Friday, May 11, 2012

கல்லறை தேடும் ஒரு தானை தலைவன்.....!!!

ஊரில் நண்பர்களோடு பேசிக்கொடிருக்கும் போது எங்கள் பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது, அதில் ஒருவன் அரசியல்வியாதியும் கூட, அவனிடம் ஒரு பெண் வந்து அய்யா எங்க வீட்டு முன்னே இருக்கும் தெருவிளக்கு எரியலைப்பா என்னான்னு பாரேன்னு சொன்னதுக்கு இவன் சொன்ன பதில், ஏன் உனக்கு நிலா வெளிச்சம் போதாதோ.....? அதுக்கு அந்த பெண் திட்டிய திட்டு இருக்கே.......!!!

அப்படியே பேச்சு கலைஞர் குடும்பம் பக்கமாக திரும்பியபோது நான் கேட்டேன் போன தடவை திமுக ஜெயித்தபோது முதவல்வர் ச்சே முதல்வர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்திருந்தால் கூட எதிர்கட்சி சீட்லயாவது உக்காந்து இருக்கலாம் அதையும் மிஸ் பண்ணிட்டாரே கலைஞர் என சொல்லி வைத்தேன்.


மக்கா அங்கேதான் கலைஞரின் நரி புத்தி வேலை செய்கிறது என்னா தெரியுமாடே.....பதவியில் இருந்து மரித்தால்தான் மெரீனா கடற்கரையில் அடக்கம் பண்ணலாம் தன் உடலை, எம்ஜியார், அண்ணா போல செத்தபிறகும் மக்கள் தன் கல்லறையை பார்க்க வரவேண்டும்னு அவர் கணக்கிடுகிறார் புரியுதா...?


பதவியில் இல்லாமல் செத்தால் மெரீனா பீச்சில் இவருக்கு இடம் கிடையாது [[வரலாறு முக்கியம்டே]] ஏன்னா அது மத்திய அரசுக்கு சொந்தமான இடம் [[அப்பிடியா..?]] என்னதான் மத்திய அரசுக்கு சாதகமாக இவிங்க இருந்தாலும் ரூல்ஸ்'ன்னு ஒன்னு இருக்கா இல்லையா...? [[அப்பிடின்னா அப்பிடின்னு காங்கிரஸ்காரன் கேக்குறான்]] 


ஆமா நான் கேக்குறேன் இது உண்மையான்னு, அடிச்சி சொல்றான் இதுதான் உண்மைன்னு.....!!! ஓகே மக்களே உங்கள் கருத்து என்னான்னு சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்.

12 comments:

  1. நீங்கள் சொல்ல்வது உண்மைதான் .. தன பெயர் வரலாற்றில் வர வேண்டும் என்பதற்காக சமசீர் கல்வி புத்தகத்தில் எத்தனை இடத்தில் இவர் பெயர் வந்தது தெரியுமா ?

    ReplyDelete
  2. யோவ் சத்தியமான வார்த்தை!

    ReplyDelete
  3. மெரீனாவில் அந்த மாதிரி எல்லாம் இனி யாரையும் பொதைக்க முடியாது மக்கா - இதற்க்கு முந்தய அராசு சட்டம் போட்டதாக படித்த ஞபாகம்

    ReplyDelete
  4. யோவ் அது மாநிலச்சட்டம்..இது மானாவாரி சட்டம்!

    ReplyDelete
  5. அந்த ஆள் கலைஞர் கோமாவில கிடந்தாலும் கட்டிலோட தூக்கிட்டுவந்து அரசியல்பண்ணுவாங்கய்யா கட்சிக்காரங்க. ஏன்னா அந்தாள் போயிட்டார் என்றால் அவரோட வாரிசுகளே ஆளாளுக்கு அடிச்சுகிட்டு தி.மு.க.விற்கே சங்கு ஊதிடுவாங்க என்றது திமுக. வில இருக்கிறவங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.

    ReplyDelete
  6. மனோ ஸார்..

    இனிமேல் அது முடியாது..!

    மெரீனா பீச்சில் இனிமேல் எந்தவொரு சமாதியோ, கட்டிடமோ அமைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பையே வழங்கியிருக்கிறது. தாத்தாவுக்கும் இது தெரியும்..!

    தாத்தாவுக்கான இடத்தை இப்போதே அவரே தேர்வு செய்து வைத்துவிட்டார். அது அறிவாலயத்தின் முன்பாக இருக்கும் அண்ணாவின் சிலை அருகே..!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அப்ப, செத்தாலும் கலைஞர் நம்மல (தமிழ்நாட்டு மக்களை) நிம்மதியாய் இருக்க விடமாட்டாரோ ..?

    ReplyDelete
  9. இப்படியும் வரலாற்றில் இடம் புடிக்கலாமோ?

    ReplyDelete
  10. வரலாறு முக்கியம் தானே கருணாநிதி முதல்வராக இருந்து செய்த தில்லுமுல்லு தெரியத் தானே வேண்டும்  மக்களுக்கு.

    ReplyDelete
  11. உண்மைத்தமிழன் said...
    மனோ ஸார்..

    இனிமேல் அது முடியாது..!

    மெரீனா பீச்சில் இனிமேல் எந்தவொரு சமாதியோ, கட்டிடமோ அமைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பையே வழங்கியிருக்கிறது. தாத்தாவுக்கும் இது தெரியும்..!

    தாத்தாவுக்கான இடத்தை இப்போதே அவரே தேர்வு செய்து வைத்துவிட்டார். அது அறிவாலயத்தின் முன்பாக இருக்கும் அண்ணாவின் சிலை அருகே..!//

    அங்கே கட்சிக்காரன் மட்டும்தானே போவாங்க, அப்படா தப்பிச்சோம்...!!!

    ReplyDelete
  12. கலைஞர் னா எல்லாருக்கும் கொண்டாட்டாமா போச்சு.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!