Friday, March 4, 2011

நண்பன்

நண்பன் "கலியுகம்"தினேஷ் அவசரமாக ஊர் போயுள்ளார். காரணம் அவர் வாழ்க்கை துணையை தேர்தெடுப்பதர்க்காக...... நேற்று கல்ஃப்  எர்வேயிஸ் GF 68 எனும் விமானம் மூலம் சென்னை போயுள்ளார். கடைசி நேரத்தில் இருவரும் சந்திக்க முடியாமல் போனது காரணம் பஹ்ரைன் கலவர நிலையும், வேலை நேரமும் அப்படி அமைந்து விட்டது. போனில்தான் பேசிக்கொண்டோம். இங்கே எந்த நேரத்தில் எந்த ரோட்டை குளோஸ் பண்ணுவார்கள் என்று தெரியாததால் நண்பன் சீக்கிரமாவே ஏர்போர்ட் போக வேண்டிய கட்டாயம். டியூட்டி ஃபிரீ பர்சேஸ் முடிச்சிட்டு போன் பண்ணினார். கடைசியாக வாழ்த்து சொல்லி வழி அனுப்பி வைத்தேன். சென்னையில் நண்பன் இதயசாரல் மற்றும் உறவினர்கள் வரவேற்க போயி கொண்டிருப்பதாக இதயசாரல் போன் பண்ணி சொன்னார்.
இன்று காலை இதயசாரல் போன்... தினேஷ் சுகமாக இரவு 2:30am சென்னை வந்து சேர்ந்ததாகவும், காலை ஆறு மணிக்கு ஊர் போயி சேர்ந்ததாவும் சொன்னார் [[நான் நல்ல உறக்கம்]]
இதயசாரலுக்கு நான் இன்னும் போன் செய்ய வில்லை இந்த பதிவை எழுதி போட்டுட்டு பண்ணலாம்னு இருக்கேன்.
 
டிஸ்கி : நண்பன் தினேஷ் நினைத்து போன காரியம் வெற்றி அடைய பிரார்த்திப்போம்.
 
டிஸ்கி : மனம் போல மண வாழ்க்கை அமைய வாழ்த்துவோம்.
 
டிஸ்கி : கூடவே இருந்து உதவி செய்யும் நண்பன் இதயசாரலுக்கு நாஞ்சில் மனோவின் நன்றிகள்...

42 comments:

 1. நண்பன் "கலியுகம்"தினேஷ் அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. // பஹ்ரைன் கலவர நிலையும்

  அங்கேயும் பிர்ச்சனையா?

  ReplyDelete
 3. அவர் எந்த ஊர்?

  ReplyDelete
 4. தினேஷுக்கு மனம் போல் எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. /////
  மனம் போல மண வாழ்க்கை அமைய வாழ்த்துவோம்.////////

  நங்க கூடதான் வாழ்த்துவோம்..

  என்மகன் மாட்ணானா...

  ReplyDelete
 6. தினேஷ்க்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்! நல்ல செய்தியுடன் திரும்பி வரட்டும்!
  Convey our wishes and regards to him and to இதயசாரல்

  ReplyDelete
 7. நம்ம வீதிப்பக்கம் வாங்க..
  இன்னிக்கு சினிமா..

  ReplyDelete
 8. ஒர் அடிமை சிக்கப்போரானா?

  ReplyDelete
 9. தினேஷ்க்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. ஊருக்கு போயிட்டு போன்லாம் வேற பண்றாய்ங்களா இப்பம்?? எங்க கணக்கே வேற இங்கே. போன் ஏதும் வரவில்லையென்றால் பய சேஃப்பா போயாச்சுன்னு அர்த்தம் பண்ணிக்குவோம், இல்லைன்னா பய வீட்டிலிருந்து போன்வரும் என்ன ஆச்சு காணும்னு, அப்ப எதோ ப்ரச்னைனு அர்த்தம். ம்ம்ம், காலம் மாறிட்டிருக்கு பாஸ்.

