Sunday, September 25, 2011

நெப்போலியனால் பல்பு வாங்கிய நண்பர்கள்...!!!


பஹ்ரைனில் எனது நண்பர்களிடையில் நடந்த சம்பவம்.
 
இரண்டாவது ஷிப்ட் டியூட்டி முடிவதற்குள் நண்பர்கள் இருவரும் போனில் பேசிக்கொண்டார்கள் இன்றைக்கு நாம் சரக்கடிக்கலாமென்று, ஏனெனில் கம்பெனி ஒன்றுதான் ஆனாலும் ஹோட்டல் வேறே வேறே, தங்குமிடமும் ஒன்றுதான். ஒரு பில்டிங் முழுவதும் எங்கள் ஸ்டாஃப்தான் தங்கி இருந்தார்கள்.

 
அதில் ஒரு நண்பன்,  டேய் நான் டியூட்டி முடிஞ்சி வரும்போது  நானே பாட்டல் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லவும் ஓகே ஆனது. அப்படியே அவன் வரும்போது பாட்டல் வாங்கிக்கொண்டு வருகையில், மற்றொரு கையில் திராட்சை பழம் இருப்பதை கண்டு, என்னடா நாம் குடிக்கும் ஐட்டமே திராட்சை பழத்தில் செய்ததுதானே எதுக்கு இதை வாங்குனேன்னு கேட்க, அப்புறமா சொல்றேன்னு சொல்லி ரூமுக்கு வந்தானுக.

 
குளித்து முடித்து ரெடியாகி [[[ஸ்ஸ்ஸ்பா]] , கிளாஸ் சைடிஸ்ட் இத்யாதிகளை கையில் எடுத்துக்கொண்டு [[பின்னே கால்லையா எடுத்துட்டு போவாங்க]] மொட்டைமாடியில போயி உக்கார்ந்து மேட்டரை ஆரம்பிக்க, ஒரு ஃபுல்லும் காலி அதோடு திராட்சை பழமும் காலி....
 
என்னடா ஒரு ஃபுல் அடிச்சும் ஒன்னுமே ஏறலையேன்னு ஒருத்தன் கேட்க, டேய், நான் எதுக்கு திராட்சை பழம் வாங்கிட்டு வந்தேன்னு நினைச்சே ஹி ஹி போதை ஏறக்கூடாது என்பதற்குதான், அட நாதாரி சரக்கு அடிப்பதே போதைக்குதானே கிறுக்கு பயலேன்னு திட்ட...

 
சரி இப்போ என்னபண்ண...? ஹி ஹி இன்னொரு ஃபுல்லு ஆர்டர் பண்ணுவோம், அதுக்குதானே அந்த திராட்சை பழம். ஆர்டர் பண்ண, பாட்டலும் வந்தது, நிற்க, என்னடா பஹ்ரைன்ல வீட்டுல இருந்து ஆர்டர் பண்ணுனா சரக்கு கிடைக்குதான்னு நீங்க கேக்குறது புரியுது, பொதுவா பஹ்ரைன்ல காசு இருந்தா என்ன வேணுமோ வீட்டுக்கே வந்துரும், ஒரு போன் போட்டா  போதும்...!!!
 
அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சானுக, போதை ஏற ஏற உக்காரப்பிடிக்காமல் படுத்துட்டே சரக்கடிக்க, பசியும் வந்தது. என்னடா பண்றது, சரி ஆர்டர் பண்ணுவோம்னு சொல்லிட்டே இருக்கவும், இவர்கள் மேலே இருந்து சரக்கடிப்பதை அறிந்த இன்னொரு நண்பன், அவனிடமிருந்த சாப்பாட்டை கொண்டு வந்து கொடுத்தான்.
 
நன்றி சொல்லி வாங்கிவிட்டு, நண்பா நீ கொஞ்சம் சரக்கடிக்கிறியா..? வேண்டாம்டா சாமீ'ன்னு அவன் ஓட, வேட்டை ஆரம்பமானது, சரக்கடிச்சுகிட்டே சாப்பிட ஆரம்பித்தார்கள். இருட்டு வேற, டேய் மக்கா சாப்பாடு ஷஊப்பரா இருக்கில்லே, ஆமாடா ஷஊப்பரா இருக்கு, என்ன இலுந்தாலும் அச்சொகன் [[அசோகன்]] ஸாப்பாடு ஷாப்பாடுதான் லில்லியா [[இல்லையா]]

