Wednesday, September 14, 2011

ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா....?

ஊளை சதையை குறைக்கும் சோம்பு நீர்...

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...

கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில…….

* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

இஞ்சியின் மருத்துவ பயன்...

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

source from:http://www.koodal.com
--------------------------------------------------


டிஸ்கி : கூடங்குளம் போராட்டம், இன்று அண்ணன் சீமான் அங்கே செல்ல இருக்கிறார், விஜயகாந்தும் ஆதரவாக அறிக்கை விட்டு இருக்கிறார். நல்ல சேதி கிடைக்க பதிவர்கள் முன் வரவேண்டும், காரணம் இந்த போராட்டத்தில் கூடல்பால உட்பட பல பதிவர்கள் இருப்பதாக அறிகிறேன் நன்றி.


36 comments:

 1. அண்ணே எப்ப இருந்து மருத்துவர்!! ஆனீங்க..?

  நல்ல விஷயம் எனக்கு ரொம்ப தேவையானது...

  ReplyDelete
 2. ஐ பர்ஸ்ட் ட்ரீட்மென்ட் !!

  ReplyDelete
 3. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  அண்ணே எப்ப இருந்து மருத்துவர்!! ஆனீங்க..?

  நல்ல விஷயம் எனக்கு ரொம்ப தேவையானது...//  நல்ல விஷயம் சொல்ல டாக்டர் ஆகணுமா என்ன, நான் விஜய்யை சொல்லவில்லை பன்னிகுட்டி மன்னிப்பாராக ஹி ஹி...

  ReplyDelete
 4. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  ஐ பர்ஸ்ட் ட்ரீட்மென்ட் !!//

  இவரை அந்த கொலை களத்திற்கு [[ஆபரேஷன் தியேட்டர் தமிழாக்காம் ஹி ஹி]] கொண்டு செல்லுங்கள்...

  ReplyDelete
 5. பயனுள்ள குறிப்புகள்!

  ReplyDelete
 6. அருமையான மருத்துவக் குறிப்புகள் மக்களே.....
  நாம் தினம் வைக்கும் முழம்பில் சேர்க்கும் அனைத்து
  போற்றுட்களுக்கும்
  சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு...
  அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 7. என்னண்ணே?

  லேகியம் விக்க ஆரம்பிச்சுட்டீங்க?

  "வாலிப வயோதிக அன்பர்களே!...."

  #நல்ல பதிவு..

  ஹி ஹி ஹி....

  ReplyDelete
 8. //இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்////

  அடடா!

  அப்பூடியா?

  பாக்கலாம்....

  #ஹி ஹி ஹி ...

  ReplyDelete
 9. எளிமையான குறிப்புகள். ஆனால் மிக பொதுவான பிரச்சனைகளுக்கான பயனுள்ள குறிப்புகள். நன்றி.

  ReplyDelete
 10. மத்தவங்களுக்கு எப்படியோ இல்லையோ, நான் ஒரு ஆசிரியன் என்பதால் எனக்கு இது மிகவும் தேவைப்படும்/பயனுள்ள பதிவு தோழர்!
  கோடி நன்றி...
  --
  அன்பின்
  ப. ஜெயசீலன்.

  ReplyDelete
 11. லேப்டாப் மனோ டாக்டர் மனோ ஆனார், அடுத்த பதிவில் நர்ஸ் ஃபோட்டோ போடவும்

  ReplyDelete
 12. பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. டாக்டர் மனோ வாழ்க !

  ReplyDelete
 14. //சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]

  லேப்டாப் மனோ டாக்டர் மனோ ஆனார், அடுத்த பதிவில் நர்ஸ் ஃபோட்டோ போடவும்
  ///

  hi hi hi hi

  ReplyDelete
 15. உணவே மருந்து
  உண்மையில் மருந்து
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. பயனுள்ள குறிப்புகள்...

  ReplyDelete
 17. மருத்துவர் கொய்யாவுக்கு வணக்கம்....பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 18. இது மிகவும் தேவைப்படும் பதிவு....
  உங்களுக்கு ஏன் டாக்டர் பட்டம் தர கூடாது ?????

  ReplyDelete
 19. பாஸ்... உடம்பான ஆக்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பதிவு.. நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே!! அவ்வ்

  பாஸ் பாஸ் அப்படியே, உடம்பு இல்லாதவங்க, எப்படி உடம்பை ஏத்தலாம் என்று ஒரு பதிவு போடுங்களேன்..
  எனக்கும் ஒரு ஆசை வாழ்க்கையில் ஒரு நாள் ஆவது நடிகர் பிரபு மாதிரி வரணும் என்று... ஹீஹீஹீ

  ReplyDelete
 20. மனோ மாஸ்டர் பாட்டி வைத்தியம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாரு ..)

  ReplyDelete
 21. நல்ல பயனுள்ள குறிப்புகள்

  ReplyDelete
 22. இப்பத்தான் ஒரு தூக்கம் போட்டு வந்தா நீங்க:)

  ReplyDelete
 23. அன்பு வணக்கங்கள் மனோ...

  உங்கள் தளம் வந்து பார்த்தேன் மிக அருமையாக இருக்கிறதுப்பா...

  நிதானமாக படித்து கருத்து எழுதுகிறேன்பா...

  ReplyDelete
 24. அருமையான ஆரோக்கியத்திற்கு இயற்கை முறையில் வழிகள்

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 25. //இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.//

  "பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது” கேஸ்களுக்கும் இது சரிப்படுமா?!

  ReplyDelete
 26. போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புவோம் நண்பர்களே.மனம் தளர வேண்டாம்.இன்று ஒரும

  இன்று ஒருபடி முன்னேறி இருக்கிறோம் நண்பர்களே இதை படிங்க தெரியும் அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் Day 5

  தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

  ReplyDelete
 27. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள் மனோ.

  ReplyDelete
 28. பயனுள்ள தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 29. வணக்கம் அண்ணாச்சி,

  ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அசத்தலான குறிப்புக்களை வழங்கியிருக்கிறீங்க.

  மிக்க நன்றி.

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!