Monday, October 3, 2011

குடி சாவியையும் தொலைக்கும்....!!!

 பொதுவாக பஹ்ரைனில் வேலை செய்யும் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு, ரெண்டு பேருக்கு ஒரு ரூம் வீதம் ஹோட்டல் நிர்வாகம் கொடுப்பது உண்டு, அப்படி தங்கியிருந்த ஆரம்ப காலத்துல நடந்த ஒரு சிரிப்பு சம்பவம்.

ஒரு நாள் அடுத்த ரூம் பாட்னர்களின் பார்ட்டி நடந்தது. பொதுவாக ரூம்ல தங்கி இருக்கும் மலையாளிகள் சொந்த அண்ணன் தம்பியா இருந்தாலும் கூட அவிங்க அவிங்க பெட்டியை பூட்டி சாவியை மறைத்து வைப்பது வழக்கம்.


நாலுபேர் கொண்ட பார்ட்டி, பார்ட்டி தொடங்கியது [[நான் ரொம்ப நல்லவன் முதல்லயே சொல்லிர்றேன், தக்காளி ரேஞ்சுக்கு நினச்சிராதீங்க]] முதலாவது ரவுண்ட் ரெட் லேபல் உள்ளே போனது, ஜாலியாக ஒருவரை ஒருவர் கலாயிக்க தொடங்கினார்கள்.

கூட வேலை பார்ப்பவர்களின், மேனேஜர்களின் டவுசர்கள் துகுலுரியப் பட்டன. ஜாலியாக பேச்சு நடந்து கொண்டிருந்தது, இரண்டாவது ரவுண்ட் போகவும் கரண்டும் உயிரை விட்ருச்சி....

எலக்ட்ரீசியன கூப்பிட்டு சரி செய்து விட்டு, டான்ஸ் ஆரம்பம் ஆச்சு, மூணாவது ரவுண்ட்ல கொஞ்சம் தள்ளாட்டம் ஆரம்பிச்சது, நாலாவது ரவுண்ட் எல்லாரும் நிக்கமுடியாமல் சோபாவில் உக்கார்ந்து கொண்டே நடனம் [[நடனமா அது..??]] செய்தார்கள்.


ஐந்தாவது ரவுண்ட் ரெண்டுபேர் மட்டையாகி சாய்ந்தார்கள், சாப்பாடு அவர்கள் வாயில் வலுகட்டாயமாக திணிக்கப் பட்டது. அதில் ஒருத்தன் ஆம்பிலேட்டும் போட்டுட்டான். எல்லாரும் சாப்பிட்டு [[எங்கே எல்லாம் அப்பிடியேதான் கிடந்தது]] கிளம்பினோம். நான் ஒருத்தனை தூக்கிட்டுதான் போனேன்.


அப்போது அதே ரூமில் தங்கியிருந்த நண்பன் அலறினான், என்னடான்னா டேய் சூட்கேஸ் சாவியை காணோம்டா'ன்னு சொல்ல தேடினோம் தேடினோம் கிடைக்கவே இல்லை, ரூமை சல்லடையாக போட்டு தேடியும் கிடைக்கவில்லை, சரி நாளை தேடலாம்னு சொன்னாலும் அவன் கேட்கவில்லை நாங்கள் போனபின்பும் விடிய விடிய தேடியும் சாவி கிடைக்கவில்லை.


இப்படியிருக்க, ஒரு ஆறேழு நாள் கழிச்சி இன்னொரு ரூம்ல பார்ட்டி நடந்தது. அங்கேயும் நாலு நண்பர்கள்தான், அவர்கள் சீட்டு விளையாடி கொண்டே சரக்கடித்தார்கள் [[எனக்கு சீட்டு விளையாட்டை கண்டாலே வாந்தி வாந்தியா வரும்]] முதல் ரவுண்டு போச்சு...

சீட்டு விளையாட்டு ஜோரா நடக்குது, அதில் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தான் நம்ம சாவி தொலைத்த நண்பன். இரண்டாவது ரவுண்ட் போக சீட்டு கட்டை வேகமா போட்டு விளையாடினார்கள், மூன்றாவது ரவுண்டும் போச்சு உள்ளே, சாவி தொலைத்தவன் ஒரு மாதிரியா செருமினான்.


மூணாவது ரவுண்டும் உள்ளே போனது, சீட்டின் வேகமும் கூடியது, நாலாவது ரவுண்ட் கிளாசில் ஊற்றி ஒரு சிப் குடித்த சாவி நண்பன், ஆங் என சொல்லி இருக்கையை விட்டு எழும்பினான் சீட்டை கீழே போட்டுவிட்டு, இதோ இப்போ வாறேன்னு சொல்லிட்டு அவன் ரூமை நோக்கி ஓடினான்...

