Thursday, September 15, 2011

கமலஹாசனுடன் பிரபல பதிவர்கள் சந்திப்பு...!!!


ஒரு பெரிய பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது இங்கே கமலஹாசன் தலைமையில, அதுவும் மொக்கை சந்திப்பு. பேச்சு ஆரம்பிக்குது.


கோமாளி செல்வா : நான் ஒரு சின்ன கதை சொல்லி கூட்டத்தை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சொல்லட்டுமா?

பன்னிகுட்டி : டேய் பன்னித்தலையா நெல்லை பதிவர் சந்திப்புல உன் கதையை கேட்டுட்டு நான் இனி நெல்லை பக்கமே வரமாட்டேன்னுட்டு சித்ரா அமெரிக்காவுக்கும், தமிழ்வாசி காசிக்கும் ஓடிபோயிட்டாங்க, ஏண்டா நாங்க நல்லாயிருக்குறது உனக்கு பிடிக்கலையா பிச்சிபுடுவேன் பிச்சி அப்பிடியே ஓரமா போயி ஒன்டிக்க...

இ அ பாபு : அண்ணே சின்னபையன் ஆசைபடுறான் சொல்லிட்டு போகட்டுமே...

பன்னிகுட்டி : யாரு இவன் சின்னப்பையனா..? விரல  குடுத்தா கடிக்கதெரியாதா...? டேய் இவன் நம்மளை டவுட் கேட்டே கொன்னுருவான்ய்யா பரவாயில்லையா...? உயிரோட வீட்டுக்கு போகவேண்டாம்னு கன்பார்ம் பண்ணிட்டியா...

சிபி : எனக்கு அலாஸ்கா ரேங், பலஸ்கா ரேங் என்னான்னு கேட்டு, நீங்க இத்தனை மணிக்குதான் பதிவு போடணும், நீங்க பதிவு  போடுறதாலே எனக்கு அலாஸ்கா குலஸ்கா ரேங் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது [[கண்ணாடியை கழட்டுடா பரதேசி]] அப்பிடின்னு நிறைய பேருக்கு மெயில் அனுப்பி கொல்லனும் அதனால மீட்டிங்கை உடனே முடியுங்க அக்காங்...

பன்னிகுட்டி : டேய் கண்ணாடி தலையா கொஞ்சம் தள்ளு, ஏண்டா அலக்ஸா அலக்சாண்டர்ன்னு எதுக்குடா இப்பிடி நாட்டுல அலையுறீங்க, நாலு கில்மா பதிவு போட்டமா, பத்துபேர் வந்து ஜொள்ளு விட்டானான்னுட்டு போகவேண்டியதுதானே, இல்லன்னா இருக்கவே இருக்கு விகடன், மனோ'ன்னு ஒரு நாதாரி குமுதத்தை போட்டு நக்கு நக்குன்னு நக்கி காப்பி பேஸ்ட் போடுது ம்ஹும்...

விக்கி உலகம் : என்னாது அலாஸ்கா'வா அது யாரு அமலா பால் தங்கச்சியா அல்லது தப்சி அக்காவா..?

நிரூபன் : எனது பால பிராயத்திலே, நான் ஹாயாக ஆயி போக காட்டுக்கு போகையிலே,  ஒரு கன்னிப்பெண் காட்டுக்கு போகையிலே, கரடி ஒன்னு வந்தினும், அதுகிட்டே இருந்து அவளை அழுது புரண்டு கதைத்து காப்பாத்தினேன், அப்புறமா அவள் பெயரை கேட்டேன் அலாஸ்கா எண்டு சொன்னாளா பிலாஸ்கா எண்டு சொன்னாளா மறந்துட்டன்.

சிரிப்பு போலீஸ் : ஐ அண்ணே அதென்ன அலாஸ்கா சாப்பாடு...?? மணக்குது மணக்குது சோறு சோறு சோறு, முட்டை...பிரிபிரியாணி பிரிபிரியாணி.....

பன்னிகுட்டி : ஏண்டா பன்னாடை,  அவனவன் அலாஸ்கா யாருண்ணே தெரியாம முட்டி மோதிட்டு இருக்கான் படுவா வாயா, உனக்கு முட்டை சோறு கேக்குதா, புண்ணாக்கை கரைச்சி வாயிக்குள்ளே ஊத்திபுடுவேன் ஜாக்கிரதை ஆமா...

வானதி : அங்கிள் அங்கிள், அலாஸ்கா என்பது எந்த எந்த நாட்டின்  பெயர் அங்கிள்....?

ராஜி : அண்ணே அண்ணே அலாஸ்கான்னா கூடங்குளம் ஊரின் மறு பெயர்தானே...?

