Monday, March 26, 2012

ஒரு பதிவரை சந்திக்க முடியாமல் ஏமாந்த தல அஜித்....???!!!!!

மும்பை ஏர்போர்ட் முன்புள்ள கீரை தோட்டத்தில் நானும் நண்பன் கிருஷ்ணாவும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் போனவாரம், அப்படியே நண்பர் ரவியை [[சினி ஃபீல்டில் அசிஸ்டென்ட் காமெரா மேன்]] பற்றி பேச்சு வந்தது அரைமணி நேரத்துக்குள் எழாயிரம் ரூபாய் சீட்டு விளையாடி தோற்றுப்போன கதையை கேட்டு மனம் நொந்து போனேன்.


[[கிருஷ்ணா, ரவி, நான்]]

சரிய்யா போனை போடு இப்போ எங்கே இருக்கிறான் ஆளை பிடிப்போம்னு சொன்னதும் கிருஷ்ணா போனை போட்டான் ரவிக்கு, அண்ணே எங்கே இருக்கீங்க'ன்னதும், டேய் நான் பில்லா 2 சூட்டிங் இங்கே ஆரேகாலனியில் நடந்துட்டு இருக்கு, தல அஜித்தும் ஸ்பாட்ல இருக்கார் மனோ'வை கூட்டிட்டு வான்னு சொல்லவும்....


கிருஷ்ணா அண்ணே வாங்க போயி பார்த்துட்டு வருவோம்னு சொன்னான் லஞ்ச் பிரேக்கில் அஜித் இருந்ததால் சாயங்காலம் வந்தால் நல்லது என ரவி சொல்லவும் ஓகே சொல்லிட்டு வீட்டுக்கு சாப்பிட கிளம்பினோம். கீரை தோட்டம் நிம்மதி ஆனது...!


மூன்று மணிக்கு சூட்டிங் ஸ்பாட் நோக்கி நானும், கிருஷ்ணாவும் என் மகளும், மகளின் நண்பியுமாக கிளம்பினோம், குழந்தைகளை ஒரு பூங்காவிற்கு அழைத்து செல்வதாக ஏற்பாடு, எனவே அவர்களுக்கு வேண்டிய திண்பண்டங்களை காரில் ஏற்றி பறந்தோம்...!


ஆரேகாலனியில் உள்ள சூட்டிங் ஸ்டுடியோவில்தான் சூட்டிங் நடந்தது யாருக்குமே அனுமதி இல்லை, ஆனால் நண்பன் வெளியே வந்து எங்களை உள்ளே அழைத்து சென்றான்.


உள்ளே போனால் அஜித் இல்லாமல் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது, கோவா ரெஜிட்ரேஷன் ஜிப்சி வேனில் மிலிட்டரி ஆட்களும், நேவி ஆபீசர்களுமாக வேனை வேகமாக கொண்டு வந்து நிறுத்தி, வேகமாக இறங்கி துப்பாக்கிகளை நீட்டி கொண்டிருந்தார்கள்.

[[பில்லா 2 அசுரவேகத்தில் சூட்டிங்]]

யப்பா இந்த ஒரு சீனை ஒரு நூறு தடவையாவது மாத்தி மாத்தி எடுந்தாங்க பாருங்க நொந்து போனேன், யோவ் தல'யை கூப்புடுய்யா பார்த்துட்டு கிளம்புறேன்னு சொன்னதுக்கு, இல்லை அவர் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார் இப்போ அவர் வருகிற நேரம்தான் பொருய்யா என்றான் நண்பன்.


யப்பா நின்னு நின்னு குழந்தைகள் கடுப்பாக ஆரம்பிச்சுருச்சு, வெயில் வேற கொடுமையா அடிக்குது, ஆனால் மடக்கி மடக்கி சூட்டிங்க எடுத்த அந்த மக்களை நினைச்சா கண்ணுல ரத்த கண்ணீரே வந்துரும் போல இருந்தது, வெயில்ல அம்புட்டு உழைப்புய்யா அம்புட்டு உழைப்பு....!!

[[பின்னால் சூட்டிங்]]

ஒரு சினிமா வந்துச்சுன்னா அம்பது ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்து மட்டமாக விமர்சனம் எழுதுறவங்க கொஞ்சம் சூட்டிங் ஸ்பாட்டையும் போயி பார்க்குறது நல்லது, ஏன்னா ஒரு சினிமா எடுக்க அவங்க படுற கஷ்டம் இருக்கே அது சொன்னால் புரியாது, அது அவர்களுக்கு பிரசவ வேதனை, சுகபிரசவம் ஆகவே பிரயாசபடுகிறார்கள்.

