Wednesday, August 10, 2011

தமாஷ் தமாஷ்...!

* தலைவர் இன்னும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே....?

கோர்ட்டுல ஜட்ஜை பார்த்ததும் "எஜமான்"ன்னு கூப்புடுறாரே.....!
-----------------------------------------------------------------------------------

* இந்த வீரனுக்கு மனதில் மன்னர் என்ற நினைப்பு போலும்........

ஏன் மன்னா..................என்ன ஆச்சு...?

"போரில் என்னை முந்திக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிவருகிறான் அமைச்சரே...!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

* என்னதான் கோயில்ல தரும் புளியோதரையும், பொங்கலும் சூடா இருந்தாலும் அதையும் "பிரசாதம்"னுதான் சொல்லணும், "ஃபிரஷ் சாதம்"ன்னு சொல்ல முடியாது...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

* என்னதான் பசு மாட்டுக்கு "ரோஜாப்பூவா" சாப்பிடப் போட்டாலும், அது "மில்க்"தான் தருமே தவிற "ரோஸ்மில்க்" எல்லாம் தராது...

* எதுக்காக மகளிர் அணி தலைவியை மாத்தணும்னு தலைவர் அடம்பிடிக்குறாரு...?

பார்க்க அவர் மனைவி மாதிரியே இருக்காங்களாம்....!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

* தூக்கத்துல நடக்குற அந்த பேஷன்ட், இப்போ அழுதுகிட்டே நடக்குறாரே........ஏன் ?

நர்சுக்கு கல்யாணமான சேதி தெரிஞ்சதும், "துக்கத்துல" நடக்குறதாலையா இருக்கும் டாக்டர்...!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

* பயபக்தியோடு 
சாமி கும்பிட்டான்
சிரமம் வைக்காமல்
உண்டியல் திறக்க 
வேண்டுமென்று..!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

* தப்பு செஞ்ச மனுஷனை "விலங்கு" மாட்டி இழுத்துட்டு போகலாம், தப்பு செஞ்ச விலங்கை "மனுஷனை" மாட்டி இழுத்துகிட்டு போகமுடியுமா...?

நம்ம தலைவருடைய உருவபொம்மையை எரிக்காமலேயே அவரை அவமானபடுத்திட்டான்களா....எப்பிடி...?

திருஷ்டி பொம்மையா வச்சிட்டாங்களே....!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருத்தன் என்னதான் திறமையான குக்கா இருந்தாலும், அவர் "கோதுமை ரவை"யில உப்புமா செய்யலாம், "அரிசி ரவை"யில உப்புமா செய்யலாம், ஆனா " அமைச்ச ரவை"யில உப்புமா செய்ய முடியுமா...?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

* கூகுள்ல என்ன தேடுறீங்க ஏட்டைய்யா....?

மாமூல் அதிகமா தரக்கூடிய நாலு நல்ல திருடன்களைதான்..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

* என்னதான் ஆறடி கூந்தல் அழகின்னாலும், கூந்தல்ல "ஜாதிமல்லி"யை வச்சுக்கலாம், "அடுக்குமல்லி"யை வச்சுக்கலாம், "கொத்தமல்லி"யை வச்சிக்க முடியுமா...?
--------------------------------------------------------------------------------------------------------------------------------

* தலைவர் எப்போதும் மேடையில் மகளிர் அணி தலைவியோட இடுப்பை பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டே இருப்பாரு, இப்ப ஏன் டீசண்டா வேற பக்கம் திரும்பி உக்காந்துட்டு இருக்கார்..?

அவரோட நடவடிக்கைகளை சி பி ஐ கண்கானிக்குதுன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டார் போல...!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

* மகளிரணித் தலைவியை தலைவர் தூக்கிப் பழகறாரே.....ஏன்..?

சேர்ந்து கட்சி தாவ டிரை பண்ணுறார்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------

* ஆபீசுக்கு "லஞ்ச் பேக்" கொண்டு போகலாம், "லஞ்ச பேக்" கொண்டு போக முடியுமா...?

நன்றி : குங்குமம்.

48 comments:

 1. இனிய காலை வணக்கம் மாம்ஸ்,
  பதிவு போடுவதிலும் உங்க கடமை உணர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. விடிகாலைப் பொழுதினைக் கலக்கலான நகைச்சுவைகளோடு ஆரம்பிச்சிருக்கிறீங்க.

  ReplyDelete
 3. "போரில் என்னை முந்திக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிவருகிறான் அமைச்சரே...!"//

  ஸப்ப்பா........................வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. * பயபக்தியோடு
  சாமி கும்பிட்டான்
  சிரமம் வைக்காமல்
  உண்டியல் திறக்க
  வேண்டுமென்று..!!//

  ஐயோ....ஐயோ.....இப்படியெல்லாம் யோசிப்பீங்களா...