கல்பனா : அலாஸ்கான்னா..............ம்ம்ம்ம் நான் விஞ்ஞானம் படிக்க ரஷ்யா போனபோது ம்ம்ம்ம் மறந்து போச்சி அவ்வ்வ்வவ்........அது ஒரு வகை கொக்குன்னு நினைக்கிறேன், மனோ அண்ணா அடிக்காதீங்க அடிக்காதீங்க...[[நான் இந்த மீட்டிங்குக்கு போகதேன்னு சொன்னேன் கேட்டியா]]

சென்னை பித்தன் : அலாஸ்கா, நான் மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக இருந்தபோது, இந்த நோயில ஒரு பேஷன்ட் வந்ததா மைல்டா ஒரு டவுட்டு நினைவில் இருக்கு இருங்க கூலிங் கிளாசை கழட்டிட்டு கொஞ்சம் யோசிக்கிறேன்.....

ரமணி "குரு" : அலாஸ்கா, என்பது ஒருவித கவிதை பிராந்தி [[பிராண்டி அல்ல]] உள்ளவங்களுக்கு வந்து சங்கடபடுத்துற காதல் கவிதைன்னு சைக்கிள்கடை வைத்துவிட்டு தூய தமிழில் இங்கிலீஷ் பேசும் என் நண்பன் சொன்னான்...

கரன் : இல்லை இல்லை அலாஸ்கா'ன்னா கலைஞர் டீம் செய்த வேறொரு ஊழலின் பெயர், விசாரணை ஆரம்பம்னு, நெட்தமிழ்'ல நியூஸ் போட்டுருக்காயிங்க...

கவிதைவீதி : ம்ம்ம்ம் நான், கவிதை காதல் மோதல் சாதல் தாடி கர்மம், போடி வாடி சாடி ஓடி, நொந்து அப்பிடீன்னு ஒரு கவிதை எழுதலாம்னு இருக்கேன். அதுக்கு இந்த அலாஸ்கா தலைப்பு பொருந்தும்னு நினைக்கிறேன் "பாட்டுரசிகன் " மீது சத்தியமா....

கோமதி : அலாஸ்கா, இது எங்க பாளையங்கோட்டையில விளையிற ஒருவித பயிர், இதை மயில்கள் [[இருந்தாதானே]] விரும்பி சாப்பிடும், இதை நன்றாக கழுவி தண்ணி ஊத்தி கொதிக்கவச்சி, வெங்காயம் சீரகம் தக்காளிஎல்லாம் போட்டு.....[[கல்பனா ஓவென அழுவதை கேட்டு நிறுத்துகிறார்]]

கோ செல்வா : கண்டிப்பா இது ஒரு நடிகை பெயர்தான், சோனியா பிந்த்ரே, அமலா பால், அந்தரா மாலி, மாதிரி இது அலாஸ்கா  ரேங்.....[[சிரிப்பு போலீஸ் கல்லெடுக்க கீழே குனியவும் அடங்குகிறான்]]

கே ஆர் விஜயன் : நிறுத்துங்கய்யா மச மசன்னு பேசிட்டு, ம்ம்ம் அலாஸ்கா, இது என் கடையில ஆபீஸ் டிராயருக்குள்ளே ஒளிச்சி வச்சி நான் மாத்திரம் பார்க்கும் ஒருவித சிடி டைப்'ன்னு நினைக்கேன்...

மாப்பிளை" ஹரீஸ் : விஜயன் அண்ணே ஏன் அண்ணே எனக்கு அந்த அலாஸ்கா சிடி'யை காட்டலை..?? [[விஜயன் முறைக்கவும், இரும் இரும் உங்க வீட்ல போட்டு குடுக்குறேன்னு சைலன்ட் ஆகிறான்]]

பன்னிகுட்டி : ஐயோ அய்யய்யோ கொக்கமக்கா எல்லாரும் என்னமா சொல்லுறாங்கோ, எனக்கு தலைய பிச்சிகிட்டு தெருவுல ஓடனும் போல இருக்குடா சிபி....

அடுத்து கமலஹாசன் பேச [[கொல்ல]] வருகிறார்....

கமலஹாசன் : ம்ம்ம்ம் ஆங், அலாஸ்கா என்பது என்னான்னு, யாருன்னு தெரியாத நியாயமான கேள்வி, அலாஸ்கா ஆணா பெண்ணான்னு சொல்லி, சொல்லாமல் எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தாலும் சொல்லி சொல்லி பன்னிகுட்டி என்னை கடிச்சி வச்சிருவார் அல்லது பேசியாவது கடிப்பார்னு சொல்லமுடியும்,

 சொல்லமுடியாதுன்னு நான் அலாஸ்காவை கேட்டு அலாஸ்கா குலாஸ்கா  என்று என்னை குழப்பும் பதிவர்களின் மனநிலையில் நான் இருந்து பார்க்கும் போது, அப்பிடியே பார்க்காவிட்டாலும் பார்த்து என்னை முறைக்கும் சிபி என்ற நாதாரி, சாரி  தப்பா நினைக்காதீங்க எங்க நெருக்கம் அப்பிடின்னு சொன்னால், இதெல்லாம் உனக்கொரு பொழப்பா என்று கேட்கும் துப்பாக்கி, மன்னிக்கணும் விக்கி இடம் நான் பேசணும்.

