Sunday, March 4, 2012

பயணங்கள் முடிவதில்லை....!

மும்பையில் இருந்து ஊர் வந்தும் வெளியே போகமுடியாத நிலை காரணம் என் மனைவிக்கு உடல்நலமின்மை [[இப்போ நல்லாகிட்டாங்க]] கே ஆர் விஜயன் போன் பண்ணினார் என்னய்யா வாரேன்னுட்டு இன்னும் ஆளையே காணோம் என வருத்தப்பட்டார்.


நாளை வாறேன்னு சொல்லிட்டேன், எங்க ஊரில் குளம் இருக்கிறது பெயர் பூலாங்குளம், நானும் நண்பன் ராஜகுமாரும், என் அண்ணனும் அன்று நிறைய தேங்காய் எண்ணெய் வாங்கி தலையில் குளு குளுவென தேய்த்து விட்டு தலையில் தண்ணீர் படாமல் ரெண்டு மணி நேரம் தண்ணீரில் அமர்ந்து விட்டோம்.


அப்பப்பா என்னே ஒரு சுகம் என்னே ஒரு சுகம், குளித்து முடித்து [[சோப்பு போட்டுதான்]] கரையேறியதும் உடம்பில் இருந்த சூடல்லாம் பறந்தே போச்சு போங்க....!!!

கன்னியாகுமரி சூர்ய அஸ்தமனம்.

அடுத்தநாள் பஸ் பிடிச்சி விஜயன் கடை முன்பு இறங்கி ஒரு போவண்டாமோ [[பொவண்டோ'ன்னு நினைக்கிறேன் ஹி ஹி வாயில் வரவே மாட்டேங்குது இந்த பெயர்]] வாங்கிட்டு நிற்கவும் விஜயன் பைக் எடுத்துட்டு வெளியே கிளம்பிட்டு இருந்தார்.


ஹலோ விஜயன் எப்பிடி இருக்கீங்க, பரஸ்பரம் நலம் விசாரிப்புகள், சரி வண்டில ஏறுங்க என்றார், இல்லை எனக்கு உடனே கிளம்பனும் என்றேன், யோவ் இன்னும் வரவே இல்லை அதுக்குள்ளே கிளம்பனுமா [[இவனெல்லாம் ஒரு மனுஷனா;ன்னு நினச்சிருப்பாரோ ஹி ஹி]]


இவர் பின்னாடி பைக்ல உக்காந்தாலே ஈரக்கொலை நடுங்கும் எனக்கு, காரணம் சைக்கிள்ல ச்சே ச்சீ பைக்ல சைட் மிரர் கிடையாது, அவருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை ஆனால் நான்தான் நடுங்கிட்டு இருந்தேன்.

நாகர்கோவில் சிட்டியில் பைக் ஓட்டுபவர்களை நினைத்தால் கவலையாகவே உள்ளது ஏன்னா யாருமே ஹெல்மெட் யூஸ் பண்ணுரதில்லை [[அரசாங்கத்தின் கவனத்திற்கு]] அதுக்கு நெல்லை நேர்மையாக இருப்பதற்கு ஒரு ராயல் சல்யூட்..!

நண்பன் ராஜகுமார் கன்னியாகுமரியில்.

எப்பிடியோ பத்திரமாக விஜயன் கடைக்கு வந்து சேர்ந்தோம், பக்கத்தில் இருக்கும் மாப்பிளை'ஹரீஷையும் போயி பார்ப்போம் என அங்கே சென்று தம்பியையும், அவர் அக்கா பையனையும் பார்த்து விட்டு அவர் கடையில் ரெண்டு பிராண்டட் சர்ட்டும் எடுத்துட்டு [[கடையின் மேலே அப்பிடி ஒரு சூடு அவ்வ்வ்வ்வ்]] தம்பி பொவாண்டாமோ கொண்டு வந்துருக்கேன் குடிக்க விஜயன் கடைக்கு வந்துருன்னு சொல்லிட்டு வந்தோம்.

நாகர்கோவில் பஸ்நிலையம்.

விஜயன் கடையில் வேலை செய்யும் பொண்ணு இப்பவும் அதே போல அழகு...! இந்த முறையும் பெயர் கேட்க மறந்துட்டேன் [[அடப்பாவி உருப்படுவியா நீயி]] 

கன்னியாகுமரி சூர்ய அஸ்தமனம்.

அப்புறமா விஜயன்கிட்டே சொன்னேன், திருநெல்வேலி போகப்போறோம் நீங்களும் நானும் சிபி'யும் அதற்க்கு முன்பு அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் தலைவர் உதயகுமார் அவர்களை நண்பர் கூடல்பாலா மூலம் சந்திக்க இருந்த ஏற்பாட்டையும், மனதோடு மட்டும்' கௌசல்யாவும் வருவார்கள், என்றும் சொன்னேன்.