நானும் அவன் பின்னால் அவனுக்கு தெரியாமல் போனேன், பயபுள்ள எங்கேயோ கைவிட்டான். எடுத்தது சாவியை, என்னடான்னு கேட்டேன் சாவி கிடச்சிருச்சுன்னு சொல்றான், நண்பர்களிடம் வந்து சொல்லி சிரி சிரின்னு சிரிச்சோம்...


என்னா நடந்துச்சுன்னா, முதல் நாள் பார்ட்டியில மூணாவது ரவுண்ட் அடிச்சதும் இவன், எங்கே ஓவரா குடிச்சி மட்டையாகிருவோமோ'ன்னு பயந்து யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் சாவியை மறைத்து வைக்க, பார்ட்டி முடிஞ்சதும் அடிச்ச மப்புல சாவி வச்ச இடத்தை மறந்துட்டான்.


இப்போ நடந்த பார்ட்டியில மூணாவது ரவுண்ட் அடிச்சதும் நியாபகம் வந்துருச்சி பயபுள்ளைக்கு, இப்பவும் யாராவது ஏதாவது தொலைச்சா எங்களுக்கு இவன் நியாபகம்தான் வரும், அப்படியே யாராவது எதையாவது தொலைச்சா முதல் கேள்வி நீ நேற்று எத்தனை பெக் அடித்தாய் என கேட்பது இப்பவும் எங்களுக்குள்ளே வழக்கமாக இருக்கிறது...!!!


"மனோ"தத்துவம் : அநேகமாயிரம் கார்கள் உருண்டோடினாலும், ரோடுகள் கவலைப்படுவதில்லை...!!! [[டியூட்டிக்கு ரோட்டில் நடந்தே போவோர் சங்கம்]]


61 comments:

 1. நல்லா தான் சாவி விளையாடுது...

  ReplyDelete
 2. தமிழ்வாசி - Prakash said... 1 2
  முதல்......//

  முதல் பேக் ஸாரி பெக்.....

  ReplyDelete
 3. தமிழ்வாசி - Prakash said...
  நல்லா தான் சாவி விளையாடுது...//

  சாவி விளையாடலை நண்பன் விளையாடிட்டான்...ஹி ஹி...

  ReplyDelete
 4. Arun Kumar said... 9 10
  ஐயோ ஐயோ ...//

  ஹா ஹா ஹா ஹா பதிவை படிச்சதும் போதை எறிடிச்சாக்கும்....

  ReplyDelete
 5. இராஜராஜேஸ்வரி said...
  மனோ தத்துவத்துக்கு சாவி கொடுத்து வைத்த பகிவுக்குப் பாராட்டுக்கள்.//

  ஹா ஹா ஹா ஹ்ஹா நன்றி மேடம்...

  ReplyDelete
 6. He...he....ithu ellam namakku
  sagajam thane....

  ReplyDelete
 7. கலைஞரை விடவே மாட்டீங்களா.

  ReplyDelete
 8. அப்ப சாவி தொலைப்பவர்கள் இப்படித்தானா பாஸ்

  ReplyDelete
 9. மனோ தத்துவம் சூப்பர்.,

  ReplyDelete
 10. ஐயோ ஐயோ ...சாவி.......சாவி....

  ReplyDelete
 11. இதுதான் வெற்றியின் கீ வோர்டா?

  ReplyDelete
 12. நல்ல "மனோ"தத்துவம் ,ஹா ஹா

  தமிழ் மணம் 7

  ReplyDelete
 13. அட இவ்வளவு ரவுண்ட் போயும் நம்மாளு ஸ்டெடியா இருக்காரே அதுக்குதான்யா தமிழ் மணத்தில குத்திட்டு போறேன்யா... ஹி ஹி ஹி

  ReplyDelete
 14. அண்ணனோட மப்பு தத்துவத்துக்கு நன்றி!

  ReplyDelete
 15. குடிச்சிட்டு தொலைஞ்ச பொருள் கிடைக்கலேனா
  அதுக்கு முதல் நாள் எவ்வளவு குடிச்சிட்டு
  ஒளிச்சு வச்சேமோ அதே அளவு இன்னைக்கு
  குடிச்சிட்டு தேடினா நிச்சயம் கிடைச்சிடும் என்பது
  இந்தப் பதிவைப் படைச்சதும்
  ிமிகத் தெளிவாகப் புரியுது.சரியா ?
  த.ம 10

  ReplyDelete
 16. சூப்பர் பாஸ்! :-)

  ஞாபக சக்தியை மீட்டெடுக்க இப்பிடியெல்லாம் வழியிருக்கா? மைண்ட்ல வச்சுக்கிடுறேன்!

