ஒரு வாரத்துக்கு முன்பு பஹ்ரைனில் நடந்த சம்பவம், என் மனதை பாதித்து, அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
மாலை சமயம் எட்டு மணி, நானும் எனது நண்பர்களும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவகம், அங்கே சாப்பிடுவதற்காக நண்பர்களோடு சென்றிருந்தேன், உள்ளே நுழைந்ததும், இன்னும் இரண்டு நண்பர்கள் உள்ளே அமர்ந்திருந்ததை நாங்கள் கண்டதும், அவர்கள் எங்களையும் அழைத்ததால், அவர்களுடன் போயி அமர்ந்தோம்.
அதில் ஒருவன் மலையாளி, ஒருவன் கர்நாடகா, ஒருத்தனுடைய குடும்பம் கேரளாவில் இருக்கிறது இன்னொருவனுடைய குடும்பம் பஹ்ரைனில் அவன் கூடவே உள்ளது....
சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு ஜாலியா பழைய நினைவுகளை சொல்லி சிரி சிரி என சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தோம், எல்லாருமே ஹோட்டல் ஃபீல்டுல வேலை பார்ப்பவர்கள், சாப்பாடும் பரிமாறப்பட்டது. ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருக்கும் போதே மலையாளி நண்பனுக்கு ஒரு மிஸ்கால் வந்தது,
எடுத்துப்பார்த்தவன் பதறியபடி போன் பேச எச்சில் கையோடு வெளியே போனான், திரும்பி வந்தவன் என் மனைவியின் போன் என்றான் நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை, கொஞ்சநேரம் கழித்து போனே வருகிறது, இவன் சாப்பிட்டபடி போனை அட்டன்ட் பண்ணினான்....
ஐயோ நான் நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன், என்னது மணி ஒன்பதரையா இதோ இப்பவே போறேன் வீட்டுக்கு சரி சரி என போனை கட் செய்தான், என்னடான்னு கேட்டா அவன் சொன்னது, ராத்திரி ஒன்பது மணி ஆச்சுன்னா நான் என் ரூமில் இருக்கணும் என்பது என் மனைவியின் ஆர்டர் என்றான்...
அதான் உன் மனைவி கேரளாவில் அல்லவா இருக்கிறாள் நீ ரூமில் இருப்பதாக பொய் சொல்லவேண்டியதுதானே என்றால், டேய் அவள் சித்தப்பா மகன் என் பக்கத்து ரூமில் இருக்கிறான், அவனுக்கு போன் செய்து கேட்டு விடுவாள், நான் என்னென்ன பண்ணிட்டு இருக்கேன்னு அவன் அவளுக்கு சொல்லிருவான் என சொல்லி வேதனைபட்டு கொண்டிருக்கும் போதே....
கர்நாடகா நண்பனுக்கு போன் வருகிறது, அவனும் போனை எடுத்து இதோ பத்து நிமிஷத்தில் வந்துடுறேன் செல்லம்னு அலறினான், இப்படியாக மறுபடியும் மறுபடியும் இவர்களுக்கு போன் வந்து கொண்டிருக்க கடுப்பான மற்ற நண்பர்கள் அவர்களை பயங்கரமாக கிண்டல் செய்து கொண்டிருந்தோம்...
கொஞ்சநேரம் கழித்து மலையாளி நண்பனின் போனடிக்க எடுத்தவன் தாறுமாறாக திட்டி விட்டான் மனைவியை, என் என்னை இப்படி படுத்துகிறாய், நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம் தாமதமாக நான் ரூமுக்கு போனால் என்ன, என்ன நீ பஹ்ரைன்லையா இருக்கிறாய்..? ஊரில்தானே இருக்கிறாய் என திட்டுகிறான், எங்களுக்கு சங்கடமாக இருந்தது...
அடுத்தவனுக்கும் போன் வந்தது, அவனும் தாறுமாறாக திட்ட தொடங்கினான், என்ன எல்லா நாளும் ஒன்பது மணின்னா உன் மடியிலதானே இருக்கிறேன், ஒருநாள் அரைமணி நேரம் லேட்டா வந்தா என்னா குறைஞ்சி போகும் உனக்குன்னு திட்டுறான்....
