றமாக எழும்பி பார்த்தேன்...ஆத்தீ நாங்குநேரி வந்துருச்சி அடுத்து திருநெல்வேலி, நாஞ்சில் மனோகரன் மாதிரி ஆபீசர் தடியுடன் நிப்பாறேன்னு பயந்து பாத்ரூம் ஓடி முகம் கழுவி காத்திருந்தேன் நெல்லைக்காக ஸாரி ஆபீசருக்காக...


கரீக்டா வந்தாருய்யா ஆபீசர், அதிகாலை என்றாலும் செம ஃபிரஷா வந்துருந்தார் வெரி ஸ்மார்ட்டாக...!!! அவர் ரயில் உள்ளே வந்ததும் அவருடைய பணியாள் ஏதோ ஒரு பார்சலை பக்கத்தில் கொண்டு வைத்து விட்டு போனார், பார்வையாலேயே நன்றி சொல்லி போக சொன்னார் அவரை ஆபீசர்.....


அப்புறம் சந்தோஷமாக பேசிகொண்டிருந்தோம், அப்புறமா சொன்னார் தினகரன் பத்திரிக்கைல எடக்கு மடக்கா நியூஸ் போட்டு அதுக்கு உத்திரவாதமான அதிகாரியை கைது செய்யவேண்டும்னு நியூஸ் போட்டுருக்குறதா கடுப்பாக சொன்னார், கலெக்டர் தலையிட்டு தினகரன் மண்டையை டமால் ஆக்கியதையும் சொன்னார்....!!!


இந்த சிபி ராஸ்கல் தொல்லை தாங்க முடியலை கொஞ்ச நாளா, ஏன்னா என்கிட்டே லேப்டாப் இல்லவே இல்லை என்று போற வாற இடமெல்லாம் சொல்லிட்டு திரியுரானே இதுக்கு ஒரு முடிவு கட்டனுமேன்னு தோணிச்சி.....


உடனே செயல்பட்டேன் ஹி ஹி என் லேப்டாப்பை பேக்கில் இருந்து உருவி எடுத்து ஆபீசர் கையில குடுத்து பிளே பண்ணுங்க ஆபீசர்'ன்னு குடுத்தேன், ஆபீசரும் ஆர்வமாக வாங்கி ஒப்பன் பண்ணினார்....


அங்கே கௌசல்யா மேடம் பதிவை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட்டார் இன்னும் அப்பிடியே பிளே பண்ணிட்டு இருக்கும் போதே, தங்கச்சி பாப்பா'மாவுக்கு [[கல்பனா]] போன் பண்ணி சொன்னேன், ஏலே பிள்ளை அண்ணனும் ஆபீசரும் விருதுநகர் வழியா வந்துட்டு இருக்கோம்னு...ஏன்னா நெல்லை ரெண்டாவது பதிவர் சந்திப்புக்கு கூப்புடலைன்னு செம கடுப்புல இருப்பாளே, கொஞ்சம் சமாதானபடுத்துவோம்னு, ஆபீசரும் பேசினார்...பாப்பா'ம்மாவும் உடனே ரயில்நிலையம் வருவதாக சொன்னாள்...!!!

திருப்பெருங்குன்ரம்

அப்புறமா ஆபீசர் சொன்னார், மனோ தங்கச்சிக்கு போன் பண்ணிட்டோம் சரி, கோவில்பட்டி வழியாதானே போறோம் இம்சை அரசனுக்கும் சொல்லிருங்க அவர் வருத்த பட்டுற போறார்னு சொல்லவும் அவருக்கும் போனை போட்டோம், ஹி ஹி தம்பி நான் வரலைன்னு காட்டமா சொல்லிட்டார்......


ஓகே சரி மனோ ஈரோடு வழியாதானே போறீங்க நம்ம சிபி'க்கும் சொல்லிருங்க அவரும் ஸ்டேசன்ல உங்களை வந்து பாப்பாருல்ல, என சொல்லிக்கொண்டே அந்த மூதேவிக்கு போனை போட்டார், அவன் எப்பிடி பட்ட ஆளு, பதிவுலையே என்னை நாறடிச்சி கும்புட வைக்குறவன் நேர்ல பாத்தா என்னாவுறது ஆபீசர் இப்பிடி கோர்த்து விடுராறேன்னு மனசு தவிக்குது.....!!