அலாஸ்கா ஊரா நாடா அல்லது கெரகமா [[கிரகம்]] யோசிக்கணும். நான் கெரகம்னு சொன்னால், அதை படைத்தவன் யாருன்னு ஆத்திகவாதிகள் நாத்தியவாதியாகிய என்னை கடவுள் உண்டு இல்லைன்னு என்னை தாக்க வந்தாலும்  தாக்கி தாக்கி நொந்தாலும், நான் ஆத்திகவாதியால் நாத்திகவாதி ஆகி டவுசர் கிளிஞ்சதை சொல்வதை விட  சொல்லாமல் சொல்லி சொல்லி வாயிபுண்ணாக வேண்டாம்னு நிரூபன் வேண்டிகிட்டதாலே, அலாஸ்கா பற்றி முடிவெடுக்கும் நிலையின் காலகட்டத்துக்குள்  நாம் வந்திருக்கிறோம்,

 இதை நான் கடுமையாக சொல்லுவேன், யா, மிகவும் கடுமையாக சொல்லுவேன் சொன்னால் கிருஷ்ணாசாமி வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும் சொல்லமாட்டேன்னு  அர்த்தமில்லை. நான், நான் பயப்படுவேன் பயந்து, பயப்படாத மாதிரி நடிச்சி காட்டி நடிப்பு என் உயிர் அலாஸ்கா அலாஸ்கா ரேங்.......

பதிவர்கள் எல்லாரும் தலையை பிச்சிகிட்டு, தலை தெறிக்க ஓடுகிறார்கள்....

ஆனால் தமிழ்வாசி மட்டும் கமல் அருகில் வந்து, அவர் காலில் விழுந்து கால் சுண்டு விரலை மட்டும் பிடிச்சுட்டு சொல்றான், கமல் சார் கமல் சார், நீங்களும் புரியாம மற்றவங்களும்  புரியாம, தெளிவா குழப்புறதுல உங்களை மிஞ்ச யாருமே கிடையாது சார் என்று கண்ணீர் விடுகிறான்.

இதுக்கிடையில், பதிவர் சந்திப்புக்கு என்னை ஏன்டா  கூப்பிடலை நான் அலாஸ்கா சாப்பாடு திவானந்தாகிட்டே சொல்லி ஏற்பாடு பண்ணியிருப்பேன்ல, எல்லா தடியங்களும் எங்கே...?? என ஆபீசர் பெல்ட்டை உருவ.....

பிரகாஷ் கமலை போட்டு குடுக்குறான், ஆபீசர் அண்ணே எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சி, இவர் பேசுன பேச்சில கோமாளியும், ரமேஷும் அங்கேயே சூ சூ போயிட்டாயிங்க, பன்னிகுட்டி நான் பூ மிதிக்க போறேன்னுட்டு ஓடுறாரு, விக்கி நான் தீவிரவாதிகிட்டேயே போயிருறேன்னு ஓடிட்டாரு, நிரூபன் பாத்ரூம் போனவரு போனவருதான் காணவே இல்லை என சொல்லவும் கடுப்பான ஆபீசர்...

எலேய் யாருலேய் அங்கே,  திவானந்தா ஹால் கதவை எல்லாம் சட்டுனு பூட்டுலேய்  என அலற [[பிரகாஷ் கால் கடகட.... ]] இதை கவனித்த ஆபீசர், தம்பி நீ போலாம்னு சைகை காட்டுகிறார். கதவு பூட்டப்படுகிறது.

கொஞ்சநேரம் கழித்து கதவு திறக்கையில், பதினாறு வயதினிலே கோவணம் கோலத்தோடு வெளியே வந்து பி எம் டபள்யூ காரில் ஏறி பறக்கிறார் கமல். ஆபீசர் மறுபடியும் பெல்டை இடுப்பில் சொருவுகிறார், திவானந்தா தூக்கிகட்டிய வேஷ்டியோடு அண்டர்வேர் தெரிய வெளியே வருகிறார் கையை முறுக்கியபடி.....

டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க.......

85 comments:

 1. தமிழ் மணம் ஒன்று

  ReplyDelete
 2. அலாஸ்கான்னா ?????????

  இருங்க யோசிச்சி சொல்றேன்

  ReplyDelete
 3. அலாஸ்கான்னா சிபி இப்போ புதுசா எழுதிட்டு இருக்கும் கில்மா பொஸ்தகமா இருக்கும்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 4. ஒருவேள அந்த சிடியா இருக்குமோ?

  ReplyDelete
 5. ப்ளாக் ஓனர் எங்க போயிட்டாரு..... ஆஹா இன்னிக்கு வியாழக்கெழமையாச்சே.... இன்னேரம் மட்டையாகி இருப்பாரே?

  ReplyDelete
 6. வணக்கம் அண்ணாச்சி,
  இருங்க படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 7. ஒரு பெரிய பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது இங்கே கமலஹாசன் தலைமையில, அதுவும் மொக்கை சந்திப்பு. பேச்சு ஆரம்பிக்குது.//


  ஆகா....மனோ அண்ணாவின் புதிய முயற்சியா..

  கலக்குங்க பாஸ்...