  ReplyDelete
 5. கலக்கல் காமடீஸ் பாஸ்.. எல்லாமே சூப்பரா இருக்கு

  ReplyDelete
 6. தப்பு செஞ்ச மனுஷனை "விலங்கு" மாட்டி இழுத்துட்டு போகலாம், தப்பு செஞ்ச விலங்கை "மனுஷனை" மாட்டி இழுத்துகிட்டு போகமுடியுமா...?//

  ஏண்டா...நிரூபன்,
  உனக்கு காலங்காத்தால....இது வேணுமா?
  வேணுமா?

  ReplyDelete
 7. பயபக்தியோடு
  சாமி கும்பிட்டான்
  சிரமம் வைக்காமல்
  உண்டியல் திறக்க
  வேண்டுமென்று..!!!//
  இது நச்!! இந்த அப்பாவி சாமி அதையும் நடத்திக் கொடுத்திடும் பயபக்தியோட வேண்டிட்டானே அப்படின்னு.

  ReplyDelete
 8. அண்ணே ஒரே குஜாலா இருக்கீங்களா ஹிஹி!

  ReplyDelete
 9. நிரூபன் said...
  இனிய காலை வணக்கம் மாம்ஸ்,
  பதிவு போடுவதிலும் உங்க கடமை உணர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.//

  ஹா ஹா ஹா ஹா......வணக்கம் வணக்கம் மக்கா....

  ReplyDelete
 10. நிரூபன் said...
  விடிகாலைப் பொழுதினைக் கலக்கலான நகைச்சுவைகளோடு ஆரம்பிச்சிருக்கிறீங்க.//

  கொஞ்சம் சிரிப்பு காலையில் நல்லது ஹி ஹி...

  ReplyDelete
 11. நிரூபன் said...
  "போரில் என்னை முந்திக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிவருகிறான் அமைச்சரே...!"//

  ஸப்ப்பா........................வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  மன்னரை இப்பிடி கேவலபடுத்திட்டானே, சிபி'யின் கையாளா இருப்பானோ...??

  ReplyDelete
 12. நிரூபன் said...
  * பயபக்தியோடு
  சாமி கும்பிட்டான்
  சிரமம் வைக்காமல்
  உண்டியல் திறக்க
  வேண்டுமென்று..!!//

  ஐயோ....ஐயோ.....இப்படியெல்லாம் யோசிப்பீங்களா.//

  சாமி பாவம் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 13. மதுரன் said...
  கலக்கல் காமடீஸ் பாஸ்.. எல்லாமே சூப்பரா இருக்கு//

  நன்றி மதுரன்.....

  ReplyDelete
 14. நிரூபன் said...
  தப்பு செஞ்ச மனுஷனை "விலங்கு" மாட்டி இழுத்துட்டு போகலாம், தப்பு செஞ்ச விலங்கை "மனுஷனை" மாட்டி இழுத்துகிட்டு போகமுடியுமா...?//

  ஏண்டா...நிரூபன்,
  உனக்கு காலங்காத்தால....இது வேணுமா?
  வேணுமா?//

  ஹா ஹா ஹா ஹா வேணுமா வேணுமா....ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 15. நாய்க்குட்டி மனசு said...
  பயபக்தியோடு
  சாமி கும்பிட்டான்
  சிரமம் வைக்காமல்
  உண்டியல் திறக்க
  வேண்டுமென்று..!!!//


  இது நச்!! இந்த அப்பாவி சாமி அதையும் நடத்திக் கொடுத்திடும் பயபக்தியோட வேண்டிட்டானே அப்படின்னு.//

  தெய்வம்னா சும்மாவா.....எல்லாரும் வாழனுமே ஹி ஹி...

  ReplyDelete
 16. விக்கியுலகம் said...
  அண்ணே ஒரே குஜாலா இருக்கீங்களா ஹிஹி!//

  பிச்சிபுடுவேன் பிச்சி, காலையில்தான் கொஞ்சம் நேரம் கிடைக்குது ஹி ஹி....

  ReplyDelete
 17. ///
  "போரில் என்னை முந்திக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிவருகிறான் அமைச்சரே...!"
  ////

  ஏய் படுவா..

  யாரும் மனோவை மிஞ்சக்கூடாது...

  ReplyDelete
 18. /////
  கூகுள்ல என்ன தேடுறீங்க ஏட்டைய்யா....?

  மாமூல் அதிகமா தரக்கூடிய நாலு நல்ல திருடன்களைதான்..!
  ///////


  அவங்க இப்பயெல்லாம் அமைச்சராயிட்டாங்க...

  ReplyDelete
 19. எல்லாம் ஒரு ஒரு விதத்தில் அமர்க்களம் மனோ...