பயணம் தொடரும்..........

டிஸ்கி : விருதுநகரில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது எனக்கும் ஆபீசருக்கும்...

டிஸ்கி : டேய் சிபி அண்ணா, நல்லா பார்த்துக்கோ லேப்டாப்பை, இனி அண்ணனை நாஞ்சில் மனோ அண்ணா'ன்தான் னு கூப்பிடனும் என்ன...???

60 comments:

 1. அங்கேயே பொட்டிய தட்டிக்குனு இருந்தா இங்கன எப்ப வருவீக அண்ணே .....

  ReplyDelete
 2. நேரமும் கிழமையும் வரட்டும் மக்கா வந்து ஒன்னரை மாசம்தானே ஆச்சு ஒரு மூணு மாசம்......

  ReplyDelete
 3. லேப் டாப் மனோ வாழ்க வளர்க.. ஹி ஹி

  ReplyDelete
 4. அந்த லேப்டாப்ல அப்படி என்ன தான்யா இருக்கு?

  ReplyDelete
 5. இவரு பெரிய அமெரிக்கன் அம்பாசிடரு...பட்டைய கேளப்புராறு!!ஹிஹிஹி ஹிஹிஹி

  ReplyDelete
 6. பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said...
  லேப் டாப் மனோ வாழ்க வளர்க.. ஹி ஹி//

  டேய் டேய்.....

  ReplyDelete
 8. செங்கோவி said...
  அந்த லேப்டாப்ல அப்படி என்ன தான்யா இருக்கு?//

  எச்சூச்மீ இது சிபி'கிட்டேயும் ஆபீசர்'கிட்டேயும் கேக்கவேண்டிய கேள்வி ஹி ஹி...

  ReplyDelete
 9. மைந்தன் சிவா said...
  இவரு பெரிய அமெரிக்கன் அம்பாசிடரு...பட்டைய கேளப்புராறு!!ஹிஹிஹி ஹிஹிஹி//

  அமெரிக்காவுலையும் அம்பாசிடர் கார் தயார் பண்ணுராயின்களா...??!!!

  ReplyDelete
 10. இராஜராஜேஸ்வரி said...
  பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

  நன்றி மேடம்...

  ReplyDelete
 11. அண்ணனின் அனத்தங்களுக்கு தம்பியின் நன்றிகள்.....கொய்யால கொலையா கொல்றான்....ஹிஹி!

  ReplyDelete
 12. ஏன்னா நெல்லை ரெண்டாவது பதிவர் சந்திப்புக்கு கூப்புடலைன்னு செம கடுப்புல இருப்பாளே, கொஞ்சம் சமாதானபடுத்துவோம்னு, ஆபீசரும் பேசினார்...பாப்பா'ம்மாவும் உடனே ரயில்நிலையம் வருவதாக சொன்னாள்...!!!//

  அடுத்த தடவ வரும் போது சொல்லல .,
  அழுதுருவேன் ஆமாம் ., ., ., .,:)))))

  ReplyDelete
 13. இதுதான் அந்த லேப் டாப்பா ....இதுக்காக கொஞ்ச நாளைக்கு முன்னாடி அடி தடில்லாம் நடந்துச்சே .....

  ReplyDelete
 14. விக்கியுலகம் said...
  அண்ணனின் அனத்தங்களுக்கு தம்பியின் நன்றிகள்.....கொய்யால கொலையா கொல்றான்....ஹிஹி!//

  இல்லியே இது எடக்கரடக்கலா இருக்கே ஹி ஹி இப்பிடி வரணும் "" தம்பியின் அனத்தங்களுக்கு அண்ணனின் நன்றிகள்""" ஹி ஹி அண்ணே இது எப்பிடி இருக்கு ஹி ஹி....

  ராஸ்கல் இன்னைக்கு லீவுன்னா கொழுப்பா பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி எனக்கும் இன்னைக்கு லீவுதான்....