  ReplyDelete
 8. டேய் பன்னித்தலையா நெல்லை பதிவர் சந்திப்புல உன் கதையை கேட்டுட்டு நான் இனி நெல்லை பக்கமே வரமாட்டேன்னுட்டு சித்ரா அமெரிக்காவுக்கும், தமிழ்வாசி காசிக்கும் ஓடிபோயிட்டாங்க, ஏண்டா நாங்க நல்லாயிருக்குறது உனக்கு பிடிக்கலையா பிச்சிபுடுவேன் பிச்சி அப்பிடியே ஓரமா போயி ஒன்டிக்க..//


  ஹே...ஹே...இது வேறையா...

  ReplyDelete
 9. எனக்கு அலாஸ்கா ரேங், பலஸ்கா ரேங் என்னான்னு கேட்டு, நீங்க இத்தனை மணிக்குதான் பதிவு போடணும், நீங்க பதிவு போடுறதாலே எனக்கு அலாஸ்கா குலஸ்கா ரேங் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது [[கண்ணாடியை கழட்டுடா பரதேசி]] அப்பிடின்னு நிறைய பேருக்கு மெயில் அனுப்பி கொல்லனும் அதனால மீட்டிங்கை உடனே முடியுங்க அக்காங்..//


  சிபியோட டவுசரையும் உருவியாச்சா...

  அவ்.............

  ReplyDelete
 10. என்னாது அலாஸ்கா'வா அது யாரு அமலா பால் தங்கச்சியா அல்லது தப்சி அக்காவா..//

  ஹே...ஹே.....

  அவ்....இது என்ன டைம்மிங் காமெடியா...

  ReplyDelete
 11. எனது பால பிராயத்திலே, நான் ஹாயாக ஆயி போக காட்டுக்கு போகையிலே, ஒரு கன்னிப்பெண் காட்டுக்கு போகையிலே, கரடி ஒன்னு வந்தினும், அதுகிட்டே இருந்து அவளை அழுது புரண்டு கதைத்து காப்பாத்தினேன், அப்புறமா அவள் பெயரை கேட்டேன் அலாஸ்கா எண்டு சொன்னாளா பிலாஸ்கா எண்டு சொன்னாளா மறந்துட்டன்.//

  நல்ல வேளை நீங்க பிலாக்காய் என்று சொல்லலை...........


  அவ்.........................

  ReplyDelete
 12. வானதி : அங்கிள் அங்கிள், அலாஸ்கா என்பது எந்த எந்த நாட்டின் பெயர் அங்கிள்....?//

  அவ்...உங்க நாட்டுக்கு மேலே உள்ள நாட்டின் பெயர் அக்காச்சி...............

  ReplyDelete
 13. செம காமெடியாகவும்,
  சுவாரஸ்யமாகவும் எழுதியிருக்கிறீங்க..

  ReplyDelete
 14. பன்னிக்குட்டியாரை இன்னும் கொஞ்சம் அதிகமா கடிச்சிருக்கலாமே.........

  ReplyDelete
 15. ///////நிரூபன் said...
  பன்னிக்குட்டியாரை இன்னும் கொஞ்சம் அதிகமா கடிச்சிருக்கலாமே.........
  ////////

  யோவ்..... என்னா ஒரு வில்லத்தனம்யா? இத மைண்ட்ல வெச்சுக்கிறேன்....

  ReplyDelete
 16. வானதி : அங்கிள் அங்கிள், அலாஸ்கா என்பது எந்த எந்த நாட்டின் பெயர் அங்கிள்....?//

  அவ்...உங்க நாட்டுக்கு மேலே உள்ள நாட்டின் பெயர் அக்காச்சி.............../// avvvvv....

  நிரூ, இது கூட தெரியாமல் அமெரிக்காவில் 11 வருடங்களாக இருப்பேனோ!!!!!
  பாவம் அங்கிளுக்கு தெரியலை போல. என் பெயரை போட்டு சந்தேகம் கேட்டிருக்கிறாரு.
  அங்கிள், சூப்பரோ சூப்பர் ( நான் பதிவை சொன்னேன் ).

  ReplyDelete
 17. சூப்பர் மாப்பிள.. தமிழ்மணத்த தேடியும் கிடைக்கல(டெலிபோன்ல) இன்ட்லி ஓட்டு போட்டிருக்கேன்யா..

  ReplyDelete
 18. ஹா..ஹா..நானும் அலெக்ஸான்னு என்னன்னு போன வாரம் வரைக்கும் தெரியாமத் தான் இருந்தேன்..அப்புறம் தான் தெரிஞ்சிச்சு அது ஒரு வெட்டிப் பந்தா மேட்டர்னு!

  கலக்கல்ணே.

  ReplyDelete
 19. பதிவில் கலக்கலாய் வந்திருப்பது பன்னிக்குட்டியாரின் டயலாக்ஸ் தான்!

