Tuesday, March 13, 2012

பயணங்கள் முடிவதில்லை பார்ட் நான்கு....!!!

அடுத்து எங்கள் பயணம் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி கிளம்பியது அடிக்கடி ஆபீசர் போன் செய்து கொண்டே இருந்தார் நாங்கள் பஸ் ஏறியாச்சா இல்லையா என்று...!

[[மாப்பிளை'ஹரீஷுடன்]]

சில பல விஷயங்கள் நானும் விஜயனும் பேசிக்கொண்டே வந்தோம், என்ட் டூ என்ட் பஸ் அது, சும்மா தங்க நாற்கரை சாலையில் சென்னை அரசு விரைவு பேருந்தை அனாயசமாக பலமுறை ஓவர் டேக் செய்து வந்து கொண்டிருந்தது, ஆபிசரின் அன்பு அவசரத்தை போல.....

[[மாப்பிளை'ஹரீஸின் அக்காள் மகனுடன்]]

பஸ்லையம் வந்து சேருமுன்பே எனக்கு போன் செய்து விடுங்கள் நான் பஸ்நிலையம் வந்து உங்களை அழைத்து செல்கிறேன் என்று சொல்லி இருந்தார் ஆனால் ஆபீசர் மகளுக்கு பிறந்தநாள் ஆச்சே எதாவது வாங்கியே ஆகவேண்டும் என நாங்கள் பேசிக்கொண்டோம்.

[[நண்பன் ராஜகுமாருடன் கூடல்பாலா]]

ஆனால் ஆபீசர் பஸ்நிலையம் வந்தால் கண்டிப்பாக விடமாட்டார் என்பதை புரிந்து கொண்டு ஆபீசருக்கு போன் பண்ணுவதை காலதாமதம் செய்தோம். 

[[நாஞ்சில்மனோ, விஜயன் எல்லாரும் வந்தாச்சு அந்த 25 பிகருங்க தங்கி இருக்குற பக்கத்து ரூம் நமக்கு கிடைச்சுருச்சு, சண்முகபாண்டியை ரெடி பண்ணு சீக்கிரமா ஆங் என்ன ஆமா திவானந்தாவும் வாரார்]]

பஸ்சில் இருந்து இறங்கி ஏதாவது கிப்ட் ஷாப் இருக்கா என்று தேடினோம் ஐயையோ பஸ்நிலையம் அருகில் அப்பிடி ஒரு கடையும் இல்லை, வெயில் வேறு [[நெல்லை ஆச்சே]] கிறு கிறுக்க வைத்து கொண்டிருந்தது, யோவ் வாங்கய்யா ஆட்டோவில் போயிறலாம்னு சொன்னாலும் விஜயன் கேட்கவே இல்லை.

[[சுட சுட பரிமாறப்பட்ட அல்வா]]

நடத்தியே கூட்டிட்டு போனார், கொஞ்ச தூரம் போனதும் விஜயனுக்கு வெயிலின் கொடூரம் மண்டையை பிளக்க, ஹி ஹி மனோ ஆட்டோ பிடிச்சிருவோமா [[ம்ஹும் இதைதான் நான் அப்பவே சொன்னேனே]]

[[நான் அல்வா சாப்பிடுவதை ரசிக்கும் ஆபிசர்]]

ஆட்டோகாரனிடம் கிப்ட் வாங்க நல்ல இடம் சொல்லுங்க என்றதும், வண்ணார்பேட்டை ஆரெம்கேவி சூப்பரா இருக்கும் சார் என்றார், சரி அங்கேயே போகட்டும் என்றோம்...

[[யப்பா ஏன்னா சூடு என்னா ருசி...!]]

அங்கே போயி பொருட்கள் செலக்ட் செய்யும் போதே எனக்கு ஆபிசரின் போன், எடுத்து விஜயனிடம் கொடுத்து விட்டேன் [[எஸ்கேப் எவன் பெல்ட் அடி வாங்குறது]] என்னய்யா திருநெல்வேலில இறங்குரதுக்கு மறந்து மதுரை போயிட்டு இருக்கீங்களா...? என கேட்க விஜயன் பம்மியபடி விஷயத்தை சொல்ல, பிச்சிபுடுவேன் பிச்சி சரி எங்கே இருக்கீங்க இப்போ, சார் நாங்க ஆரெம்கேவி'ல இருக்கோம், ஓகே நான் அங்கேயே வாரேன் என்று சொல்லி போனை வைத்தார்.

