Monday, May 21, 2012

கப்பல் ஊழியர்களின் வினோதங்கள்....!!!

கடல் மக்களை பற்றி து. கணேசன் என்பவர் [[பதிவரும் கூட]] ஜூனியர் விகடனில் கற்றது கையளவு கல்லாதது கடல் அளவு என்ற தலைப்பில் பெரிய தொடராக எழுதினதை தொடர்ந்து ஆச்சர்யமாக வாசித்தது உண்டு, மட்டுமில்லாது நம்ம எழுத்தாளர் நரசய்யா அவர்கள் கடல் வாழ்க்கை பற்றி "கடலோடி" என்னும் புத்தகம் அப்பவே எழுதி இருக்கார் இவர் இரண்டாம் உலகப்போரில் யுத்த கப்பலில் கேப்டனாக பணியும் புரிந்துள்ளார்...!!!இந்த கப்பலில் வேலை செய்யும் ஸீ மேன்'களின் சாட்சியம் கோர்ட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பது உலக விதி, ஏன்னா அவர்கள் மென்டாலிட்டி அப்படியாம்...!!!

கடலிலேயே இருப்பதால் தரையில் வந்ததும் எப்போதும் ஒரு ஆவேசத்துடனேயே இருப்பார்கள், ஒருமுறை நாகர்கோவில் டூ மும்பை பிரயாணத்தின் போது என் பக்கத்து சீட்டில் ஒருவன் வந்தமர்ந்தான், ரயில் ஏற்றிவிட்ட நண்பன் [[சொந்தக்காரன்]] போனதுதான் தாமதம், பட படவென்று ஒரு பார்சலை பிரித்தான், உள்ளே ஒரு கால் தண்டிக்கு பெரிய பொரிச்ச மீன், இன்னொரு பார்சலை திறந்தான் கருப்பு திராட்சை பழம், ஒரு பிளாஸ்டிக் கிளாஸ் எடுத்தான், ஃபுல் ஓல்டு மங் ரம்மை கிளாசில் ஊற்றினான், குடித்தான், மீனை பிச்சி பிச்சி தின்றான் கூடவே திராட்சை பழத்தையும் தின்றவாறே இருந்தான். அவன் பக்கத்தில் இருக்கும் யாரைப்பற்றியும் கவலை படவில்லை, இவ்வளவுக்கும் நேரம் காலை ஆறு மணி, நேரம் வெளுக்க கூட இல்லை இவன் வெளுத்து கொண்டிருந்தான்...!


என்னய்யா காலையிலேயே ஆரம்பிச்சாச்சா ரயில்ல இப்படி ஓப்பனா தண்ணி அடிக்க கூடாது தெரியுமில்ல என்றால், சார் நான் ஸீ மென் ஸோ ஒன்னுமே சொல்லமாட்டார்கள் என்றான், பிறகு நண்பன் ஆகிவிட்டான், அவன் பெயர் அல்போன்ஸ், நாகர்கோவிலை சேர்ந்தவன், இப்போது இத்தாலி கப்பலில் வேலையில் இருப்பதாக போன் பண்ணினான். ஸீ மென் என்றாலே பொண்ணு தரமாட்டேங்குறாங்க என்ற இன்னொரு உண்மையும் சொன்னான்...!!!


இவனை நிறைய பேர் வந்து மாப்பிளை பார்க்க வந்தும் ஒன்னும் அமையவில்லை, ஏன்னா இவன் கேட்கும் உல்டா கேள்விகள் அப்படி, உதாரணம், மாப்பிளை பார்க்க வந்தவர் இவனிடம், தம்பி குடி பழக்கம் உண்டா என்று கேட்க, இவன் இல்லை என்றதும் இல்லையே தம்பி உனக்கு அப்பா கிடையாது, இங்கே வீட்டிலும் நீ மட்டுமே தங்கி இருக்கே அப்படி இருக்கும் போது வீட்டு காம்பவுண்ட் முக்குல சாக்கு நிறைய பிராண்டி பாட்டலா கிடக்கே எப்படி..? என்று அவர் கேட்க அதுக்கு இவன், யோவ் நீயே காலையில குடிச்சுட்டுதானே வந்துருக்கே போடாங் நீயும் உன் பொண்ணும் என்று விரட்டி இருக்கிறான்.

