Tuesday, November 8, 2011

சில ஆச்சர்யங்களின் உச்சம்...!!!

இருபது வினாடியில், பதினேழாவது நிலையில் வந்தடையும் லிஃப்ட்....!!!உறக்கத்தில் அழகாக சிரிக்கும் குழந்தை....!!!


சத்தமாக [[அன்புடன்]] பேசும் அரபிகள்....!!!


அப்துல்கலாமின் அணுமின் நிலையம் பற்றிய பேச்சு...!!!


உலக மக்கள் தொகை 700 கோடி, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சத்தி எழுபத்தாராயிரம் கோடி...!!! [[இந்தியா ஏழை நாடு இல்லை மக்களே]]


ராஜீவ் காந்தியின் பெயரில் சுவிஸ் பேங்கில் 7000 கோடி ரூபாய் உள்ளதாம்...!!!


மெத்த படித்தவரான பொருளாதார மேதை மன்மோகன் சிங் சிங்கிடி ஆகிப்போனது....!!!


அமெரிக்கா, ஜப்பான், ஏன் சீனா மற்றும் மேலய நாட்டினர் சைக்கிளில் போகும்போது கூட ஹெல்மெட் வைத்துகொண்டு போகிறார்கள், ஆனால் நம்மவர்கள் பைக்கில் போகும்போது கூட ஹெல்மெட் வைப்பதில்லையே ஏன்....!!!

தரம் வாய்ந்த பத்திரிக்கை என்று பெயரெடுத்த தினமலர் பத்திரிக்கையும் நக்கீரன் போல ஆனதென்ன...?!!!

வயதாகியும், கவிஞனின் எழுத்தில் இளமை தெறிக்கும் ரகசியம் என்ன...!!!


மலையாளிகள், மராட்டியர்கள் எம்புட்டு படிச்சிருந்தாலும், அவர்கள் பாஷையில்தான் பேசுகிறார்கள், ஆனால் தமிழன் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறான்...?!!! [[விக்கி ஒருநாள் சிபி'யோடு போனில் பேசும் போது ஒட்டு கேட்டது, விக்கி வியட்நாமில் இருந்து தமிழில் பேசுகிறான், ஈரோட்டுல இருந்து சிபி ஆங்கிலத்தில் பேசுகிறான் த்தூ...]]


சில திட்டங்கள் எடுத்தால் தோற்றுபோவோம்னு தெரிஞ்சும், சிலம்பம் ஆடும் அம்மா'வின் தைரியம்...!!!!

தியாகியாக திகார் ஜெயிலில் இருந்து ஜா'மீனில் வெளியே வரப்போகும் [[மீன் கிடைக்குமா...?]] "திகார்" என்ற அடைமொழியுடன் வரப்போகும் பூலான்தேவி ச்சே ச்சீ கனிமொழி...!!!


ஈழம் பற்றி படு தைரியமாக உண்மைகளை வெளியே கொண்டுவரும் பதிவர் நிரூபன் [[வாழ்த்துக்கள்]]...!!!


சிங்களன்'கிட்டே தன் தலைவன் அடிவாங்கினதை [[ராஜீவ்காந்தி]] மறந்த காங்கிரஸ் தலைமையும் அல்லக்கைகளும்...!!!


இதையும் பாருங்க...

டிஸ்கி : படங்கள் கூகுளில் இருந்து எடுத்தது நன்றி.38 comments:

 1. ம்ம்ம்ம் அசத்திடீங்க போங்க

  ReplyDelete
 2. நச்சு நச்சுன்னு இருக்கு போட்டோவும், கமெண்டும்....

  மக்கா பக்ரைனுக்கு ஆட்டோ வருதாம்....

  ReplyDelete
 3. /[[விக்கி ஒருநாள் சிபி'யோடு போனில் பேசும் போது ஒட்டு கேட்டது, விக்கி வியட்நாமில் இருந்து தமிழில் பேசுகிறான், ஈரோட்டுல இருந்து சிபி ஆங்கிலத்தில் பேசுகிறான் த்தூ...]]//

  haa...haa...haa...

  nice joke... he...hee...hee...

