Thursday, July 21, 2011

இரண்டாவது நெல்லை பதிவர் சந்திப்பு

நெல்லை மினி பதிவர் சந்திப்புக்கு வேக வேகமா கிளம்பி போயி, பஸ்சில் [[பேருந்து]] போகும் போதே கே ஆர் விஜயனுக்கு போன் பண்ணி பஸ்சில் போகும் போதே [[அவர் கடை முன்பாகத்தான் பஸ் போகும்]] கைகாட்டி நான் நாகர்கோவில் பஸ்நிலையத்தில் டிபன் சாப்டுட்டு இருக்கேன் வேகமா வாங்கன்னு சொல்லிட்டு பஸ்டேன்ட் போனேன்...


டிபன் சாப்டுட்டு விஜயனுக்காக காத்திருந்தேன். அவர் வர சற்று தாமதம் ஆனதால், சரி பாத்ரூம் போயிட்டு வந்துருவோம்னு பாத்ரூம் போனேன், போன் சிணுங்க எடுத்தால் விஜயன், ஹலோ எங்கே இருக்கீங்க...?? நான் பாத்ரூம்ல இருக்கேன்னு சொன்னதும் பக்கத்துல நம்பர் ஒன் போயிட்டு இருந்தவன் என்னை முறைச்சான் பாருங்க ம்ஹும்.....


அப்புறமா ரெண்டு பேரும் என்ட் டூ என்ட் பஸ் பிடிச்சோம் நெல்லைக்கு, பஸ்சுல சீட் ரெண்டுதான் இருந்தது அதாவது மூன்று பேர் அமரும் சீட்டில் ஒரு ஒரு சீட் காலியாக இருக்கவே சேர்ந்து அமர முடியவில்லை, சரி மக்கா நீங்க முன்னாடி இருங்க நான் பின்னாடி இருக்கேன்னு விஜயன் சொன்னார், அப்புறம்தான் ஒரு பெரிய கொடுமையே நடந்தது...


மூன்று பேர் அமரும் சீட்டில் எனக்கு நடு இருக்கை கிடைத்தது, இந்தகரையும் அந்த கரையும் ரெண்டு தடியன்கள் [[அவ்வ்வ்வ்]] எம்புட்டு நசுக்க முடியுமோ அம்புட்டு என்னை நசுக்கி விட்டனர், மாத்திரமல்ல நான் எனக்கு அடிச்சிருந்த ஸ் ஃ ரே'ல அவனுங்க மயங்குனாங்களா...?? இல்லை நாத்தம் தாங்காம மயங்கி சரின்ஜாயிங்களா....என் தோள்ல ?? அது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனா ஒன்னுய்யா முந்தய நாள் அவனுக அடிச்ச டாஸ்மாக் நாத்தம்......ஐயையோ அப்பிடியே இறங்கி ஓடிரலாமானு நினைக்கவும், ஆபீசர் நினைவில் வந்து லத்தியை காட்டினார் ம்ஹும்....


எப்பிடியோ நெல்லை போயி சேர்ந்து என் மச்சினனுக்கு போனை போட்டேன் மாப்பிளை அத்தான் வந்துட்டேன், நெல்லைக்கு உன் சைக்கிளை கொண்டுட்டு வான்னு, கால் மணி நேரத்தில் வந்துருதேன் அத்தான்னு சொன்னவன், ஒரு மணி நேரம் கழிச்சுதான் வந்தான்....


அவனுக்காக நெல்லை பஸ்நிலையம் ஆஸ்தான நுழை வாயிலில் நாங்கள் காத்திருக்கும் வேளையில் ஒரு லேடி இன்ஸ்பெக்டர் விஜயனை சந்தேகமாகவே பார்த்து கொண்டிருந்தார், நான் கூலிங் கிளாஸ் போட்டுருந்ததாலே இன்ஸ்பெக்டரை நான் வாச் பண்ணது போலீசுக்கு தெரியலை, அப்புறமா விஜயன்கிட்டே சொன்னேன் மக்கா அந்த போலீஸ் உங்களையே பார்க்குறாயிங்க'ன்னு ஏன்னா விஜயனை பார்த்தால் ரகசிய போலீஸ் மாதிரி இருந்தார்..!!! என்னை பார்த்தால் வேறொரு மார்க்கமா தெரிஞ்சேன், ஏதோ பெரிய கைது படலம் சீக்ரேட்டா நடக்குமொன்னு அவிங்களுக்கு ஒரு டவுட்டு ஹி ஹி.....


