Sunday, August 7, 2011

அரவாணிகளும், ஷெட்டியும்..!!!

நேற்று சர்ச் போயிட்டு, குடும்பத்துக்கு பிடித்தமான ஒரு ரெஸ்ட்டாரன்டில் [[ஹோட்டல் வய்பவ், அந்தேரி கிழக்கு, அந்தேரி ரயில்வே ஸ்டேசன் அருகில்]] நன்றாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி, ஆன்லைன் வந்து சிலபல பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டு, மண்டை குத்த ஆரம்பிச்சதும் போயி நல்ல ஒரு உறக்கம் உறங்கலாம்னா.....

என் மகள் என்னை உறங்கவிடாமல் சேட்டைபண்ணி கொண்டிருந்தாள், என்னடான்னு அவளை திட்டிட்டே எழும்பினேன், மணி மாலை ஐந்தரை, சரி ஒரு நண்பனை மார்க்கெட் பக்கம் போயி பார்த்துட்டு வரலாம்னு போனேன்....


மார்க்கெட் பக்கம் இரண்டு பார்'கள் அருகருகில் இருக்கின்றன, ஒன்றில் பார்'ம் அதுக்கு மேலே போலீஸ் [[லீகல் அல்ல]] அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் மிக முக்கியமான ஆட்களுக்கான, அறிமுகமான ஆட்கள் மட்டுமே போகும் ஒரு லேடீஸ் டான்ஸ் பார் இருக்கிறது, அதை நடத்துவது என் நண்பனின் நண்பன் ஷெட்டி என்பவன் [[கர்நாடகா]]


அடுத்த பார் லீகலாக நடக்கும் நார்மலான பார், அந்த வழியாக போன நான் எதேச்சையாக அங்கே வெளியே கூட்டம் கூடி நிற்பதை பார்த்து, என்னடான்னு நானும் போயி பார்க்க போனேன்......


அங்கே [[டேடீஸ் டான்ஸ் பார்]] பார் முன்பு நான்கு அரவாணிகளுக்கும் நண்பன் ஷெட்டிக்கும் இடையே வாய் தகராறு நடந்து கொண்டிருந்தது, என்னை கண்டதும் ஷெட்டி ஹாய் என கைகாட்டினான் [[அவ்வ்வ்வ்வ்வ்]]


இன்னும் நான் அருகில் சென்று பார்த்தால், இது ஒரு அநியாயமா இல்லை நியாயமான்னு சத்தியமா எனக்கு விளங்கவில்லை.....!!!


அதாவது எங்கள் [[மரோல்]] ஏரியாவில் அரவாணிகள் வெள்ளிகிழமை மட்டும்தான் கடை கடையாக காசு வாங்க வருவது வழக்கம், ஆனால் இன்று ஞாயிற்று கிழமை வழக்கத்துக்கு மாறாக நன்றாக குடித்து விட்டு வந்தது ஒரு புறம்......!!!

அடுத்து அந்த பார் திறக்கும் நேரம் இரவு ஏழு மணி, மும்பையில் எண்பது சதவீதம் எந்த கடைக்காரனும் போனி ஆகாமல் அஞ்சி பைசா பிச்சை கொடுக்கமாட்டான்......


ஷெட்டி எவ்வளோவோ கெஞ்சி கெஞ்சி கேட்கிறான் போனி ஆகவில்லை அப்புறமா வாங்கன்னு, அரவாணிகளின் கும்மி அடி கூடிகொண்டே போனதுமில்லாமல் வேடிக்கை பார்க்க ஆட்களும்.....


ஷெட்டிக்கு [[அவன் ஒரு பெரிய கை]] கோபம் வரவே காசு தரமுடியாதுன்னு கறாராக சொல்லவும் அடுத்து நடந்ததுதான் அசிங்கியமான சம்பவம்....!!!


நான்கு அரவாணிகளும் தங்கள் சேலையை உயர்த்தி பார்'க்கு நேராக காட்டி சாபமிட தொடங்கினார்கள்......!!! ஷெட்டி அதற்கும் அசையாமல் காசு கொடுக்காமல் விரட்டி விட்டான், அவமானத்துடன் போனார்கள் அரவாணிகள்....!!!


நானும் ஆபீசரும் நெல்லை டூ மதுரை பிரயாணத்தின் போதும் அரவாணிகள் வந்து காசு கேட்டார்கள் கொடுத்தோம், தொடர்ந்து அடுத்த ஒரு அரவாணியும் வந்து காசு கேட்கவும் நான் விளையாட்டாக சொன்னேன், என்ன இப்பதான் ரெண்டு பேருக்கு பணம் கொடுத்தேன் மூன்றாவதா நீங்களா என கேட்கவும் வந்த பதில்.....

