Tuesday, March 6, 2012

பயணங்கள் முடிவதில்லை பார்ட் 2.....!!!

நானும் விஜயனும் மாப்பிளை ஹரீஷும் பொவோண்டாமோ [[ ஹி ஹி]] குடிச்சிட்டே பேசிட்டும் போட்டோ எடுத்துட்டும் ஜாலியாக பேசி கொண்டிருந்தோம், நேரம் போவதே தெரியாமல்.


நன்றி வீடு சுரேஷ்,

திடீரென விஜயனுக்கு ஒரு போன், பேசியவர், ஆமாம் நாஞ்சில்மனோ என் பக்கத்தில்தான் இருக்கிறார் பேசுங்கள் என சொல்லி போனை என் கையில் கொடுத்து விட்டார், யாருய்யா என்று சைகை மூலம் நான் கேட்க செல்வி என்று அவர் சொன்னது எனக்கு செல்வின் என கேட்க போயி பல்பு வாங்கிட்டேன் [[அவ்வ்வ்வ்வ்]] ஆமாம் அது "என் மன வானில்" செல்வி, மலேசியாவில் இருந்து பேசினார்.

செல்வி தமிழ் டீச்சர் என்பதால் கடினமாக இருக்கும் தமிழ் சொற்களின் அர்த்தங்களை விஜயனிடம் அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வாராம், ஆச்சர்யமாக இருந்தது, என்னய்யா அம்மாம் பெரிய ஆளா நீருன்னு கேட்டேன், ஒரே ஒரு வார்த்தை சொல்றேன் அதுக்கு தமிழில் சரியாக சொல்லுங்கள் பாப்போம் என்றார். 'டி என் ஏ' அதுக்கு தமிழ்ல சரியாக அர்த்தம் சொல்லுங்க என்றார் நான் "ங்கே' [[எங்கே நீங்க சொல்லுங்க பார்ப்போம்]]

அய்யய்யோ எனக்கு நேரம் ஆகிருச்சு என்னை நாகர்கோவில் ஏர்போர்டில் ச்சே ச்சீ பஸ்நிலையத்தில் கொண்டு போயி விட்டுருங்கன்னு கதருனேன், இல்லை நம்ம பழைய மெஸ்'ல போயி சாப்புட்டுதான் போகனும்னு அடம் பிடிச்சார், ஐயோ மக்கா எனக்கு வீட்டுல எங்க அண்ணி மட்டன் கறி பண்ணி வச்சிருக்காங்க போகலைன்னா அங்கேயும் அடி கிடைக்கும் ஆளை விடுங்கய்யா என்றேன்.

ஆங் செல்வி போன் பண்ணுனாங்க'ன்னு சொன்னேன் இல்லையா, அவங்க ஏன்  விஜயன் கூட சாப்பிட போகலையான்னு கேட்டாங்க, நான் இல்லை எங்க அண்ணி மீன்கறி பண்ணி வச்சிருக்காங்கன்னு உளற, விஜயன் கடுப்பாகி செல்விகிட்டே சொல்றாரு, என்கிட்டே மட்டன் கறின்னு சொன்னாரு, உங்ககிட்டே மீன்கறின்னு சொல்றாரு சம்திங் ராங்'ன்னு சொன்னாரு [[அவ்வ்வ்வ்வ் பயிற்சி பத்தாதோ]]

யப்பா ஆளை விடுங்கடா சாமீ, நான் கிளம்புறேன்னு சொன்னதும் சரி வாய்யான்னு கூட்டிட்டு போனார், எல்லாரிடமும் வடை வாங்கிட்டு ஸாரி விடை வாங்கிட்டு கிளம்பினேன், ஆனாலும் விஜயன் விடவில்லை வாங்கய்யா சாப்புட்டு போலாம்னு மறுபடியும் வற்புறுத்தினார் [[நன்றி மக்கா]] வேணாம்னு சொல்லிட்டு கிளம்பினேன்.

யப்பா எப்பிடியோ சந்தேகமாகவே என்னை பஸ்நிலையம் கொண்டு சேர்த்தார், [[கொய்யால அதான் உமன் காலேஜ் பக்கம் வேலை பாக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே என்னையும் அந்த கேஸ்'ல சேர்த்து யோசிச்சி இருப்பாரோ ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா முடியல]]

நாகர்கோவில் பஸ்நிலையத்தில் கொலை வெறியோடு பைக்கில் கொண்டு வந்து நிருத்தினவர், அப்பிடியே போயிருவார்னு நினச்சேன், விட்டாதானே ராஸ்கல் என் கூடவே வந்துட்டு இருக்கார், அய் அதோ எங்க ஊரு பஸ் நிக்குதுய்யா'ன்னு சொன்னதும், யோவ் ஒரு டீ குடிச்சிட்டு போலாம்னு சொன்னார்...