ஐயோ அவன் வந்த கோலத்தை பார்த்த விஜயன் கலவரமானார், காரணம் என் மச்சினன் கேரேஜ்'ல போட்டுருந்த லுங்கி'யோட வந்ததுதான்...!!! டேய் இதென்னடா லுங்கியோட வந்துருக்கே'ன்னு கேட்டதுக்கு, அத்தான் கேரேஜ்'ல வேலை நிறைய இருந்துச்சா அதான் பேன்ட் போட கூட நேரமில்லாமல் வந்துட்டேன் இங்கே [[நெல்லை]] இதெல்லாம் சகஜம்தான் கண்டுக்காதீங்கன்னு சொன்னதும் கொஞ்சம் [[நிறைய]] மிரண்டு போனேன் அவ்வ்வ்வ்வ்வ்....


எப்பிடியோ ஆபிசரின் ஆபீஸ் கொண்டு போயி சேர்த்ததும் அல்லாமல் மச்சினன் லுங்கியோட என் கூடவே வந்து என்னை புலம்ப வச்சிட்டான் [[இருக்குடா உனக்கு அவ்வ்வ்வ்வ்]]
அங்கே ஆபீசரும், என் தளபதி, தம்பி இம்சை அரசனும் எங்களை அன்புடனும் பாசத்துடனும் வரவேற்றனர், தேனீர் தந்துவிட்டு வாங்க ஹோட்டல்ல ரூம் போட்டுருக்கேன் அங்கே போகலாம்னு ஆபீசர் சொன்னதும் பயம் குடுக்க ஆரம்பிச்சிடுச்சு....[[ரூம் போட்டு அடிப்பாறோன்னு ஹே ஹே ஹே]]


நம்ம ஜானகிராம் ஹோட்டலின் பக்கத்து ஹோட்டலான பரணி'யில் டபுள் பெட் ரூம் போட்டுருந்தார் ஆபீசர்....[[எல்லாம் ஆபீசர் செலவுதான்]] அங்கே உட்கார்ந்து நிறைய விஷயங்கள் பேசி புகைபடங்கள் எடுத்து கொண்டோம்.......

தொடரும் சாப்பாடு...........


டிஸ்கி : திவான் என்ற புதிய நண்பனின் அற்புதமான நட்பு உண்டாக ஆபீசர் உதவியது [[ஆபிசரின் நெருங்கிய நண்பன்]], அவரை பற்றி சுவாரஸ்யமான சில நிகழ்வுகளை சொல்றேன் சூப்பரா இருக்கும்....!!!

50 comments:

 1. திவான் என்ற புதிய நண்பனின் அற்புதமான நட்பு உண்டாக ஆபீசர் உதவியது [[ஆபிசரின் நெருங்கிய நண்பன்]], அவரை பற்றி சுவாரஸ்யமான சில நிகழ்வுகளை சொல்றேன் சூப்பரா இருக்கும்....!!!/// SEEKKIRAM SOLLUNGA MAKKAA.

  ReplyDelete
 2. வேடந்தாங்கல் - கருன் *! said...
  திவான் என்ற புதிய நண்பனின் அற்புதமான நட்பு உண்டாக ஆபீசர் உதவியது [[ஆபிசரின் நெருங்கிய நண்பன்]], அவரை பற்றி சுவாரஸ்யமான சில நிகழ்வுகளை சொல்றேன் சூப்பரா இருக்கும்....!!!

  /// SEEKKIRAM SOLLUNGA MAKKAA.//

  சரி சரி மக்கா....

  ReplyDelete
 3. நல்ல விருந்து அண்ணா....

  ReplyDelete
 4. erunga na poitu padichutu poidren..

  ReplyDelete
 5. அதே ஜானகி ராமன் ஹோட்டெல நானும் நண்பரும் தோசையும் காபியும் சாப்பிட்டது
  மீண்டும் அதே நாள் நியாபகம் நல்ல ஊருதான் ,
  அடுத்த முறை போகும்போது ஆபிசரை கண்டிப்பாக பார்த்து கையெழுத்து வாங்க வேண்டும்

  ReplyDelete
 6. நெல்லையில் கலக்கியிருக்கீங்க....

  நாங்க வரவில்லை என்ற ஏக்கம் இன்னும் அதிகமாகிறது...

  ReplyDelete
 7. தங்களின் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 8. தங்கள் அனுபவபகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 9. //நான் பாத்ரூம்ல இருக்கேன்னு சொன்னதும் பக்கத்துல நம்பர் ஒன் போயிட்டு இருந்தவன் என்னை முறைச்சான் பாருங்க ம்ஹும்.....//

  ஒரு வேளை கடன் குடுத்து ஏமாந்த ஆளோ என்னவோ..?? ஹி...ஹி...

  ReplyDelete
 10. //ஐயோ அவன் வந்த கோலத்தை பார்த்த விஜயன் கலவரமானார்,//

  சாப்பிட செல்வதற்கு விறுவிறுப்பாக கொண்டு சென்று விட்டீர்களே....மீண்டும் சாப்பிட வருவேன்.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. நல்ல அனுபவம் அதுவும் நீங்கள் நசிக்கப்பட்டதும் அந்த டாஸ்மார்க் வாசமா நீங்கள் போட்ட பாரின் வாசனையில் மயங்கினதான என சிரிப்புத் தாங்க முடியல மனோ! தொடருங்கள்!

