Tuesday, May 29, 2012

அரண்மனையாம் அரண்மனை ம்ஹும்....!!!

பத்பனாபபுரம் அரண்மனையை நாங்க சந்தோஷமா திரும்பியபோது என் மனதில் தோன்றிய சில கேள்விகள் சில, அரண்மனையில் நிறைய இடங்களில் தளங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. அரண்மனையை பார்க்க உள்ளே போகிறவர்கள் [[சிறுபிள்ளைகள் இருந்தால் கண்டிப்பாக]] குடிநீர் கண்டிப்பாக கையில் வைத்து கொள்ளுங்கள், உள்ளே ஒரு சொட்டு குடிநீரும் கிடையாது, அம்புட்டு பெரிய அரண்மனையில் தண்ணீர் இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது....!!!அடுத்து இங்கே [[வெளியே]] ஒரே ஒரு பாத்ரூம்தான் இருக்கு அதிலும் தண்ணீர் கிடையாது, பணியாளர்களில் சிலர் மிகவும் ரஃபாக நடந்து கொண்டார்கள், சில பல அறைகளில் மேலே செல்ல ஏணிப்படிகள் இருக்கிறது, அங்கே சென்று பார்க்க தடை இருக்கிறது சரி அங்கே என்னா இருக்குன்னாவது சொல்லலாம், ஆனால் கைடுகள் அதைபற்றி சொல்லவே இல்லை [[அவிங்களுக்கும் தெரியாதோ]]

வெளியே செருப்பை பாதுகாக்கும் இடத்தில் ஒரு அம்மா பணிவாக எல்லார் செருப்புகளையும் திருப்பி கொடுத்து கொண்டிருந்தார்...!

கடைசியாக நாங்கள் அரண்மனையை விட்டு திரும்பும்போது என் அண்ணன் மகன் ஜோஷ்வா கேட்ட ஒரு கேள்விக்கு கேரளா டூரிசம் போர்டு பதில் சொல்லியே ஆகணும். "இவ்ளோ பெ.........ரீ.........ய...... அரண்மனையில ஒரே ஒரு பாத்ரூமா....?" பாவம் அவன் கஷ்டம் அவனுக்கு என்று சொல்லி சிரித்தோம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------


பெட்ரோல் விலையேற்றம் எதிரொலி, மும்பையில் பெட்ரோல் திருட்டு நடக்கிறது, என் நண்பனின் பைக்கிலேயே திருடியுள்ளார்கள். சில பல பேர் பைக்கை உருட்டி கொண்டு போகிறார்கள், பாவமாக இருக்கிறது காரணம் பைக்கில் பெட்ரோல் இருக்கு என நினைத்து ஏமாறுகிறார்கள், எனவே பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது பெட்ரோல் இருக்கா களவு போயிருச்சான்னு கவனித்து வண்டியை எடுங்கள்....!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------


என் மீது உள்ள ஊழல் புகாரை நிரூபித்தால் நான் பொது வாழ்க்கையை விட்டே போய்விடுகிறேன் - மன்மோகன் சிங்.

# யோவ் முதல்ல நீயி தேர்தல்ல நின்னாய்யா ஜெயிச்ச கொய்யால, பொது வாழ்க்கயாம் பொது வாழ்க்கை மானம் கெட்ட வாழ்க்க, என் நாலு ஏக்கர் நிலத்தை வித்து தாரேன் லஞ்சம் கொடுத்தாவது இந்த ஆளை வெளியே தள்ளுங்கன்னு மக்கள் பேசுறாங்க.....!!!

------------------------------------------------------------------------------------------------------------------------------


பிரணாப் முகர்ஜிதான் ஜனாதிபதி வேட்பாளர் காங்கிரஸ் தலைமை முடிவு.

# அடுத்த ரப்பர் ஸ்டாம்ப்.....!!!

-------------------------------------------------------------------------------------------------------------------------


பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை.

# நல்லா பாத்தீங்களா அது ஆயிரம்வாலா பட்டாசா இருக்கும் பார்த்து சொல்லுங்க...?

-----------------------------------------------------------------------------------------------------------------------


இன்னொரு சோகம் என்னன்னா நம்ம பக்கி ச்சே விக்கி இன்னைக்கு பேஸ்புக்கை நாரடிச்சுட்டு இருக்கான் முடியல.....

20 comments:

 1. முத எகத்தாளம்!