எஸ்கியூஸ்மி ஸாரி எனக்கு தண்ணி மட்டும் போதும்ன்னு சொன்னதும் ஓடி போயி தண்ணி வாங்கி தந்தார் [[கொய்யால எவம்லேய் அது...? சிவகுமாரா ராஸ்கல் அந்த தண்ணி இல்லலேய் ராஸ்கல்]] சரி அப்பவாவது விஜயன் போவார்ன்னு நெனச்சா அவ்வ்வ்வ் போகலை, என்கூடவே பஸ்ல ஏறி உக்காந்துட்டார் [[இங்கேயும் உனக்கு பயிற்சி பத்தாதுடே மனோ]]

ஹி ஹி மேட்டர் என்னன்னா பஸ்ல எங்க முன்னாடி ஜன்னல் வைக்காத ஜாக்கட் போட்டுட்டு ரெண்டு ஃபிகர் வந்து உகார்ந்துருச்சு விஜயன் ஹி ஹி [[ராஸ்கல்]] நான் ஜாலி ஆகிட்டேன், பஸ் கிளம்பவும் விஜயன் [[கிர்ர்ர்ர்ர்ர்ர்]] இறங்கிட்டார் கடுப்போடு.


ஆஹா மனோ உனக்கு வந்த வாழ்வுடா விக்கி என்ற பக்கி சொன்ன அறிவுரைப்படி அழகை ரசிப்பதில் தப்பே இல்லை என்ற கொள்கை [அடிங்] படி கிளம்பினேன், விதி வலியது........பஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் ஒரு பாட்டி வந்து [[அவ்வவ் விஜயனின் சாபம்]] சார் நீங்க ஒத்தைக்குதானே இருக்கீங்க பின்சீட்டில் போயி இருங்களேன்னு சொல்ல, நொந்து போனேன் நுடுல்ஸ் ஆகிப்போனேன்.

ஆஹா ரெண்டு பாட்டிகள் வந்து உக்காந்து ஃபிகர்களின் அழகை மறைச்சுட்டாங்க கொய்யால [[விஜயன் அண்ணே உங்களுக்கு ஒரு ஃபிகருமே கிடைக்க கூடாது அண்ணே இது என் சாபம்]]

சரி சி எம் [[முதலமைச்சர் ஜெயலலிதா]] விசயத்துக்கு வருவோம், சம்பவம் என்னன்னா உதயகுமார் அப்பாயின்ட்மென்ட் எங்களுக்கு வெள்ளிகிழமை தந்தார், ஆனால் அன்று சாயங்காலம் கூடல்பாலா'வுக்கு போன் பண்ணினேன், மீட்டிங் கன்பார்ம் பண்ணனும்னு, ஏன்னா நம்ம வி ஐ பி'கள் சிபி மற்றும் கௌசல்யா அண்ட் ரூபினோ மேடம் எல்லாரும் வருறதா ஏற்பாடு....

அங்கேதான் விதி பல்லாங்குழி விளையாடியது, அணுமின்நிலையம் போராட்டம் காரணமாக அண்ணன் உதயகுமார் அவர்களை இமிடேட்லியாக புதன்கிழமை சந்திக்க வேண்டி முதலமைச்சர் அழைத்திருக்கிறார் அண்ணே என்று கூடல்பாலா சொல்ல, நொந்து போனேன்....

அண்ணே உதயகுமாரை விடுங்க[[அவர் படு பிசி]]  நான் வாறேம்ன்னே உங்களை பார்க்க என்று நண்பன் பாலா சொல்ல சரி மக்கா'ன்னு பிளான் பக்கா ரெடி பண்ணிட்டேன், விஜயனுக்கும், கௌசல்யாவுக்கும் மேட்டரை சொல்லிட்டேன், அதாவது வியாழகிழமை நாகர்கோவிலில் விஜயன் ஆபீசில் சந்திப்பு...