கன்னியாகுமரியில் நான்.

அவர் டபுள் ஒகே சொல்லிட்டார், அதாவது கூடல்பாலா போன் செய்து சொன்னார் அண்ணே உதயகுமார் அண்ணன் வெள்ளிகிழமை உங்களுக்கு அப்பாயின்ட் மென்ட் தந்து உள்ளார்கள், வேண்டுமானால் அவர்கள் வீட்டிலேயே [[நாகர்கோவில்]] போயும் பார்க்கலாம் என்றார்.

தங்க நாற்கரை சாலை குமரி முனை தொடக்கம்.

சிபி'யையும் கௌசல்யாவையும் நேரே நாகர்கோவிலில் விஜயன் கடைக்கு வரவச்சுட்டு உதயகுமார் அவர்களையும் போயி பார்த்துட்டு  அப்புறமா நெல்லை போயிறலாம்னு பிளானை விஜயனுக்கு சொல்லிட்டு ரெடி ஆகசொன்னேன்.

ஆனால் விதி, நமது முதலமைச்சர் மூலமா பல்லாங்குழி ஆடுனதை எப்பிடி சொல்வேன்...??? ஆம் முதலமைச்சர் ஜெயலலிதாவேதான்..........


பயணம் தொடரும்.......

30 comments:

 1. @மனோ, உங்களுடைய எழுத்தெல்லாம் படிக்கும் போது, பதிவுலகில் கால் பதிக்கின்ற ஆர்வம் தலை தூக்குகிறது. நிச்சயம் நாங்கள் வருவோம் சிறப்பாக என்கிற சிந்தனை மேலோங்குகிறது...அற்புதம். வானமும் சாலையும், பஸ் ஸ்டாப்பும். சூரியனும், கடலும்.. கைலியில் நீங்களும் :)

  ReplyDelete 2. ங்

  ள்

  முடிவதில்லை...!!!

  ReplyDelete 3. ங்

  ள்

  முடிவதில்லை...!!!

  போட்டோக்களோட பதிவு போட்டு போற இடங்களுக்கெல்லாம் எங்களையும் கூட்டிட்டுப் போறீங்க. ரொம்ப நல்லாருக்கு. நன்றி சார்..!!

  ReplyDelete
 4. bonvitaa-வை நானே சரியா உச்சரிக்க ஆரம்பிச்சிட்ட்டேன் மனோ!ஆனால் ஏன் உங்களுக்கு??’பயணங்கள் முடிவதில்லை’இதில் யார் மைக் மோகன்??ஓஹோ,பைக் விஜயனா??சரிதான்!!அருமையான பயணம்!

  ReplyDelete
 5. முதல் வேலையா உடான்ஸில் இணைச்சாச்சு.

  ReplyDelete
 6. தங்கள் துணைவியாரின் உடல் நலமில்லையென்பதால்,இங்கு வந்து இரு நாட்களாக,தங்கள் பேச்சில் கூட உற்சாகம் குன்றியிருந்தது.
  நல்ல கணவன் அமையப்பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. //நிறைய தேங்காய் எண்ணெய் வாங்கி தலையில் குளு குளுவென தேய்த்து விட்டு தலையில் தண்ணீர் படாமல் ரெண்டு மணி நேரம் தண்ணீரில் அமர்ந்து விட்டோம்.//
  குளத்திற்கு குளிக்க வந்தவங்கெல்லாம், பின்னங்கால் பிடரியில் படுமாறு திரும்பி ஓடுனாங்களாமே! இது உளவுத்துறை தகவல்.

  ReplyDelete
 8. // குளித்து முடித்து [[சோப்பு போட்டுதான்]] கரையேறியதும் உடம்பில் இருந்த சூடல்லாம் பறந்தே போச்சு போங்க..//
  ஒரு வருட ஏக்கம்!

  ReplyDelete
 9. //நாகர்கோவில் சிட்டியில் பைக் ஓட்டுபவர்களை நினைத்தால் கவலையாகவே உள்ளது ஏன்னா யாருமே ஹெல்மெட் யூஸ் பண்ணுரதில்லை [[அரசாங்கத்தின் கவனத்திற்கு]] அதுக்கு நெல்லை நேர்மையாக இருப்பதற்கு ஒரு ராயல் சல்யூட்..!//
  ஹெல்மெட் போட்டா, கொள்ளைக்காரன்னு சொல்றீங்க! போடாட்டா கவலை படுறீங்க.ஹா ஹா ஹா.