  ReplyDelete
 20. செங்கோவி அண்ணா சொன்னது போல பன்னிக்குட்டி சாரின் டயலாக் சூப்பர்

  ReplyDelete
 21. நிருபன் பாஸ்
  ஹீ ஹீ

  ReplyDelete
 22. நல்லாத்தான் எல்லோர் சட்டையையும் கிழிச்சு இருக்கீங்க பாஸ்
  ஹா ஹா சூப்பர் பாஸ்
  நல்லா இருக்கு

  ReplyDelete
 23. டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க.......//

  எடுத்துக்க முடியாதுலே, என்னாலே பண்ணுவாய்.

  ReplyDelete
 24. செம காமடி, நீங்க உண்மையிலேயே ஒரு நல்ல பதிவர். (மொக்கை பதிவர் எண்டு சொன்னா அடிக்க மாட்டீங்களே)

  ReplyDelete
 25. அண்ணே இந்த சந்திப்புல வடை முதல் சடை வரை கொந்தளிக்கும் தங்கள் வார்த்தை பிரயோகங்கள் காணாது நிம்மதி பெருமூச்சி விட்டேன்.....என்ன இருந்தாலும் முழு பொறுப்பை பன்னிகுட்டி அவர்கள் எடுத்து கொண்டார் ஹிஹி!

  ReplyDelete
 26. அலாஸ்கான்னா என்னா மனோ??விஜயனின் ரகசியங்களை சொன்னதற்கு டேங்ஸ்!

  ReplyDelete
 27. அலாஸ்கா அப்டின்னா அழகா இருக்குற குஸ்கான்னு அர்த்தம்

  ReplyDelete
 28. 'அலாச்கா'ன்னா அண்டார்டிகாவில் குடி இருக்கும் ஒரு அழகான குட்டி, ச்சே புட்டி பேர் தானே?

  ReplyDelete
 29. அலாஸ்கா இது கமலுக்கு புது ஜோடியா நம்ம சி.பியின் புதிய தொடருக்கான பெயரா மனோவும் கலாய்க்க வெளிக்கிட்டார் ரசித்துச் சிரிக்கவைக்கின்றது கமல் சந்திப்பு!

  ReplyDelete
 30. INTHA PATHIVAI NAAN VANMAIYAGA MIGA MIGA VANMAIYAGA VARAVERKKIREEN.....
  MANO ANNAEY ENAKKUM
  AZHA THEERIYUM !!!!!

  ReplyDelete
 31. INTHA PATHIVAI NAAN VANMAIYAGA MIGA MIGA VANMAIYAGA VARAVERKKIREEN.....
  MANO ANNAEY ENAKKUM
  AZHA THEERIYUM !!!!!

  ReplyDelete
 32. யோவ் உமக்குமட்டும் எப்படி ஓய் பதிவு எழுத சம்பளம் தர்றாங்க. எனக்கும் அதுமாதிரி ஒரு வேலை இருந்தா சொல்லும்.

  ReplyDelete
 33. அலாஸ்க்கா என்ற ஒரு வார்த்தையை வைத்து எப்படி அழகா ஒரு பதிவை தேத்திவிட்டீர். கூட இருந்தது யாரு ஆபீசரா இல்லை நெப்போலியனா ?? கற்பனை குதிரை அபாரமா ஓடியிருக்கே!!!!!!!!

  ReplyDelete
 34. ///கே. ஆர்.விஜயன் said...

  அலாஸ்க்கா என்ற ஒரு வார்த்தையை வைத்து எப்படி அழகா ஒரு பதிவை தேத்திவிட்டீர். கூட இருந்தது யாரு ஆபீசரா இல்லை நெப்போலியனா ?? கற்பனை குதிரை அபாரமா ஓடியிருக்கே!!!!!!!!///

  ஆண்டி குட்டி....

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 35. ///கே. ஆர்.விஜயன் said...

  யோவ் உமக்குமட்டும் எப்படி ஓய் பதிவு எழுத சம்பளம் தர்றாங்க. எனக்கும் அதுமாதிரி ஒரு வேலை இருந்தா சொல்லும்////

  வாழ்க... ஹி ஹி ஹி

  ReplyDelete
 36. //நாய்க்குட்டி மனசு said...

  'அலாச்கா'ன்னா அண்டார்டிகாவில் குடி இருக்கும் ஒரு அழகான குட்டி, ச்சே புட்டி பேர் தானே?///

  ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 37. நக்கல்ஸ் சூப்பரு அண்ணே!

  ReplyDelete
 38. செம அரட்டைக் கச்சேரி மக்களே.....

  ReplyDelete
 39. மக்கா... அலாஸ்கா யாரு... இன்னும் ஒன்னுமே பிரியல...

  ReplyDelete
 40. நக்கல் மனோ... களம் இறங்கிடுச்சு,,,

  ReplyDelete
 41. அனுஷ்கா பத்தி பேட்டி எடுக்க வேண்டிய ஆள் கிட்ட
  அலாஸ்கா பத்தி பேட்டி எடுத்து இருப்பதை வன்மையாய் கண்டிக்கிறேன்..

  அதுவும் என்னை விட்டு விட்டு

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 42. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அலாஸ்கான்னா சிபி இப்போ புதுசா எழுதிட்டு இருக்கும் கில்மா பொஸ்தகமா இருக்கும்னு நினைக்கிறேன்...//

  என்னாது பொஸ்தகமா...ஹய்யோ ஹய்யோ...

