Thursday, September 22, 2011

பெண்கள் நாட்டின் கண்கள், அவர்களுக்காக....!!!


பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது.


என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள் இதோ சில டிப்ஸ்…

* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.


* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.


* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.


* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.


* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.


* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.


* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.


* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.


* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.


* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.

நன்றி : உங்களுக்காக.

44 comments:

 1. நாட்டின் கண்களுக்கான பகிர்வு நன்று.

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி அண்ணே!

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. M.R said...
  எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்

  அந்த சிரசை மட்டுமல்ல ஒட்டு மொத்த தோற்றத்தையும் அழகாக காட்ட உதவும் முடியைபற்றியபதிவு."முடி"இன்ஆரோக்கியத்தை பற்றிய தங்கள் பதிவு உபயோகம்

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 5. தமிழ் மனம் ,இன்ட்லி voted

  ReplyDelete
 6. ஒன்னுமே புரியல உலகத்துல!

  ( கூந்தல்ல அதிகமா சிக்கல் இருந்தா பல் இல்லாத சீப்பால சீவலாம் என்பது அடியேனின் கருத்து)

  ReplyDelete
 7. பெண்களுக்கான போஸ்டா? அண்ணிக்கிட்ட சொல்லவாடா அண்ணா ?

  ReplyDelete
 8. அண்ணே பதிவு போட்டீங்க நல்ல இருக்கு அதுல ஏன் அண்ணே பயமுறுத்துற படமா இருக்கு!!
  பதிவை படிச்சு முடிக்கிறதுக்குள்ள ரெண்டு வாட்டி உச்சா வந்துடுச்சு பயத்துல (ஹா ஹா ஹா)
  வேப்பலை அடிச்சாதான் சரியா வரும்ன்னு நெனைக்கிறேன். கெளம்பிட்டேன்..

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. என்ன கொடும சார் இது, நீங்க போட்டு இருக்கிற படத்த பாத்தா முடி வளர்க்கிற ஆசையே போயிடும் போலிருக்கே

  ReplyDelete
 11. அறிவை வளர்க்க ஐடியா சொல்வீர்ன்னு பார்த்தா மயிர் செழிக்க ஐடியா சொல்கிறீர். எல்லாம் சேர்க்கை தான் காரணம்.

  ReplyDelete
 12. இன்றைய பெண்களுக்கு இந்தக் குறிப்புகள் எதற்கு என்பதுதான் சிந்தனையாக இருக்கிறது..???

  இவ்வளவு நீண்ட முடிகொண்ட பெண்களை இதுபோன்ற படங்களில்தான் பார்க்கமுடிகிறது..

  ReplyDelete
 13. அழகிய பதிவு. வாழ்த்துக்கள். எல்லாரும் பாப் கட்டிங் வெட்டுறாங்கன்னா... இதெல்லாம் போட்டோவுலதான் பாக்கணும்...

  ReplyDelete
 14. மேலே சொன்ன எல்லாத்தையும் கலந்து குளிச்சா..?

  ReplyDelete
 15. அளவுக்கு மீறினால் அசிங்கம் பாஸ் ..பெண்கள் முடி விசயத்திலும்...

  ReplyDelete
 16. இப்போ யாருக்கும் நீண்ட முடி வேண்டாம்னு தான் நினைக்கிறாங்க. குட்டியா ஃப்ரீ ஹேர் விடுவது தான் ஃபேஷன்னு சொல்றாங்க.

  நிறய ஆண்களுக்கு வழுக்கை விழுது, அதுக்கு எதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க அப்பு.

  ReplyDelete
 17. அருமையான தகவல்கள் பெண்களுக்கு அழகான படங்கள் மாப்பூ!

  ReplyDelete
 18. நான் கண்ண மூடிட்டு வந்தேன்...

  ஒலகம் இருண்டு போச்சு!

  #யாரும் பாக்கலியே?

