Wednesday, July 3, 2013

நான் என்ன இந்தியாக்காரனுக்கு வேலைக்காரனா...?!

லாரியில் லோடு கொண்டு போயிட்டு திரும்பிய சிபி அண்ணனுக்கு, திரும்ப வரும்போது இன்னொரு லோடு கிடைக்க சந்தோசமாக அந்த காசை ஆட்டையைப் போட்டுட்டு முதலாளிக்கு ஆர்வமாக போன் பண்ணுறான்...
"ஹலோ முதலாளி முதலாளி ஹலோ...."

"டேய் வெண்ணை முதலாளின்னு ஒருக்கா சொன்னா போதாதா என்ன சொல்லு..."

"வண்டியை ஆபீஸ்ல விட்டுருக்கேன்..."

"சரி...."

"அப்புறம் முதலாளி வண்டிக்கு ஃபுல்லா பெட்ரோல் நிரப்பிட்டேன்..."

"அடப் போக்கத்த பயலே டீசல் வண்டிக்கு எவண்டா பெட்ரோலைப் போட சொன்னது....பேமானி வ்ப்ர்பர்ஹ்ட் ஹ்ஜ்ம்பெம் ஹ்ஜிஒர்க் ஹைவே ஹாக்...."

சிபி அண்ணன் "ங்கே....."

நீதி : களவாங்குறது  பெரிய விஷயமே இல்லை பிடிபடாம களவாங்கணும் ...ஹி ஹி....
---------------------------------------------------------------------------

நாள் தோறும் சிக்கன் லெக்பீஸ் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்பிட்டவனுக்கு, ஒருநாள் தெரியாமல் செஸ்ட் பீசை கொண்டு வந்து கொடுக்க, அந்த ரெஸ்ட்டாரண்ட் காரனை போன் போட்டு திட்டோ திட்டு என்று திட்டுறான்....
பஞ்சாயத்து நம்மகிட்டே வந்துருச்சு...

"டேய் நான் லெக்பீஸ் ஆர்டர் கொடுத்தா இவன் எப்படி செஸ்ட் பீஸ் கொண்டு வரலாம்...?

ரெஸ்ட்டாரண்ட்... "அண்ணே ஒருநாள் தவறா கொடுத்துட்டேன், வேணும்னா மாத்தி கொடுக்குறேன்னு சொல்லியும் கேக்காம திட்டுறார்..."

நானு...

"என்ன மக்கா ஒரு சின்ன தப்புதானே மன்னிச்சு விடுய்யா வேணும்னா மாத்தி வாங்கி சாப்பிடேன்...?"

"காசு குடுத்தது உங்க அப்பனா...? நான்.......... நான் காசு குடுத்துருக்கேன் ஆமா..."

"நீ காசு குடுத்ததுக்கு எங்க அப்பனை எதுக்குடா இழுக்குறே"ன்னு மூஞ்சியிலே ஒரே அப்பு....பஞ்சாயத்து ஓவர்........ 

சேட்டன் தப்பிச்சிட்டான்......... 

இப்போ நான் மாட்டிகிட்டேன், பஞ்சாயத்து ஜெனரல் மேனேஜர் டேபிள்ல போயிருச்சு.

எனக்குன்னே வந்து மாட்டுகிற ஜென்மங்களை என்னான்னு சொல்றது ஸ்ஸ்ஸ்ஸ் அபா....
--------------------------------------------------------------------

எங்க ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களை ஏர்போர்ட் போயி அழைத்துவர டிரைவர்கள் உண்டு, பஹ்ரைன் டாக்சியில் விருந்தினர்கள் வந்துவிட்டால் டாக்சி கமிஷன் கொடுக்க நேரிடும் என்பதால் மெனக்கட்டு எங்கள் ஹோட்டல் கார்களை அனுப்பி கொடுப்போம்.
ஹோட்டல் டிரைவரோ பஹ்ரைன் அரபி.....இந்தியாகாரர்கள் மட்டும் டாக்சியில் வந்து கொண்டிருக்க, மற்ற கன்ட்ரி ஆளுங்கள் மட்டும் [[இவன்]] ஹோட்டல் காரில் வர...

என்னாச்சு என்று கேட்டால் விருந்தினர் வரவில்லை என்று பொய் சொல்லிவிடுவான், ஆனால் விருந்தினரோ டாக்சியில் வந்திருப்பார். 

எனக்கு என்னமோ பொறி தட்ட......பயபுள்ளையை செக் பண்ண ஏர்போர்ட் போனேன், மறைந்திருந்து பார்த்தேன்....இவன் நேம் போர்டை தூக்கி பிடித்து நிற்காமல் பக்கத்து ரெஸ்ட்டாரண்டில் காப்பி குடித்துக் கொண்டிருந்தான்.

