Tuesday, September 13, 2011

பாக்கெட் நிறைய பல்பு வாங்குன பதிவன் பார்ட் முற்றும்...!!!


நாசமாபோவ, பிளேன் ஒருமணி நேரம் லேட்டாகிருச்சென்னு கவலையில இருக்கும் போதே பசி எடுக்க ஆரம்பிச்சது. பிளேன்ல போயி சாப்பிடலாம்னா வயிறு கேட்டாதானே, அப்பிடியே சாப்பாடு கவுன்டர் பக்கமா நடந்து போனேன், கே எஃசி, மெக்டோனால், சைவம், அசைவம்னு நிறைய கவுன்டர்கள்  இருந்தன.

கென்டக்கி சிக்கன் சாப்பிடவே மாட்டேன் நான், ஆனாலும் இங்கே சாப்பிட ஆசை வந்துவிட்டது, போயி கியூவில கொஞ்சநேரமா நின்னபிறகு  என் முறை வந்தது. போயி ரெண்டு பீஸ் உள்ள சிக்கன் ஆர்டர் பண்ணினேன். 105 ரூபான்னு மெனுவுல இருந்தது, ஒரு தினார் நோட்டை எடுத்து குடுத்ததும், வெடுக்கென சிக்கன் பிளேட்டை உள்ளே எடுத்து வைத்து விட்டு சொன்னான்... 

தினார் வாங்கமாட்டோம் ஒன்லி இந்தியன் மணி அல்லது யு எஸ் டாலர்தான் வாங்குவோம்னு  கறாரா சொல்லிட்டான். நான் ஒட்டுமொத்தமா எல்லா காசையும் தினாரா மாற்றி  வச்சிட்டேன். இனி மாற்றவும் முடியாது காரணம் இமிகிரேஷன், செக்யூரிட்டி செக்கிங் தாண்டி வந்தாச்சுன்னா வெளியே போக அனுமதி இல்லை. ஸோ பல்பு....

யாராவது இப்பிடி வெளிநாடு போகும்போது மொத்தமா காசை சேன்ஜ் பண்ணிறாதீங்க. ஏன்னா பிளேன் எப்போ எந்தநேரம் லேட்டாகும்னு சொல்லமுடியாது. [[பாம் புரளி பேஷனா இருக்கும் காலம் இது]] சின்னகுழந்தைகள் வச்சிருக்கவிங்க இன்னும் ஜாக்கிரதை.

பசி, என்னடா பண்ணலாம்னு யோசிச்சிகிட்டே அந்த மலையாளி பக்கம் வந்தமர்ந்தேன். என்னான்னு கேட்டான், விஷயத்தை சொன்னேன். உடனே நோ பிராப்ளம் சேட்டா என்கிட்டே இந்தியா பணம் இருக்கு வா சாப்பிடலாம்னு அழைத்தான். நான் சொன்னேன் ஓகே நான் உனக்கு தினார் தருகிறேன்னு வற்புறுத்தி சொன்னாலும் சேட்டன் பணம் வாங்க மறுத்துவிட்டான் [[மலையாளிகளை இந்த விஷயத்தில் பாராட்டலாம்]]

ஒரு சமோசா, வடை [[அந்த வடை இல்லை]] கவுன்டருக்கு போனோம், சமோசா, வடை, ஹய் மசாலா தோசையும் இருந்தது. எது வேண்டுமானாலும் 95 ருபீஸ், மசாலாதோசை ஆர்டர் பண்ணி கூப்பன் வாங்கி அடுத்த கேபின்ல குடுத்தோம். 

தோசை சட்னி சாம்பார்லாம் ஒரே பிளேட்ல வச்சிகுடுத்தாங்க, டேபிள்ல வந்து சாப்பிட தோசையை பியித்தேன், தோசை சூடா இருக்கு உள்ளே இருக்கும் பட்டட்டோ மசாலா சில்லுன்னு இருக்கு, என்னடான்னு கேபின்காரனை  போயி கேட்டதுக்கு, இந்த ஏர்போர்ட்ல மசாலா தோசை இப்பிடித்தான் இருக்கும்னு கூலா சொன்னான் படுபாவி, ஃபிரிஜ்ல இருந்து அப்பிடியே எடுத்து போட்டு தந்துகிட்டு, சொல்றான் பாருங்க விளக்கம் ஹி ஹி [[பல்பு]]

