Wednesday, September 21, 2011

பிரபல நடிகர்களுடன், பிரபல பதிவர்கள் சந்திப்பு பாகம் 2...


நடிகர் + பதிவர் லொள்ளு தொடருது....

ஐ ரா ரமேஷ் பாபு : நானும் பல சில மொக்கை பதிவுகளும், நல்ல பதிவுகளும் போட்டு நூத்தி அம்பது பதிவு தேத்திபுட்டேன். இவ்வளவுநாள் விஜய் படத்தை பார்த்து நொந்த நான், பதிவர்கள் சங்கம் சார்பாக நான் எழுதிய அத்தனை பதிவுகளையும் சின்ன டாகுட்டரை படிக்க வைக்கவேண்டுமென்று சபையோரை கேட்டு கொ[ல்]ள்கிறேன். [[விஜய்க்கு கண்ணில் மரண பயம் தெரிகிறது]]
 
பாலா : நண்பர் அந்நியன் 2 உள்பட நிறைய பேர் "தமிழ்மணம் பட்டை எங்கே?" என்று கேட்டிருக்கிறார்கள். முதல் காரணம் முதலில் இருந்தே அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. மற்றொரு காரணம், வெகு காலமாக அந்த பட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு வழியாக இணைத்து விட்டேன். ஆனால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டும் பதிவிற்கு மேலே இருக்கிறது. எப்படி கீழே கொண்டு வருவதென்று தெரியவில்லை.
 
விஜய் : என்னாது தமிழ்மணம் ஒரு தெலுங்கு சினிமா மாதிரி தெரியுது, ங்கனா சொல்லுங்க்னா நான் தமிழ்ல ரீமேக் பண்ணி நடிக்கிறேன்....
 
பன்னிகுட்டி : டேய் டகர வாயா இப்போதானேடா உன் நடிப்பை காரி துப்புனாங்க நீ அடங்கவே மாட்டியா...?? மாட்டு கொட்டகையில கொண்டுபோய் கட்டி வச்சிபுடுவேன் ஜாக்குரதை....
 
கஞ்சி பஜார் : ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நியுயோர்க்கிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க இராஜதந்திரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
சிபி : இந்த செய்தியை கேட்டதும் என் உள்ளம் உவகை கொள்கிறது அப்பிடியே அரெஸ்ட்டும் பண்ணிட்டா இன்னும் நல்லாயிருக்கும், ஆடுவெட்டி கொண்டாடுவேன்.
 
செல்வா : அண்ணே எனக்கும் மட்டன் சாப்பாடு உண்டுதானே...???
 
சிரிப்பு போலீஸ் : ஏ ஏ ஏ சாப்பாடு சாப்பாடு எங்கே எங்கே....??
 
கேப்டன் : எம்ஜியாருக்கு பிறகு, என்னை பார்க்க வரும் எல்லாருக்கும் சாப்பாடு போடும் ஒரே வள்ளல் நான்தான் என்பதை, நெப்போலியன் மீது சத்தியமாக சொல்லுறேன்.
 
ராமராஜன் : நான் எல்லாருக்கும் பசும்பால் தர்றதை ஏன் சொல்லமாட்டேங்குறீங்க..??
 
பவர் ஸ்டார் : என் படத்தை சாரி, நான் நடித்த படத்தை பார்த்துட்டு வெளியே [[உயிரோட]] வாறவங்களுக்கு நூறு கிராம் தங்கம் கொடுக்கலாம்னு இருக்கேன்.
 
ரத்தீஷ் : யாரடா அங்கே சவுண்ட் உடுறது...?? நாங்களும் வள்ளல்தான், தேர்தல் பிரச்சாரத்துக்கு வெயில்ல அலையனுமே அதுக்கு என்னா பண்ணனும்னு யோசிச்சி, பக்கத்துவீட்டுகாரனை அடிச்சி துவச்சிட்டு ஹாயாக ஜெயில்ல போயி இருந்தவன் நான் ஜாக்கிரதை.
 
கே ஆர் விஜயன் : ஆஹா நாம நினச்சா மாதிரி நெல்லை பஸ்டென்ட் ஓட ரெடி ஆகிரவேண்டியதுதான்னு நினைச்சிகிட்டே செருப்பை தேடுகிறார்.
 