[[இடம் மாற்றி மாற்றி சூட்டிங்]]

வெயில் கொடுமை தாங்கமுடியாமல் கிளம்பினோம் பொறுமை இல்லாமல் ஏன்னா தல'யை இன்னும் காணோம், நண்பன் சொன்னான் நில்லுய்யா இப்போ வந்துருவார்னு சொல்லியும் ஆளை காணாமல் கிளம்பியே விட்டோம். குழைந்தைகளுக்கு அஜித்தும் வேண்டாம் விஜய்யும் [[பன்னிகுட்டி மன்னிக்க]] வேண்டாம் பூங்காவில் விட்டால் போதும்னு அலறியே விட்டார்கள்.


கார் பூங்காவை நோக்கி சீறியது, திடீரென ரவி இடமிருந்து போன், யோவ் தல வந்துட்டாருய்யா சீக்கிரம் வாங்க'ன்னு கூப்பிட, போய்யா நாஞ்சில்மனோ'வை சந்திக்க தல'க்கு கொடுத்து வைக்கவில்லை ஸாரி சொல்லிரு அவரிடம் [[?!]] என்று போனை கட் பண்ண கிருஷ்ணா சிரிச்ச சிரிப்பு இருக்கே முடியல....!!!

இன்னும் பல போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு......

 மகள் ஜோய் அன்ட் அவள் நண்பி மின்னு என்ற மினல்.....


 பின்னால் சூட்டிங் நடக்கிறது...

 எத்தனை ஷாட்'டுய்யா எடுப்பீங்க முடியல போங்க...
 பூங்காவில் குதிரை பயணம்...

 கிருஷ்ணாவும் குழந்தைகளும்...

 குழந்தைகள் மட்டும்தான் குதிரை ஏறனுமா ஏன் நான் ஏறப்புடாதா எனக்கேட்டு வல்கரா குதிரை மேல ஏறி டுர்ர்ர்ர் டுர்ர்ர்ர் புர்ர்ர்ர் என கத்துகிறான் கிருஷ்ணா, ஆனால் சத்தியமா குதிரை நகரவே இல்லை ஹா ஹா ஹா ஹா...கிருஷ்ணாவின் இன்னோவா கார் அருகில்....

டிஸ்கி : பயணங்கள் தொடர் அடுத்த பதிவில் தொடரும்.....

டிஸ்கி : ஒரு நாதாரி லகுட பாண்டி ஒருத்தர் ராத்திரி ராத்திரி போன் பண்ணி தாளிக்குராறேன்னு ஒரு நாள் நானும் ஆபீசரும் போட்ட போடில் அடங்கினார், ஆனால் இப்போ ஸ்கைப் என்னும் போனில் வந்து கொல்லோ கொல்லுன்னு கொல்லுறார் முடியலை, யோவ் போனை போட்டா பேசணுமா வேணாமா..?

வேலை இருக்கு எனக்குன்னு ஓடவேண்டியது, ஆமா உமக்கு மட்டும்தான் வேலை இருக்காக்கும் ராஸ்கல் எங்களுக்கு வேலை இல்லைன்னு நினைப்பா பிச்சிபுடுவேன் பிச்சி லகுட நரக பாண்டி....!39 comments:

 1. பயணங்கள் முடிவதில்லை.

  ReplyDelete
 2. நீங்க அருவா தீட்டியதை தல கேள்விபட்டதால்தான் அவர் தலையை வெளியே காண்பிக்க பயந்தாக இங்கே செய்தி வந்துள்ளது

  ReplyDelete
 3. //ஒரு சினிமா வந்துச்சுன்னா அம்பது ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்து மட்டமாக விமர்சனம் எழுதுறவங்க//

  மக்கா, கரைகிட்டா கால வாரிபுட்டீயே சிபிய.

  ReplyDelete
 4. பயணம் தொடரட்டும்

  ReplyDelete
 5. அண்ணர் ரொம்பவே பாவம்டியோய்...

  ReplyDelete
 6. "ஒரு சினிமா வந்துச்சுன்னா அம்பது ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்து மட்டமாக விமர்சனம் எழுதுறவங்க கொஞ்சம் சூட்டிங் ஸ்பாட்டையும் போயி பார்க்குறது நல்லது"

  >>>>>>>>>>>>>

  அண்ணே உங்க நேர்மை பிடிச்சிருக்கு ஹேஹே!

  ReplyDelete
 7. கே. ஆர்.விஜயன் said...
  பயணங்கள் முடிவதில்லை.//

  உலகம் உருண்டை, அதனால் பயணங்களும் தொடரும் இல்லையா மக்கா....