சரி ஃபிளைட் ரெடி ஆகிரிச்சின்னு சொன்னதும், நம்மை டைரக்டா பிளேன்ல எரோபிரிஜ் மூலமா பிளேன்ல ஏத்துவாயிங்கன்னு நம்பி போனேன் அங்கேயும் பல்பு, நேரே எங்களை படிமூலமா கீழே இறக்கி பஸ்சுல ஏறசொன்னாங்க [[அவ்வ்வ்வ்]] பஸ்சுல ஏசியும் கிடையாது மண்ணும் கிடையாது, [[ஏர் இந்தியா ஏர்வேஸ் ஒழிக]] நாலு கிலோமீட்டர் தள்ளி நின்ன ஒரு சக்கடா பிளேன்ல ஏனியில ஏறவச்சிட்டாங்க ம்ஹும் [[நல்லவேளை கயிறை தொங்கபோட்டு  ஏறவைக்கல]]

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் கொஞ்சூண்டு சாப்பாடு மட்டும்தான் தருவார்கள். மேலும் நமக்கு டிரிங்க்ஸ் சம்திங் வேணும்னா காசு கொடுத்து வாங்கணும். என் அருகில் இருந்த வட இந்தியன் ஒருவர் என்னிடம் விசாரித்தார், டிரிங்க்ஸ் என்ன விலைன்னு தெரியுமான்னு, நான் எல்லாம் தெரிஞ்சவன் போல சொன்னேன் நிறைய காசு இருக்கும் வாங்காதேன்னு, அவனும் அப்பிடியான்னு கேட்டுகிட்டான்.

சாப்பாடு வந்தது சாப்பிட்டோம், அப்புறமா பீர், பக்கார்டி ஒயிட் ரம், ஒயின் சகிதம் வந்தது கேஷ் ஒன்லின்னு, வட இந்தியன் நேரே ஏர்ஹோஸ்டல் கிட்டே கேட்டேவிட்டான் எம்புட்டு விலைன்னு அவ்வ்வ்வ்..... ரொம்ப சீப்பான ரேட், பக்கார்டி மினியேச்சர் ஒரு தினார், பீர் பாதி தினார். சாதாரணமா வெளியே வாங்குனா மினி பக்கார்டி ரெண்டரை தினார்...

என்னை முறைச்சான் பாருங்க முறைப்பு [[பல்பு]] முறைச்சிட்டு, அஞ்சி மினி பக்கார்டி பாட்டலும் ஒரு பீரும் வாங்கிட்டு என்னை மறுபடியும் முறைத்தான், எப்பா குடிச்சிட்டு வானத்துலையே கலாட்டா பண்ணிருவானோன்னு பயம் வேற, குடிக்கிறவன் நேரே இருந்து குடிக்கவேண்டியதுதானே, என்னையே முறச்சி முறச்சி பார்த்தா என்னவாகிறது..???

அந்த வட இந்தியன் போட்டோதான் மேலே இருப்பது, பிளேன்ல கூடிப்போனா அம்பது பேர்தான் இருந்திருப்போம், எல்லா இருக்கைகளும் காலியாக கிடந்தன. பின்னே ஏர் இந்தியாவா கொக்கா கொய்யால, கூடியவரை ஏர் இந்தியா'வை புறக்கணிப்பதே நல்லது எனப்பட்டது.

டிஸ்கி : அப்பாடா தொடர் முடிஞ்சது தப்பிச்சிகிட்டீங்க [[நோ நோ கல்லெல்லாம் எடுக்கப்டாது]]


51 comments:

 1. பல்பு முடிஞ்சாச்சா?அங்கே போய் ஒண்ணும் பாக்கி இல்லையே?

  ReplyDelete
 2. சென்னை பித்தன் said...
  பல்பு முடிஞ்சாச்சா?அங்கே போய் ஒண்ணும் பாக்கி இல்லையே?//  ஹி ஹி முடிஞ்சது தல....

  ReplyDelete
 3. இவருக்கு ஓசில வாங்கி கொடுத்தா அவங்க நல்லவங்க...இல்லன்னா கெட்டவங்க என்றா உன் ஞாயம்!

  ReplyDelete
 4. இவளவுதானா?

  உங்களிடத்தில் இன்னும் நிறைய எதிர்பார்கிறோம்!!