சரத்குமார் : ஏ நாட்டாமை நானு இங்கே இருக்கோமுல்லோ, அப்புறம் எதுக்கு கீழே குனிஞ்சி செருப்பை தேடுற கண்ணு, டேய் பசுபதி என்றா நடக்கு இங்கே, தேங்காய் மாங்காய் எல்லாம் சரியா இருக்கா பாரு ஏன்னா ஆபீசர் உக்காந்துருக்கார் பெல்ட்டோட கவனிச்செல்ல...
 
இரவு வானம் : மறுபடியும் கேப்டனான்னு யாரும் நினைக்க வேண்டாம், எழுதாமலும் இருக்க முடியல, எல்லா மேயர் பதவிகள், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கு அம்மா வேட்பாளர் பட்டியலை அறிவிச்சிட்டாங்க, ஆனா இன்னும் நம்ம கேப்டனு வாய தொறக்காமலேயே இருக்காரு.
 
கேப்டன் : யாரடா அது மூலையில இருந்து கூவுறது...?? எல்லாம் எங்களுக்கு தெரியும்னு கண்ணுக்குள்ளே குத்தவர இரவுவானம் முகத்தை மூடிக்கொள்கிறார்.
 
விக்கி :
இந்த பரந்த பதிவுலகில் நீங்கள் நினைப்பதை சொல்ல ஒரு சந்தர்ப்பம்....பதிவுலகில் அரசியல்வாதிகளாக நீங்க நினைப்பவர் பெயரை சொல்லலாம்...இது ஒரு ஜாலி பதிவு....எனவே மனக்கசப்புகளை தள்ளி வைத்து விட்டு ஜாலியாக குறிப்பிடவும்....

பதிவுலக ஜெ யார்...

கலைஞ்சர் ....

வைகோ....

விஜயகாந்த்...

ராமதாஸ்....

திருமா.....

சுவாமி....etc...
 
பன்னிகுட்டி : என்னடா கேள்வி இது, எவன் எவன் தான் யாருன்னு தெரியாமலே பெயரை மாத்திப்போட்டு எழுதிட்டு இருக்கானுக, வேண்ணா பாரு ஒரு பய பதில் சொல்லமாட்டான், ஒதுங்கி நின்னு வேடிக்கைதான் பார்ப்பானுவ..
 
சிபி : என்ன அப்பிடி சொல்லிபுட்டீங்க..? என்னை மட்டும் நான் கலைஞர்னு, நாதாரி மனோ சொல்லியிருக்கானே அதெப்பிடி..???
 
மகேந்திரன் :
கொக்கரிக்கும் சேவலொன்னு
குயிலுபோல கூவுச்சு!
ஜொலிஜொலிக்கும் நட்சத்திரம்
காலையில எழுப்புச்சி!
ரோட்டோர புளியமரம்
கொடுக்காப்புளி காச்சுது!!
பிறந்ததுமே குழந்தையுமே
தாலாட்டு பாடுச்சு!
வருடமொரு பத்துபோக
விளைச்சலங்கே கிடைச்சுது!!
 
ராமராஜன் : அய்யய்யோ எனக்கும் எங்க ஊர் ஞாபகம் வந்துருச்சி, நானும் பாட்டு பாடப்போறேன்....
 
ஆபீசர் : திவானந்தா அவனைப்பிடி அவனைப்பிடி அவன் பாட்டுன்னு சொல்றது, வைகாசி மாசம் படத்துல கனகராஜ் சொல்லுற மேட்டர், மீட்டிங் முடியுரவரை வெளியே விட்டுறாதே.
 
தமிழ்வாசி : ஆஹா இன்னைக்கு எவன் எல்லாம் சிக்கி சில்லறை ஆகப் போராயிங்களோ முடியலைடா சாமீ....
 
எம் ஆர் : இயற்கை என்பது ஒரு அற்புதமான விஷயம்.........ஆபீசர் பெல்ட்டை அளந்து பார்க்கவே எம் ஆர் சைலன்ட் ஆகிறார்.
 
பிரபாகரன் : அய்யய்யோ வெள்ளி,சனி, ஞாயிறு அயிட்டத்த காணவில்லையா, எவன் களவாண்டானோ தெரியலையே, என செல்வாவை பார்க்க...
 