  ReplyDelete
 8. Avargal Unmaigal said...
  நீங்க அருவா தீட்டியதை தல கேள்விபட்டதால்தான் அவர் தலையை வெளியே காண்பிக்க பயந்தாக இங்கே செய்தி வந்துள்ளது//

  ஆஹா இப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்கா அவ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 9. மனசாட்சி™ said...
  //ஒரு சினிமா வந்துச்சுன்னா அம்பது ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்து மட்டமாக விமர்சனம் எழுதுறவங்க//

  மக்கா, கரைகிட்டா கால வாரிபுட்டீயே சிபிய.//

  அய்யய்யோ அந்த நாதாரி இதை படிச்சாம்னா பொங்கிருவானே பொங்கி....

  ReplyDelete
 10. மனசாட்சி™ said...
  பயணம் தொடரட்டும்//

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 11. ம.தி.சுதா♔ said...
  அண்ணர் ரொம்பவே பாவம்டியோய்...//

  ஹா ஹா ஹா ஹா எந்த அண்ணன்? நானா? தலையா? ஹி ஹி....

  ReplyDelete
 12. Shooting....paakka....
  Poonaaraam....

  Yaaraavathu....mano...
  Kitta irunthu...
  Cameraavai.....
  Pudunki....
  Tharai-la...adichi...
  Udaingappa.......

  KOLAIYA KALLURAAREY...!!!!!!

  ReplyDelete
 13. விக்கியுலகம் said...
  "ஒரு சினிமா வந்துச்சுன்னா அம்பது ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்து மட்டமாக விமர்சனம் எழுதுறவங்க கொஞ்சம் சூட்டிங் ஸ்பாட்டையும் போயி பார்க்குறது நல்லது"

  >>>>>>>>>>>>>

  அண்ணே உங்க நேர்மை பிடிச்சிருக்கு ஹேஹே!//

  நேர்மை கருமை எருமை போதுமா ராசா...?

  ReplyDelete
 14. NAAI-NAKKS said...
  Shooting....paakka....
  Poonaaraam....

  Yaaraavathu....mano...
  Kitta irunthu...
  Cameraavai.....
  Pudunki....
  Tharai-la...adichi...
  Udaingappa.......

  KOLAIYA KALLURAAREY...!!!!!!//

  அண்ணே டிஸ்கி படிக்கலையாக்கும்..?

  ReplyDelete
 15. Shooting....paakka....
  Poonaaraam....

  Yaaraavathu....mano...
  Kitta irunthu...
  Cameraavai.....
  Pudunki....
  Tharai-la...adichi...
  Udaingappa.......

  KOLAIYA KALLURAAREY...!!!!!!

  ReplyDelete
 16. திருட்டு விசிடி கேள்வி பட்டு இருக்கேன்...இதென்ன திருட்டு போட்டோவா..ஹி ஹி ஹி ..பில்லா படம் ஷூட்டிங் சீன்ஸ் போட்டதுக்கு சங்கத்திலிருந்து நோட்டிஸ் வர போகுது...

  ReplyDelete
 17. தலக்கு உங்களை பார்க்க குடுத்து வைக்கலை

  ReplyDelete
 18. Kovai Neram said...
  திருட்டு விசிடி கேள்வி பட்டு இருக்கேன்...இதென்ன திருட்டு போட்டோவா..ஹி ஹி ஹி ..பில்லா படம் ஷூட்டிங் சீன்ஸ் போட்டதுக்கு சங்கத்திலிருந்து நோட்டிஸ் வர போகுது...//

  செல்லாது செல்லாது.....

  ReplyDelete
 19. ராஜி said...
  தலக்கு உங்களை பார்க்க குடுத்து வைக்கலை//

  அதானே தங்கச்சி......

  ReplyDelete
 20. //டிஸ்கி : ஒரு நாதாரி லகுட பாண்டி ஒருத்தர் ராத்திரி ராத்திரி போன் பண்ணி தாளிக்குராறேன்னு ஒரு நாள் நானும் ஆபீசரும் போட்ட போடில் அடங்கினார், ஆனால் இப்போ ஸ்கைப் என்னும் போனில் வந்து கொல்லோ கொல்லுன்னு கொல்லுறார் முடியலை, யோவ் போனை போட்டா பேசணுமா வேணாமா..?//

  ஆஹா,லகுட பாண்டிக்கு இன்று பகிரங்க எச்சரிக்கையா? திருந்துவார்னு நினைக்குறீங்க! :))

  ReplyDelete
 21. //வேலை இருக்கு எனக்குன்னு ஓடவேண்டியது, ஆமா உமக்கு மட்டும்தான் வேலை இருக்காக்கும் ராஸ்கல் எங்களுக்கு வேலை இல்லைன்னு நினைப்பா பிச்சிபுடுவேன் பிச்சி//
  அவருக்கு வேலை இருந்தா, அப்படியே அப்பீட் ஆகிருவாரே!