  ReplyDelete
 5. செங்கோவி said...
  நன்றி. //  அருவா.....ஹி ஹி...

  ReplyDelete
 6. NAAI-NAKKS said...
  When the next bulb starts ??//

  அவ்வவ்வ்வ்வ்...

  ReplyDelete
 7. விக்கியுலகம் said...
  இவருக்கு ஓசில வாங்கி கொடுத்தா அவங்க நல்லவங்க...இல்லன்னா கெட்டவங்க என்றா உன் ஞாயம்!//  நல்லவங்களை பாராட்டினா என்னடா தப்பு, ராஸ்கல் பிச்சிபுடுவேன்....

  ReplyDelete
 8. குடிமகன் said...
  இவளவுதானா?

  உங்களிடத்தில் இன்னும் நிறைய எதிர்பார்கிறோம்!!//  அடபாவிகளா உருப்பட விடமாட்டீங்களோ....

  ReplyDelete
 9. பல்பு இன்னும் கொஞ்சம்
  எரிஞ்சிருக்கலாம்
  நன்று நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. என்ன்ண்ணே! மூணுப் பதிவோட முடிச்சுட்டீங்க.

  ReplyDelete
 11. பின்னே ஏர் இந்தியாவா கொக்கா கொய்யால, கூடியவரை ஏர் இந்தியா'வை புறக்கணிப்பதே நல்லது எனப்பட்டது.
  >>
  மைண்ட்ல வச்சுக்க்குறோம் அண்ணே

  ReplyDelete
 12. புலவர் சா இராமாநுசம் said...
  பல்பு இன்னும் கொஞ்சம்
  எரிஞ்சிருக்கலாம்
  நன்று நன்றி!

  புலவர் சா இராமாநுசம் //

  ஹா ஹா ஹா ஹா....நன்றி..

  ReplyDelete
 13. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  அப்பாடா ...//

  தப்பிச்சிட்டாருய்யா...

  ReplyDelete
 14. ராஜி said...
  என்ன்ண்ணே! மூணுப் பதிவோட முடிச்சுட்டீங்க.//  இதுக்கே அண்ணன் பட்டபாடு பெரும்பாடு இன்னுமா அழுதுருவேன்...

  ReplyDelete
 15. ராஜி said...
  பின்னே ஏர் இந்தியாவா கொக்கா கொய்யால, கூடியவரை ஏர் இந்தியா'வை புறக்கணிப்பதே நல்லது எனப்பட்டது.
  >>
  மைண்ட்ல வச்சுக்க்குறோம் அண்ணே//

  ஹா ஹா ஹா ஹா ரைட்டு...

  ReplyDelete
 16. ஏன் அண்ணே அதுக்குள்ள முடிச்சுடீங்க!!? யாராவது மிரட்டினான்களா?

  இன்னும் ஏரோபிளேன் டேக் ஆப் ஆகலையே?? இல்ல அதுக்கப்பறம் எதுவும் பல்ப் வாங்கலியா # சந்தேகம்

  ReplyDelete
 17. மக்கா., ஏதாவது பல்பு மறந்து போச்சா பாருங்க..
  ஹ..ஹா...

  ReplyDelete
 18. //குடிக்கிறவன் நேரே இருந்து குடிக்கவேண்டியதுதானே, என்னையே முறச்சி முறச்சி பார்த்தா என்னவாகிறது..???//

  நீங்க எதுக்கு அவனையே உத்து பாத்துக்கிட்டிருந்தீங்க மிஸ்ட்டர்.?

  //பிளேன்ல கூடிப்போனா அம்பது பேர்தான் இருந்திருப்போம்//

  உங்க கண்ணுக்கு 50 பேரா தெரிஞ்சது அந்த வடநாட்டுக்காரன் கண்ணுக்கு 100 பேரா இல்ல தெரிஞ்சிருக்கும்.!

  ReplyDelete
 19. வணக்கம் அண்ணே,
  இருங்க படிச்சிட்டு வாரேன்...

  ReplyDelete
 20. தினார் வாங்கமாட்டோம் ஒன்லி இந்தியன் மணி அல்லது யு எஸ் டாலர்தான் வாங்குவோம்னு கறாரா சொல்லிட்டான். நான் ஒட்டுமொத்தமா எல்லா காசையும் தினாரா மாற்றி வச்சிட்டேன். இனி மாற்றவும் முடியாது காரணம் இமிகிரேஷன், செக்யூரிட்டி செக்கிங் தாண்டி வந்தாச்சுன்னா வெளியே போக அனுமதி இல்லை. ஸோ பல்பு....//

  அடப் பாவமே சாப்பாட்டுக்கும் பல்பா...