  (ஓட்டு போடலை.... போய்யா... இதே மாதிரி எழுதுனா நல்ல ஓட்டு கூட கெடையாது)

  ReplyDelete
 19. நன்றி மனோ தங்களின் குறிப்புகளுக்கு. அந்த படங்களில் உள்ளவர்களின் கூந்தலை பார்க்கும் போது நமக்கும் அந்த மாதிரி முடி இருக்காதா என்ற ஆதங்கம் எழுகிறது.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 20. டிப்ஸ்க்கு மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 21. அப்பப்ப தாய்க்குலத்திற்கு அருமையான ஐடியாக்களை எடுத்துச் சொல்றீங்க.

  ReplyDelete
 22. அண்ணே நல்ல பதிவு..என்னை மாதிரி கல்யாணம் ஆகாத பசங்களுக்கு..இதை படிச்சுட்டு இப்பவே கலக்கமாக இருக்கு....

  ReplyDelete
 23. பொண்ணுங்க சமாச்சாரத்திற்கெல்லாம் அசத்தலான பதிவு போட எப்படி அண்ணே கத்துக்கிட்டிங்க?

  ReplyDelete
 24. பெண்கள் ஆதரவு உங்களுக்குதான்...

  ReplyDelete
 25. பெண்களுக்கு மட்டும்தானா,, ஆண்களுக்கும் முடி உதிருதுதானே,, பதிவு நல்லாயிருக்கு,,

  ReplyDelete
 26. டிப்ஸ் எல்லாம் சரிணா. எதுக்கு இப்படி படத்தப் போட்டு பயப்படுத்துறீங்க ?

  ReplyDelete
 27. முட்டையின் வெள்ளைக்கருவ எடுத்து தலைல போட்டா ஒருவித வாசம் அடிக்காதா ?

  ReplyDelete
 28. // கே. ஆர்.விஜயன் said...
  அறிவை வளர்க்க ஐடியா சொல்வீர்ன்னு பார்த்தா மயிர் செழிக்க ஐடியா சொல்கிறீர்.//

  ROFL :)) வாய்விட்டுச் சிரித்தேன் :)))))))))

  ReplyDelete
 29. //அந்த படங்களில் உள்ளவர்களின் கூந்தலை பார்க்கும் போது நமக்கும் அந்த மாதிரி முடி இருக்காதா என்ற ஆதங்கம் எழுகிறது.//

  ஓவர் நக்கல்ங்க :)))))))

  ReplyDelete
 30. கண்ணுன்னு சொல்லிட்டு முடிய காட்டுறிங்க

  ReplyDelete
 31. என்ன ...
  தொடர் டாகுட்டர் -ஆவே
  மாறிடீங்க ???

  ReplyDelete
 32. தாய்க்குல டாக்டர் தலிவர் மனோ வாழ்க ஹி ஹி

  என்ன தலிவா எங்கட மொட்டை மண்டையில் முடி வளர எதும் ஜடியா இருக்கோ..இருந்தால் சொல்லுங்கோ.

  ReplyDelete
 33. அடேயப்பா... இவ்வளவு நீளமா???
  பார்ப்பதற்கு நல்லா இருக்கு மக்களே...

  ReplyDelete
 34. ஓட்டிட்டேன்

  ReplyDelete
 35. கோமாளி செல்வா said...
  // கே. ஆர்.விஜயன் said...
  அறிவை வளர்க்க ஐடியா சொல்வீர்ன்னு பார்த்தா மயிர் செழிக்க ஐடியா சொல்கிறீர்.//

  ROFL :)) வாய்விட்டுச் சிரித்தேன் :)))))))))//

  ரெண்டுபேரையும் தோலை உரிச்சிபுடுவேன்....

  ReplyDelete
 36. அனைத்து டிப்ஸூம் அருமை சார்...

  ReplyDelete
 37. அண்ணே பின்னிட்டிங்க!

  ReplyDelete
 38. யோவ் எங்கையா இந்த படங்களை எடுத்தனீர்

  ReplyDelete
 39. வணக்கம் அண்ணே,

  பெண்களின் கூந்தல் அழகினைப் பராமரிப்பதற்கேற்ற சூப்பரான பதிவு.

  ReplyDelete
 40. சூப்பர் டிப்ஸ்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!