ஆனால் கௌசல்யா ஏற்கனவே கூடல்பாலாவை சந்திதிருந்தபடியால், மனோ நான் அப்புறமா அவரை பார்த்து கொள்கிறேன் ஸோ நீங்களும் விஜயனும், சிபி'யும் நெல்லை வரும் போது சந்திக்கிறேன்னு சொல்லிட்டாங்க.....


சிபி என்ற அண்ணன் [[எலேய் நீ உருப்படவே மாட்டே ராஸ்கல்]] அவர்களுக்கு போன் பண்ணி சொன்னேன் டேய் அண்ணா இப்பிடி இப்பிடி மேட்டர்ன்னு,அவன்  நான் லீவு கிடைக்குமான்னு பார்க்குறேன் தம்பி நாளை சொல்லுறேன்னு சொன்ன மூதேவி, நம்மளையும் அணுமின்நிலைய போராட்டத்தில் கைது பண்ணிற கூடாதுன்னு பயந்து [[தெரியும்டா டேய்]] லீவு கிடைக்கலைன்னு சொல்லிட்டான் ராஸ்கல்....இதுக்கு இடையில் நண்பர்கள் நக்கீரன் என்ற நக்ஸ், விக்கி. சிபி, ஆபீசர். கௌசல்யா. ரூபினோ. மெட்ராஸ் பவன். கூடல்பால மற்றும் பலர் இடை இடையே போன் பண்ணிட்டே இருந்தார்கள்.....!!!!

இனி விஜயன் ஆபிசில் உதயகுமார் அவர்களுக்கு பதிலாக நண்பன் கூடல்பாலாவின் சந்திப்பும் தொடர்ந்து, எங்களின் நெல்லை பயணமும், ஆபிசரின் அன்பு எல்லைக்குள் அவரின் அன்புக்குள்ளான அரவணைப்பில் நானும் விஜயனும், கௌசல்யாவும் நெகிழ்ந்து போன சம்பவங்களையும் சொல்[கொல்ல]லப்போறேன் வாலேய் தம்பி அருவாளை தூக்கிட்டு சண்முக பாண்டி [கூடவே சுதன்'ன்னு ஒரு உயிர் நண்பனை கூட்டிட்டு வந்து பிரசர் ஏத்திய திவானந்தா ஒழிக, சுதன் கதையும் சொல்றேன், சன்முகபாண்டி [ராஜேஷ்] சூப்பர் கதையும், திவானந்தா'வின் லீலைகளையும் சொல்றேன்......


பயணம் படரும் ஸாரி தொடரும்.....!!!

டிஸ்கி : காலதாமதம் ஆகிருச்சு காரணம் மின்வெட்டு, விஜயன் எடுத்த போட்டோ எல்லாம் பதிவுல போட முடியலை, அம்புட்டு டைம் எடுக்குது ஸாரி.... நேரம் கிடைக்கும் போது போடுறேன்.....!!!29 comments:

 1. //
  பயணங்கள் முடிவதில்லை பார்ட் 2.....!!!//

  பார்ட் பார்ட்டா பிரிச்சி மேய்வாரே..எடோ கோபி..

  ReplyDelete
 2. DNA என்றால் Do Not Ask என்று அர்த்தம். இதை உங்களுக்கு தெரிஞ்ச தமிழில் மாற்றம் செய்து கொள்ளுங்கள் நான் கொஞ்சம் அரைகொறை நமக்கு தமிழும் வராது ஆங்கிலமும் வாராது மக்கா

  ReplyDelete
 3. //ஆனாலும் விஜயன் விடவில்லை வாங்கய்யா சாப்புட்டு போலாம்னு மறுபடியும் வற்புறுத்தினார் [[நன்றி மக்கா]] வேணாம்னு சொல்லிட்டு கிளம்பினேன்.//

  ரெண்டு பேர் கிட்டயும் பர்ஸ் இல்லைன்னு சொல்ல வர்றதை ஏன் இப்படி சுத்தி வளைக்கணும்?

  ReplyDelete
 4. //கொய்யால எவம்லேய் அது...? சிவகுமாரா ராஸ்கல் அந்த தண்ணி இல்லலேய் ராஸ்கல்//

  உச்சி வெயில்ல தானா பேசிட்டு இருந்தீங்களா? எலுமிச்சைப்பழம் பத்தாது. எலுமிச்சை மரத்தை பிடுங்கி தலைல தேச்சாத்தான் சரிப்படும் போல.