  ReplyDelete
 10. //
  பயணங்கள் முடிவதில்லை....!//

  பயணம் முடிஞ்சி பத்து வருஷம் ஆனாலும் அது பத்தின பதிவுகள் முடிய வாய்ப்பு இல்லவே இல்லை. :)

  ReplyDelete
 11. மைனர் சொக்கா கலர் டாப்பு.

  //கரையேறியதும் உடம்பில் இருந்த சூடல்லாம் பறந்தே போச்சு போங்க....!!!//

  துணிய பறக்காம விட்டீங்களே..அதுவரை சந்தோஷம் :)

  ReplyDelete
 12. லுங்கி கட்டிட்டு நிக்கற ஸ்டில்..லாலிபாப்பை தொலைச்ச கொயந்த மாதிரி முகபாவம்..!!

  ReplyDelete
 13. உங்க செல்போன் படங்கள் எல்லாம் டல்லா இருக்கு. புதுசா வாங்குங்க!!

  ReplyDelete
 14. பொவொன்டோ :-)

  நல்ல சந்திப்பு..

  கடைசியில் ட்விஸ்ட்டா.....அவ்வ்வ்வ்வ்

  சீக்கிரம் சொல்லிடுங்கோ :-)

  ReplyDelete
 15. ஏண்ணே, அந்த கடலுக்கு பக்கத்துல நிக்கறீங்களே கைலி அலேக்காயிரிச்சின்னா..நெனச்சி பாக்கவே பயமா இருக்கு ஹெஹெ!

  பய புள்ள தலைப்ப பாத்து ஏதோ டி ஆர் படம்போல இருக்கும்னு வந்தா..உள்ளார இந்த கொடும!

  ReplyDelete
 16. அது பவண்டோ நண்பரே.... அப்புறம் உண்மையிலேயே திருநெல்வேலியில் சில சட்டங்கள் ஸிட்ரிக்ட்ஆக கடைபிடிக்கிறார்கள்.

  ReplyDelete
 17. மனோ ...உனக்கு எச்சரிக்கை...
  கொடுத்துள்ளேன்...
  யோசிக்கவும்...

  ReplyDelete
 18. ஜாலியா பொழுது போகுது போல!அனுபவியுங்க!

  ReplyDelete
 19. அண்ணே! உங்க முகத்தை பார்த்ததும் பயத்துல அண்ணிக்கு காய்ச்சல் வந்துடுச்சு போல.

  ReplyDelete
 20. பூலாங்குளத்தில் அண்ணான் குளிர்த்துவிட்டார் அப்ப அந்த நமீத்தா பக்கதில் இருந்தாவா???ஹ்ஹி

  ReplyDelete
 21. நாகர்கோவில் பஸ்தரிப்பு நிலையப்படம் சூப்பர் நான் எடுத்த படம் நாறடிச்சிட்டாங்க நம்ம பசங்க.(சரியா எடுக்கத்தெரியல என்று சொல்லுவது கேட்குது மக்கா)

  ReplyDelete
 22. கன்னியா குமரி வெயிலுக்கு பாண்டுக்கும் சேட்டுக்கும்  கூகிங்கிளாஸ் விடுமுறை கொடுத்து லுங்கியில் அசத்தும் அண்ணா எப்பதான் பயணம் முடித்து வருவார்??

  ReplyDelete
 23. பெவெண்டா ரிசு சூப்பர் நமக்கும் வரும் போது வாங்கியாங்க மக்கா. பயணங்கள் ஜாலியாக அமைய சேவிக்கின்றேன்.

  ReplyDelete
 24. படங்களும் பகிர்வும் நன்று.

  ReplyDelete
 25. ஒரு ரவுண்டு அடிச்சிருக்கீங்க போல, அந்த ஜெ மாட்;டருக்கு வெயிட்டிங்.

  ReplyDelete
 26. இனி மனோ கடைக்கு வந்தால் BOVONTO என்று ஆயிரம் தடவை எழுத வைக்கப்படும். ஒரு ஆள் போர்ன்விட்டான்னு சொல்றாங்க...... இவரு என்னடான்னா ஆயிரம் பாட்டில் குடிச்சாலும் போவோண்டோமொன்னு புதுசா ஒரு பெயரை வைக்கிறார்????? என்ன நடக்குது இங்க.....பெப்ஸி என்ற வாயில் நுழையாத பெயரையை ஸ்டைலா சொல்லத்தெரிந்த உமக்கு நம்மூர் குளிர்பானத்தின் பெயர் மறக்கிறதா???? இனி வாரும் ...... வந்துப்பாரும்....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!