 
டேய் சிக்கன் கறி அல்லகாசம் [[அட்டகாசம்]] அடுத்தவன், பேமானி இது சிக்கன் இல்லைடா மட்டன் கறி என்று பீசை சாப்புட்டுட்டே... மாறி மாறி தர்க்கமே வந்துருச்சி, எழும்பி போகவும் முடியாது [[ஃபிட்டு]] , டேய் சிக்கன் என்று இவன் எலும்பை காட்டி சொல்ல, அவன் இல்லை இல்லை இது மட்டன்தான்னு எலும்பை காட்ட....!!! [[கடைசி பாராவை படிச்சுட்டு மறுபடியும் இதை படிச்சு பாருங்க]]

 
குடிச்சி கும்மாளம் போட்டு குழஞ்சி குழஞ்சி டான்ஸ் வேற போட்டு, குத்தாட்டம் ஆட ஆட, போதை லேசா இறங்க ஆரம்பிக்கவும், வானம் வெளுக்கத் தொடங்கியது, சரிடா ரூமுல போயி உறங்குவோம்னு கிளம்பினவனுங்களுக்கு, ஒரு டவுட் வர...

 
நல்ல பொழுது விடிந்து விட்டது, சாப்பிட்ட இடத்தையும் பாத்திரத்தையும் பார்த்த அவர்களுக்கு சிரிப்போ சிரிப்பு, காலையிலேயே நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மென்டே அவர்கள் சிரிப்பு அதிர வைத்தது,  என்னான்னு கேக்குறீங்களா....???
 
அங்கே கீழே, இவர்கள் சாப்பிட்டு கடிச்சி துப்பி இருந்தது........"மீனின் முள்"............!!!
 
ஹா ஹா ஹா ஹா இதை இப்பவும் நண்பர்கள் சந்திக்கும் போது சொல்லி சிரிப்போம் ஹே ஹே ஹே ஹே.....!!!

ஸ்பெஷல் டிஸ்கி : [[விஜயகாந்த் ஸ்டைலில் படிக்கவும்]] ஏய்......எனக்கு பின்னூட்டத்தில் கமெண்ட்ஸ் போடுவதென்பது சாதாரணம், அதே நேரம் ஒட்டு போடுவது என்பது சர்வ சாதாரணம்.

நீதி : மரியாதையா பாம்புக்கு பயந்து ஓட்டு போட்டுட்டு போங்க....


28 comments:

 1. நான் கூட மாவீரன் நெப்போலியன் பற்றிய வரலாற்றுப்பதிவுன்னு வந்தேன்.. அட!!!

  ReplyDelete
 2. நல்ல மூடுல இருக்குற மாதிரி இருக்கு....!!! இல்லைனா கில்மா கமெண்ட்ஸ்தானே போடுவே ஹி ஹி....

  ReplyDelete
 3. அண்ணே இம்புட்டு நல்லவரா....ஆனாலும் உங்க நேர்மைக்கு ஒரு முள் தான் உதாரணமா ஹிஹி!

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா தமாசு

  ஓட்டு போட்டாச்சு நண்பா

  ReplyDelete
 5. விக்கியுலகம் said...
  அண்ணே இம்புட்டு நல்லவரா....ஆனாலும் உங்க நேர்மைக்கு ஒரு முள் தான் உதாரணமா ஹிஹி!//

  ஹே ஹே ஹே ஹே நெப்போலியன் முள்ளாச்சே....

  ReplyDelete
 6. M.R said...
  ஹா ஹா ஹா தமாசு

  ஓட்டு போட்டாச்சு நண்பா//

  நன்றி நண்பா...

  ReplyDelete
 7. ஹா ஹா செம காமெடி. தண்ணி அடிக்கும்போது நடக்கும் காமெடி மாதிரி உலகத்தில் எதுவுமே கிடையாது.

  ReplyDelete
 8. NAAI-NAKKS said...
  Appa neenga ???//

  என்னை எதுக்குய்யா வம்புக்கு இழுக்குறீங்க...

  ReplyDelete
 9. பாலா said...
  ஹா ஹா செம காமெடி. தண்ணி அடிக்கும்போது நடக்கும் காமெடி மாதிரி உலகத்தில் எதுவுமே கிடையாது.//

  ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா....

