Wednesday, May 16, 2012

ப[ழி]லி வாங்கப்பட்ட ஒரு நேர்மையான அதிகாரி...?!

போனபதிவில் சொல்லப்பட்ட அந்த அதிகாரி யாருன்னு பலபேருக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், ஆம் தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே'தான் அவர்....! மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பலரை சட்டத்தின் முன் நிறுத்தவோ அல்லது போட்டு தள்ளவோ ரெடியாக அவர் இருந்த நேரத்தில்தான் அவருடைய படுகொலை அரங்கேறி உள்ளது...!!


அவர் உயிரை பறித்ததும் தீவிரவாதிகள் பயன்படுத்திய ஏ கே 47 துப்பாக்கியின் குண்டுகள் அல்ல, சாதாரண கைதுப்பாக்கியில் உள்ள குண்டுகள்தான் அவர் உடலில் இருந்தது என்று மருத்துவமனை ஊழியர்கள் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்...!!


தீவிரவாதியும் பயங்கரவாதிகளும் இங்கே நாட்டுக்குள்ளே தைரியமாக உலா வரும் போது, நாம் வெளியே இருந்து வருவதாக தேடிக்கொண்டிருக்கிறோம், இன்னும் அதே நரிமன்பாயின்ட் சிட்டியிலும் மும்பை தாக்குதல்கள் நடந்த இடங்களிலும் போயி பாருங்க போலீஸ் பாதுகாப்பை, ஒரே ஒரு கான்ட்சபில் கையில்தான் ஏ கே 47 துப்பாக்கி இருக்கு மற்றவர்கள் கையில் லத்திதான் இருக்கு...!!!


அந்த துப்பாக்கியை வைத்திருக்கும் ஹவில்தாரை பார்த்ததும் கிருஷ்ணாவிடம் சொன்னேன், எலேய் இந்த போலீஸை பார்த்தால் தீவிரவாதியை எதிர்த்து சண்டை போடுறவன் மாதிரியா தெரியுது, கையில் இருககும் துப்பாக்கியை தீவிரவாதிகள் கையிலேயே கொடுத்துட்டு, அம்மா சண்டை'ன்னு ஓடுறவன் மாதிரியில்லா இருக்கு என்றேன்....!!!


அடுத்து, இம்புட்டு பாதுகாப்பை அந்த இடத்தில் போட்டுருக்காயிங்களே........இனியும் தீவிரவாத தாக்குதல் அங்கினேயேதான் நடத்துவோம்னு எவனாவது சொன்னானா என்ன...? தீவிரவாதி என்ன இவங்ககிட்டே சொல்லிட்டாய்யா வாரான்...? வீணா மக்களை அச்சுறுத்திட்டு இருக்காங்க போலீஸ் அந்த இடத்தில், ஆனால் ஒன்னுய்யா இவிங்க இந்த பந்தோபஸ்தால் காதலர்களுக்கு செம ஜாலி, போலீஸ் பாதுகாப்போடு செமையா உரசிகிட்டு போறாங்க....!!!


என்னமோய்யா ஒரு நேர்மையான அதிகாரியை போட்டுத்தள்ள என்னெல்லாம் நாடகம் நடத்தி இருக்கானுக, ஆக நாம் ஒரு உண்மையான போலீஸை இழந்து விட்டோம் என்பதே உண்மை....!!!


அடுத்து மும்பை துறைமுகம் அழைத்து போனான் கிருஷ்ணா, இம்போர்ட் எக்ஸ்போர்ட் பண்ணுமிடம், ஆஹா நல்ல எல்லாரையும் பழக்கம் போல, ஆட்கள் போக தடை செய்யப்பட்ட இடங்களுக்கு எல்லாம் அழைத்துப்போயி காட்டினான். அவன் கம்பெனி கப்பல்களை காட்டி தந்தான், வாங்க அண்ணே கப்பலுக்கு உள்ளே போயி பார்க்கலாம் நாம ரெண்டு பேரும் போக சின்ன போட் ஏற்பாடு பண்ணுறேன் என்றதும், தம்பி எனக்கு கடல்னா அலர்ஜி வேண்டாம் என்று கடுமையாக மறுத்து விட்டேன் [[அம்புட்டு பயம்]]


அவன், இம்போர்ட் எக்ஸ்போர்ட் எப்பிடியெல்லாம் செய்வோம் என்பதையும் அந்த இடங்களையும் காட்டி தந்தான். என்னடா ஒரே கருவாடு நாத்தமா இருக்கே என்றேன், அண்ணே அங்கே பக்கத்துலதான் மீன் வியாபாரம் காலையில நடக்கும், காலையில் வந்தோம்னா சூப்பர் சூப்பர் மீனா சீப் ரேட்டுல வாங்கலாம் என்றான்.


