Tuesday, September 6, 2011

ஒரு கவிதையும், தாகூரும்... !!!

நண்பனுக்கு ஒரு கவிதை.

உதிரத்தை பாலாக்கி
ஊனை உணவாக்கி
தந்தவளே....

எப்போதும் முந்தானை
பிடித்து வரும் என்னை
ஒற்றையாய் விட்டுப் போனதென்ன....

யய்யா யய்யா என 
அழைத்தவளே - இனி
அந்த சத்தம் என்று கேட்பேன்...

பொத்திப் பொத்தி
வளர்த்து என்னை ஆகாயத்தில் பறக்க
பழக்கி விட்டு ஓடி மறைந்து, விண்மீனாய் மாறினது என்ன....

உனது அன்பின் நேசத்திற்கு
நாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
ஒற்றை  "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!

---------------------------------------------------------------------------


கவிஞர் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது
ஒரு முறை படகில் ஏறி, யமுனை
நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர்.

அது இரவு நேரம், படகிலே இருந்த சின்ன
அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர்
கவிதை எழுத முற்பட்டார்.

ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை…
பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி
விளையாடியது.

கடைசியில் சோர்ந்துபோன தாகூர், மெழுகுவர்த்தியை
அணைத்து விட்டார். மெழுவத்தியை அணைத்ததுதான்
தாமதம்.. .

நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக
ஒளிர்வது தொடர்ந்தது. இதைப் பார்த்ததும் தாகூருக்கு
கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.

இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்…?
ஒரு சின்ன மெழுகுவத்தி எப்படி நிலாவின் ஒளியையே
தாகூரின் கண்ணிலிருந்து மறைத்து விட்டதோ.

அதே மாதிரிதான் ஈகோ என்ற  நிலா  சந்தோஷத்தை
அது மறைத்து விடும்.

நன்றி : கல்யாண்ஜி.





32 comments:

  1. இருங்க படிச்சிட்டு வாரேன்!

    ReplyDelete
  2. சம்பவத்தைவிட, கவிதை அழகு!

    #ஜூப்பர்..

    ReplyDelete
  3. ///சி.பி.செந்தில்குமார் said...

    தம்பி!!!!!!!!!!!!!!!///

    மனோ அண்ணாச்சியவிட நீங்க மூத்தவரா? அப்போ உங்களுக்கு வயசு 45++ ஆ?

    #உங்களுக்கு 35 to 40 னு தானே கணிச்சேன்....

    ReplyDelete
  4. என்றா இது...கவித கொட்டுர...ஸ் ஸ் அபா ஆனா நல்லாத்தான்யா இருக்கு...ஹிஹி!

    ReplyDelete
  5. இப்போத்தான் தமிழ்மனம் வேலை செய்யுது அப்பு!

    #இணைச்சாச்சு...
    இணைச்சாச்சு.....

    ReplyDelete
  6. கவிதை, சம்பவம் இரண்டுமே அற்புதம்.

    ReplyDelete
  7. வெளங்காதவன் said...
    ///சி.பி.செந்தில்குமார் said...

    தம்பி!!!!!!!!!!!!!!!///

    மனோ அண்ணாச்சியவிட நீங்க மூத்தவரா? அப்போ உங்களுக்கு வயசு 45++ ஆ?

    #உங்களுக்கு 35 to 40 னு தானே கணிச்சேன்....//


    ஹி ஹி அதான் முகத்தை வச்சு வயசை கணிக்கக் கூடாது ஹி ஹி....

    ReplyDelete
  8. விக்கியுலகம் said...
    என்றா இது...கவித கொட்டுர...ஸ் ஸ் அபா ஆனா நல்லாத்தான்யா இருக்கு...ஹிஹி!//



    என்றா பசுபதி மாச மசன்னு நின்னுட்டு இருக்கே போய் ஒரு துக்ளா வாங்கிட்டு வா....

    ReplyDelete
  9. வெளங்காதவன் said...
    இப்போத்தான் தமிழ்மனம் வேலை செய்யுது அப்பு!

    #இணைச்சாச்சு...
    இணைச்சாச்சு.....//



    நன்றி
    நன்றி
    நன்றி
    நன்றி.......

