Sunday, August 21, 2011

முத்துக்கள் மூன்று தொடர்....

முத்துக்கள் மூன்று தொடர் எழுதுடா தம்பின்னு கோமதி அக்கா அன்பால் "மிரட்டுனதினால்," இன்னொரு முறை எழுதுறேன் சற்று வித்தியாசமாக..
.http://haasya-rasam.blogspot.com/2011/08/blog-post_17.html[[இது கோமதி அக்காள் லிங்க்]]


[[இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

என்னை எப்பொழுதும் வம்புக்கு இழுக்கும் இரண்டு தம்பிகள்
1-திவா
2-நாஞ்சில் மனோ
3-வம்பு பண்ணாத சகோதரி சித்ரா]]

------------------------------------------
1) விரும்பும் மூன்று விஷயங்கள்?

௧ : அன்பு
௨ : பாசம் 
௩ : நேசம் 

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?

௧ : கோபம்
௨ : வஞ்சகம் 
௩ : வெறுப்பு 

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

௧ : உயரம்
௨ : ஆழம்
௩ : ஏணிப்படி 

4) புரியாத மூன்று விஷயங்கள்?

௧ : பெண் மனசு
௨ : பெண்ணின் கோபம் 
௩ : பெண்ணின் அன்பு 

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

௧ : லேப்டாப்
௨ : இப்போ புதுசா வாங்குன கண்ணாடி
௩ : செல்போன் மற்றும் அருவாக்கள், கத்திகள் ஹி ஹி..

6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

௧ :பன்னிகுட்டி ராம்சாமி
௨ : தம்பி "கோமாளி" செல்வா [[ரயில் தண்டவாளத்துலையே ஸ்பீட் பிரேக் வைக்க சொல்றான்]]
௩ : சுப்ரமணியன் சுவாமி 

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

௧ : பிளாக் எழுதுவது 
௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்
௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, "கருப்பு பணம் மாநிலம்" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...
௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..
௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...

9) செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

௧ : சீக்கிரம் ஊரில் செட்டில் ஆகவேண்டும் 
௨ : என்னால் முடிந்த அளவு உதவிகள் செய்வது
௩ : நன்றே செய் அதை இன்றே செய் 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

௧ : அண்ணா ஹசாரே'வுக்கு காங்கிரஸ் அளிக்கும் சல்சாப்பு பதில்கள்..
௨ : பால்தாக்கரேயின் இன துவேஷம்..
௩ : ஜாதி...

11) கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?

௧ : கார் ஓட்டுவது [[இன்னும் கனவாவே இருக்கு அப்பிடியே கார் ஓட்டினாலும் பக்கத்துல ஒரு ஆள் வேணும், ஆனால் லைசென்ஸ் பக்காவா வச்சிருக்கேன் ஹி ஹி...
௨ : எல்லார் மேலும் நான் அன்பு கூறனும், என் மீதும் எல்லாரும் அன்பு கூறனும்..
௩ : சினிமா டைரக்ஷன்...

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?

௧ : சில்லி சிக்கன்..
௨ : என் வீட்டம்மா செய்யும் நல்லி மட்டன்...
௩ : என் அம்மா செய்யும் மீன் கறி...

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

௧ : நிலா நீ வானம் காற்று மழை....
௨ : நீ ஒரு காதல் சங்கீதம்...
௩ : மேகம் கொட்டட்டும் மின்னல் வெட்டட்டும் ஆட்டம் உண்டு [[எனக்குள் ஒருவன்]]

14) பிடித்த மூன்று படங்கள்?

௧ : விருமாண்டி...
௨ : மைனா...
௩ : அன்பே சிவம்...

15)இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?)

௧ : நான் காதலித்து மணந்த என் மனைவி...
௨ : பணம் கண்டிப்பா வேணும்..
௩ : பிரயாணங்கள்.....


டிஸ்கி : கிண்டல் பண்ணி குதறாம எழுதணும்னா என்னா கஷ்டமா இருக்குடா சாமீ......


டிஸ்கி : கோமதி அக்காளுக்காக என் பாணியை மாத்தி எழுதி இருக்கேம்டே மக்கா....


ஓ இதை தொடர்ந்து எழுத ஆள் வேணுமே......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......யாரை மாட்டிவிடலாம்....????..........


ஆங்.......விக்கி உலகம்...
ஆங்......வானதி...
ஆங்.......திருமதி சங்கரலிங்கம் [[உணவு உலகம்]]

43 comments:

 1. லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..


  ..... இன்னும் லீவா? கொடுத்த வச்ச ஆளுயா ......

  ReplyDelete
 2. கலக்கலா சொல்லி இருக்கய்யா.....ஆனாலும் நீர் ரொம்ப லேட்டு!.....ஒரு மாசம் ஆச்சி நான் இந்த தொடர்பதிவுக்கு நம்ம தமிழ்வாசியால எழுதி முடிச்சி ஹிஹி!

  ReplyDelete
 3. சுருக்கச் சொன்னாலும் நல்ல பதில்கள் மக்கா....