  ReplyDelete
 4. சிரிச்சுட்டே வரும் போது கடைசி படம் பார்க்கையில் கோபம் கோபமாக வருது இந்திய அரசினை நினைத்து....

  ReplyDelete
 5. இதையெல்லாம் பார்த்து சிரிக்கிறதா இல்ல அழுவுரதா?

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி....

  ReplyDelete
 7. இனிய காலை வணக்கம் அண்ணே

  பார்த்தீங்களா?
  நமக்குள்ளே உள்ள ஒற்றுமைகளை,
  நான் உங்க வலையில் இருக்கும் அதே நேரம் நீங்கள் என் வலையி.

  ஹே...ஹே..

  ReplyDelete
 8. அண்ணே,
  வாலி ஐயாவின் எழுத்துக்களில் எனக்கும் ஆச்சரியங்கள் உண்டு!

  ReplyDelete
 9. அண்ணே என்னைப் பார்க்க ஆச்சரியமா இருக்கு?

  அவங்களிடம் மட்டும் மாட்டினேன்.

  ஒரே போடா என்னைப் போட்டுத் தள்ளிட்டாங்க.

  ReplyDelete
 10. காங்கிரஸ் தலமைங்க பேராச்சரியம் அண்ணே!

  ReplyDelete
 11. ///மலையாளிகள், மராட்டியர்கள் எம்புட்டு படிச்சிருந்தாலும், அவர்கள் பாஷையில்தான் பேசுகிறார்கள், ஆனால் தமிழன் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறான்...?!!! [[விக்கி ஒருநாள் சிபி'யோடு போனில் பேசும் போது ஒட்டு கேட்டது, விக்கி வியட்நாமில் இருந்து தமிழில் பேசுகிறான், ஈரோட்டுல இருந்து சிபி ஆங்கிலத்தில் பேசுகிறான் த்தூ...]]
  ////

  எனக்கும் இது பெரும் ஆச்சரியம் தான் தமிழன் மட்டும் ஏன் இப்படி.........

  ReplyDelete
 12. அந்த பைக் படம் சூப்பர்.....

  ReplyDelete
 13. இதில் இன்னும் ஒன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

  சி.பி அண்ணன் மட்டும் கில்மா பட விமர்சனம் எழுதுறாரே ஏன்?(அண்ணே மன்னிச்சு)ஹி.ஹி.ஹி.ஹி........

  ReplyDelete
 14. பெட்ரோல் பற்றிய தகவல் அருமை மற்றும் பகீர்

  நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 15. அண்ணே பதிவு கலக்கல்...அதுவும் சிபி போல ஒரு ஆங்கிலோ இந்தியன பாக்க முடியுமா தெரியல ஹிஹி!

  ReplyDelete
 16. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 17. இது மனோலீக்ஸ்ஸா !!?
  உண்மை எல்லாம் போட்டு இப்படி உடைக்கிறீங்களே அண்ணே !!

  ReplyDelete
 18. ச்சே சான்ஸே இல்ல சார்....
  எப்பூடி சார் இப்புடி எழுதறீங்க?

  :)

  ReplyDelete
 19. நிஜமாகவே சிபி இங்கிலீஷ் ல பேசுனாரா?

  ReplyDelete
 20. மக்கா , படங்களும், இன்றைய அசிங்க அரசியலும்..
  !
  !?

  ReplyDelete
 21. படங்களும் செய்திகளும் அசத்தல் ரகம்
  தொடர வாழ்த்துக்கள்
  குறிப்பாக மன்மோகன் ஓட்ட அக்கா பின்னால்
  உட்கார்ந்து போகும் படம்

  ReplyDelete
 22. மலையாளிகள், மராட்டியர்கள் எம்புட்டு படிச்சிருந்தாலும், அவர்கள் பாஷையில்தான் பேசுகிறார்கள், ஆனால் தமிழன் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறான்...?!!! [[விக்கி ஒருநாள் சிபி'யோடு போனில் பேசும் போது ஒட்டு கேட்டது, விக்கி வியட்நாமில் இருந்து தமிழில் பேசுகிறான், ஈரோட்டுல இருந்து சிபி ஆங்கிலத்தில் பேசுகிறான் த்தூ...]]