கெஸ்ட் டாக்சி பிடித்து போய்விட்டார், நான் புகார் கொடுக்கவும் ஆக்க்ஷன் எடுக்கப்பட்டது, அப்போதுதான் அவன் வாய் பிறப்பைக் கேட்டேன்...

"நான் என்ன "..........." இந்தியாக்காரனை கூட்டி வரவேண்டும் ? நான் என்ன இந்தியனுக்கு வேலைக்காரனான்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி கொய்யால, இந்தியாக்காரன்னா இவனுக்கு அம்புட்டு கேவலாமா தெரிஞ்சிருக்கான் பாருங்க....

இதையெல்லாம் இவனுகளுக்கு சொல்லிக் குடுப்பது யாருன்னுதான் தெரியல....!!!

டிஸ்கி : அந்த பெட்ரோல் மேட்டரு சவுதியில நடந்ததாக ஒரு நண்பன் சொல்லி சிரிச்சதாகும் சிபி அண்ணன் மன்னிச்சு ஹி ஹி...20 comments:

 1. வேலைக்காரனோ முதலாளியோ, காசு கொடுக்கிரோம்லன்னே... சேட்டனுக்குக் கொடுத்த அடியை டிரைவருக்கும் கொடுத்திருக்கலாம்....

  ReplyDelete
 2. இந்தியன்னா அவனவனுக்கு இளப்பம்தான்

  ReplyDelete
 3. அடுத்த முறை டிரைவரை சந்திக்கும் போது நம்ம ஊர் அரிவாளை கொண்டு செல்லவும்... (சொல்லிக் கொடுப்பவர்களுக்கும்)

  ReplyDelete
 4. உங்க பஞ்சாயத்து தீர்ப்பு புடிச்சிருந்தது...
  அதே தீர்ப்பை டிரைவருக்கும் சொல்லியிருக்கலாமே?

  ReplyDelete
 5. கூட்டியந்தா என்னவாம்?.. அந்தாளு மூஞ்சியே சரியில்லப்பா .
  பேசாம கொலைவெறிப் பாட்டைப் போட்டுக் கொண்டிருக்கலாம் சகோ :))

  ReplyDelete
 6. எல்லாரும் அப்படித்தான் நினைகுரானுங்க

  ReplyDelete
 7. அட இந்தியன்னா அவங்களுக்கு அவ்ளோ எளக்காரமா போச்சுதா! நல்லா நாலு அப்பு அப்ப்ணும்! நன்றி!

  ReplyDelete
 8. செவுள்லயே அப்பி இருக்கனும்

  ReplyDelete
 9. வெகு வெகு சுவாரஸ்யமான விஷயங்கள்
  சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. //பேமானி வ்ப்ர்பர்ஹ்ட் ஹ்ஜ்ம்பெம் ஹ்ஜிஒர்க் ஹைவே ஹாக்...."/ /
  இப்படில்லாம் சிபியைப் பாராட்டக்கூடாது. ஆங். :)

  ReplyDelete
 11. //நாள் தோறும் சிக்கன் லெக்பீஸ் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்பிட்டவனுக்கு, ஒருநாள் தெரியாமல் செஸ்ட் பீசை கொண்டு வந்து கொடுக்க//
  சில இடங்களில், நெஞ்சுதான வேணுங்கறீங்க! ஹா ஹா ஹா

  ReplyDelete
 12. //நான் என்ன இந்தியனுக்கு வேலைக்காரனான்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி //
  அவனுக்குக் கொடுத்திருக்கணும்!

  ReplyDelete
 13. //நான் என்ன இந்தியனுக்கு வேலைக்காரனான்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி //
  அவனுக்குக் கொடுத்திருக்கணும்!

  ReplyDelete
 14. ஒங்களுக்கெல்லாம் 'சிபி' அண்ணன் ரொம்பவே இளக்காரமா போயிட்டாருலே!

  ReplyDelete
 15. பல இடங்களில் சொந்த நாட்டுக்காரன் மற்ற நாட்டவர் மீது இப்படித்தான் கிறுக்குத் தனமாக சிந்திக்கின்றார்கள் போலும் அவனுக்கு ஒரு அருவாள் பார்சல் பண்ணிவிடலாம்:))))

  ReplyDelete
 16. சேட்டன் தப்பிச்சிட்டான்..// தப்பிக்காம இருந்தாத்தான் அது ஒரு மேட்டர் தல. சேட்டனாவது மாட்டிக்கிறதாவது ஹிஹி...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!