[[பாசத்தோடு அல்வா பரிமாறும் ஆபிசரின் உதவியாளர்]]

நாங்கள் பர்ச்சேஸ் முடித்து வெளியே வந்தாலும், ஆபீசர் வந்து சேர தாமதம் ஆகவே தண்ணீர் [[பிச்சிபுடுவேன் அந்த தண்ணி இல்லை]]தாகம் எடுத்ததால் இளநி வாங்கி குடித்து விட்டு காத்திருந்தோம், ஆபீசர் இன்னும் வராததால் நான் பாத்ரூம் போயிட்டு வாரேன் என சொல்லிவிட்டு மறுபடியும் ஆரெம்கேவி உள்ளே நுழைய, வாச்மேன் ஒரு மாதிரியாக பார்த்தான்...!

[[ஆபீசர் : பார்த்தீங்களா மனோ, ஒரிஜினல் அல்வான்னா இப்பிடி நூல்போல வரவேண்டும் தெரிஞ்சிக்கோ]]

அம்மாம் பெரிய ஷோரூம்ல பாத்ரூம் மூன்றாவது மாடியில் சற்று அசிங்கியமாகவே இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது, இவளவுக்கும் பாத்ரூம் கிளீன் செய்பவர்கள் மூன்று பேர் சும்மா இருந்து அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள் வெளியே [[ஆஹா போட்டு குடுத்துட்டியே நாரதா]]

[[ஆபீசர் : எதுக்குய்யா பச்சை பிள்ளைங்களுக்கு சூடான அல்வா குடுத்தீங்க பெல்டை உருவட்டுமா இப்பவே]]

லிப்ட் பிடிச்சி கீழே வந்தால் ஆபீசர், கட்டி பிடித்துக்கொண்டோம் யப்பா சரி வாங்க என்று [[பெல்ட் அடில இருந்து தப்பிச்சாச்சு]] என் பெரு விரலை அவர் சுண்டு விரலால் பிடிச்சார் பாருங்க ஒரு பிடி [[சத்தியமா கள்ளன மாட்டுனா தப்பிக்கவே முடியாது அன்பின் பிடி அது, பரவசமாக அவர் பின்னால் சென்றோம்...

[[]யாருய்யா சொன்னது இது கையேந்தி பவன்னு பிச்சிபுடுவேன் பிச்சி, இது ஒரிஜினல் சாந்தி அல்வா குடோன் ]]

முதலில் ஆபீஸ் போவோம் என்று ஆபீஸ் கூட்டி சென்றார், சுத்தி சுத்தி போனோம் அவர் ஆபீசுக்கு, ஆபீசை காட்டினார் அய் புது ஆபீஸ் நல்ல விஸ்தாரமா அழகாக இருந்தது எதுத்தாப்புல அக்ரஹாரம் இருப்பதாக விஜயன் சொன்னார் [[ஹி ஹி]]


இதற்கிடையில் கவுசல்யா போன் ஆபீசருக்கு அண்ணா எங்கே இருக்கீங்க எல்லாரும் ? எல்லாரும் நம்ம ஆபீச்லதான் இருக்காங்க நீங்க சீக்கிரமா வாங்க என்று சொல்ல, நான் இதோ வந்துட்டு இருக்கேன்னு சொன்னார்கள்.

[[திவானந்தா : பிளாக் எழுதுறேன்னு சொல்லிட்டு கொலைவெறியோடு அலையுதானுவ எலேய் சண்முகபாண்டி அருவாளை சாணை தீட்டுலெய்]]

அடுத்து ரூபினோ மேடம் போன், அவர்களை திவானந்தாவின் ஜென்னத் உணவகத்துக்கு வரசொல்லி விட்டு, ஆபீசர் கொஞ்சம் அப்செட் ஆனவராக எங்கெல்லாமோ போனை போட்டு என்னய்யா ஆச்சு நான் புக் பண்ணுன ரிசார்ட், நண்பர்கள் தொலைவில் இருந்து வந்துருக்காங்க ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லிட்டே இருந்தார்.