  ReplyDelete
 43. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஒருவேள அந்த சிடியா இருக்குமோ?//

  எதுக்கும் விசாரிச்சி சொல்லுங்க...

  ReplyDelete
 44. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ப்ளாக் ஓனர் எங்க போயிட்டாரு..... ஆஹா இன்னிக்கு வியாழக்கெழமையாச்சே.... இன்னேரம் மட்டையாகி இருப்பாரே//

  யோவ் டியூட்டி முடியும் போது பதிவை போட்டுட்டு ஓடிபோயிட்டேன், எங்கே சிபி வந்து மூக்குல குத்திருவானொன்னு பயந்து...

  ReplyDelete
 45. நிரூபன் said...
  ஒரு பெரிய பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது இங்கே கமலஹாசன் தலைமையில, அதுவும் மொக்கை சந்திப்பு. பேச்சு ஆரம்பிக்குது.//


  ஆகா....மனோ அண்ணாவின் புதிய முயற்சியா..//

  ஹா ஹா ஹா ஹா எப்பூடீ...

  ReplyDelete
 46. நிரூபன் said...
  எனக்கு அலாஸ்கா ரேங், பலஸ்கா ரேங் என்னான்னு கேட்டு, நீங்க இத்தனை மணிக்குதான் பதிவு போடணும், நீங்க பதிவு போடுறதாலே எனக்கு அலாஸ்கா குலஸ்கா ரேங் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது [[கண்ணாடியை கழட்டுடா பரதேசி]] அப்பிடின்னு நிறைய பேருக்கு மெயில் அனுப்பி கொல்லனும் அதனால மீட்டிங்கை உடனே முடியுங்க அக்காங்..//


  சிபியோட டவுசரையும் உருவியாச்சா...

  அவ்.............//

  அவனை கிழிச்சி தொங்கவிட்டா எனக்கு மனசுக்கு சந்தோசமா இருக்கு ஹி ஹி...

  ReplyDelete
 47. நிரூபன் said...
  என்னாது அலாஸ்கா'வா அது யாரு அமலா பால் தங்கச்சியா அல்லது தப்சி அக்காவா..//

  ஹே...ஹே.....

  அவ்....இது என்ன டைம்மிங் காமெடியா...//

  இந்த ராஸ்கல் எப்பவும் குறுக்கு கேள்வி கேக்குறா ஆளாச்சே ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 48. நிரூபன் said...
  எனது பால பிராயத்திலே, நான் ஹாயாக ஆயி போக காட்டுக்கு போகையிலே, ஒரு கன்னிப்பெண் காட்டுக்கு போகையிலே, கரடி ஒன்னு வந்தினும், அதுகிட்டே இருந்து அவளை அழுது புரண்டு கதைத்து காப்பாத்தினேன், அப்புறமா அவள் பெயரை கேட்டேன் அலாஸ்கா எண்டு சொன்னாளா பிலாஸ்கா எண்டு சொன்னாளா மறந்துட்டன்.//

  நல்ல வேளை நீங்க பிலாக்காய் என்று சொல்லலை...........


  அவ்.........................//

  இருங்க இன்னும் நெறைய வெரைட்டி வச்சிருக்கேன் ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 49. நிரூபன் said...
  வானதி : அங்கிள் அங்கிள், அலாஸ்கா என்பது எந்த எந்த நாட்டின் பெயர் அங்கிள்....?//

  அவ்...உங்க நாட்டுக்கு மேலே உள்ள நாட்டின் பெயர் அக்காச்சி..............//

  என்னாது அக்காச்சி'யா, அது எந்த ஊர்ப்பெயர்...???

  ReplyDelete
 50. நிரூபன் said...
  செம காமெடியாகவும்,
  சுவாரஸ்யமாகவும் எழுதியிருக்கிறீங்க..//

  நன்றி நிரூபன்....

  ReplyDelete
 51. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////நிரூபன் said...
  பன்னிக்குட்டியாரை இன்னும் கொஞ்சம் அதிகமா கடிச்சிருக்கலாமே.........
  ////////

  யோவ்..... என்னா ஒரு வில்லத்தனம்யா? இத மைண்ட்ல வெச்சுக்கிறேன்....//

  யாரை அலாஸ்கா'வையா...?

  ReplyDelete
 52. vanathy said...
  வானதி : அங்கிள் அங்கிள், அலாஸ்கா என்பது எந்த எந்த நாட்டின் பெயர் அங்கிள்....?//

  அவ்...உங்க நாட்டுக்கு மேலே உள்ள நாட்டின் பெயர் அக்காச்சி.............../// avvvvv....

  நிரூ, இது கூட தெரியாமல் அமெரிக்காவில் 11 வருடங்களாக இருப்பேனோ!!!!!
  பாவம் அங்கிளுக்கு தெரியலை போல. என் பெயரை போட்டு சந்தேகம் கேட்டிருக்கிறாரு.
  அங்கிள், சூப்பரோ சூப்பர் ( நான் பதிவை சொன்னேன் ).//

  அப்போ வயசும் பதினொன்னுதான் ஆச்சா?