  ReplyDelete
 15. கல்பனா said...
  ஏன்னா நெல்லை ரெண்டாவது பதிவர் சந்திப்புக்கு கூப்புடலைன்னு செம கடுப்புல இருப்பாளே, கொஞ்சம் சமாதானபடுத்துவோம்னு, ஆபீசரும் பேசினார்...பாப்பா'ம்மாவும் உடனே ரயில்நிலையம் வருவதாக சொன்னாள்...!!!//

  அடுத்த தடவ வரும் போது சொல்லல .,
  அழுதுருவேன் ஆமாம் ., ., ., .,:)))))//


  ஏ ஆத்தா.......நான் சரண்டர் பாப்பா'ம்மா.......

  ReplyDelete
 16. உங்கள் இடுகைக்கு வரும்போது எல்லாம் நான் வயிற்று வலி மருந்து எடுத்து வருவேன் மறந்தேன் எப்படி உங்களால் எழுத முடிகிறது என்னால் இவ்வளவு நகைசுவையுடன் எழுத இயலாது உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி

  ReplyDelete
 17. எனக்கும் ஒரு லேப்டாப் கிடைக்குமா?

  ReplyDelete
 18. யாருய்யா அது பாப்பம்மா? சாலமன் பாப்பையா சிஸ்டரா? பட்டிமன்றத்துல பேசுவாங்களா?

  ReplyDelete
 19. யோவ் என்னய்யா இது ட்ரெயின்ல போனா பதிவு, வந்தா பதிவு.....???

  ReplyDelete
 20. என்னய்யா ட்ரெயினே காலியா கிடக்கு?

  ReplyDelete
 21. //செங்கோவி said...
  அந்த லேப்டாப்ல அப்படி என்ன தான்யா இருக்கு?//
  அதானே? ட்ரெயின் வேற காலியா இருக்கு! நடந்தது என்ன? :-)

  ReplyDelete
 22. பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 23. hey me the firstu..

  super payanam..

  laptop mano..

  tiptop mana vaalga..

  ReplyDelete
 24. koodal bala said...
  இதுதான் அந்த லேப் டாப்பா ....இதுக்காக கொஞ்ச நாளைக்கு முன்னாடி அடி தடில்லாம் நடந்துச்சே .....//

  கொண்டேபுடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 25. மாலதி said...
  உங்கள் இடுகைக்கு வரும்போது எல்லாம் நான் வயிற்று வலி மருந்து எடுத்து வருவேன் மறந்தேன் எப்படி உங்களால் எழுத முடிகிறது என்னால் இவ்வளவு நகைசுவையுடன் எழுத இயலாது உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி//

  நன்றி மாலதி......

  ReplyDelete
 26. மாலதி said...
  எனக்கும் ஒரு லேப்டாப் கிடைக்குமா?//

  ம்ஹும் சிபி பயலை போட்டு தள்ளுனாதான் சரியாகுமா அவ்வ்வ்வ்வ்....ஆளாளுக்கு கிளம்புராயிங்களே....

  ReplyDelete
 27. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யாருய்யா அது பாப்பம்மா? சாலமன் பாப்பையா சிஸ்டரா? பட்டிமன்றத்துல பேசுவாங்களா?//

  யோவ் பன்னிகுட்டி மக்கா, இந்த பாப்பா'ம்மா...... அதாவது நம்ம தங்கச்சி ஐநா சபையில அருவா எடுத்து பேசும் தைரியம் உள்ளவள், ஜாக்கிரதை....

  ReplyDelete
 28. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் என்னய்யா இது ட்ரெயின்ல போனா பதிவு, வந்தா பதிவு.....???//

  அண்ணே ராம்சாமி அண்ணே நீங்க மட்டும் கக்கா பதிவு போடும் போது, தம்பி நான் இந்த துக்குடா பதிவு போட கூடாதா அண்ணே ஹி ஹி.....

  ReplyDelete
 29. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்னய்யா ட்ரெயினே காலியா கிடக்கு?//

  அது ஆபிசரின் சதி.......