[[என்ன புள்ள சொல்லும்மா ஆமா நான் இப்போ உங்க ஊர்லதான் இருக்கேன், என்ன புள்ள குற்றாலத்துக்கா..?? ஆமா ஆமா கிளம்பிட்டு இருக்கேம் புள்ள ஹி ஹி]]

கொஞ்ச நேரத்துல அடுத்த போன், சார் நீங்க புக் பண்ணுன அந்த ரிசார்ட்ல 25 பெண்கள் இ பி காரங்க [[எலக்ட்ரிக் போர்ட்]] வர்றதா ஏற்பாடு ஆகி இருக்கு, என சொல்லவும் ஆபீசர் கவலை ஆனார், நோ பிராப்ளம் ஆபீசர் நாம வேணா வேற இடத்துக்கு போகலாம் கவலையை விடுங்கள் என்றேன், ம்ஹும் ஆபீசருக்கு மனசே கேக்கலை...

[[ஆபிசரின் புதிய ஆபீசுக்கு புதிய போர்ட் மாட்டிவிட்டு கிளம்பும் பணியாளர்]]

அந்த இடம் சூப்பரா இருக்கும் மனோ, அதை நீங்கள் இருவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்றார் எங்கெல்லாமோ போன் பறந்தது, அப்புறமென்ன அந்த பெண்கள் தங்கும் பக்கத்து ரூம் ஓகே ஆகிவிட ஆஹா ஆபீசர் கண்ணில் உற்சாகம்...

[[ஆபிசரின் புதிய ஆபீஸ். கவுசல்யா, விஜயன் ஆபீசர்]]

25 பெண்கள் தங்கி இருக்கிறார்கள் பக்கத்து அறையில் என்று ஆபீசர் ஒரு இருநூறு தடவையாவது போனில் யாருக்கெல்லாமோ சொல்லி கலவர [[கி கி கி கி]] படுத்தினார், விஜயனுக்கு காலும் ஓடலை கையும் ஓடலை அம்புட்டு சந்தோசம் ஹி ஹி...

[[ விஜயன் : அல்வா'வா இது பஞ்சாமிர்தம் சார்]]

வாங்க அல்வா கிண்டுகிற குடோவுன் போயி பார்த்துட்டு வருவோம் என கூறியவர் போனை போட்டு விசாரிக்க, அல்வா கிண்டல் டைம் முடிந்து விட்டது என தெரிந்தாலும் வாங்க சும்மா போயி பார்த்துட்டு வரலாம் என்று சொல்லவும்....

[[ஜென்னத் ஹோட்டலில் ஆபீசர், விஜயன், கவுசல்யா..!]]

வெளியே ஆபிசரின் புது ஆபீசுக்கு தமிழ் நாடு அரசு, நெல்லை உணவு ஆய்வாளர் என்ற போர்ட் புதியதாக வந்து சேர்ந்தது, அதை சூப்பராக பணியாளர்கள் மாட்டிவிட்டு செல்ல அப்புரமாகதான் அந்த ஏரியா மக்களுக்கே ஆபீசர் யாருன்னு தெரியவந்தது, ஆபீசர் ரொம்ப குஷி ஆகிட்டார்..

[[ 499 முடியல ]]

இதற்கிடையில் கவுசல்யா'வும் வந்து சேர, அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடந்து அல்வா கிண்டும் குடோன் நோக்கி சென்றோம், ரூபினோ மேடத்துகிட்டே இருந்து கவுசல்யாவுக்கு போன், அக்கா நாங்க சரியா ஆறு மணிக்கு ஜென்னத் ஹோட்டல் வந்துருவோம் நீங்க அங்கே வந்துருங்க என்று சொன்னார்.

[[ ,கொள்ளைகூட்ட தலைவன் மாதிரியே இருக்கேய்யா, எலேய் விக்கி என்னான்னு பாருடா]]

ஒரிஜினல் சாந்தி அல்வா கடை குடோன் சென்றால் ஆபீசரை பார்த்து மிரண்டாங்களோ என்னமோ அம்புட்டு பவ்யமாக நின்றிருந்தார்கள் பணியாளர்களும், மானேஜரும் அங்கே சூப்பரா மிக்சர் கிண்டி ஸாரி பண்ணி கொண்டிருந்தார்கள்....

