Wednesday, November 30, 2011

என்னை நீ காப்பி அடிச்சா நான் உன்னை காப்பி அடிப்பேன்....!!!

நாமதான் சில நேரம் முக்கியமான, உபகாரமான பதிவுகளை ரசிச்சு படிச்சிட்டு மற்றவங்களும் தெரிஞ்சிகிடட்டுமேன்னு காப்பி பேஸ்ட் பண்ணி இன்னாருக்கு நன்றின்னு போடுறோம்னு பார்த்தா கொய்யால நான் சிவாஜி சந்தானம் சாரை பேட்டி எடுத்த பதிவையும் ஒருத்தன் நன்றி கூட போடாமல் தினமலர் பெயர்ல பிளாக் வச்சு காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கான்...!!!சரி பேட்டியைத்தான் போட்டுருக்கான்னு பார்த்தால், தமிழ்வாசி பிரகாஷ் சாட்டுல வந்து மக்கா உங்க "பிரபல பதிவர்களின் பாடல் காமெடி கும்மி'யையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறான்னு லிங்க் குடுத்தாரு, அட கொய்யால...!!!


ஏற்கனவே டினமலர் பத்திரிக்கைக்கும் எனக்கும் வாய்க்கா சண்டை நடந்துட்டு இருக்கு, ஏன்னு கேக்குறீங்களா...? டினமலர் பத்திரிக்கை நடுநிலை இழந்து பலகாலம் ஆயாச்சு, என்னைக்கு நடிகைகள் விஷயத்தில் அண்ணாச்சி கைதாகி உள்ளே போனாரோ, அதோடு அந்த பத்திரிக்கை டமால், மறை கழண்டு போச்சு...!!! [[ஜெயில்ல என்னத்தை திங்க குடுத்தானுகளோ தெரியலை]]


விக்கிக்கு ஆன்லைன்ல போயி டேய் அண்ணா தினமலர் என் பதிவை திருடிட்டான்னு சொன்னேன் மூதேவி கிடந்தது சிரியா சிரிக்கிறான் ராஸ்கல், நீ காப்பி பேஸ்ட் பண்ணினேதானே அதான் உன்னையும் காப்பி பேஸ்ட் பண்ணுரானுகன்னு சிரிக்கிறான் [[இருடி வச்சிருக்கேன் உனக்கு]] 


அப்புறம் சொன்னான் மெயில் அனுப்பி கேளுடா தினமலருக்குன்னு சொல்லிட்டு, பதில் வரலைன்னா சாணியை கரைச்சிருவோம் நாளைக்குன்னு சொல்லிட்டு [[சண்டைன்னா என்னா சந்தோஷம்ய்யா இவனுக்கு ஆகிர்ர்ர் த்தூ]]  குளிக்க போயிட்டான் குளிச்சி பலகாலம் ஆச்சாம்...!!!


சரி மெயில் அனுப்புவோம்னு கிளம்பும்போது, பிரகாஷ் ஆன்லைன்ல இருப்பதை கண்டு, அவருக்கு சாட் பண்ணி விஷயத்தை சொன்னேன், அவரும் செக் பண்ணிட்டு இது தினமலர் பத்திரிக்கை இல்லை அண்ணே, இது தமிழ் தினமலர் அப்பிடின்னு இருக்குன்னு சொல்லிட்டார், ஆஹா தினமலர் தப்பிடுச்சே....!!!


அடுத்து ஆன்லைன்ல வந்த "நாய் நக்ஸ்"நக்கீரனும் அதை உறுதி செய்தார் ஹி ஹி சண்டை போடணும்னு இருந்த தக்காளி ஆசையில மண்ணு விழுந்துருச்சுன்னு மண்ணுல உருண்டு அழுதேன் ஹி ஹி.....


அந்த லிங்க் கீழே குடுத்துருக்கேன், அதை ஒப்பன் பண்ணுனா ரொம்ப ஸ்லோவா இருக்கு, தகராறும் செய்யுது எனவே சிபி அண்ணனை போல தைரியம் உள்ளவர்கள் [[ஓஹோ]] போய் பாருங்கள்.
ஒப்பன் பண்ணாதீங்க வைரஸ் இருக்கிறதாம்...!!!