  ReplyDelete
 30. ஜீ... said...
  //செங்கோவி said...
  அந்த லேப்டாப்ல அப்படி என்ன தான்யா இருக்கு?//


  அதானே? ட்ரெயின் வேற காலியா இருக்கு! நடந்தது என்ன? :-)//

  யோவ் இங்கே என்ன டிவி நிகழ்ச்சியா நடத்துறோம் அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 31. சே.குமார் said...
  பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

  நன்றி குமார் மக்கா.....

  ReplyDelete
 32. siva said...
  hey me the firstu..

  super payanam..

  laptop mano..

  tiptop mana vaalga..//

  என்னாது லேப்டாப் மனோவா...???? எட்றா அந்த வீச்சருவாளை பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி....

  ReplyDelete
 33. siva said...
  hey 25vadai enakuthan..//

  எச்க்கூச்சுமீ இருபத்தைந்து வடை எல்லாம் தரமுடியாது ஹி ஹி ஸாரி லாரி ஸாரி செல்வா'கிட்டே டிரை பண்ணுங்கோ.....

  ReplyDelete
 34. அது என்ன, என்னோட லேப்டாப்பைப் பார்த்து, நீங்க உங்களதுன்னு சொல்றீங்க, அதுக்கு சிபி ஜால்ரா போடுறாரு, கூடல் பாலா இதுதான் ’அந்த’ லேப்டாப்பாங்றாரு,மாலதி எனக்கும் ஒண்ணு கிடைக்குமான்றாங்க.சே, சே இப்படி தெரிஞ்சிருந்தா அன்னைக்கு என்னோட லேப்டாப்ப வீட்ல வச்சிட்டு வந்திருப்பேனே! ம்ஹூம், அது என்னுது. :))

  ReplyDelete
 35. //MANO நாஞ்சில் மனோ said...
  >>>>>>>>>>>>>>>>>>>>>>
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்னய்யா ட்ரெயினே காலியா கிடக்கு?
  >>>>>>>>>>>>>>>>
  அது ஆபிசரின் சதி.......//
  நான் எப்பங்க சதி பண்ணினேன். ஒருத்தரும் உங்க கூட நாஞ்சில் நாட்டிலிருந்து வரலயே! அப்புறம் அந்த திருநங்கை மேட்டர் சொல்லவே இல்ல! ஹே ஹே.

  ReplyDelete
 36. அட..பதிவு நல்லா இருக்கு.நைஸ் travel story

  ReplyDelete
 37. சுவையான பயணம்...

  ReplyDelete
 38. தலையும் புரியல வாலும் புரியல :-))
  இதுல சஸ்பென்ஸ் வேறயா ?
  அவ்வ்வ்வ்

  ReplyDelete
 39. FOOD said...
  அது என்ன, என்னோட லேப்டாப்பைப் பார்த்து, நீங்க உங்களதுன்னு சொல்றீங்க, அதுக்கு சிபி ஜால்ரா போடுறாரு, கூடல் பாலா இதுதான் ’அந்த’ லேப்டாப்பாங்றாரு,மாலதி எனக்கும் ஒண்ணு கிடைக்குமான்றாங்க.சே, சே இப்படி தெரிஞ்சிருந்தா அன்னைக்கு என்னோட லேப்டாப்ப வீட்ல வச்சிட்டு வந்திருப்பேனே! ம்ஹூம், அது என்னுது. :))//

  ஐயய்யோ ஆபீசர் கையை பிடிச்சி சிபி இழுத்துட்டான் காப்பாத்துங்க காப்பாத்துங்க......

  ReplyDelete
 40. ஒவ்வொரு ’சந்திப்பி’லும் ஒரு சந்திப்பா!

  ReplyDelete
 41. பயணங்கள் முடிவதில்லை

  ReplyDelete
 42. குடுத்து வைச்சிருக்கீங்க.. லேப் டாப்ப..!!

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 43. அண்ணே, திரும்பவும் தமிழ்மணம் வோட்டு ரெடி ஆயிடுச்சு, அந்த ஏழாவது
  வோட்டுக்கு நீங்க இருக்கீங்கன்னு தெரியும், மீது ஆறு வோட்டுக்குதான்
  என்ன பண்ணப்போறேன்னு தெரியல?

  ReplyDelete
 44. நல்ல இருக்கு நண்பரே பயணம்

  ReplyDelete
 45. முடிந்தளவு பதிவுலக நண்பர்களை சந்திப்பீங்கள் போல!