மெஷின்களை எல்லாம் எப்படி எப்படி கையாளுகிறார்கள் என்பதை விளக்கமாக ஒருவர் சொல்லிக்கொண்டே வந்தார், ஆபீசரும் விளக்கி கொண்டிருந்தார் கவுசல்யாவுக்கோ ஏகப்பட்ட ஆர்வமாக குழந்தை போல கேள்விகள் கேட்டு விஷயங்களை தெரிந்து கொண்டார்.

[[விஜயன் கடை முன்பு]]

அப்புறமாக சூடாக சாப்பிட அல்வா கொண்டு தந்தார்கள், ஆஹா சூடா வாழ்க்கையில திருநெல்வேலி அல்வா சாப்பிட்டதே இல்லை, ஆபீசர் புண்ணியத்தில் அதுவும் கிடைத்தது [[பார்க்க படங்கள்]] சாப்பிடும் போதே ஐயோ போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அல்வா சாப்பிட தந்தார்கள்...!!!

[[சூட்டிங் ஆர்டர் இந்த அரசாங்கம் பிறப்பித்தால் கூட சாக ரெடியா இருக்கோம் அண்ணே என உருக்கமாக கூறும் நண்பன் கூடல்பாலா...[[அப்படி நடக்கும் பட்சத்தில் அறம் பாடி எழுதியே இந்த அரசாங்கத்தை செயல் இழக்க செய்வோம் நாங்கள் மக்கா]]

திகட்டுதுய்யா என்று விஜயன் சொல்லவும் ஒரு பணியாளர் கொஞ்சம் மிக்சரை கொண்டு வைத்துவிட்டு சொன்னார், திகட்டுச்சுன்னா கொஞ்சம் மிக்சர் சாப்புட்டீங்கன்னா திகட்டாது என சொல்லவும் அது எனக்கு புதுசாக பட்டது....! [[மக்களே நோட் பண்ணிக்கோங்க]]

[[மாப்பிளை'ஹரீஷ் விஜயன் கடை முன்பு]]

இன்னும் ஒரு நூல் போன்ற மிட்டாய் தந்தார்கள் பெயர் மறந்து போச்சு, கவுசல்யா அதை ஆர்வமாக சாப்பிட்டார், அப்புறம் அங்கிருந்து நன்றி கூறி வெளியேறி, ஆபீசர் ஆபீஸ் வந்துவிட்டு திவானின் ஜென்னத் ஹோட்டல் நோக்கி கிளம்பினோம், சூரியன் தன்னை மறைத்து நிலவை பிரதிபலிக்க ஆயத்தமானான்.

[[ஹலோ யாரு உதயகுமார் அண்ணனா, ஆமாம் அண்ணே நாஞ்சில்மனோ'கிட்டேயும், விஜயன்'கிட்டேயும் போராட்டம் பற்றி சொல்லிட்டு இருக்கேன் அண்ணே]]

ஜென்னத் ஹோட்டலில் ரூபினோ மேடமும் திவானந்தாவும் எங்களுக்காக காத்திருந்தார்கள், வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் ரூபினோ மேடமுக்கு ஆபீசில் அவசர மீட்டிங் இருப்பதால் அவசரபட்டுட்டே இருந்தார், திடீர் என்று கவுசல்யா அவர் கைப்பைக்குள் கையைவிட்டு ஒரு பார்சலை ரூபினோவுக்கு நீட்ட, என்னடான்னு ஆர்வமாக பார்த்தேன்.

[[எலேய் அல்வாவுல ஐ எஸ் ஐ முத்திரை இருக்கான்னு பாருங்கலேய் முதல்ல]]

ஆஹா என்னே ஒரு அன்பு, கவுசல்யா கொடுத்தது நாங்கள் சாப்பிட்ட நூல் நூலாக பிரியும் மிட்டாய் அது, நான் நெகிழ்ந்து போனேன் [[யப்பா பெண்கள்'னாலே அன்புதான்ய்யா...!!!]]

