Monday, May 14, 2012

நண்டு திங்க ஆசைபட்டு ஆற்றோடு போனான் விக்கி.....!!!

ஒரு நீதி கதை சொல்றேன் கேளுங்க ஸாரி படியுங்க......

ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம் வேண்ணா நரியை விக்கி;ன்னு வச்சிக்குவோம் [!] அப்புறம் அதே ஊர்ல ஒரு ஒட்டகமும் இருந்துச்சாம் அதை நம்ம சிபி'ன்னு வச்சிக்குவோம் [!] 

அந்த ஊர்ல ஒரு பெரிய ஆறு இருந்தது. ஆற்றின் அக்கரையில் நண்டுகள் ஏராளம் இருப்பதை அறிந்த நரிக்கு நாக்கில் எச்சில் ஊறியது, ஆனால் நதியின் அக்கரைக்கு நரியால் போகமுடியாததால் குள்ளநரித்தனமாக [[நரிதானே]] யோசிக்க தொடங்கியது.


நல்ல ஒரு யோசனை செய்து ஓட்டகத்திடம் வந்தது சிபி சிபி ஸாரி ஓட்டகமே ஓட்டகமே அந்த நதிக்கு அக்கரையில் பெரிய கரும்பு தோட்டம் இருக்கு வா நாம ரெண்டுபேரும் அக்கரைக்கு போகலாம் வா என்றது, நாக்கில் எச்சில் ஊறிய ஒட்டகமும் ஓகே சொன்னது.


நரி ஒட்டகம் மீது ஏறிக்கொள்ள ஒட்டகம் நீந்தியபடி அக்கரை வந்து சேரவும் நரி ஒட்டகத்துக்கு கரும்பு தோட்டத்தை காட்டிவிட்டு படபடவென நண்டுகளை பிடித்து தின்றது.


ஒட்டகம் கரும்பு தோட்டத்தில் நுழையவும் நரிக்கு நண்டு தின்று வயிறு நிரம்பியது, ஒட்டகம் கரும்பை வாயில் வைக்கவும் நரி ஊளை போட ஆரம்பித்தது, இதை கவனித்த தோட்டக்காரன் ஒட்டகத்தை வாங்கு வாங்கு என வாங்கி விரட்ட ஒட்டகம் தப்பித்தோம் பிழைத்தொம்னு நதிக்கரைக்கு ஓடிவந்து நரியையும் ஏற்றிக்கொண்டு ஆற்றில் இறங்கியது.


நடு ஆறு வந்ததும் நரி கேட்டது நீ நன்றாக கரும்பு தின்றாயா என்றது அதற்கு ஒட்டகம் ஆமாம் ஆமாம் கரும்பை விட பிரம்படி நன்றாக இருந்தது, ஆமாம் நீ எதுக்குய்யா ஊளை போட்டு ஊரை கூட்டினாய்..? நரி சொன்னது, எனக்கு வயிறு நிறைந்ததும் ஊளை இடும் வழக்கம் உண்டு என்றது....!!!


ஒட்டகம் : ஓ அப்பிடியா ராசா எனக்கும் வயிறு நிறையலைன்னா தண்ணியில முங்கும் வழக்கம் உண்டு எனசொல்லி ஆற்றில் முங்கியது, பிளான் பண்ணி வந்த நரி ஆத்தோடு போயிருச்சு, பிரம்படி வாங்கி தின்ன ஒட்டகம் ஏமாந்து போச்சு....!!!


நீதி : எவன் சொல்றதையும் கண்ணை மூடிட்டு நம்பாதே, எவனையும் நம்பி தோளில் ஏறாதே....!!!

டிஸ்கி : ஹி ஹி எப்பூடீ நாங்களும் சொல்வோம்ல.....

25 comments:

  1. டேய் நாதாறி உன்னையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கல...இதுக்கு பேரு நீதிக்கதையாடா கஸ்மாலம்!

    ReplyDelete
  2. //நீதி : எவன் சொல்றதையும் கண்ணை மூடிட்டு நம்பாதே, எவனையும் நம்பி தோளில் ஏறாதே....!
    //

    நல்ல நீதி .. ஆனால் என்ன சொல்ல வரிங்க னு புரியல .. விக்கியோட சேர்ந்து நீங்களும் கெட்டு போய்டிங்க ..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. //ஓ அப்பிடியா ராசா எனக்கும் வயிறு நிறையலைன்னா தண்ணியில முங்கும் வழக்கம் உண்டு
    //

    எந்த தண்ணி ?

