Wednesday, May 9, 2012

நெல்லை வந்த பதிவர், கூட வந்த ஸ்டெனோ'க்கள் எங்கே பதிவுலகில் பரபரப்பு..!

வெளிநாட்டில் வேலை செய்து குறிப்பிட்ட நாளில் லீவு கிடைக்காமல் போனால் எம்புட்டு மன வருத்தமும் மன அழுத்தமும் உண்டாகி நம்மை வேதனை படுத்தும் என்பது வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். விக்கியும் லீவு கிடைக்காமல் அவஸ்தை படுவதும், ஊரில் ஒரு இரண்டு மாசமாவது குடும்பத்தோடு தங்க முடியாத ஏக்கத்தில் இருப்பது நெருங்கிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். அவன் பேச்சின் அதிர்வுகளில் [[போனில்தான்]] நான் அதை அடிக்கடி உணர்வது உண்டு, இன்னொரு காரணம் நம் தென்னிந்திய வகை சாப்பாடு அங்கே கிடைப்பதில்லை.....!!!இப்படி தவித்து கொண்டு இருக்கும் வேளையில்தான் ஆபீசியல் ரீதியாக மும்பை வர கம்பெனி தீர்மானிக்க [[அதுக்கும் ஆயிரத்தெட்டு தேதி மாற்றங்கள்]] இவனும் சொந்த விஷயமாக [[சுகமில்லாத அம்மாவை பார்க்க]] சென்னைக்கும் வரலாம் என்று பெர்மிஷன் வாங்கிட்டு, பதிவுலக நண்பர்களையும் பார்க்கலாம்னு வந்தால்.......


நீ எங்கே போனாலும் நான் உன் கூடத்தான் வருவேன், எனக்கு ஒரு கம்பியூட்டர் வாங்கணும் அதுக்கு நீ என் ஊருக்கு கண்டிப்பா வரணும், எனக்கு போன் பண்ணாமல் அவருக்கு நீ எப்பிடி போன் பண்ணலாம்னு டார்ச்சர் பண்ணுனா அந்த மனுஷன் என்னதான்யா செய்வான்...? யோவ் பர்சனலா சில வேலைகள் இருக்குய்யா அதை பண்ணிட்டு வாறேன்னு சொல்லியும், இல்லை நான் உன்னை தனியா போகவிடமாட்டேன் நான் உன்கூடவே இருப்பேன்னு சொன்னால் அந்த நண்பன் கிரேட் எஸ்கேப் அவானா மாட்டானா...?

இன்னொருத்தனுக்கு கம்பியூட்டர் வாங்கனுமாம், ஏண்டா உனக்கு கம்பியூட்டர் வாங்குறதுக்குமா வெளிநாட்டுல இருந்து ஆள் வரணும் கொய்யால......ஊர்ல ஆயிரத்தெட்டு கம்பெனிகளும், கம்பியூட்டர் இஞ்சினியர்களும் உனக்கு நண்பர்கள் இருக்காங்களே அவிங்ககிட்டே சொல்லி வாங்க வேண்டியதுதானே, தொலைதூரத்தில் இருந்து வந்த நண்பனை பார்க்காமல் போனியே......அவன் சூழ்நிலையை எடுத்து சொல்லியும் புரியாத உன்னை எதை கொண்டு சாத்தலாம் சொல்லு...???


எய்யா விக்கி நெல்லை வந்ததும் வந்தான் வதந்திகள் சென்னை, ஈரோடு, கடலூர், இன்னும் பல வெளிநாடுகளுக்கு பரவி எங்கள் நிம்மதியை குலைத்தது என்பதுதான் உண்மை...!!! ஆமாய்யா விக்கி ரெண்டு ஸ்டெனோ'வை தள்ளிட்டு வந்துருக்கான் என்ற வதந்திதான் அது, அந்த ஃபிகருங்க மும்பைவாசியா, சென்னைவாசியா, வியட்னாம்வாசியா, அமெரிக்காவா, இல்லை ஆப்ரிக்காவா என்ற சந்தேகங்களை தெரிந்து கொள்ளத்தான் இம்புட்டு போனும் டார்ச்சரும்...!!!