செல்வா : சத்தியமா தெரியாது அண்ணே, நான் அதை யூஸ் பண்ணும் வயசுக்கே வரலையே அண்ணே.....
 
சிபி : கண்டிப்பா இது அந்த பன்னாடை மனோ வேலையாதான் இருக்கும்னு நினைக்கிறேன்...
 
விஜய் : யாராவது ஸ்பான்சர் இருந்தா சொல்லுங்க அந்த அயிட்டத்துக்கு விளம்பர மாடலா நடிக்கிறேன்..
 
பன்னிகுட்டி : அதுக்கு கூட நீ லாயக்கு கிடையாதுடா டா டா டா டா டட்டடா...
 
அஜித் : நான் பேஸ்போறேன், நான் அம்பது படம் நடிச்சாச்சு அதனால நானும் ரஜினி மாதிரி ரிஷிகேசம், ரிஷிமூலம்னு கிளம்பலாம்னு இருக்கேன், இங்கே இருந்தா மிரட்டுறாங்க அய்யா மிரட்டுறாங்க என சொல்லி ஆபீசர் மேல விழுந்து அழுறார்...
 
வாசலில் திடீர் பரபரப்பு......
 
டேய் என்னை கூப்பிடாம எவன்டா சந்திப்பு நடத்துறது, நான் எம்ஜியாரை எதிர்த்து ஜெயலலிதாவை எதிர்த்து கலைஞரை எதிர்த்து போராடி வாழ்ந்துகிட்டு இருக்கேன், என்னை எப்பிடி கூப்பிடாம நீங்க கூட்டம் நடத்தலாம்னு சவுண்ட் வர பார்த்தா டி ராஜேந்தர் வீராச்சாமி அருவாளோடு உள்ளே வர, நிரூபனும், கரனும் ஓடி வருகிறார்கள் ஐயோ....... மன்சூர் அலிகானும், பேரரசுவும் லுங்கியோட ஓடிவாராயிங்கலாம்னு சொன்னதுதான் தாமதம், கே ஆர் விஜயன் செருப்பை கையில் எடுத்து கொண்டு ஜன்னலில் தாவிகுதித்து ஓடுகிறார்.....
 
அதிர்ச்சில சிபி, கீழே விழுந்த மொபைலை கூட எடுக்காமல் விக்கியை மோதி தள்ளிவிட்டு ஓடுகிறான், மகா தைரியசாலியான அவன் ஓடுவதை கண்டு மொத்தக்கூட்டமும் குய்யோ முய்யோனு அலறிட்டு ஓடுறாங்க தெருவுல...
 
ஆபீசரும் அவர் பாடிகார்ட் திவானந்தாவும், டி ராஜேந்தரை முறச்சி பார்த்துட்டே புல்லட்டில் கிளம்புகிறார்கள். பாக்கி எல்லோரும் ஓடும் விதத்தை கண்டு, எருமைநாயக்கன்பட்டி அதிர்ச்சியோடு பார்த்து விக்கித்து நின்றது.
 
டிஸ்கி : தமாசு சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க.
 
டிஸ்கி : இனி வருவது அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்...!!!


59 comments:

 1. மனோ கலக்கல்ய்யா....அதுவும் அந்த மகா தைரியசாலி ஓடுனாரு பாரு அங்க நிக்கற நீ ஹிஹி!

  ReplyDelete
 2. மக்கா சூப்பரு...... தமிழ்மணம் ம்ஹும் முடியல

  ReplyDelete
 3. விக்கியுலகம் said...
  மனோ கலக்கல்ய்யா....அதுவும் அந்த மகா தைரியசாலி ஓடுனாரு பாரு அங்க நிக்கற நீ ஹிஹி!//


  ஹா ஹா ஹா ஹா மொபைல கூட எடுக்காம ஒடுனாம்னா அவன் எம்புட்டு தகிரியசாலி...?

  ReplyDelete
 4. தமிழ்வாசி - Prakash said...
  மக்கா சூப்பரு...... தமிழ்மணம் ம்ஹும் முடியல//

  முடியலைன்னா முக்குய்யா...

  ReplyDelete
 5. இங்கயே வறுத்து எடுத்தாச்சு அப்பா அடுத்த பதிவுல...