நாங்கள் அமைதியாக இருந்து விட்டு அவர்களை உடனே கிளம்ப சொன்னோம், பாதி சாப்பாட்டுலையே எழும்பி நண்பர்கள் போவதை கண்டு மனசு தாங்காமல் நாங்களும் சாப்பிடாமல் எழும்பி விட்டோம்...
ஏன் இப்படி சில மனைவிகள் புருஷனை படுத்துகிறார்கள் என்பதை விசாரித்தபோது, என் அனுபவத்தையும் வைத்து சோதித்தபோது எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள்.....
மலையாளி நண்பன் வாங்கிய வரதட்சனை நூறு பவுன் நகை, பத்து லட்சம் ரூபாய் கேஷ், கர்நாடகா நண்பன் வாங்கிய வரதட்சனை நூற்றி இருவது பவுன் நகை, எட்டு லட்சம் ரூபாய் கேஷ் கறாராக கேட்டு வாங்கி இருக்கிறார்கள்.....!!!! இது என் நண்பர்களே சொன்னது, பின்னே எப்பிடிய்யா மனைவி உங்களை மதிப்பார்கள், நீங்கள் ஒரு விற்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட ஒரு ஜடமாகதானே உங்களை கருதுவார்கள் மனதில்...?!!!!
அப்போ நீ என்ன யோக்கியமான்னு நினைப்பவர்களுக்கு, நான் வரதட்சிணையாக ஒன்றுமே வேண்டாம் என சொல்லியே திருமணம் செய்தேன், நாங்கள் தங்கம் உபயோகிப்பது கிடையாது, நான் வரதட்சனை வாங்கி திருமணம் செய்யதால் பத்து லட்சம் ரூபாய்க்கு வரன் ரெடியாக இருந்தது..!!!
நான் வரதட்சணை வேண்டாம் என்று சொன்னதால் சம்பிரதாயத்துக்கு ஏதும் கொடுக்கவேண்டும் என சொல்லி எழாயிரம் ரூபாய் தந்தார்கள் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்...
என் மனைவி குடும்பத்தில் என்னை மிகவும் மதிப்பார்கள், மாமியார் வீட்டில் போயி விறைத்து கொண்டு அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் குழந்தையாக என்னையும் ஏற்று கொண்டார்கள், என் மனைவி இப்போதும் என்மீது மரியாதையும் அன்பு, பாசம் காட்ட இந்த வரதட்சினை விஷயத்தை சொல்லி காட்டி கிண்டலடிப்பாள், பிழைக்க தெரியாத மாப்பிளைன்னு ஹி ஹி...
நான் எங்கேயும் விருந்தினர் வீட்டிற்கோ, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்கோ, லேட்டாக போகும் போது, மனைவி இருக்கும் இடம் வந்ததும் அவள் எழும்பி நின்று விடுவாள், ஏன் என்று புரியாமல் ஒருநாள் கேட்டேன், என்னன்னு தெரியலை அத்தான், உங்களை பார்த்ததும் என்னை அறியாமலே எழும்பிருதேன் என்றாள்...!!! யோசிச்சு பாருங்க பத்து லட்சம் ரூபாய் வரதட்சினை வாங்கி இருந்தால் என் நிலை என்ன..?
என் பிளாக்கை என் குடும்பத்தில் பலரும் படிக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்....!!!
பாதியில் சாப்பாட்டை விட்டு ஓடிய அதே நண்பர்கள் இப்போது சொல்கிறார்கள், வரதட்சினை வாங்கி சாபத்தை வாங்காதீங்கடான்னு சொல்லி அழுகிறார்கள்....!!!
டிஸ்கி : இது என் அனுபவம்.
மொத வீச்சி
ReplyDeleteயப்பா இப்படியுமையா நடக்கும் - எல்லாமா நடக்குது - நமக்கெல்லாம் காலரை தூக்கி விட்டுகிட்டு....
ReplyDeleteபணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)
ReplyDelete//நான் வரதட்சணை வேண்டாம் என்று சொன்னதால் சம்பிரதாயத்துக்கு ஏதும் கொடுக்கவேண்டும் என சொல்லி எழாயிரம் ரூபாய் தந்தார்கள் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.//
ReplyDeleteமனோ இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு
மனசாட்சியின் "ஆழ்ந்த அனுதாபங்கள்" உங்க நண்பர்களுக்கு சொல்லிவிடுங்கள்
ReplyDelete//என் மனைவி குடும்பத்தில் என்னை மிகவும் மதிப்பார்கள், மாமியார் வீட்டில் போயி விறைத்து கொண்டு அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் குழந்தையாக என்னையும் ஏற்று கொண்டார்கள், என் மனைவி இப்போதும் என்மீது மரியாதையும் அன்பு, பாசம் காட்ட இந்த வரதட்சினை விஷயத்தை சொல்லி காட்டி கிண்டலடிப்பாள், பிழைக்க தெரியாத மாப்பிளைன்னு ஹி ஹி//
ReplyDeleteஅங்கிட்டும் இங்கிட்டு போலதானோ
படங்கள் எல்லாம் எங்க/ எப்படி நண்பா - அசத்தல்
ReplyDeleteஏன்யா எனக்கு ஒரு டவுட்டு நூறு நூத்து இருபது பவுன் வாங்குன நாதாரிங்க ஏன் அங்கன போய் கஷ்டப்படுறாங்க...விளங்கல..எனக்கென்னமோ நீ சரியா பேசிறியான்னு தெரியல ஹிஹி!
ReplyDeleteகாசுக்கு தன்னை தானே விற்று விட்ட பிறகு அடிமை தானே
ReplyDelete//என்னன்னு தெரியலை அத்தான், உங்களை பார்த்ததும் என்னை அறியாமலே எழும்பிருதேன் என்றாள்...!!//
ReplyDeleteஉங்க பெருந்தன்மைக்கும்,அன்புக்கும் கொடுக்கப்படும் மரியாதை..
வாழ்த்துக்கள்.மனோ.
This comment has been removed by the author.
ReplyDeleteகண்டிப்பா அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு மரணமே பெட்டர் தான். பரவாயில்ல உங்க நண்பர்கள். சிலர் வாங்கியும் மனசாட்சியே இல்லாமல் மனைவியை கொடுமைப்படுத்துவது ரொம்ப வேதனை
ReplyDeleteமாத்தியோசி- பழமையிலேயே புதுமை கண்ட இஸ்லாம் – ஹிஜாப்
http://shayan2613.blogspot.com/2011/11/2_29.html
நான் வரதட்சிணையாக ஒன்றுமே வேண்டாம் என சொல்லியே திருமணம் செய்தேன்//
ReplyDeleteமிக நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் மனோ.
கரெக்டா சொல்லி இருக்கீங்க..ஒரே பெண்ணாக வளர்ந்து புகுந்த வீட்டிற்கு வரும் பெண்களும் இப்படி நடந்து கொள்வார்கள்.அவர்கள் சொன்னதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்பது எழுதாத சட்டமாக இருக்கும். செல்லம் கொடுத்து கெடுப்பது பெற்றோர்களே.
ReplyDeleteமனோ,
ReplyDeleteநீயும், நானும் ஓரினமைய்யா!
இன்னும் மணமாகாத வலைப்பூ நண்பர்களுக்கு மனோவின் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
மனோ அண்ணே எனக்கு ஒரு டவுட்.... வரதட்சினை வாங்குனவங்க மட்டும் தான் மனைவிக்கு அடிமையா இருக்காங்களா? இதேயே நீங்க அடிமைப் படுத்தறதா நினைக்கறீங்க........ அன்பு அக்கறையால கூட இருக்கலாம் இல்ல...
ReplyDeleteமத்தபடி வரதட்சினை வந்குனனாலதான் உங்க நண்பர்களுக்கு இந்த நிலமைனா ஏத்துக்க வேண்டியது தான் ......... வேற வழியே இல்லை... உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும்...
ReplyDeleteஉங்க கருத்துகள சொல்லுங்க
ReplyDeleteகவுண்டர் கலக்கல் வசனங்கள்................ ((பாகம் 1 )
வணக்கம் அண்ணே,
ReplyDeleteநல்லா இருக்கிறீங்களா?
சூப்பர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
பணம் வாங்கி, ஒருத்தியுடன் வாழப் போனால் அவர்களுக்கு எத்தகைய நிலமை ஏற்படும் என்பதனை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
பாவமுங்க, அந்த கர்நாடகா காரன்....
