Wednesday, March 16, 2011

தமிழ்நாடு டூ கேரளா

என்னோடு பணி செய்யும் மலையாளி நண்பனின் ஒரு அதிர்ச்சி தகவல், என்னை கிலி கொள்ள வைத்தது,
இது உண்மையா இல்லையா  என்பதை வாசகர்கள் கையில் விடுகிறேன்.
பல வருஷமாக இந்த நண்பன் என்னோடு கூட வேலை செய்கிறான். முல்லைபெரியார் பிரச்சினையசொல்லி சொல்லி அவனை நான் கலாய்ப்பதுண்டு, 
மலையாள எழுத்தாளர், சக்கரியா அவர்கள் ஒரு பத்திரிக்கையில் இப்படியாக எழுதி இருந்தார்,
கறிவேப்பிலையில் இருந்து, குருவாயூர் கோவிலுக்கு செலுத்தும்
பூக்கள் வரை தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது, பின்னே ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்  என!!![[உண்மைதானே]]
நண்பன் என்னோடு பேசும் போது இதெல்லாம் அரசியல் மனோ, என சொல்லி விடுவான், 
இப்படி இருக்கும் வேளையில் அவன் லீவில் ஊர் போனான், போய்விட்டு திரும்பி வந்தவுடன் அவன்
சொன்ன காரியம்தான் நான் மேலே சொன்ன அதிர்ச்சி!!
இவனும் நண்பர்களுமாய் ஊட்டி சுற்றுலா போனார்களாம். போகும் வழியில் இயற்கையை ரசித்து
கொண்டே போனவனுக்கு என் நினைவு [[தமிழ் நாடு போன பின்தான் என்னை நினைச்சிருக்கான் பாருங்க]]
வர, முல்லைபெரியாரும் நினைவுக்கு வந்து தொலைக்க, இவன் காய்கறி தோட்டங்களை கூர்மையாக
கவனித்தும் ரசிப்புமாக போகும் போது, ஒரு இடத்தில் விவசாயிகள் தோட்டத்தில்[[பூசணி]] வேலை செய்வதை கண்டு, காரை நிறுத்தி விட்டு அவர்களை பார்ப்பதற்காக [[நன்றி உணர்ச்சியாம்]] போனானாம்.
போய் பார்த்து அவர்களோடு பேசி இருக்கிறான்[[இவனுக்கு தமிழ் நன்றாக தெரியும், காரணம்
ஒட்டன்சத்திரத்தில் படித்தவன்]] பேச்சின் ஊடே கவனிக்கும் போது, அவர்கள் தோட்டத்தில் பூச்சி மருந்து
அடித்து கொண்டிருந்தார்களாம், மருந்தை அவன் கவனித்த போது அதிர்ச்சி அடைந்தவனாய்
கேட்டிருக்கிறான் இந்த மருந்தை ஏன் தெளிக்கிறீர்கள் என கேட்க,
இந்த மருந்தை அடித்தால் சீக்கிரமாக செடி வளரும் என சொல்லியிருக்கிறார்கள். ஐயோ இது  மனிதனுக்கு அதிக கேட்டை
விளைவிக்கும் மருந்தல்லாவா என்று இவன் அலற,
விவசாயிகள் கூலாக சொன்ன பதில், "இந்த காய்கறிகளை நாங்க சாப்பிட மாட்டோம்", கேரளாவிற்கு அனுப்பி [[விற்க]]விடுவோம்னு சொன்னார்களாம்!!!!
இப்போ நண்பன் என்னிடம் கேட்டான், முல்லைபெரியார் தண்ணீர் வேணுமா வேண்டாமான்னு,  இப்போ இதை சொல்லி சொல்லியே  என்னை பயங்கரமாக கலாய்கிறான்.....
 
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு...[[சரக்கு தீர்ஞ்சிடுச்சோ....? இருந்தாதானே]]

45 comments:

 1. சரக்கு தீர்ஞ்சிடுச்சோ....----
  எந்த சரக்கு..

