Saturday, September 10, 2011

நோய் தடுக்கும் தாம்பூலம்...!!!

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கிமு 2- ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள்
கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

மருத்துவப்பயன் உடைய பகுதிகள்...

இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

தாம்பூலம் தரித்தல்:

நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.

நன்றி : தமிழ்கதிர்.


16 comments:

 1. தமிழ்மணம் இணைச்சாச்சு... பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. மனோவுக்கு என்ன ஆச்சி ???

  ReplyDelete
 3. வெற்றிலையின் மருத்துவ குணங்கள்.அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. வெற்றிலையின் பயன்கள் மிகவும் பயனுள்ளதை பகிர்ந்தமைக்கு நன்றீ

  ReplyDelete
 5. வெத்தலை போட்டேண்டி
  சக்தி கொஞ்சம் ஏறுதடி

  ம்ம்ம்
  வெற்றிலை பற்றிய
  அழகிய பதிவு மக்களே....


  தமிழ்மணம் நான்கு

  ReplyDelete
 6. வெற்றிலைக்கு இருக்கும் மருத்துவ குணம் பற்றி தெரிந்து கொண்டேன்...
  பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 7. வெற்றிலையில் இவ்ளோ இருக்கா???
  ஆச்சரிய தகவல் தேங்க்ஸ் பாஸ்

  ReplyDelete
 8. பயனுள்ள பதிவு
  இது வெத்து இலை இல்லை போல் இருக்கிறதே
  வெற்றிலை என்பது சரிதான் போலிருக்கு
  த.ம 7

  ReplyDelete
 9. பீடா.... இது கூட சேர்ந்த வகைதானே...

  ReplyDelete
 10. உண்மை தான் மனோ. heavy யான கல்யாண சாப்பாடுக்கு பின் கண்டிப்பாக வெற்றிலை போட வேண்டும். பல ஜீரணக் கோளாறுகளும் தவிர்க்கப்படும். மிக நல்ல பதிவு

  ReplyDelete
 11. அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:
  இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)

  ஒருமுறை வாருங்களேன் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

  ReplyDelete
 12. ஆஹா அருமையான பயனுள்ள பதிவு

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 13. இன்ட்லி எட்டு

  தமிழ் மணம் எட்டு

  ReplyDelete
 14. வணக்கம் பாஸ்,
  வெற்றிலையின் முக்கியத்துவத்தினை அழகாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 15. வெற்றிலையின் மருத்துவ குணங்கள்.அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.
  இன்று வரை அறியாத குறிப்பு வெற்றிலைச் சாறு சுவாசநோய்க்கு [லங்ஸ் பிராப்ளம்]மருந்து என்பது .நன்றி

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!