  ReplyDelete
 6. ஜாலியாவே எடுத்துக்கிட்டோம்..

  ReplyDelete
 7. நெப்போலியன் மீது சத்தியமாக சொல்லுறேன்.................//////////////////////

  நெப்போலியன் தி.மு.க.ஆச்சே ..........அவர் மேலே இவர் ஏன் சத்தியம் பண்ணனும் ?

  வேணும்னா அவர் ரேஞ்சுக்கு மானிடர் மேல சத்தியம் பண்ணட்டும் ...........

  ReplyDelete
 8. suryajeeva said...
  இங்கயே வறுத்து எடுத்தாச்சு அப்பா அடுத்த பதிவுல...


  எடுத்து வருத்துரவேண்டியதுதான்...

  ReplyDelete
 9. வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஜாலியாவே எடுத்துக்கிட்டோம்..//

  அலப்பறையை வாசிக்கலை போல...

  ReplyDelete
 10. அஞ்சா சிங்கம் said...
  நெப்போலியன் மீது சத்தியமாக சொல்லுறேன்.................//////////////////////

  நெப்போலியன் தி.மு.க.ஆச்சே ..........அவர் மேலே இவர் ஏன் சத்தியம் பண்ணனும் ?

  வேணும்னா அவர் ரேஞ்சுக்கு மானிடர் மேல சத்தியம் பண்ணட்டும் ...........//


  அப்போ ஒல்ட்மெங் யார் ஆளாம்....

  ReplyDelete
 11. இனி வருவது அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்...!!!///////////////

  ரொம்ப வருக்க வேண்டாம் . லேசா பொன் வறுவலா வருதா போதும் ............
  கருகிடபோறாங்க பார்த்து ...............

  ReplyDelete
 12. ஹிஹி நல்ல காலம், என்ர தலை உருளல )))

  ReplyDelete
 13. கலக்கல் அரட்டை மக்களே,,,
  இதிலே நானுமா....

  ReplyDelete
 14. நீங்க கலக்குங்க தலிவா ??

  ReplyDelete
 15. நம்மளையும் டாக்குடரோடு கோர்த்து ஊட்டுட்டீங்களே?...

  ReplyDelete
 16. அஞ்சா சிங்கம் said...
  இனி வருவது அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்...!!!///////////////

  ரொம்ப வருக்க வேண்டாம் . லேசா பொன் வறுவலா வருதா போதும் ............
  கருகிடபோறாங்க பார்த்து ...........//


  என்னே ஒரு பாசம் பதிவர்கள் மீது ஹி ஹி....

  ReplyDelete
 17. கந்தசாமி. said...
  ஹிஹி நல்ல காலம், என்ர தலை உருளல )))

  ReplyDelete
 18. கந்தசாமி. said...
  ஹிஹி நல்ல காலம், என்ர தலை உருளல )))//


  ஆஹா தப்பிச்சிட்டாரே....

  ReplyDelete
 19. ஹா ஹா ஹா செம மாஸ் னா

  ReplyDelete
 20. மகேந்திரன் said...
  கலக்கல் அரட்டை மக்களே,,,
  இதிலே நானுமா....//


  பின்னே நீங்களும் என் நண்பன் அல்லவா ஹே ஹே விடுவேனா என்ன..

  ReplyDelete
 21. NAAI-NAKKS said...
  நீங்க கலக்குங்க தலிவா ??//

  நன்றிங்க்னோ...

  ReplyDelete
 22. பாலா said...
  நம்மளையும் டாக்குடரோடு கோர்த்து ஊட்டுட்டீங்களே?...//

  ஹா ஹா ஹா ஹா மாட்னீங்களா...

  ReplyDelete
 23. சென்னை பித்தன் said...
  வெளையாடுங்க!//


  ஹா ஹா ஹா ஹா தல....நன்றி....

  ReplyDelete
 24. ஹி ஹி கேப்டன நினைச்சாலே பொங்குதுன்னே, ஆனா அதை எழுத நினைச்சாலே வார்த்தை, அந்த வார்த்தைதான் வர மாட்டேங்குது, நொப்போலியன் நொப்போலியன்...ஆங்ங்க்க்க்க்

  ReplyDelete
 25. Prabu Krishna said...
  ஹா ஹா ஹா செம மாஸ் னா//


  ஹா ஹா ஹா ஹா அடி தூள்....