  ReplyDelete
 12. யாருக்காவது அல்வா கொடுத்துட்டு வந்தீங்களா?? இல்ல வாங்கிட்டு வந்தீங்களா??? :)

  ReplyDelete
 13. நல்ல என்ஜாய் பண்ணிஇருகிங்க

  ReplyDelete
 14. அடுத்த தடவை எங்களையும் கூப்பிடுங்க

  ReplyDelete
 15. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  நல்ல விருந்து அண்ணா....//

  சூப்பர் சாப்பாடு மக்கா....!!!

  ReplyDelete
 16. siva said...
  mee the fistu..//

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 17. siva said...
  erunga na poitu padichutu poidren..//

  ஹி ஹி ஹி ஹி.....

  ReplyDelete
 18. siva said...
  அதே ஜானகி ராமன் ஹோட்டெல நானும் நண்பரும் தோசையும் காபியும் சாப்பிட்டது
  மீண்டும் அதே நாள் நியாபகம் நல்ல ஊருதான் ,
  அடுத்த முறை போகும்போது ஆபிசரை கண்டிப்பாக பார்த்து கையெழுத்து வாங்க வேண்டும்//

  போகுமுன் ஆபீசருகிட்டே தகவல் சொல்லிட்டு போங்க மக்கா...

  ReplyDelete
 19. கவிதை வீதி # சௌந்தர் said...
  நெல்லையில் கலக்கியிருக்கீங்க....

  நாங்க வரவில்லை என்ற ஏக்கம் இன்னும் அதிகமாகிறது...//

  நாமும் ஒரு நாள் சந்திக்கலாம் மக்கா...

  ReplyDelete
 20. கவிதை வீதி # சௌந்தர் said...
  தங்களின் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி...//

  நன்றி மக்கா..........

  ReplyDelete
 21. ஆகுலன் said...
  இப்படி எல்லாம் நடக்குதா....//

  அப்பிடியா.....

  ReplyDelete
 22. ஹி ..ஹி ..இதுல தொடரும் வேற ..

  ReplyDelete
 23. Mahan.Thamesh said...
  தங்கள் அனுபவபகிர்வுக்கு நன்றி//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 24. ஜெய்லானி said...
  //நான் பாத்ரூம்ல இருக்கேன்னு சொன்னதும் பக்கத்துல நம்பர் ஒன் போயிட்டு இருந்தவன் என்னை முறைச்சான் பாருங்க ம்ஹும்.....//

  ஒரு வேளை கடன் குடுத்து ஏமாந்த ஆளோ என்னவோ..?? ஹி...ஹி...//

  அனுபவம் என்னவா பேசுதுங்கோ.....

  ReplyDelete
 25. மாய உலகம் said...
  //ஐயோ அவன் வந்த கோலத்தை பார்த்த விஜயன் கலவரமானார்,//

  சாப்பிட செல்வதற்கு விறுவிறுப்பாக கொண்டு சென்று விட்டீர்களே....மீண்டும் சாப்பிட வருவேன்.... வாழ்த்துக்கள்//

  வாங்கய்யா வாங்க.........

  ReplyDelete
 26. Nesan said...
  நல்ல அனுபவம் அதுவும் நீங்கள் நசிக்கப்பட்டதும் அந்த டாஸ்மார்க் வாசமா நீங்கள் போட்ட பாரின் வாசனையில் மயங்கினதான என சிரிப்புத் தாங்க முடியல மனோ! தொடருங்கள்//

  சந்துல வச்சி சிந்து பாடிட்டானுக.....ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 27. ஆமினா said...
  யாருக்காவது அல்வா கொடுத்துட்டு வந்தீங்களா?? இல்ல வாங்கிட்டு வந்தீங்களா??? :)//

  மிக சூடான அல்வா ஆபீசர் தந்துதான் விட்டார்....

  ReplyDelete
 28. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  நல்ல என்ஜாய் பண்ணிஇருகிங்க//

  கூப்புட்டுருவோம் கூப்புட்டுருவோம்.....

  ReplyDelete
 29. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  அடுத்த தடவை எங்களையும் கூப்பிடுங்க//

  ஹி ஹி கமெண்ட்ஸ் மாறி போயிருச்சி....

  ReplyDelete
 30. இம்சைஅரசன் பாபு.. said...
  ஹி ..ஹி ..இதுல தொடரும் வேற ..//

  ஹி ஹி தம்பி மீன் சாப்பாடு இன்னும் வரலை......

  ReplyDelete
 31. முடிந்தால் அடுத்தவர் பதிவுக்கு வரவும்!

