Saturday, August 27, 2011

ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் குடைச்சல்!


ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் குடைச்சல்!

நீங்க நல்லவரா, கெட்டவரா என்று நாயகன் கமலிடம் அவரது பேரப்பிள்ளை கேட்குமே, அப்படிதான் கேட்க வேண்டியிருக்கிறது இப்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை! ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ் சினிமா இப்போ நல்லாயிருக்கா, இல்லையா?

ஆமாம் என்று சிலரும், இல்லை என்று சிலரும் மண்டையை ஆட்டிக் கொண்டிருக்க, பைத்தியம் பிடிக்காத குறையாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் பலர். அதிலும் பைனான்ஸ் வாங்கி படமெடுப்பவர்கள் பாடு சர்வ பேதி!

கோடம்பாக்கத்தில் நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த கைதுகளால் பைனான்ஸ் கிடைப்பதில்லையாம் முன்பு போல. அதுவும் பிரதர்ஸ் இருவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால் பணம் வரும் வழிகளில் எல்லாம் அடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். மதுரை ஏரியாவில் வெளியாகும் எல்லா படங்களையும் இவர்கள்தான் வாங்கி வெளியிடுவார்கள். இந்த ஒரு பெரிய ஏரியாவின் வியாபாரமும் முடக்கம் ஆகிவிட்டதாக புலம்புகிறார்கள் இப்போது.

அரவத்தின் பெயர் கொண்ட ஒரு படத்தில் நடித்த இரண்டெழுத்து ஹீரோ திடீரென்று சம்பளத்தை எண்ணி வைச்சாதான் டப்பிங் பேசுவேன் என்று முரண்டு பிடிக்கிறார். இவரை பார்த்து பசுவான இன்னொரு ஹீரோவும் முரண்டு பிடிக்க, செய்வதறியாது தவிக்கிறதாம் படக்குழு.

ஒருபுறம் பல பைனான்சியர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். நல்லவேளையாக யூடிவி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட முன் வந்திருப்பதால் பெரிய நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கிறது திரையுலகம்.

ஆபத்துக்கு குடை பிடிக்கிறாங்க. அதுல ஆகாயம் தெரியலையேன்னு கிழிச்சு வச்சுராதீங்க மக்களே…

23 comments:

 1. முதல் குடைச்சல் .....

  ReplyDelete
 2. தமிழ் சினிமாவோட நிலைமை எப்பவோ பணால் ஆகிடிச்சி .......இதை மறைக்க சம்மந்தப் பட்டவுங்க எப்பவும் ஏதாவது சாக்கு போக்கு சொல்றது ......

  ReplyDelete
 3. அண்ணே எப்படி இருக்கீங்க ....

  ReplyDelete
 4. ஏதோ நடக்கிறது....நடக்கட்டும் ....

  ReplyDelete
 5. ஆபத்துக்கு குடை பிடிக்கிறாங்க. அதுல ஆகாயம் தெரியலையேன்னு கிழிச்சு வச்சுராதீங்க மக்களே…///

  இந்த வரிகள் சூப்பர்

  ReplyDelete
 6. தமிழ்சினிமாவுக்கு யாரோ செய்வினை,பில்லி,சூன்யம்,ஏவல் வைத்து விட்டார்கள்.

  ReplyDelete
 7. அண்ணே, மவுஸ் சரியா வேலை செய்யாததால கைவழுக்கி தமிழ் மணத்துல மைனஸ் ஓட்டு போட்டுட்டோம். அதை நெனச்சாலே துக்கம் தொண்டைய அடைக்குதே!!

  ReplyDelete
 8. நீங்க எப்பண்ணே பத்திரிக்கை நிருபர் ஆனீங்க?

  ReplyDelete
 9. அண்ணனும் மைனஸ் ஓட்டு வாங்கி பெரியாளாயிட்டாரே......?

  ReplyDelete
 10. யோவ் அடுத்து உங்க ஹோட்டலுக்கு வந்த நடிகைய பத்தி ஒரு பதிவு போடனும், இல்லே அப்புறம், மெழுகுவத்திய புடிச்சிக்கிட்டு உண்ணாவிரதம் இருப்போம் ஆமா.......

  ReplyDelete
 11. யார் குடை பிடிக்கிறாங்க?யார் கிழிக்கிறாங்க?

  ReplyDelete
 12. மக்கா ரைட்டு... என்ன தான் செய்ய நாம்?

  ReplyDelete
 13. எலேய் ஒழுங்கா ஊருக்கு போகனுமா இல்ல...ஹிஹி!

  ReplyDelete
 14. நீங்க நெஞ்சில் ஈரமில்லாத நடிகரையோ வெயிலில் காய்ந்த நடிகரையோ சொல்லலையே?
  பாவம் அவங்க ரொம்ப நல்லவங்க!

  ReplyDelete
 15. நாம என்னங்க பண்ண முடியும்?

  ReplyDelete
 16. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
  ரெவெரி...

  ReplyDelete
 17. நடப்பது நன்றாகவே நடக்குது என்று நம்புவோமே பாஸ்

  ReplyDelete
 18. மண்டு நானா இல்ல பின்னூட்டம் போட்டவர்கள் அத்தனை பேரும் புத்திசாலிகளா?ஒருத்தர் கூட தலைப்பு விடுகதைக்கு விடை சொல்லவேயில்லையே!

  எனக்கு தெரிஞ்சு பசு நடிகர் ராமராஜன் தான்.அவர்தான் பீல்டுலேயே இல்லையே!ரெண்டு எழுத்து நடிகர் பெயரையாவது சொல்லுங்களேன்.

  ReplyDelete
 19. தம்பி, உனக்கெதுக்கு இந்த வேண்டாத ஆராய்ச்சி. ஹி ஹி , மைனஸ் ஒட்டு வாங்கற அளவு பெரிய ஆள் ஆகிட்டியா?

  ReplyDelete
 20. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!