  ....
  இந்த அக்கபோரெல்லாம் வேற நடக்குதா சகோ

  ReplyDelete
 23. ராஜி said... 51 52
  மலையாளிகள், மராட்டியர்கள் எம்புட்டு படிச்சிருந்தாலும், அவர்கள் பாஷையில்தான் பேசுகிறார்கள், ஆனால் தமிழன் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறான்...?!!! [[விக்கி ஒருநாள் சிபி'யோடு போனில் பேசும் போது ஒட்டு கேட்டது, விக்கி வியட்நாமில் இருந்து தமிழில் பேசுகிறான், ஈரோட்டுல இருந்து சிபி ஆங்கிலத்தில் பேசுகிறான் த்தூ...]]

  ....
  இந்த அக்கபோரெல்லாம் வேற நடக்குதா சகோ//

  சிபி'யை பதிவுல மட்டும்தான் வருத்தெடுக்கிறேன்னு நினைச்சீங்களா, போன்லையும் செம பரேடு நடத்துவேன் அவன் கூட ஹி ஹி...

  ReplyDelete
 24. நிரூபன் said... 21 22
  அண்ணே என்னைப் பார்க்க ஆச்சரியமா இருக்கு?

  அவங்களிடம் மட்டும் மாட்டினேன்.

  ஒரே போடா என்னைப் போட்டுத் தள்ளிட்டாங்க.//

  கவனமா இருங்கய்யா.....!!!

  ReplyDelete
 25. அடடே... மனோ பதிவுல ஆச்சர்யங்கள். அதுவும் படங்களுக்கு பொருத்தமான வரிகள்.


  நம்ம தளத்தில்:
  பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...

  ReplyDelete
 26. வணக்கம் மனோ..
  ஏன் ஏன்யா நம்ம சிபிய இப்பிடி கலாய்க்கிறீங்க? உங்க தொல்லை தாங்காம அவர் கில்மா படங்களை போடாம விட்ட எங்க நிலமை என்னாவது?அவரின் சேவை இந்த நாட்டுக்கு தேவையுங்கோ.. ஹி ஹி நான் ஒரு சிபி ரசிகனுங்கோ....!!!

  ReplyDelete
 27. ஊறுகாய் இல்லாம சாப்பிட மாட்டீங்களோ?!(சிபி ஊறுகாய்)

  ReplyDelete
 28. மனோ....எல்லாமே சத்தியமான உண்மையா ?

  பாவம் சிபி.அவர் நல்லாத்தானே தமிழ் கதைக்கிறார் !

  ReplyDelete
 29. உங்க பதிவுகளிலேயே ஹைலைட்டான விஷயம் பதிவுலக டச் தான்... கலக்குறீங்க...

  ReplyDelete
 30. மனோ,

  அரசியல் நாதாரிகள் கணக்கில் ஆயிரமாயிரம் கோடிகள் வெளி நாட்டு வங்கியில் இருப்பது கூடவா “ஆச்சரியம்” உமக்கு?

  ReplyDelete
 31. மக்களே,
  படங்களை விட
  நீங்க போடும் கமெண்ட்ஸ் சும்மா
  பட்டைய கிளப்புது...
  கலக்குங்க..

  ReplyDelete
 32. சி.பி சார், விக்கியின் செக்ரடரியிடம் ஆங்கிலத்தில் பேசியதை தவறாக புரிந்து கொண்டீர்களோ

  ReplyDelete
 33. படங்களும் பகிர்வும் அருமை!

  ReplyDelete
 34. அமெரிக்கா, ஜப்பான், ஏன் சீனா மற்றும் மேலய நாட்டினர் சைக்கிளில் போகும்போது கூட ஹெல்மெட் வைத்துகொண்டு போகிறார்கள், ஆனால் நம்மவர்கள் பைக்கில் போகும்போது கூட ஹெல்மெட் வைப்பதில்லையே ஏன்....!!!///
  இங்கே tricycle ஓட்டும் குழந்தைகளையே மருத்துவர் ஹெல்மெட் போட சொல்வார். என் மகளுக்கு ஹெல்மெட் போடாமால் சைக்கிள் பக்கமே போக விட வேண்டாம் என்று மருத்துவர் சொல்வார்.

  நல்ல பதிவு.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!