Tuesday, October 25, 2011

எனது வாழ்க்கைக்குள் வந்த இன்னொரு தேவதை...!!!

என் வாழ்க்கைக்குள் வந்த இன்னொரு தேவதையை பற்றி சொல்லப்போறேன். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நான் ரிசப்ஷனில் பணியில் இருந்த சமயம், எங்கள் ஹோட்டல் காப்பிஷாப்பில் அநேக வெளிநாட்டுக்காரிகள் வெயிட்டரஸாக பணிபுரியும் நேரம்....

இவர்கள் டியூட்டிக்கு போகும் போதும் திரும்பும் போதும் என்னை கடந்துதான் போகவேண்டும், அல்லாமலும் கஸ்டமர் கிரெடிட் கார்டு கொடுத்தாலும் இவர்கள் என்னிடம் வந்தாகவேண்டும், ஏன்னா கிரெடிட் மெஷின் ரிசப்ஷன்லதான் இருக்கும்.


இப்பிடியாக இருக்கும் போது ஒருநாள் புதிதாக ஒரு பெண் வெயிட்ரசாக வந்தாள், அண்டங்கருப்பு என் வாழ்க்கையில் அப்பிடி ஒரு கருப்பை பார்த்ததில்லை, ஆச்சர்யமாக இருந்தது, நான் மனதில் நினைத்தேன் இது ஒன்னு ஆந்திராவா இருக்கணும் இல்லைன்னா தமிழா'தான் [[எத்தியோப்பியா கருப்பில்லையா'ன்னு கேக்க்ப்புடாது அவிங்க பாடி ஷேப் வேற]]


நேரே என்னிடம் வந்தாள் புதிய அப்பாயின்ட்மென்ட் லெட்டரை காண்பித்தாள், காண்பித்து விட்டு காப்பிஷாப் எங்கே இருக்கிறது என்று சூப்பர் ஆங்கிலத்தில் கேட்டாள், வழி காண்பித்தேன், வேகமாக கடந்து சென்றவள் திரும்பி வந்து வழி தெரியவில்லை என்றாள். நான் எனது அஜிஸ்டென்டை அவள் கூட அனுப்பிவிட்டேன்.


தினந்தோறும் அவள் டியூட்டிக்கு வரும்போதெல்லாம் எங்கள் கண்கள் மோதிக்கொள்ளும், ஆனாலும் அவள் குட்மார்னிங் சொல்லவே மாட்டாள் நானும் கண்டுகொள்ளமாட்டேன், அவளுடன் வரும் மற்றைய பெண்கள் குட்மார்னிங் சொன்னாலும் இவள் வாய் திறக்கமாட்டாள்...!!!


ஒருநாள் காப்பிஷாப்பில் இருந்து கம்லைன்ட் வந்தது நன்றாக குடித்திருந்த அரபியை செருப்பால் அடித்துவிட்டாள் ஒரு வெயிட்ரஸ் என்று, ஓடிப்போனேன் நாட்டாமைக்கு, அங்கே பத்ரகாளியாக நின்று கொண்டிருந்தாள் அவள்....


என்னாச்சு என கேட்கவும், அரபி இவள் பின்னாடி பிடித்து அமுக்கி இருக்கிறான், அதான் செருப்படி, அரபியை ஹோட்டல் காவலர்கள் பிடித்துக்கொண்டார்கள், அரபி கிடந்து கத்துறான், நீ ஒரு சிறிலங்காகாரி, என் நாட்டுக்கு பிழைக்க வந்ததுக்கு என்னையே செருப்பால் அடிக்கிறாயா உன்னை சும்மாவிடமாட்டேன்னு கத்துறான்.


அப்போதான் தெரிஞ்சுது இவள் சிறிலங்கா என்று, எவளவோ எடுத்து சொல்லியும் அரபி அடங்கவில்லை, பேசிட்டு இருக்கும்போதே அரபி ஓடிப்போயி அவளை அடித்துவிட்டான், எனக்கு பிரஷர் ஏற, அரபி தலையில் கட்டியிருந்த கருப்பு வாரை பிடுங்கி விளாச ஆரம்பிக்கவும் எங்கள் செக்கியூரிட்டிகள் அரபியை மொத்தி தூக்கிப்போனார்கள் ஸ்பெஷல் ரூமுக்கு [[எதுக்கு உள்ளே போட்டு மிதிக்கதான்]]


ஜி எம் விசாரணை வந்தது, பாழாப்போன ஹோட்டல் தர்மம் ஒன்னு உண்டு "கேஸ்ட் இஸ் ஆல்வேஸ் ரைட்"ன்னு அந்த சூத்திரத்துல என்னை ஐந்து நாள் சஸ்பென்ட் பண்ணி உத்தரவு வந்தது [[ஹி ஹி நமக்கு இது புதுசா என்ன]]


மறுபடியும் டியூட்டியில் சேர்ந்தும், அவள் என்னோடு பேசவில்லை அதே கண்கள் பார்வை மோதல்'தான், ஒரு நாள் பில்லுக்கு கிரெடிட் கார்ட் கொண்டு வந்தாள் என்னிடம், நான் கார்டில் வேலை செய்வது போல பாவனை செய்துகொண்டே அவளை லுக் விட அவள் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள், அழகு, கருப்புன்னாலும் அவள் முகத்தில் தெரிஞ்ச தேஜஸ் அழகோ அழகு, கண்கள் பால்போல் வெள்ளை.....!!!