ரூபினோ மேடம் அவசரமாக விடை பெற்றார், அப்புறமாக நாங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம், விஜயன் போட்டோக்கள் எடுத்து கொண்டிருந்தார், அப்போது நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார் மார்வாடி போன்ற தோற்றம், திடீரென அவருக்கு போன் வர, முன்னால் இருந்த கிளாஸ் தண்ணீர் தெரிச்சி அவர் சட்டை பேண்டில் வடிந்ததும் அறியாமல், பேசுகிறார். என்ன ஒரு டீ குடிச்சுட்டு வர விடமாட்டியா என்று அழாத குறையாக பேச....   

[[ கூடல்பாலா : அண்ணே துப்பிராதீங்க அண்ணே, நாம டீசண்டாதான் போராடனும்]]

அப்புறமாகதான் தெரிந்தது வந்தது அவருடைய மனைவியின் போன்'னு, யோவ் பொண்டாட்டிக்கு இப்பிடியுமா பயப்படுவாங்க, இருந்தாலும் அந்த ஆளு மனைவி போன் வந்ததும் இப்பிடி தண்ணீர் கிளாஸ் உருண்டு ஓடும் அளவுக்கு பயப்படுறாருன்னா, அவர் மனைவின் முகம் எவ்வளவு கொடூரமா இருந்துருக்கும் என சொல்லி நாங்கள் எல்லாரும் சிரித்ததை பார்த்து அந்த ஆளு வேறே டேபிளுக்கு மாறிவிட்டார்.

[[கூடல்பாலாவின் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பின் தீர்க்கமான பார்வை...!!!! என்னை கவர்ந்த போட்டோ....!!!]]

இதை பார்த்து கவுசல்யா சிரிச்ச சிரிப்பு இருக்கே சின்ன குழந்தையாகவே மாறிவிட்டார், அப்புறமென்ன கவுசல்யா'வை வாரு வாருன்னு வாரினோம் உங்க வீட்டு அய்யாவும் இப்பிடியான்னு கேட்டு கலாயிச்சோம், எல்லாருமே நன்றாக சிரித்து மகிழ்ந்த அந்த குடும்ப தருணம் மீண்டும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.....!!!

[[விஜயன் : அண்ணே நீங்களுமா குற்றாலம் வாறிய...?]]


இனி, நெல்லை டூ பாவநாசம் பயணமும், சண்முகபாண்டி என்ற அருவா பாண்டியின் வருகையும், திவானந்தாவின் லீலைகளும், சுதன் பற்றிய சுவாரஸ்யங்களும் தொடரும்......

பயணம் கொடிபோல படரும்......

டிஸ்கி : படங்கள் எல்லாம் விஜயனின் கைவண்ணம், அவர் ஒரு நல்ல போட்டோ கிராபர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவரின் பாவநாசம் கைவண்ண போட்டோக்கள் அடுத்த பதிவில்...[[நன்றி மக்கா]]

[[அடுத்த பதிவின் அதிரடி டிரைலர் போட்டோ]]

டிஸ்கி : 499 என்றால் என்ன...? மற்ற ஒன்று எங்கே..? இப்பிடியெல்லாம் விஜயன் கேமரா மேல சத்தியமா நான் கேக்கமாட்டேன்னு சொன்னால் நம்பவா போறீங்க, என்னை வெட்டுங்கடா வெட்டுங்கடா'ன்னு பலி ஆடு ஒன்னு கிடந்து மண்ணுல உருண்டு அழுத  கதையை என்னான்னு சொல்லுவேன் எப்பிடி அதை சொல்வேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......[[உள்குத்து]]

47 comments:

  1. //
    பயணங்கள் முடிவதில்லை பார்ட் நான்கு....!!!//

    பயணங்கள் முடிவதற்கான அறிகுறியே இல்லையே. எந்த சோட்டானிக்கரை பகவதி அம்மே!!

    ReplyDelete
  2. இந்தப்பதிவுல இருக்கற போட்டோக்களை வச்சி மட்டுமே மதுரை தமுக்கம் மைதானத்துல கண்காட்சி வைக்கலாம் போல இருக்கே.

    ReplyDelete
  3. //ஆனால் ஆபீசர் பஸ்நிலையம் வந்தால் கண்டிப்பாக விடமாட்டார் என்பதை புரிந்து கொண்டு ஆபீசருக்கு போன் பண்ணுவதை காலதாமதம் செய்தோம். //

    பின்ன...தேன்மிட்டாய் திங்க காசு வேணும்னு அவர் கிட்ட 35 பைசா கடன் வாங்கி மூணு வருஷமா திருப்பி தராம இருந்தா சும்மா விடுவாரா?