  ReplyDelete
 32. மனோ நல்லா சந்திப்புல கலந்துகறாரு... சும்மா பதிவா அதுவும் தொடர் பதிவா போட்டு கலங்கடிக்கிராறு

  ReplyDelete
 33. விடுமுறையை மகிழ்ச்சியாக் கழிச்சிருக்கீங்க!தொடருங்கள்!ரசிக்கிறோம்!

  ReplyDelete
 34. அண்ணா மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? அடுத்து எங்க குளிக்க போறீங்க????

  ReplyDelete
 35. விக்கியுலகம் said...
  முடிந்தால் அடுத்தவர் பதிவுக்கு வரவும்!//

  ஹி ஹி சரிங்க அண்ணா....

  ஒரு பதிவு போடுறதுக்குள்ளே நான் படுற பாடு இருக்கே முடியல....

  ReplyDelete
 36. தமிழ்வாசி - Prakash said...
  மனோ நல்லா சந்திப்புல கலந்துகறாரு... சும்மா பதிவா அதுவும் தொடர் பதிவா போட்டு கலங்கடிக்கிராறு//

  மக்கா அடுத்த பதிவுல உனக்கு இருக்கு ஆப்பே.....

  ReplyDelete
 37. சென்னை பித்தன் said...
  விடுமுறையை மகிழ்ச்சியாக் கழிச்சிருக்கீங்க!தொடருங்கள்!ரசிக்கிறோம்!//

  நன்றி தல...........

  ReplyDelete
 38. இரவு வானம் said...
  அண்ணா மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? அடுத்து எங்க குளிக்க போறீங்க????//

  தமிழ்நாட்டு நீர் நிலையெல்லாம் நாறியாச்சி இனி எங்கேன்னு சிபி கிட்டே கேட்டு சொல்றேன் ஹி ஹி...

  ReplyDelete
 39. //இரவு வானம் said...
  அண்ணா மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? அடுத்து எங்க குளிக்க போறீங்க????//

  ஹா..ஹா..ரிப்பீட்டேய்!

  இவரை சீக்கிரம் எங்கயாவது பேக் பண்ணனும்யா.

  ReplyDelete
 40. அருமையான செய்திகளை
  அமர்க்களமான எளிய நடையில்
  சரளமாய் சொல்லும் பாங்கு
  யார்க்கும் வாய்க்காதது அண்ணாச்சி

  ReplyDelete
 41. கைகாட்டி நான் நாகர்கோவில் பஸ்நிலையத்தில் டிபன் சாப்டுட்டு இருக்கேன் வேகமா வாங்கன்னு சொல்லிட்டு பஸ்டேன்ட் போனேன்.//
  டேங்கப்பா! இவ்வளவும் சைகயில் நீங்க பேச, அதை விஜயன் அண்ணாச்சி புரிஞ்சுகிட்டு உங்களை தேடி வந்தது.... சம்திங் கிரேட் தான் போங்கள்.

  ReplyDelete
 42. //டிபன் சாப்டுட்டு விஜயனுக்காக காத்திருந்தேன்.//
  என்ன கொடுமை இது. அவர சாப்பிடக் கூப்பிடலயா?

  ReplyDelete
 43. //எம்புட்டு நசுக்க முடியுமோ அம்புட்டு என்னை நசுக்கி விட்டனர்//
  ரொம்ப ஓவரா நசுக்கிட்டாங்களோ?

  ReplyDelete
 44. //என்னை பார்த்தால் வேறொரு மார்க்கமா தெரிஞ்சேன், ஏதோ பெரிய கைது படலம் சீக்ரேட்டா நடக்குமொன்னு அவிங்களுக்கு ஒரு டவுட்டு ஹி ஹி.....//
  சரியாத்தான் டவுட்டிருக்காங்க!

  ReplyDelete
 45. //[[ரூம் போட்டு அடிப்பாறோன்னு ஹே ஹே ஹே]]//
  அன்பால் மட்டுமே அடிப்போம், மனோ!

  ReplyDelete
 46. காட்டான் குழ போட்டான்

  ReplyDelete
 47. அருமை மனோ.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 48. நெல்லை போயி சேர்ந்து என் மச்சினனுக்கு போனை போட்டேன் மாப்பிளை அத்தான் வந்துட்டேன், நெல்லைக்கு உன் சைக்கிளை கொண்டுட்டு வான்னு, கால் மணி நேரத்தில் வந்துருதேன் அத்தான்னு சொன்னவன், ஒரு மணி நேரம் கழிச்சுதான் வந்தான்....//

  ஏன் நம்ம தமிழ்வாசியைத் தேடிக்கிட்டிருந்தாரா;-)))

  இரண்டாவது சந்திப்பின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. நம்ம சிபியைத் தவற விட்டிட்டீங்களே.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!