Sunday, May 27, 2012

சூப்பர்ஸ்டார் பெயர்தான் என் பெயரும்....!!!

எலேய் இந்தியா வல்லரசு ஆகிருச்சிலேய் மக்கா.....பின்னே பெட்ரோல் இம்புட்டு விலை ஏறியும் புலம்பிகிட்டே பெட்ரோல் போட்டுவிட்டு போகும் நம் மக்கள் கையில் பணமில்லை ஏழை நாடுன்னு எவம்லேய் சொன்னது கொய்யால....? எம்புட்டு ராக்கெட்டும், சேட்டிலைட்டும் அனுப்புரானுங்க கொய்யா இந்த பெட்ரோலுக்கு ஒரு மாற்று ஏன் கண்டுபிடிக்கலைன்னு தீவிரமா யோசிச்சா, இங்கேயும் அமெரிக்கா நாதாரி கையும், நம்ம இந்திய "கை"யும் இருந்து தொலச்சிகிட்டு இருக்கு ஸ்ஸ்ஸ் அபா விக்கி நீ தப்பிச்சிட்டேடா.....!!!

சரி வாங்க நாம நம்ம கடமையை பார்ப்போம்......

பத்பநாபபுரம் அரண்மனை போட்டோக்கள்....!!!

 வரிசையாக ராஜாக்களின் ஓவியங்கள்.

 இளவரசிகளும் அவர்களின் தோழிகளும் அமர்ந்து அரட்டையடிக்கும் ஊஞ்சல்...!

 இளவரசிகள், மகாராணிகள் உலவும் இடம் [[கீழே]] மேலே இருந்து மகாராஜா பார்த்து ரசிக்கும் இடம்...!!

 அதே அதே பன்னிகுட்டி நேற்றைக்கு கேட்டாரே அந்தபுரம் எங்கேன்னு, நான் நினைக்கிறேன் கீழே இது பக்கத்துலதான் எங்கேயோ அந்தப்புரம் இருக்கும்னு, அந்த அறையை பூட்டி வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன், ராஜாக்களின் லீலைகள் வெளியே தெரியகூடாதுன்னு நினைச்சிருக்கலாம். [[விஜயன் நெஞ்சத்தில் ஒரே விம்மல்]]

 மரங்களால் ஆன சித்திரவேலையை பாருங்கள் சூரியவெளிச்சம் சும்மா லைட்டிங் செட் பண்ணுன மாதிரியே இருக்குதுல்ல....!!!

 மகாராணி துயிலும் கட்டில்....!!!

 மர வேலைப்பாடுகள் நிறைந்த கேலரி.


 மகாராணியின் பாத்ரூம், இங்கேயும் மரவேலைப்பாடுகள், ஆமாம் உள்ளே இருந்து வெளியே பார்க்கலாம் ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாது...!!!

 இது மகாராஜாவின் பாத்ரூம்...!! இரு பாத்ரூமும் அருகருகேதான் உள்ளது...!


 இரண்டு பாத்ரூம்களுக்கு முன்பாக, மகாராஜாவும், இளவரசனும்....!

 சற்று ரிலாக்ஸாக குழந்தைகள்....!


 அரண்மனை மாடம்..! இம்புட்டு தூரம் கூடவே சுத்திட்டு, இந்த இடத்தில் வைத்துதான் என் மகன் மோசஸ் விஜயன் மனைவியிடம் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி, 'ஆண்டி உங்க பெயர் என்ன..?' விஜயன் மாடத்தில் இருந்து கீழே குதிக்க ரெடியாக........... ஆனால் அவங்க அசரவே இல்லை "என் பெயர் நம்ம சூப்பர் ஸ்டார் பெயர் தெரியுமோ" என சொல்ல, என் மகன் ங்கே ங்கே நானும் ங்கே ங்கே, ஏன்னா எனக்கும் அவங்க பெயர் தெரியாது...!!

 அரண்மனை உள்ளே பிரமாண்டம், பாதுகாப்பு கோபுரம்....! [[மோசஸ் அண்ட் மோனிஷா [[பூ]]குட்டி....!

அர்ஜூனும், ஜோய்குட்டியும் சண்டைக்கு ரெடியாயாச்சு.


 போருக்கு ஆயுதங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஆயுதக்கிடங்கு....!

 யுத்தத்திற்கு ரெடி ஆயாச்சு, வெற்றிவேல் வீரவேல்'ன்னு அலறிய என்னை போட்டோ எடுத்துவிட்டார் விஜயன் [[பாவிங்க அருவாள் கிடங்கை ச்சே ச்சீ ஆயுதகிடங்கை பார்த்ததுமே வீரம் வந்துருச்சு ஹி ஹி]]

 தரையில் நீங்கள் பார்ப்பது வித்தியாசமான மலர்களாலும் சுண்ணாம்பு, முட்டை, கருப்பட்டிகளால் செய்யப்பட்ட சைனிங் தரை சும்மா ஜில்லுன்னு இருக்கு பாதங்களுக்கு.