    ReplyDelete
  4. அல்வா கொடுத்த ஆபிசரும் லபக்கென்று விழுங்கிய மனோவும்....இப்பிடி தலைப்பு வைக்க வேண்டியதுதானே....

    ReplyDelete
  5. கடைசி வரை வெறும் அல்வா சாப்பிடுவதை மட்டுமே வைத்து, பதிவு போட்டு அல்வா கொடுத்த நாஞ்சில் அண்ணன் வாழ்க

    ReplyDelete
  6. //ன் பெரு விரலை அவர் சுண்டு விரலால் பிடிச்சார் பாருங்க ஒரு பிடி [[சத்தியமா கள்ளன மாட்டுனா தப்பிக்கவே முடியாது அன்பின் பிடி அது//

    அவரோட மோதிரத்தை இதுக்கு முன்னாடி உருவிட்டீங்களா??

    ReplyDelete
  7. ஐஸ் வைக்கும் மனோ பெல்ட்டால் பிச்சி எடுத்த ஆபீசர்...போட்டோ எடுத்த விஜி...பம்மிய பனோ ச்சே மனோ ஹெஹெ!

    ReplyDelete
  8. //விஜயனுக்கு காலும் ஓடலை கையும் ஓடலை//

    கால் ஓடலை சரி. கை எதுக்கு ஓடணும்???

    ReplyDelete
  9. //ஆஹா சூடா வாழ்க்கையில திருநெல்வேலி அல்வா சாப்பிட்டதே இல்லை, ஆபீசர் புண்ணியத்தில் அதுவும் கிடைத்தது//

    கடைசி வரைக்கும் பர்சை எடுக்கவே இல்லை போல..

    ReplyDelete
  10. //அடுத்த பதிவின் அதிரடி டிரைலர் போட்டோ]]//

    அண்ணே...அதை அப்பறம் பாத்துக்கலாம். இந்த பதிவுல நீங்க சட்டை அயன் பண்ணுனது, தலை சீவுன சீப்பின் சிறப்பு, ஹோட்டலில் சுத்திய பேனோட கலர் இதை முதல்ல சொல்லுங்க.. :))))

    ReplyDelete
  11. இந்த சிவா தொல்ல தாங்கல..கொய்யால இருடி உனக்கு இருக்கு!

    ReplyDelete
  12. ஏன்யா அந்த கிப்ட் வாங்கப்போனபோது கக்கா போனியே...அங்கன நக்ஸ் போன் வந்து போன் அங்கனவெ விழுந்திருச்சே..அதெல்லாம் சென்சார் பண்ணிட்டியா கொய்யால!

    ReplyDelete
  13. சிவகுமார் ! said...
    //
    பயணங்கள் முடிவதில்லை பார்ட் நான்கு....!!!//

    பயணங்கள் முடிவதற்கான அறிகுறியே இல்லையே. எந்த சோட்டானிக்கரை பகவதி அம்மே!!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  14. போட்டோ போட்டே கொலயா கொல்லும் மனோ..ஒரு எதிர்பதிவு பார்சல் ஹெஹெ!

    ReplyDelete
  15. சிவகுமார் ! said...
    இந்தப்பதிவுல இருக்கற போட்டோக்களை வச்சி மட்டுமே மதுரை தமுக்கம் மைதானத்துல கண்காட்சி வைக்கலாம் போல இருக்கே.//


    அப்போ, மெரீனா பீச்சுக்கு எப்பிடி போரதாம்?

    ReplyDelete
  16. எப்படி மனோ...இப்படி எல்லாம் ...
    போஸ்ட் போடுறீங்க...????

    முடியலை....
    உன்னை...அந்த..ONLINE காரன்கிட்ட...
    பிடிச்சி கொடுத்தா தான் சரிப்பட்டு வருவீங்க...