  ReplyDelete
 17. NAAI-NAKKS said... 17 18
  He...he....ithu ellam namakku
  sagajam thane....//

  ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 18. தமிழ் உதயம் said...
  கலைஞரை விடவே மாட்டீங்களா.//

  அப்பாடக்கரை அவ்வளவு சீக்கிரம் விடுவேனா...???

  ReplyDelete
 19. K.s.s.Rajh said...
  அப்ப சாவி தொலைப்பவர்கள் இப்படித்தானா பாஸ்//

  ச்சே ச்சே எல்லாவ்ரும் அப்பிடி கிடையாது...

  ReplyDelete
 20. வேடந்தாங்கல் - கருன் *! said...
  மனோ தத்துவம் சூப்பர்.,//

  ரோட்டில் நடப்போர் சங்கம்...

  ReplyDelete
 21. வைரை சதிஷ் said...
  ஐயோ ஐயோ ...சாவி.......சாவி....//

  ஐயோ ஐயோ சாவி இல்லை, சூட்கேஸ் சாவி ஹி ஹி...

  ReplyDelete
 22. சி.பி.செந்தில்குமார் said...
  இதுதான் வெற்றியின் கீ வோர்டா?//

  டேய் அண்ணா.....

  ReplyDelete
 23. M.R said...
  நல்ல "மனோ"தத்துவம் ,ஹா ஹா

  தமிழ் மணம் 7//

  இனி நீங்க டாக்டர் தத்துவம்னு போடுங்கா ஹி ஹி....

  ReplyDelete
 24. காட்டான் said...
  அட இவ்வளவு ரவுண்ட் போயும் நம்மாளு ஸ்டெடியா இருக்காரே அதுக்குதான்யா தமிழ் மணத்தில குத்திட்டு போறேன்யா... ஹி ஹி ஹி//

  நான்தான் நல்லவன்னு சொல்லிட்டேனே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 25. விக்கியுலகம் said...
  அண்ணனோட மப்பு தத்துவத்துக்கு நன்றி!//

  நடப்பு தத்துவம்னு சொல்லுய்யா...

  ReplyDelete
 26. Ramani said...
  குடிச்சிட்டு தொலைஞ்ச பொருள் கிடைக்கலேனா
  அதுக்கு முதல் நாள் எவ்வளவு குடிச்சிட்டு
  ஒளிச்சு வச்சேமோ அதே அளவு இன்னைக்கு
  குடிச்சிட்டு தேடினா நிச்சயம் கிடைச்சிடும் என்பது
  இந்தப் பதிவைப் படைச்சதும்
  ிமிகத் தெளிவாகப் புரியுது.சரியா ?
  த.ம 10//

  ஹா ஹா ஹா ஹா டெஸ்ட் பண்ணிராதீக குரு ஹா ஹா ஹா ஹா..

  ReplyDelete
 27. ஜீ... said...
  சூப்பர் பாஸ்! :-)

  ஞாபக சக்தியை மீட்டெடுக்க இப்பிடியெல்லாம் வழியிருக்கா? மைண்ட்ல வச்சுக்கிடுறேன்!//

  எத்துனாவது ரவுண்ட் அடிக்கப் போறீங்க???

  ReplyDelete
 28. சாவி தொலைப்பு - பய புள்ள 40 வயசுக்கு மேல போனாலே இப்படித்தானோ

  தத்துவம் கலக்கல்

  ReplyDelete
 29. ஆஹா இனி என்ன காணா போனாலும் கவலை இல்லைய்யா.....

  ReplyDelete
 30. தாத்தாவுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்??

  ReplyDelete
 31. "மது" தாத்தா அல்லவா அதான் சம்பந்தம்

  ReplyDelete
 32. அண்ணன் சாவிய தொலைச்சிட்டு மறைச்சு வச்சத சொல்ல எப்படியெல்லாம் மேட்ச் பண்ணுறாருப்பா...

  ReplyDelete
 33. குடி குடியைக் கெடுக்கும்- இங்கே
  குடி சாவியைக் கொடுக்கும்

  சுவை நகச் சுவை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 34. மனோ தத்துவம் அருமை அண்ணே

  ReplyDelete
 35. நடைராஜாவா?? வெரி குட்.

  ReplyDelete
 36. மனசாட்சி said...
  சாவி தொலைப்பு - பய புள்ள 40 வயசுக்கு மேல போனாலே இப்படித்தானோ

  தத்துவம் கலக்கல்//

  நாப்பது வயசா யாருக்கு ஹி ஹி...???

  ReplyDelete
 37. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ஆஹா இனி என்ன காணா போனாலும் கவலை இல்லைய்யா.....//

  ஹா ஹா ஹ ஹா சந்தோசத்தை பாருங்கய்யா...!

  ReplyDelete
 38. S.Menaga said...
  தாத்தாவுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்??//

  சரியான உள்குத்து இருக்கு, நல்லா பாருங்க மேனகா....