அதே ரயிலில் இன்னொரு ஸீ மென்'னும் வந்து என் சீட்டை அவன் சீட்டுன்னு சொல்லி அலம்பல் பண்ண யோவ் சாட்டை போயி பாருய்யா, இதோ டிக்கெட்டையும் பாரு என் சீட்டுதான் அது, இல்லவே இல்லை அது என் சீட்டுதான்னு அடம்பிடிச்சி உட்கார்ந்தான் பாருங்க டிக்கெட் செக்கர் வரும்வரை என் சீட்டில் அமர்ந்தும் விட்டான். பிறகு நண்பனும் ஆகிவிட்டான்.


இந்தியாவில் உள்ள கப்பல் ஊழியர்கள் பெரும்பாலும் மும்பை வந்தே கப்பல் ஏறுவார்களாம், அப்படி கிருஷ்ணா கம்பெனி கப்பலுக்கு வேலைக்கு வந்த ஒரு ஆந்திராகாரனின் சுவாரஸ்யமான அலம்பலையும், கப்பலை விட்டு வெளியே கொண்டு வந்தும், மும்பையை அலற வச்சதையும் நாளை சொல்றேன்........!!!

ஆறு குவாட்டர் அடிச்சும் சும்மா அசையாம நின்னு அலம்பல் பண்ணி இருக்கிறான்......!!!

12 comments:

 1. இவனை நிறைய பேர் வந்து மாப்பிளை பார்க்க வந்தும் ஒன்னும் அமையவில்லை, ஏன்னா இவன் கேட்கும் உல்டா கேள்விகள் அப்படி, உதாரணம், மாப்பிளை பார்க்க வந்தவர் இவனிடம், தம்பி குடி பழக்கம் உண்டா என்று கேட்க, இவன் இல்லை என்றதும் இல்லையே தம்பி உனக்கு அப்பா கிடையாது, இங்கே வீட்டிலும் நீ மட்டுமே தங்கி இருக்கே அப்படி இருக்கும் போது வீட்டு காம்பவுண்ட் முக்குல சாக்கு நிறைய பிராண்டி பாட்டலா கிடக்கே எப்படி..? என்று அவர் கேட்க அதுக்கு இவன், யோவ் நீயே காலையில குடிச்சுட்டுதானே வந்துருக்கே போடாங்

  >>>>>>>

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...இது எந்த வகை உல்டா கேள்வி....வேணும்னா கேலின்னு வச்சிக்கலாம்..போடாங்க டுபுக்கு!

  ReplyDelete
 2. இந்த ஸீமேன்களின் வாழ்க்கைக்குள்ளேயே நிறைய சுவாரசிய சம்பவங்கள் இருக்கும் போலிருக்கிறதே?

  ReplyDelete
 3. சட்டம் எல்லோருக்கும் ஒன்னுதான்யா ஸீ மென் ஸோ-னா சட்டம் பம்முமா என்ன ..?

  ReplyDelete
 4. தொடரா???

  தொடருங்க மக்கா தொடருங்க

  ReplyDelete
 5. இது போன்ற அனுபவங்களை அதிகம் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்!

  ReplyDelete
 6. கப்பல் மாலுமிகளின் கதையில் சுவாரசியம் இருக்கும் உங்களின் பயண அனுபவத்தோடு பேசும் போது இன்னும் சுவையாக இருக்கும் அண்ணாச்சி தொடருங்கோ ஆந்திராக்காரனின் அலம்பல் கேட்கத் தயார்!

  ReplyDelete
 7. இம்புட்டு சங்கதி இருக்கா ...
  சொல்லுங்க அண்ணே சொல்லுங்க ..

  ReplyDelete
 8. மக்களே...
  நலமா?
  நானும் நிறைய கடல் மாலுமிகளின்
  கதைகளை கேட்டிருக்கிறேன்..
  நீங்கள் சொல்லும் போது சுவாரஸ்யமா இருக்குதுய்யா..

  ReplyDelete
 9. உங்களுக்குன்னு வந்து சேருது பாருங்க!

  ReplyDelete
 10. சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா... தொடருங்கள்.

  ReplyDelete
 11. சரி! அப்புறம்....???!!!

  ReplyDelete
 12. வித்தியாசமான ஆட்களை விவரித்துள்ளது படிக்கும் ஆவலை மேலும் தூண்டுகிறது!

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!