  ReplyDelete
 5. //எங்க முன்னாடி ஜன்னல் வைக்காத ஜாக்கட் போட்டுட்டு ரெண்டு ஃபிகர் வந்து உகார்ந்துருச்சு//

  சித்தப்பு..பாத்து..ஜன்னலே இல்லாத இரும்பு கம்பி வச்ச ஜெயில்ல ஏக் தோ தீன் எண்ணாம இருந்தா சரி.

  ReplyDelete
 6. //ஆஹா ரெண்டு பாட்டிகள் வந்து உக்காந்து ஃபிகர்களின் அழகை மறைச்சுட்டாங்க கொய்யால//

  ஆங்..இல்லன்னா மட்டும் இவரு இடுப்பை வளச்சி சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்குன்னு சரத்குமார் மாதிரி ஆடி இருப்பாரு..!!

  ReplyDelete
 7. //நம்மளையும் அணுமின்நிலைய போராட்டத்தில் கைது பண்ணிற கூடாதுன்னு பயந்து [[தெரியும்டா டேய்]] லீவு கிடைக்கலைன்னு சொல்லிட்டான் ராஸ்கல்....//

  போருக்கு போகும்போது ஒவ்வொரு வாளாக உடைகிறதே..என்ன அமைச்சரே இது..

  ReplyDelete
 8. // காலதாமதம் ஆகிருச்சு காரணம் மின்வெட்டு, விஜயன் எடுத்த போட்டோ எல்லாம் பதிவுல போட முடியலை, அம்புட்டு டைம் எடுக்குது ஸாரி.... நேரம் கிடைக்கும் போது போடுறேன்.....!!!/

  இல்ல பரவால்ல. நீங்க பொறுமையாவே போடுங்க. சிவா...எட்றா ஓட்டம்!!

  ReplyDelete
 9. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் நலமா?உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பிறந்தநாளுக்கு மட்டும்தான் அறிமுகப்டுத்துவீர்களா? நீண்ட நாளுக்கு அப்புறம் உங்கள் குடும்பத்தவர்களை பார்த்த பின் ஏற்ப்ட்ட அனுபவங்களை எழுதலாமே நண்பரே

  ReplyDelete
 10. எலேய் மெட்ராஸ் பவன் கும்முருரியாக்கும்...? கும்முலேய் கும்முலேய் ராஸ்கல், சலக்கு சலக்கு சரிகை சேலையா கொய்யால இருடீ ஹி ஹி....நீ போன் பண்ணி வறுத்ததையும் சொல்வோமில்ல....!!!

  ReplyDelete
 11. நடக்கட்டும்.....

  தொடரட்டும்.

  ReplyDelete
 12. //நன்றி வீடு சுரேஷ்,//
  ஏன் சுரேஷ் உங்களுக்கு இந்த கொலை வெறி!

  ReplyDelete
 13. // யாருய்யா என்று சைகை மூலம் நான் கேட்க செல்வி என்று அவர் சொன்னது எனக்கு செல்வின் என கேட்க போயி பல்பு வாங்கிட்டேன் [[அவ்வ்வ்வ்வ்]] //
  இது இன்னைக்குன்னு புதுசா!

  ReplyDelete
 14. //எஸ்கியூஸ்மி ஸாரி எனக்கு தண்ணி மட்டும் போதும்ன்னு சொன்னதும் ஓடி போயி தண்ணி வாங்கி தந்தார் [[கொய்யால எவம்லேய் அது...? சிவகுமாரா ராஸ்கல் அந்த தண்ணி இல்லலேய் ராஸ்கல்]] //
  அந்த இடம் பஸ்ஸ்டாண்டா இல்ல பாரா? கண்ட தண்ணியும் கேட்க!

  ReplyDelete
 15. // வாலேய் தம்பி அருவாளை தூக்கிட்டு சண்முக பாண்டி [கூடவே சுதன்'ன்னு ஒரு உயிர் நண்பனை கூட்டிட்டு வந்து பிரசர் ஏத்திய திவானந்தா ஒழிக, சுதன் கதையும் சொல்றேன், சன்முகபாண்டி [ராஜேஷ்] சூப்பர் கதையும், திவானந்தா'வின் லீலைகளையும் சொல்றேன்......//
  சீக்கிரம் சொல்லுங்க. காத்திட்டு இருக்கோம்.

  ReplyDelete
 16. சிபி அண்ணன் வராதிருந்ததற்கு காரணம் அணுமின் நிலையமா ...அரிவாளா தெரியவில்லை!