    ReplyDelete
  10. கவிதை அன்பின் உருவான அம்மாவிற்கு சமர்ப்பணமாக தரலாம் ,அவ்வளவு அழகு நண்பரே .

    டிஸ்கி :-

    நான் சொன்னது பெற்ற தாயை

    ==============================

    இரண்டாவது நல்ல தத்துவம் நண்பரே

    உண்மைதான் ஈகோ கண்களை மறைக்கும் ,உறவை கெடுக்கும் .

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  11. தமிழ் மணம் ஐந்து

    இன்ட்லி வாக்களிக்க சென்றால் இந்த இடுக்கை ஏற்கனவே இணைத்தாயிர்று என்று வருகிறது நண்பரே
    பிறகுவந்து வாக்களிக்கிறேன் .

    தமிழ் மணம் ஒட்டு போட்டாச்சு

    ReplyDelete
  12. வயிற்றின் கருவறையில் சுமந்து
    காலமெலாம் நெஞ்சில் சுமக்கும்
    அன்பின் உருவுக்கு அழகிய கவிதை.

    ஈகோ பற்றிய செய்திக்கதை விளக்கம்
    அருமை மக்களே..

    ReplyDelete
  13. கவிதையும் கதையும் அழகு

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு பாஸ்!

    ReplyDelete
  16. கவிதை நல்லா இருக்கு.....தலைப்புக்கும் கவிதைக்கும் மேட்ச் ஆகுற மாதிரி என் மூளைக்கு தெரியலையே......

    அம்மாவ பாத்து மகன் சொல்றது மாதிரியான கவிதைக்கு நண்பனுக்கு ஒரு கவிதை என்ற தலைப்பு ஏன்?

    ஒரு வேள உங்க பிரன்ட்க்கு ஆப்பு வச்சீங்களோ? :-)

    ReplyDelete
  17. ஈகோ என்ற நிலா சந்தோஷத்தை
    மறைத்து விடும்.//

    அழகான வரிகள்.

    ReplyDelete
  18. மனோ அண்ணா தானா இது

    கவிதை படிக்கும் போது ஒரே அழுகையா வருது

    தத்துவம் ஹி ஹி ஹி சூப்பர்

    ReplyDelete
  19. மனம் கவர்ந்த கவிதை
    தொடர்ந்து தர அன்புடன் வேண்டுகிறேன்

    ReplyDelete
  20. கவிதை,கல்யான் ஜி ,மற்றும் தாகூர், மனோ இந்த நால்வர் காம்பினேசன் ரொம்ப அருமை.

    ReplyDelete
  21. நல்ல நண்பர்களை பிடிக்கிறதே கஷ்டமா இருக்கு,

    ReplyDelete
  22. அருமையான பகிர்வுகள் ........

    ReplyDelete
  23. வணக்கம் பாஸ்,
    கவிதை கலக்கல் பாஸ்,

    அதே போல ஈகோவினை இல்லாதொழிப்பதற்கான விளக்கமும் சூப்பர் பாஸ்,

    ReplyDelete
  24. உனது அன்பின் நேசத்திற்கு
    நாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
    ஒற்றை "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!//

    நெஞ்சைத் தொடும் வரிகள்...

    ஒருவர் மீது நாம் அன்பு செலுத்தத் தொடங்கினால் ஞாபகப் பரிசாக எவற்றையாவது சேகரித்து வைத்து அவர்களை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்போம் என்பதனை மேற்படி வரிகள் விளம்பி நிற்கிறது.

    ReplyDelete
  25. கவிதையும் கதையும் அழகு... பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ரெவெரி

    ReplyDelete
  26. உனது அன்பின் நேசத்திற்கு
    நாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
    ஒற்றை "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!//

    நெஞ்சைத் தொடும் வரிகள்...

    ஒருவர் மீது நாம் அன்பு செலுத்தத் தொடங்கினால் ஞாபகப் பரிசாக எவற்றையாவது சேகரித்து வைத்து அவர்களை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்போம் என்பதனை மேற்படி வரிகள் விளம்பி நிற்கிறது.

    ReplyDelete
  27. அம்மா கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!