  ReplyDelete
 26. இரவு வானம் said...
  ஹி ஹி கேப்டன நினைச்சாலே பொங்குதுன்னே, ஆனா அதை எழுத நினைச்சாலே வார்த்தை, அந்த வார்த்தைதான் வர மாட்டேங்குது, நொப்போலியன் நொப்போலியன்...ஆங்ங்க்க்க்க்//


  அபிராமி அபிராமின்னு கும்பிடுங்க ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 27. ஹய்யோ ஹய்யோ

  கலக்கல் நண்பரே

  சரி சரி இப்ப யாரும் இல்ல

  அதாவது இயற்கை என்றால் என்னென்னா .....

  ஐயய்யோ திரும்ப யாரோ வர மாதிரி
  இருக்கே ! மீ எஸ் ....

  ReplyDelete
 28. வறுத்தெடுக்கிறதில சூப்பர் ஆளுதான் நீங்க... பாவம் சிபி

  ReplyDelete
 29. //இனி வருவது அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்...!!//

  மறுபடியுமா

  ReplyDelete
 30. M.R said...
  ஹய்யோ ஹய்யோ

  கலக்கல் நண்பரே

  சரி சரி இப்ப யாரும் இல்ல

  அதாவது இயற்கை என்றால் என்னென்னா .....

  ஐயய்யோ திரும்ப யாரோ வர மாதிரி
  இருக்கே ! மீ எஸ் ...//


  ஆபீசர் என் கண்ணுக்குள்ளேயே எப்பவும் பெல்ட் கழட்டிட்டு நிக்குறார், தப்பு செய்யவே எனக்கு பயமா இருக்கு, உங்களை விடுவாரா என்ன ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 31. மதுரன் said...
  வறுத்தெடுக்கிறதில சூப்பர் ஆளுதான் நீங்க... பாவம் சிபி//

  என்னாது சிபி பாவமா, அவன் எப்பிடிபட்ட ஆளுன்னு எனக்குதானே தெரியும் ஹி ஹி...

  ReplyDelete
 32. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ரைட்டு.//


  இவரு என்னைக்கு மாட்டப்போராரோ...

  ReplyDelete
 33. மதுரன் said...
  //இனி வருவது அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்...!!//

  மறுபடியுமா//


  நான் சொன்னது அரசியல்வாதிங்களை...

  ReplyDelete
 34. செம கலக்கல் நண்பா!நல்லா சிரிச்சேன்!

  ReplyDelete
 35. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  செம கலக்கல் நண்பா!நல்லா சிரிச்சேன்!//


  ஹா ஹா ஹா ஹா நிரூபனை இன்னும் காணல....

  ReplyDelete
 36. நடக்கட்டும் நடக்கட்டும்.... எல்லாரையும் வாரியாச்ச்சு... அடுத்த ரவுண்ட் வேறயா... ஹா... ஹா... ஹாஆஆஆஆ.....

  ReplyDelete
 37. ம்ம் நீங்க உங்க ஆட்டத்தை ஆடுங்க...உங்க ப்ரொபைல் படத்தை பார்க்கும் போது கவுண்டமணி ஞாபகம் வருது சார்...

  என் சமையலை செய்து பார்த்து ருசித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி சார்...

  ReplyDelete
 38. தைரியசாலியவே ஓடவெச்சிட்டீங்களேப்பா...?

  ReplyDelete
 39. எப்படியோ கரடி வந்ததால எல்லாரும் தப்பிச்சிட்டோம்......

  ReplyDelete
 40. விக்கியை கலாய்ச்சாது தான் ரொம்பவும் தத்ரூபமா இருந்தது...

  ReplyDelete
 41. அப்படியே படிச்சிட்டே வந்தா, அட நானும் இருக்கேன்... நன்றி தல...

  ReplyDelete
 42. ஹி.ஹி.ஹி.ஹி..சூப்பர் பாஸ்..

  ReplyDelete
 43. ஜூப்பரு...

  #ஹி ஹி ஹி....
  ஆபீசர் பெல்ட அளக்குறாரோ?