மாமோய் இந்த ரயில்லையே நாங்க ரெண்டே பேர்தான் இருக்கோம் மூணாவதா யாருமில்லை மாமோய்'ன்னு என்னை மிரட்டாத குறையா காசு வாங்கிட்டு போனது,  நான் தமாஷா எடுத்துக்கிட்டேன் [[ஆபீசர் மனசுக்குள்ளே ரசிசிட்டு இருந்தது வேறே விஷயம்]]

ஸோ நான் ஆச்சர்யபட்ட, புரியாத விஷயம் என்னான்னா, ஷெட்டி செய்தது நியாயமா....??? அரவாணிகள் சேலையை உயர்த்தி காட்டியது நியாயமா...??? சத்தியமா எனக்கு புரியலை....!!! தெரிஞ்சவங்க பின்னூட்டத்தில் சொல்லுங்க....
32 comments:

 1. எங்க ஊர்லையும் வெள்ளிக்கிழமை தான் கலெக்ஷன்...

  ReplyDelete
 2. நல்ல கேக்குறியா கேள்வி...?

  ReplyDelete
 3. அவர்களை அவமாவம் படுத்தியது தவறுங்க...

  அவர்கள் செய்லைப்பற்றி நாம் குறைசொல்லவும் முடியாது நிய்படுத்தவும் முடியாது...

  ReplyDelete
 4. அப்ப சண்டே ஈவ்னிங் ஒரு ப்ரீ ஷோ பார்த்தாச்சு..
  (நான் சண்டைய சொன்னேன்.. தப்பா நினைச்சே பிச்சிபுடுவேன்..)

  ReplyDelete
 5. மும்பை ட்ரைன்ல சைடு லோயர் பெர்த்துல இருக்கிறவுங்க பாடு சிலநேரம் திண்டாட்டம்தான் .....காசு குடுக்கலைன்னா பிடுங்க ஆரம்பிசிடுதுங்கள் அரவாணிகள் ....

  ReplyDelete
 6. அரவாணிகள் செய்தது தப்பில்லை, நண்பர் செய்ததும் தப்பில்லே, நீங்க அங்கே போனதுதான் தப்பு! எப்பூடி ?!

  ReplyDelete
 7. வணக்கம் அண்ணாச்சி, உண்மையில் அரவாணிகளுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தினைத் துஷ்பிரயொகம் செய்த அரவாணிகள் மீது தான் தப்பு என்பது என் கருத்து.
  காரணம் வெள்ளிக் கிழமை பணம் வாங்குவதைத் தவிர்த்து, ஞாயிற்றுக் கிழமை பணம் வாங்க வந்தால்...முதலாளியின் நிலமை என்னாவது?


  ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் சந்தர்ப்பத்தினை வரை முறையோடு பயன்படுத்தினால் தவறுகள் நேராது என்பதற்கு தாங்கள் இப் பதிவில் பகிர்ந்திருக்கும் இச் சம்பவமும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

  ReplyDelete
 8. பெரியோர்களே, நடன பார்கள் இளைஞர்கள் மக்கள் நிறைய உள்ளனர் இது நவீன சமூகத்தின் ஆரோக்கியமான இல்லை. பார்வைகளின் ரஜினி தான் புள்ளி என்று இங்கே சொடுக்கவும்
  http://bit.ly/n9GwsR

  ReplyDelete
 9. I am confused . . . What I say . . .

  ReplyDelete
 10. //பிடித்தமான ஒரு ரெஸ்ட்டாரன்டில் [[ஹோட்டல் வய்பவ், அந்தேரி கிழக்கு, அந்தேரி ரயில்வே ஸ்டேசன் அருகில்]] நன்றாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி//

  அப்போ வீட்டு சமையல் நல்லா இல்லைன்னு சொல்றீங்க . இருங்க அண்ணிகிட்ட சொல்றேன்.

  ReplyDelete
 11. பார் விஷயம் என்ன சொல்றதுன்னே தெரியலையே....

  ReplyDelete
 12. ஓய் மக்கா 4 வது படம் யாருன்னு தெரியுதா..??? ஜாக்கிரதை :-))

  ReplyDelete
 13. மனோ!உங்களுக்குப் பின்னூட்டம் போட சரியான ஒரே ஆள் சாரு மட்டுமே!ஆனால் அவர் இப்ப ஐயப்ப சாமியாகி விட்டதால் நான் பின்னுட்டம் போடுகிறேன்:)

  சாருவின் தேகம் புத்தக வெளியிட்டீல் திருநங்கை ஒருவரின் பேச்சைக் கேட்க நேர்ந்தது.சரியான கல்வியும்,வேலை வாய்ப்புக்களும்,மருத்துவ உதவியும் மட்டுமே இவர்களையும் சமூகத்தில் ஒருவராக இணைக்க முடியும்.அதுவரைக்கும் ரயில்நிலையப் பிச்சைகள் உலாவரவே செய்வார்கள்.