  முடியலை தல........

  எவ்ளோ கொடுமை..

  எல்லாமே ப்ளான் பண்ணிப் பண்ணியிருப்பாங்களோ என்று தோணுது............

  ReplyDelete
 21. யாராவது இப்பிடி வெளிநாடு போகும்போது மொத்தமா காசை சேன்ஜ் பண்ணிறாதீங்க. ஏன்னா பிளேன் எப்போ எந்தநேரம் லேட்டாகும்னு சொல்லமுடியாது. [[பாம் புரளி பேஷனா இருக்கும் காலம் இது]] சின்னகுழந்தைகள் வச்சிருக்கவிங்க இன்னும் ஜாக்கிரதை. //

  இதான் அனுபவம் பேசும் என்பதா?

  அவ்.........

  ReplyDelete
 22. என்னை முறைச்சான் பாருங்க முறைப்பு [[பல்பு]] முறைச்சிட்டு, அஞ்சி மினி பக்கார்டி பாட்டலும் ஒரு பீரும் வாங்கிட்டு என்னை மறுபடியும் முறைத்தான், எப்பா குடிச்சிட்டு வானத்துலையே கலாட்டா பண்ணிருவானோன்னு பயம் வேற, குடிக்கிறவன் நேரே இருந்து குடிக்கவேண்டியதுதானே, என்னையே முறச்சி முறச்சி பார்த்தா என்னவாகிறது..???//

  ஆய்...நம்ம மனோ அண்ணா நல்ல பிள்ளையாகிட்டாரே............

  ReplyDelete
 23. டிஸ்கி : அப்பாடா தொடர் முடிஞ்சது தப்பிச்சிகிட்டீங்க [[நோ நோ கல்லெல்லாம் எடுக்கப்டாது]]//

  ஹா...ஹா...இது ஓவர் குசும்பு.........

  ReplyDelete
 24. மிகுதி பல்ப்புக்கள் எப்போ வரும்??
  மறைக்காதீங்க பாஸ் இன்னும் இருக்கும் இல்ல

  ReplyDelete
 25. முடிஞ்சுடுத்தா? அவ்வளவுதான பல்ப்? நான் இன்னும் நிறைய எதிபார்த்தேனே!

  ReplyDelete
 26. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  ஏன் அண்ணே அதுக்குள்ள முடிச்சுடீங்க!!? யாராவது மிரட்டினான்களா?

  இன்னும் ஏரோபிளேன் டேக் ஆப் ஆகலையே?? இல்ல அதுக்கப்பறம் எதுவும் பல்ப் வாங்கலியா # சந்தேகம்

  ஹா ஹா ஹா ஹா.....

  ReplyDelete
 27. வேடந்தாங்கல் - கருன் *! said...
  மக்கா., ஏதாவது பல்பு மறந்து போச்சா பாருங்க..
  ஹ..ஹா...//

  ஆமாய்யா சொல்ல மறந்துட்டேன், பிளேன்ல கடைசி சீட்டை எனக்கு தந்தாணுக....

  ReplyDelete
 28. சத்ரியன் said...
  //குடிக்கிறவன் நேரே இருந்து குடிக்கவேண்டியதுதானே, என்னையே முறச்சி முறச்சி பார்த்தா என்னவாகிறது..???//

  நீங்க எதுக்கு அவனையே உத்து பாத்துக்கிட்டிருந்தீங்க மிஸ்ட்டர்.?

  //பிளேன்ல கூடிப்போனா அம்பது பேர்தான் இருந்திருப்போம்//

  உங்க கண்ணுக்கு 50 பேரா தெரிஞ்சது அந்த வடநாட்டுக்காரன் கண்ணுக்கு 100 பேரா இல்ல தெரிஞ்சிருக்கும்.!//

  அட ஆமால்ல....

  ReplyDelete
 29. நிரூபன் said...
  வணக்கம் அண்ணே,
  இருங்க படிச்சிட்டு வாரேன்...//  நீங்களும் பல்பு வாங்க போறீங்களா...?