  ReplyDelete
 2. அடுத்தது பஹ்ரைன்: முற்றியது கலவரம், அவசரநிலை பிரகடனம் ---இது செய்தி...
  இப்ப எப்படியிருக்கு...

  ReplyDelete
 3. அந்த செய்தி படித்தவுடன் பயந்துட்டேக் நண்பா? உங்களுக்கு பிரச்சனை ஒன்னும் இல்லையே?

  ReplyDelete
 4. மனாமா : 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் எகிப்தின் மக்கள் புரட்சி, அடக்குமுறையில் இருக்கும் மற்ற சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட தாக்கத்தால் எழுச்சி கண்டுள்ளனர் பஹ்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்‌டனர். ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகினர்.
  அவசரநிலை : பஹ்ரைனில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருப்பதால் அங்கு 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் பிறப்பித்தார். மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக மன்னர் தெரிவித்தார்.
  பாதுகாப்புக்கு சவு‌தி படைகள் : 3 மாத கால அவசர நிலையின்‌ போது பஹ்ரைன் படைகளுக்கு உதவுவதற்காக ஓமன் மற்றும் கத்தார் படைகள் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் கலவரத்தில் குதித்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறந்தனர், பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது. ////////
  சீக்கிரம் வந்துடுங்க நண்பா...

  ReplyDelete
 5. சி.பி க்கு 10 கமென்ட் போட்டேன்... பதில் வரல... இங்கேயுமா?

  ReplyDelete
 6. பதில் வராததால் இங்கிருந்தும் வெளிநடப்பு செய்கிறேன்.

  ReplyDelete
 7. அடபாவி ஆணி புடுங்க வேணாமா.....?
  நான் இங்கே பாதுகாப்பா இருக்கேன் மக்கா....

  ReplyDelete
 8. சும்மா சொல்லியிருப்பார். உண்மையில் வலுமிக்க பூச்சி மருந்தை இப்போது யாரும் உபயோகிப்பதில்லை. அவர்களுடைய நிலமும் பாதிப்படையும் என்பதால்.
  Technology much improved sir.

  ReplyDelete
 9. இந்த நிகழ்வு போன்ற ஒரே டாபிக் வலையில் சுற்றிக்கொண்டு உள்ளது மனோ.
  சில மாதங்களுக்கு முன்னர் கூட இதே போல ஒரு நிகழ்வை பிளாகரில் படித்தேன்.
  சும்மா கிண்டலுக்காக கலாய்கிறார்கள்.

  ReplyDelete
 10. அடபாவி நீர் சில மாதங்களுக்கு முன் படிச்சதும் என் பதிவுதான் ஹா ஹா ஹா ஹா டிஸ்கி படிக்கலையா..
  இது ஒரு மீள பதிவு மக்கா....

  ReplyDelete
 11. அவருக்கு பாவும் தமிழர்கள பத்தி தெரியல.. அவர யாருங்க தமிழ்ல கேக்க சொன்னது.. கொஞ்சம் அவர இங்கிலீஸ்ல கேட்டிருக்க சொல்லுங்க.. இதெல்லாம் சென்னைக்கு அனுப்புறதுன்னு சொல்லியிருப்பார்(இங்கிலீஸ்லாம் அவுங்களுக்கு தெரியுமான்னு கேக்ககூடாது..) அவர் தமிழ்ல கேட்டதால பக்கத்து ஸ்டேட்ட கேரளாவ சொல்லியிருப்பார்.. தமிழனின் தந்திரம் பாஸ் இது.. அதே சமயம் எந்த ஒரு விவசாயியும் தனது தவறை நேர்முகமாக ஒத்துகொள்ளமாட்டார்.. உங்கள் நண்பர் கதைகட்டியிருக்கலாம்.. அல்லது கேரள மக்கள்(உங்க நண்பரை தான் சொல்றன்..) சொல்லும் பதிலை அப்படியே உட்டாலக்கடி பண்ணி தமிழர்கள்னு சொல்லியிருப்பார்..