  ReplyDelete
 39. மனசாட்சி said...
  "மது" தாத்தா அல்லவா அதான் சம்பந்தம்//

  மது தாத்தா, ஹை இது நல்லா இருக்கே....!

  ReplyDelete
 40. suryajeeva said...
  நல்ல ஜோக்//

  மிக்க நன்றி....

  ReplyDelete
 41. இரவு வானம் said...
  அண்ணன் சாவிய தொலைச்சிட்டு மறைச்சு வச்சத சொல்ல எப்படியெல்லாம் மேட்ச் பண்ணுறாருப்பா...//

  நீரு இப்பிடி சொல்வீருன்னு முன்னமே எனக்கு தெரியும் ஹி ஹி...

  ReplyDelete
 42. புலவர் சா இராமாநுசம் said...
  குடி குடியைக் கெடுக்கும்- இங்கே
  குடி சாவியைக் கொடுக்கும்

  சுவை நகச் சுவை!

  புலவர் சா இராமாநுசம்//

  நன்றி புலவரே....

  ReplyDelete
 43. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  மனோ தத்துவம் அருமை அண்ணே//

  ஹே ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 44. vanathy said...
  நடைராஜாவா?? வெரி குட்.//

  அங்கிள் நடக்குறாருன்னுதும், சந்தோசம் பொங்குது பாருங்க ம்ஹும்....

  ReplyDelete
 45. மறந்ததும் குடியால்;பின் தெரிந்ததும் குடியால்.ஆகா!

  ReplyDelete
 46. நல்லதோர் அனுபவக் கதை அண்ணா
  போதையில் பாதை மாறக் கூடாது என்பதனையும், அளவோடு குடித்தால் அதிகம் ரிஸ்க் இல்லை என்பதனையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.

  உங்களின் தத்துவமும் அருமை.

  ReplyDelete
 47. எப்பவுமே மொத ரவுண்டு உள்ள போகும்போது கழட்டப்படுவது டேமேஜர்களின் டவுசர்கல்தான்!@பாவம்

  ReplyDelete
 48. சென்னை பித்தன் said... 97 98
  மறந்ததும் குடியால்;பின் தெரிந்ததும் குடியால்.ஆகா!//

  என்னாத்தை உலகம் தல இது ஹா ஹா ஹா....

  ReplyDelete
 49. நிரூபன் said...
  நல்லதோர் அனுபவக் கதை அண்ணா
  போதையில் பாதை மாறக் கூடாது என்பதனையும், அளவோடு குடித்தால் அதிகம் ரிஸ்க் இல்லை என்பதனையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.

  உங்களின் தத்துவமும் அருமை.//

  நன்றி நிரூபன்....ஹி ஹி....

  ReplyDelete
 50. கோகுல் said...
  எப்பவுமே மொத ரவுண்டு உள்ள போகும்போது கழட்டப்படுவது டேமேஜர்களின் டவுசர்கல்தான்!@பாவம்//

  ஹா ஹா ஹா பாவமென்ன பாவம் அவனுக பண்ணுன அநியாயம் அப்பிடி ஹி ஹி....

  ReplyDelete
 51. மனோ சார் ..,

  அங்க ஆபிசர் ப்ளாக்ல நல்ல பதிவுல கும்மியடிச்சிட்டு இருக்கானுவ ..,அருவாள எடுத்தோமா போட்டாமா இல்லாம ,நீங்க இங்க பார்மாலிட்டி பண்ணிட்டு இருக்கீங்க ..,

  ReplyDelete
 52. என்னமோ

  மொத ரவுண்டு
  ரெண்டாவது ரவுண்டு
  மூனாவது ரவுண்டு

  ....ன்னு சொல்றீங்களே. அப்டின்னா என்னாபா அது?

  ReplyDelete
 53. நல்லா ரவுண்டு கட்டியிருக்கீங்க.அதுல பாருங்க, கடைசீல சொன்ன மனோவின் -தத்துவம் இருக்கே, செம.

  ReplyDelete
 54. இதில் இருந்து தெரியும் நீதி : தண்ணி அடிப்பது தவறில்லை. அப்படி அடித்தால் மறதி நோய் பறந்துவிடும் என்று இந்த ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற டாகுடர் மனோ சொல்லியியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 55. கடுப்பேத்தாதீங்க யுவர் ஆனர்:)

  ReplyDelete
 56. நடப்பதால் மனிதன்(நோயின்றி) பூரணமடைகிறான்!குடிப்பதால்,அதுவும் அளவுக்கு மீறிக் குடிப்பதால் மனிதன் "கோட்டை" விடுகிறான்!(தத்துவம்)ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 57. மனோ தத்துவம்.. நல்ல ஆராய்ச்சி..

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!