  ReplyDelete
 2. இரண்டாவது லொல்லு!

  ReplyDelete
 3. மூனாவது கடுப்பு!

  ReplyDelete
 4. சுபாஷ் போட்டாவை போட்டு விக்கி என்று போட்டிருக்கிறீர்கள் மன்னா!? விக்கி போட்டாவை போட வேண்டியதுதானே!

  ReplyDelete
 5. விக்கியென்றால் அம்புட்டு பயமா?

  ReplyDelete
 6. மனோ கேரளாவில பெரும்பகுதி இப்படித்தான் பாத்ரூம் இருக்காது!ஆனா வீதிக்கு நாலு கள்ஷாப் இருக்கும்

  ReplyDelete
 7. வீடு சுரேஸ்குமார் said...
  சுபாஷ் போட்டாவை போட்டு விக்கி என்று போட்டிருக்கிறீர்கள் மன்னா!? விக்கி போட்டாவை போட வேண்டியதுதானே!//

  போட்டோவை போட்டீன்னா உடனே தூக்குல தொங்கிருவேன்னு மிரட்டி வச்சிருக்கான் என்னை ஹி ஹி...

  ReplyDelete
 8. வீடு சுரேஸ்குமார் said...
  விக்கியென்றால் அம்புட்டு பயமா?//

  எதுக்கு வீணா ஒரு நண்பனை கொல்லனும்..?

  ReplyDelete
 9. வீடு சுரேஸ்குமார் said...
  மனோ கேரளாவில பெரும்பகுதி இப்படித்தான் பாத்ரூம் இருக்காது!ஆனா வீதிக்கு நாலு கள்ஷாப் இருக்கும்//

  ஓ அந்தக்காலத்து மேட்டரை இப்பவும் தொடருதா...?

  ReplyDelete
 10. ராஜா பாத்ரூம போட்டோ எடுத்த நேரத்துல போயிட்டே வந்திருக்கலாம் சார்

  ReplyDelete
 11. //என் மீது உள்ள ஊழல் புகாரை நிரூபித்தால் நான் பொது வாழ்க்கையை விட்டே போய்விடுகிறேன் - மன்மோகன் சிங்.
  //
  காங்கிரெஸ் இந்தியாவ விட்டு போனா போதும்

  ReplyDelete
 12. "இவ்ளோ பெ.........ரீ.........ய...... அரண்மனையில ஒரே ஒரு பாத்ரூமா....?" பாவம் அவன் கஷ்டம் அவனுக்கு என்று சொல்லி சிரித்தோம். :)

  ReplyDelete
 13. மக்களே
  அரண்மனைக்கு செல்கையில்
  தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுவது
  பற்றி யாரும் கவலை கொள்வதில்லை..
  நான் ஒருமுறை அதைக் கேட்டேன்..
  ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை..
  தண்ணீர் வேண்டுமென்றால் வெளியே இருக்கிறது
  போய் குடித்துக்கொல்லுங்கள் என்கிறார்கள்..
  நிறைய மக்கள் வந்துபோகும் இடத்தில்
  இதுபோன்ற விஷயங்களை
  சரி செய்ய வேண்டும்..

  ReplyDelete
 14. Nice post. One bath room !!!!! Very bad.

  ReplyDelete
 15. நல்ல பகிர்வு ! ஒரே ஒரு பாத்ரூம் ?

  ReplyDelete
 16. இந்த அவலங்களெல்லாம் சரிசெய்யப் பட்டால்தான் நமது நாட்டுக்கு டூரிஸ்ட்டுகள் அதிகம் வருவார்கள்.”அதிதி தேவோ பவ!”நமது டூரிஸத்தின் தாரக மந்திரம்!

  ReplyDelete
 17. அடுத்த ரப்பர் ஸ்டாம் ரெடியா...

  இப்பர் இருக்கிற ரப்பரே கோடி கோடியா திங்கிதுங்கண்ணா...

  அடுத்தது என்ன பண்ண போகுதோ...

  ReplyDelete
 18. கேரளாவில் குடித்த கள் போதை அதிகமாகி யார் படம் என்று தெரியாமல் போட்டிருப்பார் !

  ReplyDelete
 19. சேம் ப்ளட்.. ஆசைஆசையா அரண்மணைக்கு போனா ஏமாற்றம்தான்.. இன்னும் வளரணும் தம்பி..

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!