  இவர்களுக்கு மாறாக பார் நடன நங்கைகள் குறுகிய காலத்தில் பணம் என்ற பொருளாதாரத்துக்குள் இழுத்து வரப்பட்டவர்கள் என நினைக்கிறேன்.பார் நடனமும்,இந்தப்பெண்களிடம் பேசும் வாய்ப்பும் அமையவில்லையென்ற போதிலும் பார் நடனமும் மும்பாய் கலாச்சாரத்தின் ஒரு பகுதியே என்பதை தவிர்க்க முடியாத ஐட்டம் கேர்ல் இந்தி திரைப்படங்களும் பிரியங்கா சோப்ரா,ராணி முகர்ஜி,காத்ரீனா போன்ற அய்ட்டங்கள் சொல்கிறார்கள்:)

  ReplyDelete
 14. அவர்கள் பணம் கேட்டு வற்புறுத்துவது தவறுதான்... வேறென்ன சொல்ல...

  ReplyDelete
 15. மாப்பிள இது தவரோ சரியோன்னு..?? நீங்க நல்லாலாலா பார்த்திருகீங்க...

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 16. ஒரு சில அரவாணிகள் செய்யும் தவறுகளால் அந்த வகையினருக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது.

  ReplyDelete
 17. //ஆன்லைன் வந்து சிலபல பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டு//

  சில, பல ஏதாவது ஒண்ணு சொல்லுங்க. அது என்ன சிலபல?

  ReplyDelete
 18. யோவ்...இப்படி நண்பன்னு சொல்லி கடை முதற்கொண்டு போட்டு கொடுத்திட்டியே....நீ பண்றது மட்டும் ஞாயமா ஹிஹி டவுட்டு!

  ReplyDelete
 19. விக்கிதான் ஞாயமா கவலைப்பட்டிருக்காரு!

  ReplyDelete
 20. ////// விக்கியுலகம் said...
  யோவ்...இப்படி நண்பன்னு சொல்லி கடை முதற்கொண்டு போட்டு கொடுத்திட்டியே....நீ பண்றது மட்டும் ஞாயமா ஹிஹி டவுட்டு!
  ////////

  சரி விடுய்யா நாம மும்பை போகும்போது அங்க நமக்கு பெசல் பெர்மிசன் வாங்கி கொடுப்பாருல?

  ReplyDelete
 21. வேடிக்கை பார்த்து விட்டு வந்துட்டீங்க!

  ReplyDelete
 22. அந்த அரவாணி மேட்டருல என்னையும் இழுத்து விட்டிருக்கீங்களே, அது நியாயமா? அன்று ரயிலில், அரவாணி பதிலால், நீங்க ’ஙே’ என விழித்ததை நான் சத்தியமா யாரிடமும் சொல்ல மாட்டேன், மனோ.

  ReplyDelete
 23. தவறு அரவாணி மீது தான்ணே..

  ReplyDelete
 24. ஒரு முறை நான் நாகூரில் இருந்து திருச்சிக்கு ரயிலில் சென்ற போது வழியில் ஏறிய இரு அரவாணிகள் அடாவடி வசூல் செய்தார்கள்,பணம் தராதவர்களை தகாத வார்த்தைகளால் ஏசினார்கள்.

  என்ன செய்வது இது போன்றவர்களை?

  ReplyDelete
 25. அரவாணிகள் சேலையை உயர்த்தி காட்டியது நியாயமா...??? /////

  ஹி ஹி ...நீங்க-கடைக்கு முன்னாடி தானே இருந்திங்க????

  ReplyDelete
 26. //மாமோய் இந்த ரயில்லையே நாங்க ரெண்டே பேர்தான் இருக்கோம் மூணாவதா யாருமில்லை மாமோய்'ன்னு//

  அண்ணே... ரொம்ப நேரம் கழித்து தன புரிந்தது! :)

  ReplyDelete
 27. //மாமோய் இந்த ரயில்லையே நாங்க ரெண்டே பேர்தான் இருக்கோம் மூணாவதா யாருமில்லை மாமோய்'//
  ரைட்டு! அப்பவே எனக்கு டவுட்டு! ட்ரெயின் பெட்டி காலியா இருக்கேன்னு! :-)

  ReplyDelete
 28. நியாயமா பாத்தா ஷெட்டிக்காக பரிந்து பேசி நீங்களும் அவமானப்பட்டிருக்கனுமில்ல? அதானே நியாயம்? :-)

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!