 இதுதானய்யா ஆச்சர்யம், சூரிய வெளிச்சம் என்னமா ஜாலம் காட்டுது, அரண்மனை உள்ளே இருந்து நீங்கள் வெளியே பார்க்கலாம் ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க இயலாது, அப்பிடியான மரவேலைபாடுகள்...!

 இது அம்பாரி முகப்பு, ராஜாக்கள் பொது மக்களுக்கு தரிசனம் கொடுக்கும் இடம்னு அர்த்தம்.


 அம்பாரி முகப்பில் எங்கள் இளவரசி...

 போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்டு உடலை எடுத்து செல்லும் ஓவியம், அர்ஜூனும், ஜோஷ்வாவும்.

 மகாராஜாவாக மார்த்தாண்ட வர்மன் முடிசூட்டும் ஓவியம்...!!!

 ஓவியங்கள் வைக்கபட்டு இருக்கும் அறை, எம்புட்டு நீளம் பாருங்க...?!!!

ஓவியங்களை ரசிக்கும் மக்கள் கூட்டம்....!!!

29 comments:

  1. 23 ம் புலிகேசி பார்த்த எபெக்ட் ..ஹி ஹி

    ReplyDelete
  2. ///"என் பெயர் நம்ம சூப்பர் ஸ்டார் பெயர் தெரியுமோ" என சொல்ல, என் மகன் ங்கே ங்கே நானும் ங்கே ங்கே, ஏன்னா எனக்கும் அவங்க பெயர் தெரியாது...!!///

    நான் சொல்றேன்...சிவாஜி ராவ்

    ReplyDelete
  3. //இரண்டு பாத்ரூம்களுக்கு முன்பாக, மகாராஜாவும், இளவரசனும்....!///
    ஏனுங்க..அண்ணாச்சி..வெயிட் பண்றீங்க...போக வேண்டியது தானே..
    பயபுள்ளைக்கு அவசரத்துல கூட என்ன போஸ் வேண்டி கிடக்கு ?

    ReplyDelete
  4. //மகாராணியின் பாத்ரூம், இங்கேயும் மரவேலைப்பாடுகள், ஆமாம் உள்ளே இருந்து வெளியே பார்க்கலாம் ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாது...!!!//
    ஓஹோ...இப்படி கூட ஆராய்ச்சி செய்வீங்களோ

    ReplyDelete
  5. //மகாராஜாவும், இளவரசனும்....!//
    என்ன மப்டி ல இருக்காங்க...போல..

    ReplyDelete
  6. அண்ணே பின்னி புட்டீங்க...போட்டோவா போட்டு...!

    ReplyDelete
  7. //////அதே அதே பன்னிகுட்டி நேற்றைக்கு கேட்டாரே அந்தபுரம் எங்கேன்னு, நான் நினைக்கிறேன் கீழே இது பக்கத்துலதான் எங்கேயோ அந்தப்புரம் இருக்கும்னு, //////////

    யோவ் அந்தப்புரத்த பத்தி வெலாவாரியா படம் போடுறேன்னு சொல்லிப்புட்டு இப்போ பக்கத்துலதான் எங்கேயோ இருக்குன்னா என்னய்யா அர்த்தம்?

    ReplyDelete
  8. /////மகாராணியின் பாத்ரூம், இங்கேயும் மரவேலைப்பாடுகள், ஆமாம் உள்ளே இருந்து வெளியே பார்க்கலாம் ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாது...!!!/////////

    யோவ் அதையும் விடாம உத்து பாத்து செக் பண்ணி இருக்கீர் போல?

    ReplyDelete
  9. ///// ஆயுதகிடங்கை பார்த்ததுமே வீரம் வந்துருச்சு ஹி ஹி]]/////////

    அதே மாதிரி அந்த மகாராஜா கக்கூசை பார்த்ததும்..............

    ReplyDelete
  10. Nice travelogue. Enjoyed looking at the pictures and your comments.

    ReplyDelete
  11. கோவை நேரம் said...
    //மகாராஜாவும், இளவரசனும்....!//
    என்ன மப்டி ல இருக்காங்க...போல..//

    அடப்பாவிகளா கொஞ்சம் பில்டப் குடுக்க விடுங்கய்யா.

    ReplyDelete
  12. விக்கியுலகம் said...
    அண்ணே பின்னி புட்டீங்க...போட்டோவா போட்டு...!//

    ஆமாடா ராஸ்கல் நீயும் வா சேர்ந்தே பின்னுவோம்.