டிஸ்கி : ஏண்டா காப்பி பேஸ்ட் போடுறதுதான் போடுறே சிபி அண்ணன் "முன்பு" செய்தது போல ஒரு நன்றியாவது போடப்டாதா ஆக்கங்கெட்டவனே...!!!


பஸ்கி : எலேய் இனியும் இப்பிடி செஞ்சேன்னா, மவனே நம்ம திவானந்தா'வின் அல்லக்கை சண்முகபாண்டியனை அருவாளோடு அங்கே அனுப்பிருவேன் சாக்குரதை...!!!

மனோ'தத்துவம் : தோல்விதான் வெற்றியை நிர்ணயிக்கிறது...!!!31 comments:

 1. மக்கா அந்த தளத்தை ஓபன் செய்ய வேண்டாம் என ஒரு அறிவிப்பு போடலாமே. ஓபன் செய்தா கணினி திணறுது.


  எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
  வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

  ReplyDelete
 2. யோவ் பாவம்ய்யா மக்கள்ஸ்...அந்த தளத்துக்கு போனா வைரஸ் இறங்குங்கறது தெரியாம போறதுக்குள்ளார..ஸ்டாப் போடு!

  ReplyDelete
 3. அய்யோ அந்த தளத்துல வைரஸ் இருக்கா.. மீ எஸ்கேப்...

  ReplyDelete
 4. பாஸ் அந்த தளத்தை ஓப்பின் செய்யும் போது கணணி மக்கர் பண்ணுது......

  ReplyDelete
 5. கடைசியா சொல்லி இருக்கிற தத்துவம் யாருக்கு?

  ReplyDelete
 6. அவரு யாருமில்ல நம்ம காப்பி பேஸ்ட் மன்னர் மார்த்தாண்டம்தான்..ஹஹஹ

  ReplyDelete
 7. அட அண்ணாத்தே உங்க ஊரிலயும் உது தான் புறோப்ளமா...

  வேர்வையை உருவுறாய்ங்களே...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

  ReplyDelete
 8. தயவு செய்து யாரும் அந்ததளத்தின் லிங்கினை கிளிக் செய்யவேண்டாம்...
  ரீஸ்டார்ட் செய்யவேண்டியிருக்கும்..
  ரௌட்டரை ஆப் செய்துவிட்டு மீண்டும்
  ஆன் செய்யவும்...

  ReplyDelete
 9. இது ஏதுவோ பிளாக்குங்க...

  தினமலருக்கு எதிராக ஒரு பாய்ண்ட் கிடைச்சா போதுன்னு சுத்துரமாதிரி இருக்கு...

  ReplyDelete
 10. போய் பார்த்தேன் மனோ... யாரோ கத்துக்குட்டின்னு நினைக்கிறேன்.. ஆர்வக கோளாருள பதிவு போட்டுக்காரு...

  ReplyDelete
 11. நண்பர்களின் ஒரிஜினல் புகைப்படங்கள் காப்பி அடிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது(சிபியை தவிர. ஏன்னா அவரு பப்ளிக் 'பிகர்').

  ReplyDelete
 12. காய்த்த மரம் கல்லடி படும் அது தான் அண்ணே இது.. விடுங்க ஹி ஹி ஹி!!

  ReplyDelete
 13. ஒரு கொலை வெறியோட இருந்திருப்பீங்க போல.
  கடைசியில கல்பியாகிடுச்சா?

  ReplyDelete
 14. இது என்னய்யா ...
  பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை....

  ReplyDelete
 15. மனோ பிளாக்கில் இருந்து என் போட்டோ காப்பி அடிக்கப்பட்டதான் மனோவின் மீது மான நஷ்ட(மனோவுக்கு இருக்கா?) வழக்கு போட போறேன். யாரங்கே கூப்பிடுங்கள் வக்கீல் வண்டு முருகனை

  ReplyDelete
 16. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  மனோ பிளாக்கில் இருந்து என் போட்டோ காப்பி அடிக்கப்பட்டதான் மனோவின் மீது மான நஷ்ட(மனோவுக்கு இருக்கா?) வழக்கு போட போறேன். யாரங்கே கூப்பிடுங்கள் வக்கீல் வண்டு முருகனை//

  அவன் பிளாக் உள்ளே போனாலே வைரசும் பேனுமா இருக்குய்யா, இல்லைன்னா அப்பவே கழுத்த பிடிச்சி தூக்கிட்டு வந்துருப்பேன்...