  ReplyDelete
 44. அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்...!!!/

  பொன் வறுவல்? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 45. //இனி வருவது அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்..//


  ம்ம்ம் சீக்கிரம்..
  நமக்கும் பொழுது போகணும்ல..

  ReplyDelete
 46. சே.குமார் said...
  நடக்கட்டும் நடக்கட்டும்.... எல்லாரையும் வாரியாச்ச்சு... அடுத்த ரவுண்ட் வேறயா... ஹா... ஹா... ஹாஆஆஆஆ.....//

  என்னல்லாம் நடக்கப் போகுதோ அடுத்த ரவுண்டில்.....!!!

  ReplyDelete
 47. S.Menaga said...
  ம்ம் நீங்க உங்க ஆட்டத்தை ஆடுங்க...உங்க ப்ரொபைல் படத்தை பார்க்கும் போது கவுண்டமணி ஞாபகம் வருது சார்...

  என் சமையலை செய்து பார்த்து ருசித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி சார்...//

  என்னாது கவுண்டமணியா.....??? யார்லேய் அங்கே எட்றா அந்த அருவாளை, ஒரு டெறரை பார்த்து பேசுற பேச்சா இது ம்ஹும்...

  சாப்பாடு பிரம்மாதம் மேடம், என் வீட்டம்மா இப்பவும் உங்க பதிவுகளை படிச்சு பார்த்து பிள்ளைங்களுக்கு சமைச்சு குடுக்குறதா சந்தோஷமா சொல்வாள் நன்றி...

  ReplyDelete
 48. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தைரியசாலியவே ஓடவெச்சிட்டீங்களேப்பா...?//


  ராஸ்கல் அவன் வாங்காத அடியா...?? அவனே ஓடும்போது மற்ரவிங்க???

  ReplyDelete
 49. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  எப்படியோ கரடி வந்ததால எல்லாரும் தப்பிச்சிட்டோம்......//


  கரடி மட்டுமா, மன்சூர் மற்றும் பேரரசு விளங்குமா???

  ReplyDelete
 50. Philosophy Prabhakaran said...
  விக்கியை கலாய்ச்சாது தான் ரொம்பவும் தத்ரூபமா இருந்தது...//


  விக்கி கேள்விக்கு இதுவரை ஒருத்தரும் பதில் சொல்லலை ஹி ஹி...

  ReplyDelete
 51. Philosophy Prabhakaran said...
  அப்படியே படிச்சிட்டே வந்தா, அட நானும் இருக்கேன்... நன்றி தல...//


  ஹா ஹா ஹா ஹா கண்டம் சாரி காண்டம்....

  ReplyDelete
 52. K.s.s.Rajh said...
  ஹி.ஹி.ஹி.ஹி..சூப்பர் பாஸ்..//


  நன்றியெல்லாம் எதுக்கு ஒரு ஃபிரிஜ், லேப்டாப் இருந்தா தாங்களேன் ஹி ஹி...

  ReplyDelete
 53. வெளங்காதவன் said...
  ஜூப்பரு...

  #ஹி ஹி ஹி....
  ஆபீசர் பெல்ட அளக்குறாரோ?//


  ஏ யப்பா எனக்கு அவரை பார்த்தா எப்பவும் கிடிகிடுதான் ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 54. இராஜராஜேஸ்வரி said...
  அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்...!!!/

  பொன் வறுவல்? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 55. இராஜராஜேஸ்வரி said...
  அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்...!!!/

  பொன் வறுவல்? வாழ்த்துக்கள்.//


  வருக்கனும்னு ஆயாச்சு இதுல பொன் வருவலாவது, போன் வருவலாவது ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 56. இந்திரா said...
  //இனி வருவது அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்..//


  ம்ம்ம் சீக்கிரம்..
  நமக்கும் பொழுது போகணும்ல..

  ReplyDelete
 57. இந்திரா said...
  //இனி வருவது அரசியல்வாதிகள் பிளஸ் பதிவர்கள் சந்திப்பு, இதில் பலர் ஹி ஹி வருத்தெடுக்கபடுவார்..//


  ம்ம்ம் சீக்கிரம்..
  நமக்கும் பொழுது போகணும்ல..//


  அவ்வவ்வ்வ்வ் அவ்வ்வ்வவ்வ்வ் அவ்வவ்வ்வ்வ்....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!