  ReplyDelete
 20. சூப்பர் ஜோக்

  ReplyDelete
 21. கவிதை வீதி # சௌந்தர் said...
  ///
  "போரில் என்னை முந்திக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிவருகிறான் அமைச்சரே...!"
  ////

  ஏய் படுவா..

  யாரும் மனோவை மிஞ்சக்கூடாது...//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 22. # கவிதை வீதி # சௌந்தர் said...
  /////
  கூகுள்ல என்ன தேடுறீங்க ஏட்டைய்யா....?

  மாமூல் அதிகமா தரக்கூடிய நாலு நல்ல திருடன்களைதான்..!
  ///////


  அவங்க இப்பயெல்லாம் அமைச்சராயிட்டாங்க...//

  பேரை சொல்லுங்க போட்டு குடுத்துருவோம்....

  ReplyDelete
 23. கவிதை வீதி # சௌந்தர் said...
  எல்லாம் ஒரு ஒரு விதத்தில் அமர்க்களம் மனோ...//

  நன்றி மக்கா...

  ReplyDelete
 24. jaisankar jaganathan said...
  சூப்பர் ஜோக்//

  நன்றி ஜெய்........

  ReplyDelete
 25. தலையில்கொத்த மல்லி
  வைக்க இனிமே ஆரம்பிக்க சொல்லி விளம்பரபடுத்தலாமா?

  ReplyDelete
 26. கூகுளில் அதிக மாமூல் தர்ர திருடனை தேடுவது சூப்பருங்க...

  ReplyDelete
 27. பாரத்... பாரதி... said...
  தலையில்கொத்த மல்லி
  வைக்க இனிமே ஆரம்பிக்க சொல்லி விளம்பரபடுத்தலாமா?//

  ஹை இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே...

  ReplyDelete
 28. பாரத்... பாரதி... said...
  கூகுளில் அதிக மாமூல் தர்ர திருடனை தேடுவது சூப்பருங்க...//

  ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 29. //பயபக்தியோடு
  சாமி கும்பிட்டான்
  சிரமம் வைக்காமல்
  உண்டியல் திறக்க
  வேண்டுமென்று..!!!//
  கடவுள் பாவம்.

  ReplyDelete
 30. சூப்பர்ணே..அருமையா யோசிச்சு எழுதியிருக்கீங்க..

  ReplyDelete
 31. எல்லாமே அசத்தல் மக்கா..
  இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

  ReplyDelete
 32. ஹா ஹா
  அதிகாலை அமர்களமான ஜோக்ஸ்

  ReplyDelete
 33. அப்புறம் அந்த உண்டியல் கவிதை சூப்பர்

  ReplyDelete
 34. ஜோக்குகள் அனைத்தும் அருமை பாஸ்.

  ReplyDelete
 35. சூப்பர்ர் ஜோக்ஸ்!!

  ReplyDelete
 36. >>>>செங்கோவி said...

  சூப்பர்ணே..அருமையா யோசிச்சு எழுதியிருக்கீங்க..


  அண்ணனுக்கு தம்ப்பியை பற்றி சரியா தெரில, டிஸ்கி பாருங்கோவ்

  ReplyDelete
 37. கலக்குங்க அண்ணா.... ஜோக்கு, கவிதை, அடுத்து என்ன

  ReplyDelete
 38. ////நன்றி : குங்குமம்.//////

  எலேய்ய்ய் என்னதிது?

  ReplyDelete
 39. //////செங்கோவி said...
  சூப்பர்ணே..அருமையா யோசிச்சு எழுதியிருக்கீங்க..//////

  உங்க கமெண்ட்டு சூப்பர்ணே....!

  ReplyDelete
 40. //////சி.பி.செந்தில்குமார் said...
  >>>>செங்கோவி said...

  சூப்பர்ணே..அருமையா யோசிச்சு எழுதியிருக்கீங்க..


  அண்ணனுக்கு தம்ப்பியை பற்றி சரியா தெரில, டிஸ்கி பாருங்கோவ்
  ///////

  எல்லாம் இவராலதான்யா? ஆமா 47 வயசான மனோவே சிபிக்கு தம்பின்னா... அப்போ.....

  ReplyDelete
 41. என்னதான் கோயில்ல தரும் புளியோதரையும், பொங்கலும் சூடா இருந்தாலும் அதையும் "பிரசாதம்"னுதான் சொல்லணும், "ஃபிரஷ் சாதம்"ன்னு சொல்ல முடியாது...!///

  சூப்பர்

  ReplyDelete
 42. கலக்கல் காமெடி

  ReplyDelete
 43. அனைத்துமே அசத்தல் ஜோக்குகள்
  குறிப்பாக மகளிர் அணி குறித்தவைகள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. ஜோக்கு எல்லாம் ஷோக்கு!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!