  ReplyDelete
 17. அண்ணே உங்க தலையில கைய வச்சாங்களா?......
  (அருவாக்காரன் தலையிலகூட கையவைச்சா நம்ம நில!...)
  திருட்டுப் பசங்க .இன்று தத்துவமும் அருமை!...நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 18. உங்கள் உணர்வுகள் நியாயமானவை.

  இருந்தாலும், உங்கள் பதிவு சூப்பராக இருந்ததனால் தானே காப்பியடித்திருக்கிறார்கள் எனப் பெருமை கொள்ளுங்கள்! :-)

  ReplyDelete
 19. வர வர ஒரு விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு!

  ReplyDelete
 20. மனோ....கடைசில இப்பிடி வெருட்டியிருக்கீங்க.இனியும் அவன் வருவாங்கிறீங்க !

  ReplyDelete
 21. மனோ எழுத்து வர வர அழகாகிக்கிட்டு வரும் போதே நினைச்சேன். முன்னாளில் ஒரு பிரபல பதிவரின் எழுத்தை ஒரு மிகப் பெரிய பத்திரிகையிலேயே வேறு பெயரில் போட்டு இருந்தார்கள். நீங்க பிரபல பதிவர்னு உறுதி ஆயிட்டுது

  ReplyDelete
 22. மனோ'தத்துவம் : தோல்விதான் வெற்றியை நிர்ணயிக்கிறது...!!!/

  அருமையான தத்துவம்..

  ReplyDelete
 23. அண்ணே! சிபி சார் புளூ கலர் சட்டையிலும், நீன்க சட்டையில்லாம போன் பேசிக்கிட்டு இருக்குற போட்டோவை இனி போடாதீங்கண்ணே! புள்ளைங்களெல்லாம் பார்த்துட்டு பயப்படுதுக.

  ReplyDelete
 24. //அண்ணே! சிபி சார் புளூ கலர் சட்டையிலும், நீன்க சட்டையில்லாம போன் பேசிக்கிட்டு இருக்குற போட்டோவை இனி போடாதீங்கண்ணே! புள்ளைங்களெல்லாம் பார்த்துட்டு பயப்படுதுக.

  // ha ha sema sema comedy!!

  ReplyDelete
 25. அண்ணே சுடுறவங்க... எப்பத்தான் திருந்துவாங்க...... அவ்வ

  ReplyDelete
 26. பாஸ் உங்களுக்கு என் மேலே என்ன கோவம்....
  அந்த திலமலர் லிங்க் ல வைரஸ் இருக்கு பாஸ்.... அவ்வவ்

  ReplyDelete
 27. தினமலரே ஒரு வைரஸ்
  அதில வேற வைரஸ்சா???
  இந்த கொடுமையை நான் எங்கே போய் சொல்லுவேன்....

  ReplyDelete
 28. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
  இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

  தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 29. வணக்கம் அண்ணே, உங்க மேலையும் கை வைச்சிட்டாங்களா?

  இதில பெரிய காமெடி, என் வலையில் இருந்து காப்பி பேஸ்ட் பண்ண முடியாத மாதிரி சில கோடிங் ஒவ்வோர் பதிவிலும் இணைத்திருப்பேன். அதனையும் சேர்த்து காப்பி பேஸ்ட் பண்ணி பதிவைப் படிக்காது சிலர் பல்பு வாங்குறாங்க இல்லே...

  ஹே...ஹே...


  நல்ல நோக்கத்திற்காக காப்பி பேஸ்ட் அடித்தால் ஓக்கே. ஆனால் தாம் விளம்பரம் மூலம் பொருளீட்டுவதற்காக காப்பி அடிப்போரை என்ன சொல்லுவது?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!