  ReplyDelete
 53. காட்டான் said...
  சூப்பர் மாப்பிள.. தமிழ்மணத்த தேடியும் கிடைக்கல(டெலிபோன்ல) இன்ட்லி ஓட்டு போட்டிருக்கேன்யா..//

  நன்றிலெய் மக்கா....

  ReplyDelete
 54. செங்கோவி said...
  ஹா..ஹா..நானும் அலெக்ஸான்னு என்னன்னு போன வாரம் வரைக்கும் தெரியாமத் தான் இருந்தேன்..அப்புறம் தான் தெரிஞ்சிச்சு அது ஒரு வெட்டிப் பந்தா மேட்டர்னு!

  கலக்கல்ணே.//

  ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா....

  ReplyDelete
 55. செங்கோவி said...
  பதிவில் கலக்கலாய் வந்திருப்பது பன்னிக்குட்டியாரின் டயலாக்ஸ் தான்//

  ஹா ஹா ஹா ஹா மீண்டும் நன்றி....

  ReplyDelete
 56. துஷ்யந்தன் said...
  நிருபன் பாஸ்
  ஹீ ஹீ//


  நிரூபன் இன்னும் பாத்ரூமில் இருந்து வெளியே வரலையாம் கமல் போனபின்பும்....

  ReplyDelete
 57. KANA VARO said...
  டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க.......//

  எடுத்துக்க முடியாதுலே, என்னாலே பண்ணுவாய்.//

  எட்றா அந்த வீச்சறுவாளை......

  ReplyDelete
 58. KANA VARO said...
  செம காமடி, நீங்க உண்மையிலேயே ஒரு நல்ல பதிவர். (மொக்கை பதிவர் எண்டு சொன்னா அடிக்க மாட்டீங்கள///

  ச்சே ச்சே உண்மையை சொல்றவிங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் [[கர்ர்ர்ர்]]

  ReplyDelete
 59. விக்கியுலகம் said...
  அண்ணே இந்த சந்திப்புல வடை முதல் சடை வரை கொந்தளிக்கும் தங்கள் வார்த்தை பிரயோகங்கள் காணாது நிம்மதி பெருமூச்சி விட்டேன்.....என்ன இருந்தாலும் முழு பொறுப்பை பன்னிகுட்டி அவர்கள் எடுத்து கொண்டார் ஹிஹி!//

  ராஸ்கல் நீயும் கமல் மாதிரி குழப்ப ஆரம்பிச்சிட்டியா..?

  ReplyDelete
 60. என் மன வானில் said...
  அலாஸ்கான்னா என்னா மனோ??விஜயனின் ரகசியங்களை சொன்னதற்கு டேங்ஸ்!//

  அலாஸ்கா'ன்னா என்னான்னுதான் கமல் விரிவா சொன்னாரே, புரியலையா உங்களுக்கு ஹே ஹே ஹே ஹே, ஆமாம் ஆமாம் விஜயனும் வசமா மாட்டுனார் இன்றைக்கு ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 61. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  அலாஸ்கா அப்டின்னா அழகா இருக்குற குஸ்கான்னு அர்த்தம்//

  எப்போ பாரு திங்கிறதுலையே குறியா இருக்கான்யா....

  ReplyDelete
 62. நாய்க்குட்டி மனசு said...
  'அலாச்கா'ன்னா அண்டார்டிகாவில் குடி இருக்கும் ஒரு அழகான குட்டி, ச்சே புட்டி பேர் தானே?//

  அட அழகா கண்டுபிடிச்சிட்டாங்க, உடனே ஒரு குட்டி சீ ச்சே புட்டி பார்சல்....

  ReplyDelete
 63. Nesan said...
  அலாஸ்கா இது கமலுக்கு புது ஜோடியா நம்ம சி.பியின் புதிய தொடருக்கான பெயரா மனோவும் கலாய்க்க வெளிக்கிட்டார் ரசித்துச் சிரிக்கவைக்கின்றது கமல் சந்திப்பு!//

  ஹி ஹி கமல்'னா சும்மாவா...

  ReplyDelete
 64. NAAI-NAKKS said...
  INTHA PATHIVAI NAAN VANMAIYAGA MIGA MIGA VANMAIYAGA VARAVERKKIREEN.....
  MANO ANNAEY ENAKKUM
  AZHA THEERIYUM !!!//

  அவ்வ்வ்வவ்வ்வ்வ்....

  ReplyDelete
 65. கே. ஆர்.விஜயன் said...
  யோவ் உமக்குமட்டும் எப்படி ஓய் பதிவு எழுத சம்பளம் தர்றாங்க. எனக்கும் அதுமாதிரி ஒரு வேலை இருந்தா சொல்லும்.//  நாகர்கோவில் ஜங்க்சன்ல அதுவும் உமன் காலேஜ் பக்கம், சுகமா சைட் அடிச்சமா பிகர்களை பார்த்துட்டு பதிவுகள் தேத்தினோமான்னு பாரும் ஓய் ஹி ஹி...