  ReplyDelete
 10. //நீதி : மரியாதையா பாம்புக்கு பயந்து ஓட்டு போட்டுட்டு போங்க....////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 11. வெளங்காதவன் said...
  //நீதி : மரியாதையா பாம்புக்கு பயந்து ஓட்டு போட்டுட்டு போங்க....////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  அவ்வ்வ்வவ்வ்வ் முடியல.....

  ReplyDelete
 12. ஐயோ பாம்பா.. ஓட்டு போட்டாச்சு, தம 7.

  ReplyDelete
 13. அந்தளவு தெளிவா இருந்திருக்கீங்க...

  ரைட்டு...

  இது மாதிரி நாட்டுக் உபயோகமான பதிவுகள் தொடர்ந்து போடுங்க...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. நான் பொதுவா தண்ணி அடிக்கிறது இல்ல அடிக்கனும்ன்னு நெனச்சாலும்
  எப்பவும் பெரியவங்க முன்னாடி தண்ணி அடிக்கிறது இல்ல, பெரியவங்கன்னு இல்ல யாரு முன்னாடியும் அடிக்கிறது இல்லை ஏன்னா நான் தண்ணியே அடிக்கிறது இல்லை..

  போதையில ஒளருறேனா!!??

  கண்டு புடிச்சுடீன்களா ஹா ஹா ஹா

  ReplyDelete
 15. தனியா கேட்டா தகராறு தண்ணில கேட்டா வரலாறு..உங்கள் பதிவு வரலாறு அண்ணே..

  ReplyDelete
 16. வசனமெல்லாம் அடிச்சிட்டு எழுதின மாதிரியே இருக்கே...
  ஹா... ஹா... ஹாஆஆஆஆ...

  ReplyDelete
 17. கடைசியில மட்டனும் இல்ல.. சிக்கனும் இல்ல.... மீன் முள்ளுதானா....

  போதையேறிப்போச்சு..... னா அவ்ளோதான் போல

  ReplyDelete
 18. என்ன மனோ நடக்குது இங்க?

  சரி மனோ மனோன்னு ஒருத்தர் நம்ம பிளாக் பக்கம் வந்து வந்து அன்பா கருத்து சொல்றாரே.. இன்னைக்கு இவர் வீட்டுக்கு போவோம் வரவேற்பு எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு வந்தால்...

  ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆஆஆஆஹ்.....

  என்னாச்சு??

  காலில் மீன் முள் குத்திருச்சு....

  வேறென்ன நீங்க எல்லாரும் சேர்ந்து போட்ட கலாட்டாவில் இடத்தை சுத்தமும் பண்ணலை... மீன் முள்ளை எடுத்து டஸ்ட்பின்ல போடவும் இல்லை...

  பஹரைன்ல இவ்ளோ ஈசியா விடறாங்களா உங்களை எல்லாம்?? ஆச்சர்யமா இருக்கே??

  எவ்ளோ விஷயங்கள் அதுவும் முக்கியமா நாட்டு நடப்பு பேசலை... குடும்ப விஷயங்கள் அலசலை....

  ஒவ்வொருத்தரும் போட்டிக்கு கூப்பிட்டமாதிரி சரமாரியா ------------- அடிச்சிருக்கீங்களா???

  ம்ம்ம்ம்ம் சரி போகட்டும்... சிரிக்கவைத்துவிட்டது... உங்க பகிர்வு.... பயமே இல்லையா உங்க யாருக்கும்??? :)

  ரசிக்க வைத்து சிரிக்கவைத்த பகிர்வு மனோ....

  அன்பு வணக்கங்கள் உங்கள் தளம் மிக அருமையா இருக்குப்பா....

  ஆனா வரனும்னா இனி சொல்லிட்டு தான் வரனும்போல :)

  இல்லன்னா மீன் முள்ளா இருக்கும்... :)

  சும்மா தமாஷுக்கு... (இதை சிரிக்காம டைப் செய்தேன்)

  ReplyDelete
 19. வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஐயோ பாம்பா.. ஓட்டு போட்டாச்சு, தம 7.//


  யோவ் ஓடாதேய்யா, நில்லுய்யா....

  ReplyDelete
 20. கவிதை வீதி # சௌந்தர் said...
  அந்தளவு தெளிவா இருந்திருக்கீங்க...

  ரைட்டு...

  இது மாதிரி நாட்டுக் உபயோகமான பதிவுகள் தொடர்ந்து போடுங்க...