ஹி.....ஹி....
நமக்கு எல்லாம் இன்னும் நாள் இருக்கு அண்ணாச்சி
ReplyDelete////பின்னே எப்பிடிய்யா மனைவி உங்களை மதிப்பார்கள், நீங்கள் ஒரு விற்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட ஒரு ஜடமாகதானே உங்களை கருதுவார்கள் மனதில்...?!!!!
ReplyDelete////
சிறப்பான பதிவு பாஸ் நானும் வரதட்சனை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன் வரதட்சனை சமூகத்தில் முழுவதும் ஒழிக்கப்படவேண்டும்
நல்ல அனுபவம் அண்ணே..
ReplyDeleteஒரு வகையில நீங்க சொல்லுறது உண்மைன்னாலும், சிலர் காசையும் வாங்கிகிட்டு பொண்டாட்டியை கொடுமையும் படுத்துறாங்க என்ன சொல்ல
பணத்துக்காக தன்மானத்தை இழப்பதே வரதட்சணை என்பது என் கருத்து. சே... வாழ்க்கைல ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு மேஸ்ஸெஜ் கண்டு பிடிக்கிற உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.
ReplyDeleteநானெல்லாம் யோக்கியன் கிடையாது வரதட்சனை வாங்கித்தான் திருமணம் செய்தேன் 12 பவுன் போட்டாங்க...ஆனாலும் இந்த நாதாரிய மதிக்கிறாங்க...ஏன்னா? எங்க ஊர்ல 50பவுனுக்கு குறைவா யாரும் போடமாட்டாங்க...
ReplyDelete@விக்கியுலகம்
ReplyDeleteஎத்தனை வந்தாலும் பத்தாது மனுசபுத்தி...
என்ன வாழ்க்கடா இது...
ReplyDeleteநீங்கள் சொல்வது போல பல நண்பர்கள் இருக்கிறார்கள்!
ReplyDeleteஎன்றாலும் எவ்வளவு வாங்கினாலும் மேலும் மேலும்
கேட்டு மனைவியைக் கொடுமைப் படுத்துபவரும் இருக்கிறார்களே!
பொதுவாக வரதட்சினை வாங்குவது கையாகாதவன் வேலை
என்பதில் ஐயமில்லை!
புலவர் சா இராமாநுசம்
பொண்ணையும் கொடுத்து சீதனுமும் கொடுக்கனுமா???? கொஞ்சம் யோசிங்கப்பா .....
ReplyDeleteஅப்புறம் இங்கு எனக்கு தெரிந்து யாரும் சீதனம் வாங்கி நான் பாக்களா பாஸ் .....
ReplyDeleteகிண்டலாக நீங்கள் சொல்லியிருந்தாலும் கருத்து அருமை.
ReplyDeleteஉங்கள் மேல் மதிப்பு கூடுகிறது!
வரதட்சனை வாங்கினால்
ReplyDeleteபொண்டாட்டிகிட்ட தினமும் அர்ச்சனை .....
அனுபவ பதிவென்றாலும் ஒருவிழிபுணர்ச்சி பதுவு
உண்மைதான் .. கால் காசு ஆனாலும் சொந்த காசா இருக்கணும்
ReplyDeleteஇன்று ..
ReplyDeleteபல்சுவை வலைதளம் விருது
தட்சனை (வரதட்ச்சனை)வாங்கினால் அர்ச்சனை கேட்டு தான் ஆகனும்
ReplyDeleteநல்ல வேளை...நானே தான் விருப்ப பட்டு கல்யாணம் பண்ணினேன்.நமக்கு அந்த கொடுப்பினை இல்லை.ஹி.ஹி ஹி
ReplyDeleteஅருமையான கருத்தை சொல்லிய பதிவு
ReplyDeleteஅந்த எழாயிரத்தை என்ன பண்ண மக்கா,,,
ReplyDeleteஹா,ஹா..
சரியாச் சொனீங்க மனோ!
ReplyDeleteதங்கச் சுரங்கம் போல நகைகளை போட்டுக்கிட்டு எங்கே தான் போகபோறாங்க..