    ReplyDelete
  13. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////அதே அதே பன்னிகுட்டி நேற்றைக்கு கேட்டாரே அந்தபுரம் எங்கேன்னு, நான் நினைக்கிறேன் கீழே இது பக்கத்துலதான் எங்கேயோ அந்தப்புரம் இருக்கும்னு, //////////

    யோவ் அந்தப்புரத்த பத்தி வெலாவாரியா படம் போடுறேன்னு சொல்லிப்புட்டு இப்போ பக்கத்துலதான் எங்கேயோ இருக்குன்னா என்னய்யா அர்த்தம்?//

    யோவ் நாங்க போற நேரம்பார்த்து அந்தப்புரத்தை பூட்டி வச்சிட்டானுங்க போல தெரியுது ஏன்னா நம்ம விஜயனின் வெறி பார்வையை பார்த்து கேரளா'காரனுக [[கைடுகள்]] பயந்துட்டானுக....

    ReplyDelete
  14. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////மகாராணியின் பாத்ரூம், இங்கேயும் மரவேலைப்பாடுகள், ஆமாம் உள்ளே இருந்து வெளியே பார்க்கலாம் ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாது...!!!/////////

    யோவ் அதையும் விடாம உத்து பாத்து செக் பண்ணி இருக்கீர் போல?//

    ஹா ஹா ஹா ஹா செக் பண்ணி கிளிக் பண்ணினது நானா விஜயனா ஹே ஹே...

    ReplyDelete
  15. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///// ஆயுதகிடங்கை பார்த்ததுமே வீரம் வந்துருச்சு ஹி ஹி]]/////////

    அதே மாதிரி அந்த மகாராஜா கக்கூசை பார்த்ததும்..............//

    அய்யய்யோ இதுக்கு ஒரு டயலாக் எங்க அண்ணன் மகன் விட்டான் பாருங்க நாங்க எல்லாருமே சிரித்து நொந்து போனோம் அந்த டயலாக்கோடு இந்த தொடரும் முடியும்.

    ReplyDelete
  16. அண்ணாந்து உச்சியில் ஏதோ வேலைப்பாடுகள் பார்த்த ஞாபகம் இருக்குது மனோ.

    ReplyDelete
  17. என் பெயர் நம்ம சூப்பர் ஸ்டார் பெயர் தெரியுமோ" என சொல்ல, என் மகன் ங்கே ங்கே நானும் ங்கே ங்கே, ஏன்னா எனக்கும் அவங்க பெயர் தெரியாது// ஹஹஹ அப்பாவிங்க நீங்க.. மம்முட்டியா’யா? அம்முகுட்டியா..

    அற்புதமான படங்கள் நம் பார்வைக்கு. பகிர்விற்கு நன்றி. இன்னும் இருக்கா? பகிருங்கள்

    ReplyDelete
  18. ஆயுதகிடங்கை பார்த்ததுமே வீரம் வந்துருச்சு ஹி ஹி]]
    //////////////////
    நல்ல வேளை அந்தப்புரம் போகல.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  19. Photos Super,

    Photo Eduthavaruku Nandri.....

    ReplyDelete
  20. அனைத்து போட்டோக்களும் அருமை சார் !

    ReplyDelete
  21. எல்லா போட்டோக்களும் அருமை...

    ReplyDelete
  22. படங்களும் விளக்கங்களும் அருமை மனோ!

    ReplyDelete
  23. வெற்றிவேல் வீரவேல் சுற்றிவந்த ஞானவேல் எங்க டூயட் பாடவில்லையே மனோ அண்ணாச்சி அந்தப்புரத்தில் ஒரு மகரானி என் ...:))))))

    ReplyDelete
  24. ஓவியங்கள் மிகவும் கண்ணைப்பறிக்குது வந்து பார் என்று ம்ம்ம்  அடுத்த முறை விரைவில் முண்டியடிக்கணும் பார்க்க .

    ReplyDelete
  25. மக்களே..
    எத்தனை முறை பார்த்தாலும்
    பிரமிப்பு அடங்காத இடம்..

    ReplyDelete
  26. அரண்மனை தொடங்கி அந்தப்புரம்,டாய்லெட் அப்படி இப்படின்னு அசத்திட்டிங்க மனோ!நிறைய படங்களும் ,முறையான விளக்கங்களும் சூப்பர் மனோ!

    ReplyDelete
  27. டாய்லெட்டில் இது மாகாராஜாவின் டாய்லெட் ... இது மகாராணியின் டாய்லெட் என்பதை எப்படி கண்டுபிடித்தீர். விளக்கம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. அந்த கைடு சொல்லி தந்தது ஓய்.

      Delete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!