  வாழ்த்துக்கள்...//

  நாட்டுக்கொரு நல்லவன் வேணுமா வேண்டாமா...

  ReplyDelete
 21. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  நான் பொதுவா தண்ணி அடிக்கிறது இல்ல அடிக்கனும்ன்னு நெனச்சாலும்
  எப்பவும் பெரியவங்க முன்னாடி தண்ணி அடிக்கிறது இல்ல, பெரியவங்கன்னு இல்ல யாரு முன்னாடியும் அடிக்கிறது இல்லை ஏன்னா நான் தண்ணியே அடிக்கிறது இல்லை..

  போதையில ஒளருறேனா!!??

  கண்டு புடிச்சுடீன்களா ஹா ஹா ஹா//


  ஒல்லும் பிழியல.....[[ஒன்னும் புரியல]]

  ReplyDelete
 22. ஷீ-நிசி said...
  கடைசியில மட்டனும் இல்ல.. சிக்கனும் இல்ல.... மீன் முள்ளுதானா....

  போதையேறிப்போச்சு..... னா அவ்ளோதான் போல//

  பின்னே, பெரிய மீன் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 23. மஞ்சுபாஷிணி said...
  என்ன மனோ நடக்குது இங்க?

  சரி மனோ மனோன்னு ஒருத்தர் நம்ம பிளாக் பக்கம் வந்து வந்து அன்பா கருத்து சொல்றாரே.. இன்னைக்கு இவர் வீட்டுக்கு போவோம் வரவேற்பு எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு வந்தால்...

  ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆஆஆஆஹ்.....

  என்னாச்சு??

  காலில் மீன் முள் குத்திருச்சு....

  வேறென்ன நீங்க எல்லாரும் சேர்ந்து போட்ட கலாட்டாவில் இடத்தை சுத்தமும் பண்ணலை... மீன் முள்ளை எடுத்து டஸ்ட்பின்ல போடவும் இல்லை...

  பஹரைன்ல இவ்ளோ ஈசியா விடறாங்களா உங்களை எல்லாம்?? ஆச்சர்யமா இருக்கே??

  எவ்ளோ விஷயங்கள் அதுவும் முக்கியமா நாட்டு நடப்பு பேசலை... குடும்ப விஷயங்கள் அலசலை....

  ஒவ்வொருத்தரும் போட்டிக்கு கூப்பிட்டமாதிரி சரமாரியா ------------- அடிச்சிருக்கீங்களா???

  ம்ம்ம்ம்ம் சரி போகட்டும்... சிரிக்கவைத்துவிட்டது... உங்க பகிர்வு.... பயமே இல்லையா உங்க யாருக்கும்??? :)

  ரசிக்க வைத்து சிரிக்கவைத்த பகிர்வு மனோ....

  அன்பு வணக்கங்கள் உங்கள் தளம் மிக அருமையா இருக்குப்பா....

  ஆனா வரனும்னா இனி சொல்லிட்டு தான் வரனும்போல :)

  இல்லன்னா மீன் முள்ளா இருக்கும்... :)

  சும்மா தமாஷுக்கு... (இதை சிரிக்காம டைப் செய்தேன்)//


  ஐயோ அம்மா ஆத்தே, பதிவுக்குள்ளேயே ஒரு பதிவு போட்டுட்டாங்க, என் பெர்மிஷன் இல்லாம அவ்வ்வ்வவ்வ்வ்......[[நன்றி மஞ்சு]]

  ReplyDelete
 24. ஒவ்வொரு பகுதியிலும்
  அழகான பாட்டில் படம் போட்டு
  அசத்திவிட்டீர்கள்
  ஜாலியைச் சொல்லிப் போகும்
  ஜாலியான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 10

  ReplyDelete
 25. அந்த பாட்டில் படங்கள் சூப்பரு... ஹி..ஹி... பதிவும் சூப்பரு...

  ReplyDelete
 26. வரலாறு பதிவு எண்டு பாத்தா இது தகராறு பதிவா....

  ஹா ஹா மீன் முள்ளுக்கா இவ்வளவு அக்கப்போரு

  ReplyDelete
 27. // [[பின்னே கால்லையா எடுத்துட்டு போவாங்க]] //

  சிபி கூட ரொம்ப சேர்ந்தா இப்படி மொக்கை ஜோக்கெல்லாம் தன்னால வரும்...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!