  ReplyDelete
 12. உங்களுக்கும்.. கருனுக்கும் என்னச்சிங்க..
  10 பத்து கமாண்டா போட்டு தாக்கிறிங்ன..

  புதுசா போடுங்க பாஸ்..
  உங்களிடம் நாங்க ரொம்ப எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 13. //March 16, 2011 7:10 AM
  தம்பி கூர்மதியன் said...
  அவருக்கு பாவும் தமிழர்கள பத்தி தெரியல.. அவர யாருங்க தமிழ்ல கேக்க சொன்னது.. கொஞ்சம் அவர இங்கிலீஸ்ல கேட்டிருக்க சொல்லுங்க.. இதெல்லாம் சென்னைக்கு அனுப்புறதுன்னு சொல்லியிருப்பார்(இங்கிலீஸ்லாம் அவுங்களுக்கு தெரியுமான்னு கேக்ககூடாது..) அவர் தமிழ்ல கேட்டதால பக்கத்து ஸ்டேட்ட கேரளாவ சொல்லியிருப்பார்.. தமிழனின் தந்திரம் பாஸ் இது.. அதே சமயம் எந்த ஒரு விவசாயியும் தனது தவறை நேர்முகமாக ஒத்துகொள்ளமாட்டார்.. உங்கள் நண்பர் கதைகட்டியிருக்கலாம்.. அல்லது கேரள மக்கள்(உங்க நண்பரை தான் சொல்றன்..) சொல்லும் பதிலை அப்படியே உட்டாலக்கடி பண்ணி தமிழர்கள்னு சொல்லியிருப்பார்//

  ஹா ஹா ஹா ஹா ஒ அப்பிடியும் இருக்குமோ....

  ReplyDelete
 14. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  உங்களுக்கும்.. கருனுக்கும் என்னச்சிங்க..
  10 பத்து கமாண்டா போட்டு தாக்கிறிங்ன..//

  ஹே ஹே ஹே ஹே...அவர் கமெண்ட்ஸ் போடும் போது நான் ஆணி புடுங்கினேன் மக்கா....

  ReplyDelete
 15. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  என் கமாண்ட கானும்...//


  ஹி ஹி ஹி ஹி திட்டாதீங்க கவிஞரே....

  ReplyDelete
 16. இதெல்லாம் உண்மையாக இருக்காது!சும்மா கலாட்டாதான்!உங்களுக்கும் அது தெரியும்தானே!

  ReplyDelete
 17. //சென்னை பித்தன் said...
  இதெல்லாம் உண்மையாக இருக்காது!சும்மா கலாட்டாதான்!உங்களுக்கும் அது தெரியும்தானே!//

  கலாட்டா இல்லை நண்பன் சொன்னது. இது ஒரு மீள் பதிவு தல.....

  ReplyDelete
 18. கலாட்டா வேறு, கலாய்ப்பது வேறு. காய்கறிகளில் கலப்படம் கவனிக்க வேண்டிய விஷயமுங்க.
  நேற்று கூட இந்திய பாராளுமன்ற கேள்வி நேரத்தில், காய்கறிகளில் பூச்சி மருந்து படிவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
  மேலதிக தகவல்களுக்கு: http://unavuulagam.blogspot.com/2010/09/blog-post_05.html

  ReplyDelete
 19. உங்க நண்பர் சொல்வதை நம்ப முடியுதா. நா நம்பல.

  ReplyDelete
 20. //FOOD said...
  கலாட்டா வேறு, கலாய்ப்பது வேறு. காய்கறிகளில் கலப்படம் கவனிக்க வேண்டிய விஷயமுங்க.
  நேற்று கூட இந்திய பாராளுமன்ற கேள்வி நேரத்தில், காய்கறிகளில் பூச்சி மருந்து படிவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
  மேலதிக தகவல்களுக்கு: http://unavuulagam.blogspot.com/2010/09/blog-post_05.html //

  ஆபீசருன்னா சும்மாவா......
  புள்ளி விபரமே வச்சிருக்கார்....

