Sunday, November 27, 2011

சுதந்திரம்.....!!!


கொடிகாத்த குமாரனா அவரு யாரு
அவரு எங்கே கொடி வித்தாரு....

வாஞ்சிநாதனா அவரு யாரு
அவரு எங்கே கஞ்சி குடிச்சாறு....

ஆசீர்வாதமா [மும்பை] அவரு யாரு....
அவரு எங்கே ஆசீர்வதிக்கபட்டாரு....

வ உ சியா அவரு யாரு...
அவரு ஏன் செக் எழுதினாரு
என்று.....

 நக்கல் பண்ணி 
டாஸ்மாக்கில்
லயித்து கொண்டாடும் வாலிபனே....

நீ அருந்துவது
மதுவல்ல.....

அந்த மாவீரர்களின்
மனைவி, குடும்பத்தின்....

தியாகத்தையும்
ரத்தத்தையும்தான் என்பதை
நினைவில் கொள்.....................!!!!

டிஸ்கி : மீள்பதிவு.

19 comments:

  1. குடியும் மடியும் முடியா நிறுத்தத்தின் வடியா கோப்பைகள்

    ReplyDelete
  2. இன்னும் ஒரு முறை மீள்பதிவிடலாம்.... அழகான வரிகள்.


    நம்ம தளத்தில்:
    "வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

    ReplyDelete
  3. மனதைத் தொடும் பதிவு நண்பரே .

    ReplyDelete
  4. இறுதி வரிகள் நெஞ்சில் அறைவது போல் இருந்தது
    எப்படி இந்தக் கவிதையைப் படிக்காது போனேன் ?
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    மீள்பதிவுக்கு ந்ன்றி

    ReplyDelete
  5. நல்லா இருக்கு அண்ணே...நன்றி!

    ReplyDelete
  6. நல்லா இருக்கு நாஞ்சிலாரே.

    ReplyDelete
  7. அழகா நெத்தியிளடித்த மாதிரி சொன்னீங்க..... மிக நன்று பாஸ்.

    ReplyDelete
  8. டாஸ்மாக் இழுத்து மூடும் வரை மீளு பதிவு இடலாம்

    ReplyDelete
  9. நீங்க வேற திருப்பூர்குமரன்னுதான் பெயரே திருப்பூர்ல கண்ட பன்னாடைக்கெல்லாம் சிலை வக்கிறாங்க
    இருக்கிற குமரன் சிலைய எவனும் பராமரிக்கரது கூட இல்லை நச்சுன்னு
    குத்திட்டிங்க...போங்க...அருமை

    ReplyDelete
  10. மக்களே,
    மீள்பதிவா இருந்தாலும் இது திருக்குறள் மாதிரி..
    எக்காலம் ஆயினும் போன்மொழியாய் நிற்குமையா. ....

    ReplyDelete
  11. கவிஞர் மனோ வாழ்க

    ReplyDelete
  12. உள்ளத்திலிருந்து வந்துள்ள உன்னதமான வரிகள்.

    ReplyDelete
  13. வரிகள் ஒவ்வொன்றும், வலிகள் உணர்த்தும்.

    ReplyDelete
  14. மீள் பதிவென்றாலும், மிக யோசிக்க வைத்த பகிர்வு. நன்றி மனோ.

    ReplyDelete
  15. வணக்கம் மனோ அண்ணா,
    அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

    தியாகிகளும், வீரப் புருஷர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் பெற்றுத் தந்த விடுதலையின் நிழலின் கீழ் வாழ்கிறோமே தவிர,
    அவர்களை நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம் என்பதனைச் சொற்களால் சாட்டையடி கொடுத்துச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  16. சுதந்திரம் இருப்பதால் தான் தான் சுதந்திரமாக பேச முடிகிறது என்பதை ஏனோ பலர் புரிந்து கொள்வதில்லை!!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!