    ReplyDelete
  5. //Blogger விக்கியுலகம் said...

    டேய் நாதாறி உன்னையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கல...இதுக்கு பேரு நீதிக்கதையாடா கஸ்மாலம்!
    //

    என்ன தல ரொம்ப மரியாதையா திட்டுரிங்க .. உங்கடிட்ட இன்னும் எதிர்பார்த்த்தேன் ..

    ReplyDelete
  6. எப்படி மனோ இப்படி முடியலை....சிபிக்கு என்னமோ சொல்றிங்க....சிபி படிச்சாலும் உங்களை நம்ப மாட்டார்

    ReplyDelete
  7. விக்கியுலகம் said...
    டேய் நாதாறி உன்னையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கல...இதுக்கு பேரு நீதிக்கதையாடா கஸ்மாலம்!//

    அண்ணே டேய் அண்ணே உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹி ஹி...

    ReplyDelete
  8. என் ராஜபாட்டை"- ராஜா said...
    //நீதி : எவன் சொல்றதையும் கண்ணை மூடிட்டு நம்பாதே, எவனையும் நம்பி தோளில் ஏறாதே....!
    //

    நல்ல நீதி .. ஆனால் என்ன சொல்ல வரிங்க னு புரியல .. விக்கியோட சேர்ந்து நீங்களும் கெட்டு போய்டிங்க ..//

    ஆக இவனுக ரெண்டு பேருமே உருப்பட மாட்டானுக அதான் நீதி ஹீ ஹீ......

    ReplyDelete
  9. என் ராஜபாட்டை"- ராஜா said...
    //ஓ அப்பிடியா ராசா எனக்கும் வயிறு நிறையலைன்னா தண்ணியில முங்கும் வழக்கம் உண்டு
    //

    எந்த தண்ணி ?//

    யோவ் இதென்ன ஜானகிராமன் ஹோட்டலா....?

    ReplyDelete
  10. என் ராஜபாட்டை"- ராஜா said...
    //Blogger விக்கியுலகம் said...

    டேய் நாதாறி உன்னையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கல...இதுக்கு பேரு நீதிக்கதையாடா கஸ்மாலம்!
    //

    என்ன தல ரொம்ப மரியாதையா திட்டுரிங்க .. உங்கடிட்ட இன்னும் எதிர்பார்த்த்தேன் ..//

    உங்க நல்ல எண்ணத்திற்கு சிரம் தாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. வீடு சுரேஸ்குமார் said...
    எப்படி மனோ இப்படி முடியலை....சிபிக்கு என்னமோ சொல்றிங்க....சிபி படிச்சாலும் உங்களை நம்ப மாட்டார்//

    அவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.......

    ReplyDelete
  12. என்ன திடீர்ன்னு நீதி நேர்மை எருமை ச்சே ச்சே என்னவோ அயீடுச்சி மக்கா

    ReplyDelete
  13. ஒரு சிங்கத்த நரியாக்கிட்டியேல.....?

    ReplyDelete
  14. பட் அந்த தோட்டக்காரன் யார்னு சொல்லவே இல்லியே?

    ReplyDelete
  15. //////"என் ராஜபாட்டை"- ராஜா said...
    //ஓ அப்பிடியா ராசா எனக்கும் வயிறு நிறையலைன்னா தண்ணியில முங்கும் வழக்கம் உண்டு
    //

    எந்த தண்ணி ?///////

    நல்ல கேள்வி, பட் அண்ணன் வயிறு நிறைஞ்சாலும் தண்ணில முங்குவாரே?

    ReplyDelete
  16. மக்கா..... நீதி செம.........

    ஒட்டகம், நரி காம்பினேஷன் செம.......

    ReplyDelete
  17. எங்க சிபி அன்னாத்தையை காணோம் ..?

    ReplyDelete
  18. நீதிக்கதையில் நம்ம விக்கியை இப்படி கடாச்சிப்புட்டீங்க நண்டு வரும் வியாட்னாமில் இருந்து!அவ்வ்வ்வ்

    ReplyDelete
  19. சீபியை விடவே மாட்டீங்களா மனோ அண்ணாச்சி பாவம் !ஹீ

    ReplyDelete
  20. நீதிக்கதை சொன்ன நீதிமானே நீர் வாழ்க!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  21. உங்கள் பதிவுகள் அருமை

    வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete
  22. இப்போதையை சூழலில் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
    நல்ல நீதிக்கதை.படங்களுடன் பகிர்வு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!