வந்த போன் கால்களை பார்த்து ஜோதிராஜ் மிரண்டு போனதும் அல்லாமல் செம கடுப்பாகிட்டார், பொருக்க முடியாமல் அவரே என் போனை எடுத்து நான் மனோ அண்ணன் பேசுறேன் மனோ தூங்கிட்டு இருக்கான்னு எவளவோ சொல்லியும் கேட்காமல், என் அண்ணன்னு சொன்னப்புறமும் அவரை திட்டின பதிவரை என்ன சொல்ல...? நல்லவேளை விஜயன் நம்பர் யாருக்கும் தெரியலை போல அவர் தப்பிச்சார்.....!!!


நாலாபக்கமும் இருந்து விசாரணை விசாரணை, நிம்மதியா ரெண்டுநாள் அவனை இருக்கவிடாமல் அல்லாட விட்டுட்டாங்கன்னு விக்கி கதறுகிறான், சரி நாம நம்ம மேட்டருக்கு போவோம்.

ஹோட்டலில் நம்ம திவானந்தா சுவாமிகள் சாப்பாடு [[பிரியாணி]] கொண்டு வந்து தந்தார், எங்களோடு ஜாலியாக அளவளாவி சென்றார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பாடுகள் ஜானகிராமன் ஹோட்டல் ரூம் சர்வீசில் ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம், ஆனாலும் ஆபீசர் தந்த "சாப்பாடு" தீரவும் விக்கியும் நானும் தீவிரமாக கீழே ஓடிப்போயி வாங்கி வந்தோம், விக்கியை [[உடம்பை]] பார்த்ததும் சாப்பாட்டுக்கு டெஸ்க் ச்சே டேக்ஸ் இல்லாமலே பில் வாங்கினான்னு நினைக்கிறேன் அம்புட்டு விலை குறைவு....!!!

இரவு பத்தரை மணிக்கு அவன் சென்னை கிளம்ப ஆபீசர் டிக்கெட் புக் பண்ணி வைத்து இருந்தார், அம்புட்டு பில்லையும் ஆபீசரே கொடுத்துட்டு இருக்காறேன்னு விக்கியும் விஜயன் எப்போதும் புலம்புவது போல புலம்பினான், நம்மையும் குடுக்க விடமாட்டேங்குராறேன்னு....!!!

செம ஜாலியாக இருந்தது மட்டுமல்ல விக்கி நன்றாக ரிலாக்ஸா இருந்தது எங்களுக்கும் மனசுக்கு சந்தோஷமாக இருந்தது, கல்யாண பிஸியில் இருந்த ஆபீசர் எங்களுக்காக நேரம் ஒதுக்கி வந்து எங்களை கவனித்து கொண்டது இன்னொரு ஆச்சர்யம் [[நன்றி ஆபீசர்]] ஜோதிராஜ் [[கவுசல்யாவில் வீட்டய்யா]] கடைசி வரை எங்களோடு ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்.


இடிகள் முழங்க, மின்னல்கள் வெட்ட, மழையும் பொழிய, இனிய சந்திப்பு, நெல்லை மறுபடியும் இனித்தது கண்களை ஆனந்தத்தாதால் பனிப்பித்தது...!!!!

சரி அந்த 'சாப்பாடு' பாதி மிச்சம் வரவே விக்கி ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் போட்டு அவன் லக்கேஜ் பெக்கின் ச்சே பேக்கின் கரையில் குத்தி வைத்தான், மொத்தபெரும் திருநெல்வேலி பழைய பஸ்நிலையம் போனோம் விக்கியை வழி அனுப்ப, அங்கே நாங்கள் போனால் ஆபீசரை பார்க்குறவன் எல்லாம் சல்யூட் வைப்பதை பார்த்த பயணிகள் மிரள, விக்கியின் நடையை பார்த்து விஜயன் மிரள, ஜோதிராஜ் அந்த இருட்டில் வந்ததை பார்த்த ஜனங்கள் அலற.....