  விடுமுறையை நல்லா எஞ்சாய் பண்றீங்க.... நல்லது...

  ReplyDelete
 4. Chitra said...
  லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..


  ..... இன்னும் லீவா? கொடுத்த வச்ச ஆளுயா .....//

  பின்னே வேலைன்னாலும் கடுமையா செய்வேன், அதே வேளை லீவையும் கடுமையா என்ஜாய் பண்ணுவேன்....

  ReplyDelete
 5. விக்கியுலகம் said...
  கலக்கலா சொல்லி இருக்கய்யா.....ஆனாலும் நீர் ரொம்ப லேட்டு!.....ஒரு மாசம் ஆச்சி நான் இந்த தொடர்பதிவுக்கு நம்ம தமிழ்வாசியால எழுதி முடிச்சி ஹிஹி!//

  யோவ் நானும் இதை ஏற்க்கனவே எழுதுனதுதான், பதிவை நல்லா வாசிக்கிறது இல்லையா..? இது கோமதி அக்காளுக்காக கஷ்டப்பட்டு எழுதுனது....ஹி ஹி....

  ReplyDelete
 6. வெங்கட் நாகராஜ் said...
  சுருக்கச் சொன்னாலும் நல்ல பதில்கள் மக்கா....

  விடுமுறையை நல்லா எஞ்சாய் பண்றீங்க.... நல்லது...//

  நன்றி மக்கா....

  ReplyDelete
 7. Thoder pathivu na thodarnthu athaiye ezhtharathu thane?

  ReplyDelete
 8. நிறைய தெரிஞ்சுக்கிட்டோம்
  பகிர்வுக்கு நன்றி அண்ணா..

  ReplyDelete
 9. //லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..//
  இன்னும் லீவா?? பொறாமையா இருக்கு பாஸ்!

  ReplyDelete
 10. தலைவர் அடிக்கடி லாப்டாப்பை முன்னிலைப்படுத்துகிறார்...புதுசோ?

  ReplyDelete
 11. //பிடித்த மூன்று படங்கள்?

  ௧ : விருமாண்டி...
  ௨ : மைனா...
  ௩ : அன்பே சிவம்...//

  கடைசி ரெண்டு சூப்பர்! ஆமா விருமாண்டி-அருவாளுக்காகத் தானே?
  :-)

  ReplyDelete
 12. பிடித்த உணவுகள்..ஆக மொத்தம் எல்லா உயிரனங்களும்..

  ReplyDelete
 13. //என் அம்மா செய்யும் மீன் கறி...//
  உங்க வீட்டம்மாவுக்கு மீன்கறி செய்யத் தெரியாதா?
  இருந்தாலும் அதை இப்பிடிப் பப்ளிக்குல சொல்றது நல்லாவா இருக்கு?
  ஸ்ஸ்ஸ் அப்பாடா!!! :-)

  ReplyDelete
 14. NAAI-NAKKS said...
  Thoder pathivu na thodarnthu athaiye ezhtharathu thane?//

  ஹய்யோ ஹய்யோ முடியல...

  ReplyDelete
 15. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  நிறைய தெரிஞ்சுக்கிட்டோம்
  பகிர்வுக்கு நன்றி அண்ணா..//

  உள்குத்து மாதிரி இருக்கே ஹி ஹி...

  ReplyDelete
 16. ஜீ... said...
  //லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..//

  இன்னும் லீவா?? பொறாமையா இருக்கு பாஸ்!//

  கண்ணுபட போகுதுய்யா பாவி.....

  ReplyDelete
 17. ஜீ... said...
  தலைவர் அடிக்கடி லாப்டாப்பை முன்னிலைப்படுத்துகிறார்...புதுசோ?//

  யோவ் டேபிள்ல என்னா இருக்குன்னுதானே கேட்டுருக்காங்க.....

  ReplyDelete
 18. ஜீ... said...
  //பிடித்த மூன்று படங்கள்?

  ௧ : விருமாண்டி...
  ௨ : மைனா...
  ௩ : அன்பே சிவம்...//

  கடைசி ரெண்டு சூப்பர்! ஆமா விருமாண்டி-அருவாளுக்காகத் தானே? //

  அருவாதானே நமக்கு பழம் ஸாரி பலம்.....

  ReplyDelete
 19. Amutha Krishna said...
  பிடித்த உணவுகள்..ஆக மொத்தம் எல்லா உயிரனங்களும்..//

  ச்சே ச்சே பாம்பு, பல்லி எல்லாம் திங்குறதில்லைங்க ஹி ஹி...

  ReplyDelete
 20. ஜீ... said...
  //என் அம்மா செய்யும் மீன் கறி...//


  உங்க வீட்டம்மாவுக்கு மீன்கறி செய்யத் தெரியாதா?
  இருந்தாலும் அதை இப்பிடிப் பப்ளிக்குல சொல்றது நல்லாவா இருக்கு?
  ஸ்ஸ்ஸ் அப்பாடா!!! :-)//

  யோவ் என்னா குடும்பத்துக்குள்ளே கலவரம் உண்டு பண்ணுதீரா..?