  ReplyDelete
 11. மனோ நீங்க உங்க நண்பர் மேல் வைத்துள்ள நட்பும் அன்பும் இந்த பதிவில் வெளிப்படுகிறது.
  மேலே உள்ள உங்க நண்பரின் படத்தைக்கண்டு ஒரு வினாடி திகைத்தேன்.
  கருப்பு நிற கூலிங் க்ளாஸ் அணியும் பழக்கமில்லை.அதே போல ஜெர்கின் போன்ற உடைகளையும் நான் அணிவதில்லை.ஆனால் எப்போது இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டது ? என்ற திகைப்பே காரணம் . ப்ரோபைலில் அப்படியே அச்சு அசலாக என்னைபோலவே உள்ளார் உங்க நண்பர்.
  என் பையனே பார்த்துவிட்டு "உங்க படம்தானப்பா " என்றான்

  அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்க !:)))))

  ReplyDelete
 12. //Speed Master said...
  // பஹ்ரைன் கலவர நிலையும்

  அங்கேயும் பிர்ச்சனையா?//

  ஆமாம் மக்கா....

  தினேஷ் கடலூர் காரர்....

  ReplyDelete
 13. //வேடந்தாங்கல் - கருன் said...
  ஒர் அடிமை சிக்கப்போரானா?//

  அட பாவி வாத்தி....

  ReplyDelete
 14. //வசந்தா நடேசன் said...
  ஊருக்கு போயிட்டு போன்லாம் வேற பண்றாய்ங்களா இப்பம்?? எங்க கணக்கே வேற இங்கே. போன் ஏதும் வரவில்லையென்றால் பய சேஃப்பா போயாச்சுன்னு அர்த்தம் பண்ணிக்குவோம், இல்லைன்னா பய வீட்டிலிருந்து போன்வரும் என்ன ஆச்சு காணும்னு, அப்ப எதோ ப்ரச்னைனு அர்த்தம். ம்ம்ம், காலம் மாறிட்டிருக்கு பாஸ்.//

  போன் பண்ணினது இதயசாரல் ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 15. //கக்கு - மாணிக்கம் said...
  மனோ நீங்க உங்க நண்பர் மேல் வைத்துள்ள நட்பும் அன்பும் இந்த பதிவில் வெளிப்படுகிறது.
  மேலே உள்ள உங்க நண்பரின் படத்தைக்கண்டு ஒரு வினாடி திகைத்தேன்.
  கருப்பு நிற கூலிங் க்ளாஸ் அணியும் பழக்கமில்லை.அதே போல ஜெர்கின் போன்ற உடைகளையும் நான் அணிவதில்லை.ஆனால் எப்போது இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டது ? என்ற திகைப்பே காரணம் . ப்ரோபைலில் அப்படியே அச்சு அசலாக என்னைபோலவே உள்ளார் உங்க நண்பர்.
  என் பையனே பார்த்துவிட்டு "உங்க படம்தானப்பா " என்றான்

  அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்க !:)))))//

  நாங்க இதை பார்த்துட்டு கே எஸ் ரவிகுமார் மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ணிட்டு இருக்கோம்....

  ReplyDelete
 16. உங்கள் நண்பருக்கு மனம் போல மண வாழ்க்கை அமைய எங்கள் வாழ்த்துக்கள் மனோ....

  ReplyDelete
 17. //ரேவா said...
  உங்கள் நண்பருக்கு மனம் போல மண வாழ்க்கை அமைய எங்கள் வாழ்த்துக்கள் மனோ....//

  நன்றி ரேவா....

  ReplyDelete
 18. வாழ்த்துகள் - நண்பருக்கு...

  ReplyDelete
 19. உங்களோடு இணைந்து உங்கள் நண்பருக்கும் எங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம். பஹ்ரைன் கலவரம் பற்றி சொன்னீர்கள். ஆனால் அந்த கலவரங்கள் ஏன், எதற்காக நடக்கின்றன என்பது பற்றி சுடச் சுடப் பதிவு போட்டால் நன்றாக இருக்குமல்லவா?

  ReplyDelete
 20. உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள் ............................

  ReplyDelete
 21. யான் பெற்ற இன்பம் பெருக ..
  இவ்வையகம் ...(தினேஷ்க்கும் சோத்தாபை அடி கிடைக்க வாழ்த்துகள் ஹி ..ஹி ..)

  ReplyDelete
 22. உங்கள் நண்பர் தினேஷுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும். இனிய துணை - "இதய சாரலிடம் " நலம் விசாரித்ததாய் சொல்லுங்கள்.