சரி பஸ் கிளம்ப இன்னும் நேரமிருக்கேன்னு சென்னை போகும் பஸ் பிளாட்பாரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தோம், திடீரென விக்கி லக்கேஜில் இருந்த அந்த சாப்பாட்டை உருவ, விஜயன் நாலடி தள்ளி ஓடினார், கொஞ்சம் சாப்பிட்டு விட்டு என்னிடம் உனக்கு வேனுமாடா'ங்க, அதை நான் வாங்கி மொத்தத்தையும் காலி பண்ணி அவன் கையில் "பாத்திரத்தை" கொடுத்தேன் அதிர்ந்தவன் டேய் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு மொத்தத்தையும் காலி பண்ணிட்டேயடா நான்தான் பீப்பாயின்னா நீ என்னை விடவும் பெரிய பீப்பாயா இருக்குறியே நாயே........[[சரி சரி விட்ரா விட்ரா ஹி ஹி]]


அவன் பக்கத்தில் இருந்து பிரயாணம் செய்பவனை நினைத்து பரிதாபப்படத்தான் முடியும் விதி வலியது [[குறட்டையும் வலியது]] சந்தோஷமாக வடை இல்லை விடை கொடுத்து அனுப்பினோம், பஸ் கிளம்பவும் பழைய பஸ்நிலையம் டூ புதிய பஸ்நிலையம் என்னையும் விஜயனையும் அனுப்பி வைக்க கிளம்பினார்கள் சைக்கிளில் இல்லை ஹி ஹி பைக்கில், விஜயனை ஆபீசர் ஏற்றி கொள்ள என்னை ஜோதிராஜ் ஏற்ற பறந்தது பைக் நெல்லை சாலைகளில் சறுக்கி கொண்டு....யப்பா ஸ்பீடா போனுமா ஜோதிராஜ் பைக்ல போங்கய்யா அம்புட்டு ஸ்பீடு, காரணம் நாகர்கோவில் போகும் பஸ்சை மிஸ் பண்ணிறக்கூடதுன்னுதான்......

நானும் ஜோதிராஜும் பஸ்நிலையம் போயி சேர்ந்தும் ஆபீசரையும் விஜயனையும் காணலை, ரொம்ப ஸ்லோவா சைக்கிளை ஒட்டி இருக்கார் ஆபீசர் [[ஹி ஹி]] சந்தோஷமாக பஸ்சில் ஏற்றி வழி அனுப்பினார்கள் ஆபீசரும், ஜோதிராஜும், எல்லாருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்...!

டிஸ்கி : நானும் சிபி'யும் ஈரோட்டில் சந்தித்தபோது எடுத்த படங்கள்தான் மேலே நீங்கள் பார்த்தது...!!!


24 comments:

 1. me the firstu comment..poduven..

  ReplyDelete
 2. பயணங்கள் முடிவது இல்லை போல
  பயணம் அருமை
  மனோ அண்ணா கட்டுரை
  முடிவது இல்லை போல

  ReplyDelete
 3. ஏக பிஸியிலும்
  ஒபிசெர் அவர்கள் உங்களை எல்லாம்
  கவனித்து சந்தோசத்தை தருகிறது
  ஐயாவுக்கு வணக்கமும்
  சந்தோசமும்

  ReplyDelete
 4. Siva sankar said...
  me the firstu comment..poduven..//

  ரைட்டுங்கோ....

  ReplyDelete
 5. Siva sankar said...
  பயணங்கள் முடிவது இல்லை போல
  பயணம் அருமை
  மனோ அண்ணா கட்டுரை
  முடிவது இல்லை போல//

  ஹா ஹா ஹ ஹா....

  ReplyDelete
 6. Siva sankar said...
  ஏக பிஸியிலும்
  ஒபிசெர் அவர்கள் உங்களை எல்லாம்
  கவனித்து சந்தோசத்தை தருகிறது
  ஐயாவுக்கு வணக்கமும்
  சந்தோசமும்//

  நன்றிகள் நன்றிகள்....!

  ReplyDelete
 7. முடியலை! முடியலை! முடியலை! வதந்தியை நீங்களே கிளப்பிவிட்டுட்டு பச்சபுள்ளைய பலிகடாவாக்கிட்டீங்களே? இது நியாயாமா? நீதியா?

  ReplyDelete
 8. அண்ணா, புதுசா வேற படம் போடுங்கண்ணா. சிபி போட்டோ பார்த்து பார்த்து கண்ணு கூசுது.