ReplyDeleteமடியிலே பெரிச்சாளியை கட்டிக்கொண்டு இருக்கிற கதைதான்
இவ்வளவு நகைகளை வைச்சிகிட்டு இருக்கிறதும்....
எங்கள மாதிரி இன்னும் கல்யாணம் ஆகாதவர்களுக்கு, அல்லது இனிமேல் கல்யாணம் ஆகா போறவங்களுக்கு ரொம்ப உபயோகமான பதிவு,,,, நன்றிண்ணே.... ஆனா ஒரு டவுட்டு எங்களையும் "பிழைக்க தெரியாத மாப்பிளைன்னு" சொல்லிருவான்களோ....
ReplyDeleteஎன் பிளாக்கை என் குடும்பத்தில் பலரும் படிக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்....!!!
ReplyDelete>>>
அப்படியிருந்து முன்னாள் காதலி சாடிங்க் செய்கிறாள்ன்னு ஒரு பதிவை எப்படி அவ்வளவு தைரியமா போட்டாய் தம்பி. உன் மனைவிக்கு தமிழ் தெரியாதா?
அண்ணாச்சியை கொடுமை படுத்த வேண்டாம் எண்டு அண்ணிக்கு மெயில் அனுப்பனும்.
ReplyDeleteமிகச் சரியான யான கருத்து
ReplyDeleteஆனாலும் அடிமைகள்தான் அதிகம் உள்ளார்கள்
என்பதுதான் நிஜம்
மனம் கவர்ந்த பதிவு
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
ReplyDeleteஇந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
நல்லா சொன்னீங்க. அது அப்ப சார். இப்பல்லாம் எங்க ஊர்ல அஞ்சு லட்சம் தந்தாதான் பொண்ணே தருவாங்களாம். பாவம் ஆம்பள பசங்க.
ReplyDeleteநல்ல பகிர்வு மனோ.....
ReplyDeleteவரதட்சணை வாங்குவது தவறு.... நானும் அதே கட்சி தான்!
பாவம் உங்க நண்பர்கள்.என் கணவர் கூட அடிக்கடி சொல்வதுண்டு,ஃப்ரெண்ட்ஸ் உடன் வெளியே செல்லும் பொழுது மற்றவர்களுக்கு மனைவியரிடம் இருந்து அத்தனை கால் வருமாம்.
ReplyDeleteநல்ல பகிர்வு.
பல லட்சங்கள் வாங்கியவர்கள் மிகப் பெரிய அடிமைகள். ஆனால் உங்கள் மனைவியர் வீட்டில் உங்களுக்கு ஏழாயிரம் கொடுத்து உங்களை "அன்புக்கு" அடிமையாக்கிவிட்டார்கள். ஆனால் எனது நிலமை மிக மோசம் நானாக ரிஜிஸ்டர் ஆபிஸில் கல்யானம் பண்ணி பிழைக்க தெரியாத இளிச்சவாயன் ஆகிட்டேன்
ReplyDeleteமுதுகெலும்பு இல்லாதவர்களும் தப்பு செய்பவர்களும்தான் மனைவிக்கு பயப்பட வேண்டும் அல்லது மனைவியின் அன்புக்கு கட்டுபட வேண்டும் அல்லது பயப்பட வேண்டும். உங்களுடன் உணவு அருந்திய நண்பர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.
ReplyDeleteஓர் அருமையான மேசஜ் சொல்லியிருக்கிங்க மனோ!எங்க ஊரில் இந்த பிரச்சனை கிடையாது!உங்க பெருந்தன்மை..வராத தட்சணை!!!!
ReplyDeleteமனோ தப்பு தப்பு.சீதனம் கொடுத்ததால் மட்டுமா கணவனைக் கண்டிக்கவோ கவனிக்கவோ செய்வார்கள்.அன்பால் அக்கறையாலும்கூட இருக்கலாம்தானே !
ReplyDeleteஎன்னன்னு தெரியலை அத்தான், உங்களை பார்த்ததும் என்னை அறியாமலே எழும்பிருதேன் என்றாள்...!!! யோசிச்சு பாருங்க பத்து லட்சம் ரூபாய் வரதட்சினை வாங்கி இருந்தால் என் நிலை என்ன..?
ReplyDeleteவாழ்த்துகள்