  ReplyDelete
 30. நிரூபன் said...
  தினார் வாங்கமாட்டோம் ஒன்லி இந்தியன் மணி அல்லது யு எஸ் டாலர்தான் வாங்குவோம்னு கறாரா சொல்லிட்டான். நான் ஒட்டுமொத்தமா எல்லா காசையும் தினாரா மாற்றி வச்சிட்டேன். இனி மாற்றவும் முடியாது காரணம் இமிகிரேஷன், செக்யூரிட்டி செக்கிங் தாண்டி வந்தாச்சுன்னா வெளியே போக அனுமதி இல்லை. ஸோ பல்பு....//

  அடப் பாவமே சாப்பாட்டுக்கும் பல்பா...

  முடியலை தல........

  எவ்ளோ கொடுமை..

  எல்லாமே ப்ளான் பண்ணிப் பண்ணியிருப்பாங்களோ என்று தோணுது............

  //
  சிபி பயல் சதி பண்ணியிருப்பானோ சந்தேகமா இருக்கு...

  ReplyDelete
 31. நிரூபன் said...
  யாராவது இப்பிடி வெளிநாடு போகும்போது மொத்தமா காசை சேன்ஜ் பண்ணிறாதீங்க. ஏன்னா பிளேன் எப்போ எந்தநேரம் லேட்டாகும்னு சொல்லமுடியாது. [[பாம் புரளி பேஷனா இருக்கும் காலம் இது]] சின்னகுழந்தைகள் வச்சிருக்கவிங்க இன்னும் ஜாக்கிரதை. //

  இதான் அனுபவம் பேசும் என்பதா?

  அவ்.........

  //

  ஹா ஹா ஹா ஹா எப்பூடி...

  ReplyDelete
 32. நிரூபன் said...
  என்னை முறைச்சான் பாருங்க முறைப்பு [[பல்பு]] முறைச்சிட்டு, அஞ்சி மினி பக்கார்டி பாட்டலும் ஒரு பீரும் வாங்கிட்டு என்னை மறுபடியும் முறைத்தான், எப்பா குடிச்சிட்டு வானத்துலையே கலாட்டா பண்ணிருவானோன்னு பயம் வேற, குடிக்கிறவன் நேரே இருந்து குடிக்கவேண்டியதுதானே, என்னையே முறச்சி முறச்சி பார்த்தா என்னவாகிறது..???//

  ஆய்...நம்ம மனோ அண்ணா நல்ல பிள்ளையாகிட்டாரே............//

  விடுங்க விடுங்க ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 33. நிரூபன் said...
  டிஸ்கி : அப்பாடா தொடர் முடிஞ்சது தப்பிச்சிகிட்டீங்க [[நோ நோ கல்லெல்லாம் எடுக்கப்டாது]]//

  ஹா...ஹா...இது ஓவர் குசும்பு.........//


  ஹே ஹே ஹே ஹே குசும்புக்கே குசும்பு....

  ReplyDelete
 34. எவ்ளோ பல்பு! ச்சே! அதென்னது கூட்டமே இல்லாம பிளேன்ல! ஓ! நீங்கதான் லாஸ்ட் ஸ்டாப்பிங்கா? :-)

  ReplyDelete
 35. துஷ்யந்தன் said...
  மிகுதி பல்ப்புக்கள் எப்போ வரும்??
  மறைக்காதீங்க பாஸ் இன்னும் இருக்கும் இல்ல//  அடப்பாவி நான் என்ன கைபிள்ளையா...?

  ReplyDelete
 36. RAMVI said...
  முடிஞ்சுடுத்தா? அவ்வளவுதான பல்ப்? நான் இன்னும் நிறைய எதிபார்த்தேனே//


  அவ்வ்வ்வவ் முடியல..

  ReplyDelete
 37. ] பஸ்சுல ஏசியும் கிடையாது மண்ணும் கிடையாது//ஏஸி இல்லை. சரி விளங்குது. மண் எதுக்கு???? டவுட்???!!!
  வட இந்திய ஆள் பக்கத்தில் இருந்ததா சொன்னீங்க. ஆனா படத்தில் தூரமா இருக்கிறாரே!!! உங்க தொல்லை தாங்காம ஓடிப் போய்ட்டாரா???