  ReplyDelete
 9. ஆனாலும் உங்க வாரிசு உங்களைவிட டேலண்ட் போல. சிபி சாரை கூலிங்க் கிளாஸ் இல்லாம போட்டோ எடுத்து இருக்கானே

  ReplyDelete
 10. நானும் சிபி'யும் ஈரோட்டில் சந்தித்தபோது எடுத்த படங்கள்தான் மேலே நீங்கள் பார்த்தது...!!!///
  அப்போ அந்த சைனா அம்மணியும் ஈரோட்டுல தான் இருக்கா...ஹி ஹி ஹி

  ReplyDelete
 11. வீடு சுரேஸ்குமார் said...
  முடியலை! முடியலை! முடியலை! வதந்தியை நீங்களே கிளப்பிவிட்டுட்டு பச்சபுள்ளைய பலிகடாவாக்கிட்டீங்களே? இது நியாயாமா? நீதியா?//

  அடப்பாவமே இது வேறயா..?

  ReplyDelete
 12. ராஜி said...
  அண்ணா, புதுசா வேற படம் போடுங்கண்ணா. சிபி போட்டோ பார்த்து பார்த்து கண்ணு கூசுது.//

  அய்யய்யோ இனி வரும்போது தங்கச்சிக்கும் ஒரு கூலிங்கிளாஸ் வாங்கி குடுத்துற வேண்டியதுதான்.

  ReplyDelete
 13. ராஜி said...
  ஆனாலும் உங்க வாரிசு உங்களைவிட டேலண்ட் போல. சிபி சாரை கூலிங்க் கிளாஸ் இல்லாம போட்டோ எடுத்து இருக்கானே//

  அட ஆமால்ல நானே இப்போதான் கவனிச்சேன் ராஸ்கல் கண்ணாடி போடாமல் பேசிட்டு இருக்கான்....!!!

  ReplyDelete
 14. கோவை நேரம் said...
  நானும் சிபி'யும் ஈரோட்டில் சந்தித்தபோது எடுத்த படங்கள்தான் மேலே நீங்கள் பார்த்தது...!!!///
  அப்போ அந்த சைனா அம்மணியும் ஈரோட்டுல தான் இருக்கா...ஹி ஹி ஹி//

  சைனா அம்மணியா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 15. இம்புட்டும் நடந்து இருக்கா. ம்ம் ம்.

  ReplyDelete
 16. ஸ்டெனோவை எங்கிருந்து பிடிச்சீங்க தல கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி தெரியுது, ஹி ஹி ஹி ஹி ..!

  ReplyDelete
 17. மனசாட்சி™ said...
  இம்புட்டும் நடந்து இருக்கா. ம்ம் ம்.//

  ஆமாய்யா ஆமாம்....

  ReplyDelete
 18. வரலாற்று சுவடுகள் said...
  ஸ்டெனோவை எங்கிருந்து பிடிச்சீங்க தல கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி தெரியுது, ஹி ஹி ஹி ஹி ..!//

  வதந்தியை கிளப்பிட்டாங்க...

  ReplyDelete
 19. FOOD NELLAI said...
  ஆடு மட்டுமா வந்து மாட்டுச்சு, ஆட்டுக்காக நம்ம நண்பர்கள் பலரும் வந்து பலியானாங்களே! ஹா ஹா ஹா.//

  அதுல வீடு பார்ட்டியைதான் ரொம்ப பாராட்டனும் ஹி ஹி நொந்து போனார்...

  ReplyDelete
 20. மனோ சார்,சிபியோட கறுப்பு கண்ணாடி எங்கே கானாமே??....படிக்கும் போது சுவராஸ்யமா இருந்தது.

  ReplyDelete
 21. நண்பனைப் பார்த்த
  சந்தோஸம் தெரிகின்றது பதிவில் படித்த பின் புரியுது விக்கிமாம்ஸ் குறட்டைச் சத்தம்!ஹீ

  ReplyDelete
 22. வியாட்னாமில் இருந்து வந்த சாப்பாடு முடிஞ்சுது போல!:)))

  ReplyDelete
 23. வியாட்னாமில் இருந்து வந்த சாப்பாடு முடிஞ்சுது போல!:)))

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!