  ReplyDelete
 22. FOOD NELLAI said...
  //டிஸ்கி : ஒரு நாதாரி லகுட பாண்டி ஒருத்தர் ராத்திரி ராத்திரி போன் பண்ணி தாளிக்குராறேன்னு ஒரு நாள் நானும் ஆபீசரும் போட்ட போடில் அடங்கினார், ஆனால் இப்போ ஸ்கைப் என்னும் போனில் வந்து கொல்லோ கொல்லுன்னு கொல்லுறார் முடியலை, யோவ் போனை போட்டா பேசணுமா வேணாமா..?//

  ஆஹா,லகுட பாண்டிக்கு இன்று பகிரங்க எச்சரிக்கையா? திருந்துவார்னு நினைக்குறீங்க! :))//

  தண்ணிக்குள்ளே அவரை பிடிச்சி முக்குங்க ஆபீசர்....

  ReplyDelete
 23. FOOD NELLAI said...
  //வேலை இருக்கு எனக்குன்னு ஓடவேண்டியது, ஆமா உமக்கு மட்டும்தான் வேலை இருக்காக்கும் ராஸ்கல் எங்களுக்கு வேலை இல்லைன்னு நினைப்பா பிச்சிபுடுவேன் பிச்சி//

  அவருக்கு வேலை இருந்தா, அப்படியே அப்பீட் ஆகிருவாரே!//

  அப்பீட் மட்டுமா ஆவுறாரு, என்னை வீனாப்போணவனேன்னு திட்டுறார்...

  ReplyDelete
 24. //பயணங்கள் தொடர் அடுத்த பதிவில் தொடரும்....//

  வி.ஜி.பி. கோல்டன் பீச்ல பேசாம சிலை மாதிரி நிப்பாறே ஒரு ஆளு, அந்த வேலைய உங்களுக்கு வாங்கி தந்தாதான் பயணக்கட்டுரை முடியும் போல..:))

  ReplyDelete
 25. செம என்ஜாய்மென்ட் என்று சொல்லுங்க அண்ணே

  ReplyDelete
 26. சுவாரஸ்யமாக போகுதுங்க...

  நடக்கட்டும்

  ReplyDelete
 27. பயணங்களும் படங்களும் சூப்பர் அண்ணாச்சி !

  ReplyDelete
 28. இனிமேல் சினிமா விமர்ச்சிக்கமாட்டாரா மனோ??ஹீ

  ReplyDelete
 29. skipe இல் லைன் கிளியர் இருக்காதுபோல தக்காளி அண்ணாவுக்கு!

  ReplyDelete
 30. சூப்பர் மனோ.நானும் சென்ற வாரம்,சென்னையில் சூட்டிங் பார்த்தேன்,ஆனால் போட்டோ எடுத்துக்கொள்கிறேன்

  ReplyDelete
 31. தொடருங்கள் வருகின்றோம்.மனோவின் குட்டிப் பெண் மிகவும் சுட்டி போல நமக்கு ஐஸ்கிரீம் தராமல் தான் மட்டும் சாபிடுகின்றா??

  ReplyDelete
 32. மக்காவ பாக்காம தல அஜித் ஏமாந்துபுட்டாரே....

  மக்கா கலக்குங்க..

  ReplyDelete
 33. ஒரு சினிமா வந்துச்சுன்னா அம்பது ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்து மட்டமாக விமர்சனம் எழுதுறவங்க கொஞ்சம் சூட்டிங் ஸ்பாட்டையும் போயி பார்க்குறது நல்லது,/////

  ஆகட்டும் எசமான்....!

  ReplyDelete
 34. மனோ அங்கிள்! மனோ அங்கிள்!ஈரோட்டுல நானும் ஒரு தலைய பார்க்க முடியாம மிஸ் பண்ணிட்டேன்....ஆனா அந்த தலை எமகாதக தலை....

  ReplyDelete
 35. வணக்கம் மக்களே,
  நலமா?
  குழந்தைகளுடன் இருக்கும் படங்கள்
  மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது..
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 36. ’தல’ கொடுத்து வைக்கவில்லை ,பாவம்!

  ReplyDelete
 37. பயணம் தொடரட்டும்வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 38. குழந்தைகள் படத்தோடு நீங்கள் இருந்த
  படங்களைவிட உறுதியாய் அஜித்துடன்
  எடுத்த படங்கள் இருந்தாலும் சிறப்பாக
  நிச்சயம் இருக்காது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!