  ReplyDelete
 17. யோவ் என்னய்யா ஊருக்கு போனியா, அங்க முன்னாடி பாத்ததுக்கும் இப்போவுக்கும் ஏதாவது நல்லது கெட்டது இருக்கா...அத பத்தி பதிவு போடுய்யா..அத விட்டுட்டு கொங்காங்கோ!

  ReplyDelete
 18. விக்கியுலகம் said...

  யோவ் என்னய்யா ஊருக்கு போனியா, அங்க முன்னாடி பாத்ததுக்கும் இப்போவுக்கும் ஏதாவது நல்லது கெட்டது இருக்கா...அத பத்தி பதிவு போடுய்யா..அத விட்டுட்டு கொங்காங்கோ!//


  நல்லது: பேருந்தில் மனோ வால்யூமை குறைத்து குறட்டை விட்டது.

  கெட்டது: அந்த கம்மியான குறட்டை அதிர்வுக்கே ட்ரைவர் சட்டை(மட்டும்) பறந்து போயி ரோட்டோர மைல் கல்லுல விழுந்தது.

  ReplyDelete
 19. சுற்றுப்பயணம் லிஸ்ட்ல இன்னும் எந்தெந்த ஊர்லாம் இருக்கு?

  ReplyDelete
 20. சுகமான பயணம் அந்த அருவாள் படம் மட்டும் ஊருக்குள்ள ஐயனார் வந்திட்டாரோ என்று பயமாக இருக்கு அந்தபிகருப்பக்கத்தில் இருந்தது பாட்டியா இல்லை பேத்தியா??ஹீ ஹீ
  தொடருங்க ஊர்கள் எல்லாம் பார்ப்போம் மக்கா.

  ReplyDelete
 21. மனோ அண்ணே,

  பயணங்கள் முடியாது போல இருக்கே.படரும்னு போட்டுட்டீங்களே!

  என்னாது, பாட்டி வந்து உக்காந்ததும் நூடுல்ஸ் ஆகிட்டீங்களா? பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே!

  ReplyDelete
 22. அண்ணன் பொவண்டோ குடிச்சிட்டாரு, இனி ஃபார்முக்கு வந்துடுவார்லேய்ய்......

  ReplyDelete
 23. ////[[கொய்யால அதான் உமன் காலேஜ் பக்கம் வேலை பாக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே////

  ஓஹோ...கதை இப்படிப்போகுதா? அப்போ அண்ணாச்சிய இனி அடிக்கடி அந்தப்பக்கம் பார்க்கலாம்.....?

  ReplyDelete
 24. ////எஸ்கியூஸ்மி ஸாரி எனக்கு தண்ணி மட்டும் போதும்ன்னு சொன்னதும் ஓடி போயி தண்ணி வாங்கி தந்தார் //////

  அண்ணே நீங்க ரொம்ப வெவரம்ணே.....

  ReplyDelete
 25. மக்களே,
  பயணம்
  தொடரட்டும் எங்கள்
  நெஞ்சம் பயனுற......

  ReplyDelete
 26. ??>>>koodal bala said... Best Blogger Tips [Reply To This Comment]

  சிபி அண்ணன் வராதிருந்ததற்கு காரணம் அணுமின் நிலையமா ...அரிவாளா தெரியவில்லை!


  haa haa ஹா ஹா ஒய் டவுட்.. அரிவாள் தான்.. மிரட்றான் அவ்வ்வ்வ்

  ReplyDelete
 27. நானும் விஜயனும் மாப்பிளை ஹரீஷும் பொவோண்டாமோ [[ ஹி ஹி]] குடிச்சிட்டே பேசிட்டும் போட்டோ எடுத்துட்டும் ஜாலியாக பேசி கொண்டிருந்தோம், நேரம் போவதே தெரியாமல்//

  உமக்கு சுகர் இருப்பதால் அடிக்கடி போவோண்டோமோ...... சே...சே... அவர் கூட சேர்ந்து நானும் அப்படி ஆயிட்டேன்... போவோண்டோ குடிப்பது சரியல்ல. விரைவில் கிட்னி சட்னி ஆயிரும். சீக்கிரம் ராஜஸ்த்தான் போகிற வழியைப்பாரும்.ஐய்யோ இனி அதுவும் ஒரு மெகா பதிவா வருமே...... ஆண்டவா உம் சோதனைக்கு ஒரு அளவே இல்லையா...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!