  ReplyDelete
 21. // சினிமா டைரக்ஷன்...//

  கொலைமுயற்சி கேஸ்ல உள்ளே போக பிரியப்படறீங்க. யாரால மாத்த முடியும்?

  ReplyDelete
 22. இன்னும் இந்த தொடர் பாத்து முடியலையா?

  ReplyDelete
 23. ரசித்த பதிவு, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. 8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

  ௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, "கருப்பு பணம் மாநிலம்" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...

  ௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...// நீ....ண்ட ஆயுள் கேட்கும் முறை இதுதானா?

  ReplyDelete
 25. //புரியாத மூன்று விஷயங்கள்?

  ௧ : பெண் மனசு
  ௨ : பெண்ணின் கோபம்
  ௩ : பெண்ணின் அன்பு //

  அன்பும் கோபமும் மனதின் வெளிப்பாடுதானே. அப்புறம் எதுக்கு பெண் மனசுன்னு தனியா போட்டுருக்கீங்க? :)

  ReplyDelete
 26. //என் வீட்டம்மா செய்யும் நல்லி மட்டன்...//
  கொடுத்து வச்ச ஆளு சார் நீங்கோ.....
  எங்க ஹவுஸ் ஓனரம்மாலாம் நான்வெஜ் சமைக்க கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா உங்க ஹவுஸ் ஓனரம்மா நல்லி மட்டன்லாம் செஞ்சு கொடுக்குறாங்கோ.....
  ம்
  நல்லா இருங்க மக்கா...........

  ReplyDelete
 27. //8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

  ௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, "கருப்பு பணம் மாநிலம்" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...
  ௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..
  ௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...//

  நீங்க எந்த கட்சில இருக்கீங்க?? ஹி...ஹி..ஹி....

  ReplyDelete
 28. அண்ணனையே சீரியஸ் ஆக்கிட்டாங்களே...

  ReplyDelete
 29. எல்லா மூன்றும் அருமை!விடுமுறையை அனுபவியுங்க!

  ReplyDelete
 30. அழகா சொல்லி இருக்கீங்க

  ReplyDelete
 31. மக்கா சீரியஸ் ஆகிட்டாப்ல....... (ஆனாலும் நாங்க விடமாட்டம்ல.....)

  ReplyDelete
 32. /////4) புரியாத மூன்று விஷயங்கள்?

  ௧ : பெண் மனசு
  ௨ : பெண்ணின் கோபம்
  ௩ : பெண்ணின் அன்பு
  ///////

  தலைவருக்கே வெளங்கலேன்னா... எங்கள மாதிரி அப்பாவி பொதுஜனம் என்ன பண்ணும்?

  ReplyDelete
 33. //////6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

  ௧ :பன்னிகுட்டி ராம்சாமி
  ௨ : தம்பி "கோமாளி" செல்வா [[ரயில் தண்டவாளத்துலையே ஸ்பீட் பிரேக் வைக்க சொல்றான்]]
  ௩ : சுப்ரமணியன் சுவாமி ////////


  யோவ் இந்த சுப்ரமணிய சாமியோட எங்கலை சேத்துப்புட்டியேயா......?

  ReplyDelete
 34. //////௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்////////


  புது லேப்டாப்பு, இன்னேரம் பழைய வெங்காயமா போயிருக்குமே?

  ReplyDelete
 35. ////௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..///////

  எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........

  ReplyDelete
 36. //////14) பிடித்த மூன்று படங்கள்?

  ௧ : விருமாண்டி...///////

  தலைவரும் விருமாண்டி கணக்காத்தான் இருக்காரு.......

  ReplyDelete
 37. <<<<<8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?


  ௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..
  ௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...<<<<

  இது நான் நெகிழ்ந்த இடம்.. ரியலி கிரேட் பாஸ்

  ReplyDelete
 38. ௨ : எல்லார் மேலும் நான் அன்பு கூறனும், என் மீதும் எல்லாரும் அன்பு கூறனும்..///

  அன்புடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. முத்துக்கள் மூன்றினை, உங்கள் ரசனையினை வெளிப்படுத்தும் வண்ணம் வெவ்வேறு தலைப்பின் கீழ் அழகாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  ReplyDelete
 40. ரசிக்கும்படியாக நகைச் சுவையுடனும்
  புரிந்து கொள்ளும்விதமாக தகவல்களுடனும்
  பதிவு மிக மிக அருமை

  ReplyDelete
 41. தம்பி நாஞ்சில் மனோ ,அன்பு பாசம் நேசம் விரும்பிட்டு,எல்லோருக்கும் நன்மை செய்யணும் ,உதவியா இருக்கணும்னு ,சொல்லிட்டு எதுக்குங்கண்ணா மேஜையில் கத்தி அறுவா ?அதிலே ஹி ஹி ஹி வேற அதுவும் மேஜையிலேயா இருக்கும்

  ReplyDelete
 42. பதில்கள் சுருக்கமா சுவாரசியமா இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!