  ReplyDelete
 66. கே. ஆர்.விஜயன் said...
  அலாஸ்க்கா என்ற ஒரு வார்த்தையை வைத்து எப்படி அழகா ஒரு பதிவை தேத்திவிட்டீர். கூட இருந்தது யாரு ஆபீசரா இல்லை நெப்போலியனா ?? கற்பனை குதிரை அபாரமா ஓடியிருக்கே!!!!!!!!//

  யோவ் நான் டியூட்டில இருந்தா, நெப்போலியன் எப்பிடி பக்கத்துல வருவான் ஹி ஹி....அல்லாமலும் நெப்போலியன் பக்கத்துல இருந்தா கெட்டகெட்ட வார்த்தையாதான் நாறுது சீ ச்சே வருது....

  ReplyDelete
 67. வெளங்காதவன் said...
  ///கே. ஆர்.விஜயன் said...

  அலாஸ்க்கா என்ற ஒரு வார்த்தையை வைத்து எப்படி அழகா ஒரு பதிவை தேத்திவிட்டீர். கூட இருந்தது யாரு ஆபீசரா இல்லை நெப்போலியனா ?? கற்பனை குதிரை அபாரமா ஓடியிருக்கே!!!!!!!!///

  ஆண்டி குட்டி....

  ஹி ஹி ஹி//

  ச்சே ச்சே ஆண்டிகளை நான் ரசிப்பது இல்லை ஹி ஹி...

  ReplyDelete
 68. வெளங்காதவன் said...
  நக்கல்ஸ் சூப்பரு அண்ணே!//

  நன்றிலெய் மக்கா...

  ReplyDelete
 69. மகேந்திரன் said...
  செம அரட்டைக் கச்சேரி மக்களே.....//


  நன்றிலெய் மக்கா...

  ReplyDelete
 70. தமிழ்வாசி - Prakash said...
  நக்கல் மனோ... களம் இறங்கிடுச்சு,,,///

  ஆமாமா எல்லாரும் ஒடுங்க ஒடுங்க...

  ReplyDelete
 71. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  அனுஷ்கா பத்தி பேட்டி எடுக்க வேண்டிய ஆள் கிட்ட
  அலாஸ்கா பத்தி பேட்டி எடுத்து இருப்பதை வன்மையாய் கண்டிக்கிறேன்..

  அதுவும் என்னை விட்டு விட்டு

  ஹா ஹா ஹா//

  ஹா ஹா ஹா ஹா அனுஷ்காவா.....

  ReplyDelete
 72. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ஆஹா ...//


  ஆஹா உங்க பேரை மிஸ் பண்ணிட்டேனே....

  ReplyDelete
 73. கலக்கல் பதிவு..
  பதிவுல வர்ற ஒவ்வொருத்தருக்கும் பன்னி சார் குடுக்குற கவுண்டர் சூப்பர்.


  //டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க.......//

  இப்படியே சொல்லி எஸ்கேப் ஆகுங்க..

  ReplyDelete
 74. நல்லவேளை நான் இன்னும் அலாஸ்காவ பாக்கலை :-)

  ReplyDelete
 75. அருமையான கலக்கல் காமெடி!

  ReplyDelete
 76. தம்பி/... உடம்புக்கு எப்படி இருக்கு?

  ReplyDelete
 77. இந்திரா said...
  கலக்கல் பதிவு..
  பதிவுல வர்ற ஒவ்வொருத்தருக்கும் பன்னி சார் குடுக்குற கவுண்டர் சூப்பர்.


  //டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க.......//

  இப்படியே சொல்லி எஸ்கேப் ஆகுங்க..//

  ஹி ஹி கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கமுடியாதே அதான்...

  ReplyDelete
 78. FOOD said...
  ஒற்றை வார்த்தையில் உருவாக்கியுள்ள கற்பனை கலக்கல்//

  மிக்க நன்றி ஆபீசர்...

  ReplyDelete
 79. இரவு வானம் said...
  நல்லவேளை நான் இன்னும் அலாஸ்காவ பாக்கலை :-)//

  நாங்களே நேற்றில் இருந்து பாக்கமுடியாம கியூவுல நிக்கிறோம் இவர் வேற...

  ReplyDelete
 80. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  அருமையான கலக்கல் காமெடி!//

  நன்றி மணி...

  ReplyDelete
 81. சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி/... உடம்புக்கு எப்படி இருக்கு?//

  டேய் அண்ணா இனி அலாஸ்கா குலாஸ்கான்னு யாருக்காவது மெயில் அனுப்புனேன், மெசேஜ் அனுப்புனேன் தெரிஞ்சிதுன்னு வச்சிக்க, பதிவுல பன்னிகுட்டியையும் கோமாளியையும் வச்சி உன்னை கலாசிப்புடுவேன் காலாசி, அப்புறம் குற்றாலம் மேட்டர் எல்லாம் வெளியே சொல்லிப்புடுவேன் ஹி ஹி....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!