  ReplyDelete
 23. //இம்சைஅரசன் பாபு.. said...
  யான் பெற்ற இன்பம் பெருக ..
  இவ்வையகம் ...(தினேஷ்க்கும் சோத்தாபை அடி கிடைக்க வாழ்த்துகள் ஹி ..ஹி ..)//


  அட பாவி மக்கா எலேய் நீரு அப்போ நிஜமாத்தான் சோத்தாப்பை அடி வாங்கிட்டு இருக்கிறா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 24. //நிரூபன் said...
  உங்களோடு இணைந்து உங்கள் நண்பருக்கும் எங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம். பஹ்ரைன் கலவரம் பற்றி சொன்னீர்கள். ஆனால் அந்த கலவரங்கள் ஏன், எதற்காக நடக்கின்றன என்பது பற்றி சுடச் சுடப் பதிவு போட்டால் நன்றாக இருக்குமல்லவா?//

  அதுக்கு நிறைய தகவல்கள் செகரிக்கணும் நண்பா...நேரம் இல்லை. லைவ்வா நடப்பதை பேஸ்புக்'கில் போட்டால் கூட சிலர் நம்ப மறுக்கிறார்கள்....
  இதோ இப்போ மேலே ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டுதானிருக்கிறது....

  ReplyDelete
 25. //FOOD said...
  உங்கள் நண்பர் தினேஷுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும். இனிய துணை - "இதய சாரலிடம் " நலம் விசாரித்ததாய் சொல்லுங்கள்.//

  கண்டிப்பா சொல்றேன் ஆபீசர் மக்கா....

  ReplyDelete
 26. சித்தருக்கு ஏது சுகங்கொள்ளும் குடும்ப வாழ்க்கை.??? பரவால தினேஷ்க்கு அவர் கவிதை போலவே வளண்டியது அமைய வாழ்த்துக்கள்.. இதயசாரல் நண்பருக்கு நன்றிகள்..

  ReplyDelete
 27. //தம்பி கூர்மதியன் said...
  சித்தருக்கு ஏது சுகங்கொள்ளும் குடும்ப வாழ்க்கை.??? பரவால தினேஷ்க்கு அவர் கவிதை போலவே வளண்டியது அமைய வாழ்த்துக்கள்.. இதயசாரல் நண்பருக்கு நன்றிகள்..//

  என்னாது..."வளண்டியது" இது எந்த ஊர் பாஷை புரியலையே..??

  ReplyDelete
 28. நண்பர் தினேஷ்க்கு நல்ல வாழ்க்கை துணை அமைய பிரார்த்திக்கின்றேன்..மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமையட்டும்

  ReplyDelete
 29. அண்ணன் நாஞ்சில் மனோவின் சார்பில் நானும் வாழ்த்துகிறேன்( வாழ்த்த வயதில்லை அப்படீல்லாம் சொல்லணுமோ??) தம்பி தினேஷா நல்வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. தினேஷ்க்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. தினேஷ்க்கு நல்வாழ்த்துக்கள்

  ஆமானே உங்க அறுசுவை எப்படி சமைப்பது என்பதை சொல்லிக்கொடுத்திட்டீங்களா!

  ReplyDelete
 32. விக்கி உலகம் said...
  தினேஷ்க்கு நல்வாழ்த்துக்கள்

  ஆமானே உங்க அறுசுவை எப்படி சமைப்பது என்பதை சொல்லிக்கொடுத்திட்டீங்களா!

  ஆமா இந்த கேள்வி யாருக்கு ஒய் எனக்கா தினேஷுக்கா.....அவரு நல்லா சமைப்பாருப்பா....நமக்குதேன் ங்கே.....

  ReplyDelete
 33. பஹ்ரைன்லயும் பிரச்சினையா..பாத்து இருங்க சார்..தினேஷுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 34. அவர் கவிதைகளில் கூறியத போல அவரக்க எற்ற தணை அமைய வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

  ReplyDelete
 35. எனது வாழ்த்துகளும் இரண்டு நாள் நெட் கனக்சன் தட்டுபாடு காரணமாகா தாமதம்...

  ReplyDelete
 36. யோ மேலை ஹெலிகொப்ரர் பறக்குதி என்று சொல்லுறீங்களே? நம்ம இலங்கை மாதிரி வெடிச் சத்தம் எல்லாம் கேட்குதா? பத்திரமாக இருங்கள்.

  ReplyDelete
 37. இந்த பில்டிங்க நீங்க டிசைன் செஞ்சி தந்தீங்கன்னு பேசிக்கறாங்களே.. நெசமாவா?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!