    ReplyDelete
  17. சிவகுமார் ! said...
    //ஆனால் ஆபீசர் பஸ்நிலையம் வந்தால் கண்டிப்பாக விடமாட்டார் என்பதை புரிந்து கொண்டு ஆபீசருக்கு போன் பண்ணுவதை காலதாமதம் செய்தோம். //

    பின்ன...தேன்மிட்டாய் திங்க காசு வேணும்னு அவர் கிட்ட 35 பைசா கடன் வாங்கி மூணு வருஷமா திருப்பி தராம இருந்தா சும்மா விடுவாரா?//

    யோவ் உங்ககிட்டே இருந்து இனி பணம் வாங்கிற வேண்டியதுதான்...

    ReplyDelete
  18. எந்தா இது அந்த நாயர்கட டீ ஒன்னு எடுத்து ஊத்துன போட்டோவ காணோமே ஹெஹெ!

    ReplyDelete
  19. யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...மனோ...
    உன் பயணங்கள் முடிவதில்லை ...
    தொல்லை பதிவு முடிந்தவுடன் ...
    சொல்லவும்...
    அதன் பிறகு தான் நான் நெட் பக்கம் வருவேன்...

    ReplyDelete
  20. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    அல்வா கொடுத்த ஆபிசரும் லபக்கென்று விழுங்கிய மனோவும்....இப்பிடி தலைப்பு வைக்க வேண்டியதுதானே...//

    அல்வாவுக்கே அல்வாவுன்னு போட்டுருவோமா?

    ReplyDelete
  21. suryajeeva said...
    கடைசி வரை வெறும் அல்வா சாப்பிடுவதை மட்டுமே வைத்து, பதிவு போட்டு அல்வா கொடுத்த நாஞ்சில் அண்ணன் வாழ்க//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  22. அல்வா நல்லாத்தான் கொடுக்கிரிக...


    கொடி பறக்கட்டும்

    ReplyDelete
  23. சிவகுமார் ! said...
    //ன் பெரு விரலை அவர் சுண்டு விரலால் பிடிச்சார் பாருங்க ஒரு பிடி [[சத்தியமா கள்ளன மாட்டுனா தப்பிக்கவே முடியாது அன்பின் பிடி அது//

    அவரோட மோதிரத்தை இதுக்கு முன்னாடி உருவிட்டீங்களா??//

    அய்யய்ய௦ நான் இல்லை நான் இல்லை...

    ReplyDelete
  24. லேஅவுட் எல்லாம் மாறியிருக்கு...மனோ...இது எங்க வாங்கியது?

    ReplyDelete
  25. நக்ஸை ஓட வைத்த மனோ!

    ReplyDelete
  26. விக்கியுலகம் said...
    ஐஸ் வைக்கும் மனோ பெல்ட்டால் பிச்சி எடுத்த ஆபீசர்...போட்டோ எடுத்த விஜி...பம்மிய பனோ ச்சே மனோ ஹெஹெ!//

    எலேய் நாதாரி ராஸ்கல்...

    ReplyDelete
  27. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    லேஅவுட் எல்லாம் மாறியிருக்கு...மனோ...இது எங்க வாங்கியது?

    >>>>>

    நாயர் கடையில ஓசி டீ வாங்கியபோது கிப்டா கொடுத்தாங்களாம்!

    ReplyDelete
  28. லேஅவுட் எல்லாம் மாறியிருக்கு...மனோ...இது எங்க வாங்கியது?

    ReplyDelete
  29. சிவகுமார் ! said...
    //விஜயனுக்கு காலும் ஓடலை கையும் ஓடலை//

    கால் ஓடலை சரி. கை எதுக்கு ஓடணும்???//

    சரி அப்போ நடந்துட்டு போகட்டும்ய்யா..

    ReplyDelete
  30. சிவகுமார் ! said...
    //ஆஹா சூடா வாழ்க்கையில திருநெல்வேலி அல்வா சாப்பிட்டதே இல்லை, ஆபீசர் புண்ணியத்தில் அதுவும் கிடைத்தது//

    கடைசி வரைக்கும் பர்சை எடுக்கவே இல்லை போல..//

    பர்ஸ் இருந்தாதானே ஹி ஹி...

    ReplyDelete
  31. மக்களே
    எங்க ஊரு பக்கம் வர வந்துருக்கீங்க
    நான் பார்க்க முடியாம போனத நினைச்சு
    கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு..