என்னடா கடல்வாழ் மக்கள்னு ஆரம்பிச்சிட்டு இவன் வேற எங்கேயோ சுத்துறான்னு கேக்காதீங்க, இனிதான் சுவாரஸ்யமான மனிதர்கள் வரப்போகிறார்கள், ஏன்னா கிருஷ்ணா கம்பெனி கப்பலில் உள்ள ஸீ மேன்'ல இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.


ஒரு மனிதனை கப்பலில் இருந்து கடலில் தூக்கிப்போட்டு தூக்கிப்போட்டு விளையாடிய கப்பல் ஊழியர்கள்...............தொடரும்..........!!

17 comments:

 1. ஹே
  me the firstu.
  சூப்பர் அண்ணா
  ரொம்ப Interesting..

  ReplyDelete
 2. படமும்
  போட்டு விளக்கமும்
  கதை போல சொல்லும் விதம் சூப்பர்
  ஒரு அருமையான வசன கர்த்தா உருவாகி விட்டார்

  ReplyDelete
 3. தீவிரவாதியும் பயங்கரவாதிகளும் இங்கே நாட்டுக்குள்ளே தைரியமாக உலா வரும் போது, நாம் வெளியே இருந்து வருவதாக தேடிக்கொண்டிருக்கிறோம், //


  நிஜம்
  உண்மையாக
  இருப்பதாலும்
  மனம் வருந்துகிறது :(

  ReplyDelete
 4. திட்டம் போட்டு தீத்துட்டானுங்க போல...!

  எனக்கு கடல்னா ரொம்ப பிடிக்கும்...சீக்கிறத்துல வர்றேன்(!)...வா நடுக்கடல் வரைக்கும் போயிட்டு வருவோம்!..

  ReplyDelete
 5. திட்டம் போட்டு தீத்துட்டானுங்க போல...!

  எனக்கு கடல்னா ரொம்ப பிடிக்கும்...சீக்கிறத்துல வர்றேன்(!)...வா நடுக்கடல் வரைக்கும் போயிட்டு வருவோம்!..
  /////////////////////

  ஐ....ஐ....ஐ...நானு.....நானு.....!

  ReplyDelete
 6. உண்மையான அதிகாரியின் இழப்பு தெரியும் போதுதான் அவரின் கடமையின் புனிதமும் தெரிகின்றது.

  ReplyDelete
 7. கடல் அலர்ச்சியா இல்லை கடலில் குளிப்பது அலர்ச்சியா:))))))

  ReplyDelete
 8. நல்ல விடயத்தையும் அழகான படங்களையும் சுமந்து ஜாலியாக போகின்றது கப்பல் விளையாட்டைச் சொல்லுங்கோ படித்துவிடுவம்!

  ReplyDelete
 9. மக்கா, என்னய்யா அது கப்பல் விளையாட்டு?

  ReplyDelete
 10. எங்கும் அரசியல் எதிலும் ஊழல். இவைதான் இந்த அவலங்களின் காரணம். அப்புறம் ஒரு படத்தில் சொல்வார்களே? "திருடனை பிடிக்கிறத விட்டுட்டு தப்பு நடந்த இடத்துக்கு பாதுகாப்பு போடுறதுதான் போலீஸ் வேலை"

  ReplyDelete
 11. நல்ல பதிவு நண்பரே

  ReplyDelete
 12. தொடர்கதை போல மிகவும் இன்ரெஸ்டிங்காக இருக்கிறது....

  ReplyDelete
 13. மிக அருமையாக கதை சொல்கிறீர்கள் நண்பரே.......பைனாசியர் யார்....பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமா...??மசூத்தா..??

  ReplyDelete
 14. ///தீவிரவாதியும் பயங்கரவாதிகளும் இங்கே நாட்டுக்குள்ளே தைரியமாக உலா வரும் போது, நாம் வெளியே இருந்து வருவதாக தேடிக்கொண்டிருக்கிறோம்////

  அண்ணே நாம் எமக்கும் மனிதனைத் தேடுவது பொலத் தானே...

  ReplyDelete
 15. எவ்வளவோ வசதிகள் இருந்தும் தீவிரவாதிகளை ஒழிக்க முடியவில்லையா?சரியான முயற்சி இல்லையா ன்னு புரியல.

  ReplyDelete
 16. ரவுண்ட் அப்பில் நிறைய செய்திகள்!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!