  ReplyDelete
 46. FOOD said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  >>>>>>>>>>>>>>>>>>>>>>
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்னய்யா ட்ரெயினே காலியா கிடக்கு?
  >>>>>>>>>>>>>>>>
  அது ஆபிசரின் சதி.......//
  நான் எப்பங்க சதி பண்ணினேன். ஒருத்தரும் உங்க கூட நாஞ்சில் நாட்டிலிருந்து வரலயே! அப்புறம் அந்த திருநங்கை மேட்டர் சொல்லவே இல்ல! ஹே ஹே.//

  ஆபீசர் அந்த மேட்டர் தெரிஞ்சுதுன்னா சிபி என்னை நாரடிச்சிருவானே.......அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 47. குணசேகரன்... said...
  அட..பதிவு நல்லா இருக்கு.நைஸ் travel stor//

  மிக்க நன்றி குணா....

  ReplyDelete
 48. குணசேகரன்... said...
  அட..பதிவு நல்லா இருக்கு.நைஸ் travel stor//

  மிக்க நன்றி குணா....

  ReplyDelete
 49. குணசேகரன்... said...
  அட..பதிவு நல்லா இருக்கு.நைஸ் travel stor//

  மிக்க நன்றி குணா....

  ReplyDelete
 50. middleclassmadhavi said...
  சுவையான பயணம்...//

  நன்றி மாதவி.............

  ReplyDelete
 51. ஜெய்லானி said...
  தலையும் புரியல வாலும் புரியல :-))
  இதுல சஸ்பென்ஸ் வேறயா ?
  அவ்வ்வ்வ்//

  ஹி ஹி நான் ஷார்ஜா'வுல சத்தியமா ஒட்டகம் மேயிக்கலைன்னு சொல்றாராம் [[தலையும் வாழும்]] மக்களே நோட் திஸ்.....

  ReplyDelete
 52. சென்னை பித்தன் said...
  ஒவ்வொரு ’சந்திப்பி’லும் ஒரு சந்திப்பா!//

  சென்னைக்கும் வரபோறேன் தல, ரெடியா இருங்க.....

  ReplyDelete
 53. மாய உலகம் said...
  பயணங்கள் முடிவதில்ல//

  முடிவதில்லை பயணங்கள் இல்லையா....

  ReplyDelete
 54. காட்டான் said...
  குடுத்து வைச்சிருக்கீங்க.. லேப் டாப்ப..!!

  காட்டான் குழ போட்டான்..//

  ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 55. ஷர்புதீன் said...
  அண்ணே, திரும்பவும் தமிழ்மணம் வோட்டு ரெடி ஆயிடுச்சு, அந்த ஏழாவது
  வோட்டுக்கு நீங்க இருக்கீங்கன்னு தெரியும், மீது ஆறு வோட்டுக்குதான்
  என்ன பண்ணப்போறேன்னு தெரியல?//

  ஐயய்யோ அவ்வ்வ்வ்வ் எனக்கும் தமிழ்மணம் வேலை செய்யலியே.....

  ReplyDelete
 56. M.R said...
  நல்ல இருக்கு நண்பரே பயணம்//

  நன்றி எம் ஆர்.....

  ReplyDelete
 57. Nesan said...
  முடிந்தளவு பதிவுலக நண்பர்களை சந்திப்பீங்கள் போல!//

  லீவுலதானே சந்திக்க முடியுது, வெளிநாடு போயிட்டா சந்திக்க முடியுமா என்ன....

  ReplyDelete
 58. டிஸ்கி : விருதுநகரில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது எனக்கும் ஆபீசருக்கும்... ///

  அது ஆச்சரியமா நல்லா சொல்லுங்க அது அதிர்ச்சி....!!!!

  ReplyDelete
 59. வணக்கம் பாஸ், ரயில் பயணச் சந்திப்பினைச் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.
  ஒரு சின்ன வேண்டுகோள்,

  பதிவர் என உங்களை அடையாளம் கண்டு கொண்ட டிக்கட் பரிசோதகரைப் பற்றிய அனுபவங்களை எப்போது எழுதுவீங்க?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!