    ReplyDelete
  32. 100 கிராம் அல்வா, ஆபீசர், விஜயன், 10 போட்டோ வச்சு ஒரு பதிவை தேத்திட்டீங்களே அண்ணா. உங்க டேலண்ட் யாருக்கு வரும்?!

    ReplyDelete
  33. அல்வா பார்த்தா நாவில் எச்சில் ஊறுது !

    ReplyDelete
  34. ///வீடு K.S.சுரேஸ்குமார் said...

    லேஅவுட் எல்லாம் மாறியிருக்கு...மனோ...இது எங்க வாங்கியது///

    பாரின்ல சம்பாதித்த காசுல வீடு சுறெஸ்குமாரிடம் இருந்து வாங்கப்பட்டது என நினைக்கிறேன்.

    லேஅவட் மிக அருமை சுரேஸ் & மனோ.

    ReplyDelete
  35. அண்ணே நடுவுல ரெண்டுவாட்டி கக்கா போனீங்களே அத எழுதல? மறந்துட்டீங்களா?

    ReplyDelete
  36. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    லேஅவுட் எல்லாம் மாறியிருக்கு...மனோ...இது எங்க வாங்கியது?//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  37. விக்கியுலகம் said...
    ஏன்யா அந்த கிப்ட் வாங்கப்போனபோது கக்கா போனியே...அங்கன நக்ஸ் போன் வந்து போன் அங்கனவெ விழுந்திருச்சே..அதெல்லாம் சென்சார் பண்ணிட்டியா கொய்யால!//

    எலேய் கொய்யால நீ நல்லா இருப்பியா ம்ஹும்....

    ReplyDelete
  38. விக்கியுலகம் said...
    போட்டோ போட்டே கொலயா கொல்லும் மனோ..ஒரு எதிர்பதிவு பார்சல் ஹெஹெ!//

    முடியல அண்ணே.....

    ReplyDelete
  39. NAAI-NAKKS said...
    எப்படி மனோ...இப்படி எல்லாம் ...
    போஸ்ட் போடுறீங்க...????

    முடியலை....
    உன்னை...அந்த..ONLINE காரன்கிட்ட...
    பிடிச்சி கொடுத்தா தான் சரிப்பட்டு வருவீங்க...//

    ஸ்ஸ்ஸ் போய்யா அண்ணே.....

    ReplyDelete
  40. http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.html

    முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!

    ReplyDelete
  41. ஒரு நூல் போன்ற மிட்டாய் தந்தார்கள் பெயர் மறந்து போச்சு, //

    அது சோன் பாப்டி.

    ReplyDelete
  42. யோவ் அந்த 499 என்னான்னு கேப்பாங்க....??? சொல்லக்கூடாது... அடிச்சும் கேட்பாங்க அப்பவும் சொல்லக்கூடாது........

    ReplyDelete
  43. படங்கள் எல்லாம் விஜயனின் கைவண்ணம், அவர் ஒரு நல்ல போட்டோ கிராபர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?///

    கேட்க நல்லா இருக்கே..!!!!!!!! எனக்கே தெரியாதே......புகைப்படம்னா என்னண்ணே....????? முகமெல்லாம் தெரியாம புகைமாதிரி இருக்குமே அதுதானே....?????

    ReplyDelete
  44. வீடு சுரேஷ். உங்க கை ”வண்ணம்” சீசீ அந்த வண்ணம் இல்லை இது கலை..... அருமை தலைவா.... நாஞ்சில் மனோவை இம்புட்டு அழகா மாத்திபுட்டீங்களே.....

    ReplyDelete
  45. மக்கா எத்தனை நாள் லீவில் போனீங்க இந்த்தனை சுற்றுச் சுற்றி யப்பா எல்லாம் பிரென்ஸ் வேற ஸ்ப்பா முடியல மனோ அல்வா வேற சாப்பிட்டு இருக்கின்றார் தனியா நாதாரிப்பயல் ஹீ ஹீ அப்படி எல்லாம் திட்டமாட்டம் ஹீ ஹீ தொடருங்க பின்னால் வாரம்.

    ReplyDelete
  46. ஆமா அந்த அல்வாவும் உங்க கண்ணாடியும் ஒன்றா இரண்டும் ஒட்டிக்கொண்டு நிற்குது!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!