  ReplyDelete
 38. ஜீ... said...
  எவ்ளோ பல்பு! ச்சே! அதென்னது கூட்டமே இல்லாம பிளேன்ல! ஓ! நீங்கதான் லாஸ்ட் ஸ்டாப்பிங்கா? :-)//


  ஆமாய்யா அங்கேயும் பல்பு தந்துட்டாயிங்க...

  ReplyDelete
 39. vanathy said...
  ] பஸ்சுல ஏசியும் கிடையாது மண்ணும் கிடையாது//ஏஸி இல்லை. சரி விளங்குது. மண் எதுக்கு???? டவுட்???!!!
  வட இந்திய ஆள் பக்கத்தில் இருந்ததா சொன்னீங்க. ஆனா படத்தில் தூரமா இருக்கிறாரே!!! உங்க தொல்லை தாங்காம ஓடிப் போய்ட்டாரா???///

  1 : மண்ணுன்னா கோபம் ஹி ஹி...
  2 : பிளேன்ல சீட் எல்லாம் காலியா இருந்துச்சி, எங்கேவேணா உக்காரலாம். ஒருவேளை என்னைப்பார்த்தும் ஜெர்க்காகி ஓடியிருக்கலாம்...

  ReplyDelete
 40. ங்கொய்யால மசலா தோசைல மசாலா சூடா இல்லியா? என்ன அநியாயம்யா இது...!

  ReplyDelete
 41. நல்லா பகார்டிய அடிச்சுப்புட்டு கடைசில அது வட இந்தியனா? அதுக்கு போட்டோ ஆதாரம் வேற? அப்பவே எங்களுக்கு மேட்டர் வெளங்கிருச்சுண்ணே.....

  ReplyDelete
 42. எப்படியோ இத்தன பல்புகளுக்கு இடையிலயும் ஒரு ஓசி தோச கெடச்சதே? பகார்டிக்கு யார் காசு கொடுத்தா? அந்த மலையாளி வெவரமா வேற சீட் நம்பர் வாங்கி வெச்சிருந்தாரா?

  ReplyDelete
 43. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ங்கொய்யால மசலா தோசைல மசாலா சூடா இல்லியா? என்ன அநியாயம்யா இது...!//  ஃபிரீசர்ல இருந்து அப்பிடியே எடுத்து தந்துட்டான்ய்யா...

  ReplyDelete
 44. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நல்லா பகார்டிய அடிச்சுப்புட்டு கடைசில அது வட இந்தியனா? அதுக்கு போட்டோ ஆதாரம் வேற? அப்பவே எங்களுக்கு மேட்டர் வெளங்கிருச்சுண்ணே.....//  யோவ் பப்ளிக் பப்ளிக்...

  ReplyDelete
 45. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  எப்படியோ இத்தன பல்புகளுக்கு இடையிலயும் ஒரு ஓசி தோச கெடச்சதே? பகார்டிக்கு யார் காசு கொடுத்தா? அந்த மலையாளி வெவரமா வேற சீட் நம்பர் வாங்கி வெச்சிருந்தாரா?//

  பக்கார்டிக்கு காசு அதை குடிச்சவன் குடுத்தான் ஹி ஹி

  ReplyDelete
 46. நான் ஆப்ரிக்கா போனப்போ மினரல் வாட்டர் பாட்டில் வாங்க ஏர்போர்ட்டில் ஒருகடைக்கு போனேன் இண்டியன் மணி கொடுத்தேன் நோ, நோ ஒன்லி யு எஸ் டாலர்கொடுன்னான்.ஒருபாட்டில் தண்ணி2 டாலராம் நம்ம கணக்குக்கு 95 ரூவா வரும். அதை ஒருவாய் குடிச்சுட்டு அந்தபாட்டிலை ஹேண்ட்பாக்கினுள் பத்திரப்படுத்த வேண்டி வந்தது.

  ReplyDelete
 47. அடடா... அதுக்குள்ள பல்பு பதிவு முடிஞ்சு போச்சே! :(

  இருந்தாலும் ஒண்ணு சொல்றேன் தல... ஒவ்வொரு பல்பும் என்னா பளிச்ச்..... :)

  அடிக்க எல்லாம் அங்கே இருந்து வரக்கூடாது.... ஆமா சொல்லிட்டேன்...

  ReplyDelete
 48. , கூடியவரை ஏர் இந்தியா'வை புறக்கணிப்பதே நல்லது எனப்பட்டது.

  நல்லது,,,

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!