  ReplyDelete
 21. //தமிழ் உதயம் said...
  உங்க நண்பர் சொல்வதை நம்ப முடியுதா. நா நம்பல.//

  ஹே ஹே ஹே ஹே அவன் சொன்னதை நான் சொன்னேன் அம்புட்டுதேன்....

  ReplyDelete
 22. மீள் பதிவா..அதானே எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்..

  ReplyDelete
 23. பாஸ் தமிழன் என்றைக்கும் அந்த மாதிரி கேவலமான செயலை செய்ய மாட்டான். அந்த ஆள் உங்களிடம் படம் காட்டுகிறார்.

  ReplyDelete
 24. வணக்கம் சகோதரம், இது தான் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவது என்பதன் சூட்சுமமோ? நம்மாளுங்க எப்பவுமே புத்திசாலி தான். இரசாயன மருந்துகள் அடிச்சாலும் அடுத்த ஊர்க் காரனுக்குத் தான் விப்பானுக. என்ன மாதிரி புத்திசாலிப் பயப்புள்ளக.

  ReplyDelete
 25. இது உண்மைதானா? எதுக்கும் நம்ம ஆபீசரு கொடுக்கற விபரத்தையும் பாத்துடுவோம்....!

  ReplyDelete
 26. தல....மெதுவடை, ஆறிப்போன போண்டா, பஜ்ஜி எல்லாம் எனக்கே.

  ReplyDelete
 27. present sir...neenga

  epo yaarukku supoort panrenga annaa...

  keralavukka..ellai tamilnaatukka?

  ReplyDelete
 28. எப்படியும் சாகத்தானே போறீங்கன்னு கேக்க வேண்டியது தானே மக்கா ஹி ஹி!

  ReplyDelete
 29. மனோ கிட்டே சரக்கு இல்லையா? சும்மா கதை விடாதேயும்.. பீரோவை திறந்து பார்த்தா ஏகப்பட்ட சரக்கு பாட்டில்கள் இஒருக்குமே.. ஹி ஹி

  ReplyDelete
 30. உண்மையில் மலையாளிகள் தான் பாவம் அல்லே !!! நல்ல பதிவு .. சிரிக்க சிந்திக்க வைத்தது ....

  ReplyDelete
 31. வெறும் போலித்தனமான செய்தி என்றே நினைக்கிறேன் சார் ...
  உங்க நண்பர் உங்களை கலாய்க்க சொல்லிருக்க கூடும்
  என்றே நினைக்கிறேன் ...

  ReplyDelete
 32. அண்ணே அது என்ன பூச்சி மருந்துன்னு சொல்லவே இல்லையே!!

  ReplyDelete
 33. இதெல்லாம் உண்மையாக இருக்காது!

  ReplyDelete
 34. //சி.பி.செந்தில்குமார் said...
  மனோ கிட்டே சரக்கு இல்லையா? சும்மா கதை விடாதேயும்.. பீரோவை திறந்து பார்த்தா ஏகப்பட்ட சரக்கு பாட்டில்கள் இஒருக்குமே.. ஹி ஹி//

  அட பாவி நம்ம பயலுக எவனோ உம்மகிட்டே உளரிட்டானுகளோ....

  ReplyDelete
 35. தல! இது மாதிரி மீள்பதிவு அடிக்கடி போடுங்க, ஏனெனில் உங்கள் பழைய பதிவு எதையும் நாங்கள் இதுவரை படிக்க நேரமில்லை. ஆகவே...!!

  ReplyDelete
 36. நான் நம்பவில்லை .................

  ReplyDelete
 37. //எம் அப்துல் காதர் said...
  தல! இது மாதிரி மீள்பதிவு அடிக்கடி போடுங்க, ஏனெனில் உங்கள் பழைய பதிவு எதையும் நாங்கள் இதுவரை படிக்க நேரமில்லை. ஆகவே...!!//

  போட்ருவோம் மக்கா....

  ReplyDelete
 38. சும்மா கேரளா ஆள் வயிற்றில் புளியை கரைச்சு விட்டிருப்பார் விவசாயி அங்கிள்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!