இப்படி தொடர்ந்து நடந்துட்டு இருந்தது, ஒருநாள் உற்சாகத்தில் டியூட்டிக்கு வந்தவள், அவளை அறியாமலே குட்மார்னிங் சொல்லிவிட்டு ஆஹா தெரியாம சொல்லிட்டோமேன்னு வாயை பொத்திக்கொண்டே சிரித்துக்கொண்டே ஓடிவிட்டாள் எனக்கோ கொலைவெறி ஹி ஹி....!!!


பிறகு நாளாக நாளாக சகஜமா பேசியும் [[ஆங்கிலத்தில்தான்]] பழகியும் இருந்தோம் ஒரு வெற்றிடம் இருந்தே வந்தது, ஒருநாள் இவள் கிரெடிட் கார்டு கொண்டு வரவும் இந்தியாவில் இருந்து என் மனைவியின் போன் வந்தது சாதாரணமாக மிஸ்கால் குடுக்கிறவள், போன் பண்ணுகிராளேன்னு பதட்டமா போனை எடுத்து தமிழில் பேசி போனை வைக்க....


இவள் கேட்கிறாள், நீஈஈஈஈஈஈஈஈஈஈங்க தமிழா....??? என்று தமிழில் கேட்க, எனக்கு தலை சுத்த ஆரம்பிருச்சு, அவள் மறுபடியும் நீங்க தமிழரா'ன்னு வேப்பிலை அடிக்க, ஆமாம் என்றேன், அப்போ இவ்வளவு நாளும் இந்தியாகாரங்க கூட மலையாளம் கதைத்து கொண்டிருந்தீர்களே...??? நான் உங்கடை மலையாளின்னு கருதினேன்னு சொல்ல, எனக்கு கதைத்து என்பது புரியவில்லை [[ங்கே]] திட்டுறாளோன்னு நினச்சி கேட்டதுக்கு, கதைத்தல் என்பது பேசுவது என்பதாகும்னு விளக்கம் தந்தாள், அன்னைக்குத்தான் எனக்கும் தெரியும்!!!!


அம்மிணி, நான் மலையாளி இல்லைன்னு சொன்னால், மலையாளி அடிக்க வாரான், தமிழன்னு சொன்னா நீங்க அடிக்கவாறீங்க, எனக்கு இது ஒன்னும் புதுசில்லைன்னு சொன்னேன், அடபாவி மகள், இம்புட்டு வாயாடியா இருப்பாள்னு தெரியாது, நான் தமிழ்னு தெரிஞ்சதும் அவள் கண்ணில் அடிச்ச ஒளி இருக்கே, மின்னல் தோத்துரும் போங்க...!!!


பிறகு எல்லா நாளும் குட்மார்னிங்'தான் குட்ஈவினிங்'தான், கொஞ்சல்தான், என்ன சாப்பிட்டாலும் எனக்கு பங்கு வந்துரும், வேண்டாம்னு சொன்னால் அழுதுருவாள், இப்படியே நாட்கள் கடக்கையில் என் குடும்ப மேட்டர் எல்லாம் சொல்லுவேன் அவளிடம், ஆனால் அவள் வாய் திறக்கமாட்டாள்...!!!


ஒருநாள் வேலை முடிந்து என்னிடம் வந்தாள், மனோ உன்கூட தனியாக பேசவேண்டும், என் ரூமுக்கு வரமுடியுமா என்று கேட்டாள், ரூமுன்னதும் நான் பயந்ததை புரிந்து கொண்டு, எனது பர்சனல் கதையை உன்னிடம் சொல்லணும் போல மனசு தவிக்குது, இங்கே ஆட்கள் வந்தும் போயும் இருக்கிறார்களே எனக்கூரவும் ஒப்புக்கொண்டேன்.

அவள் ரூமுக்கு போனேன் அடுத்தநாள், அருமையாக சமைத்து வைத்திருந்தாள், கருவாட்டு மீன் கறியும், முழுப்பூண்டும் பல் பல்லாக பிரித்து ஒரு கூட்டு இருந்தது, இது என்ன எங்கேயும் பார்க்காதது என ஆச்சர்யப்பட்டேன், அவள் ஊரில் இது ரொம்ப பேமஸ்'ன்னு சொன்னாள், சாப்பிட்டு முடித்து பலகதைகள் சிரிச்சி பேசினோம், நாம என்னா சொன்னாலும் சிரிப்பாள் அப்பிடி ஒரு கிலுக்கான்பெட்டி...


சற்று அமைதியானவள், அவளை பற்றி சொல்ல ஆரம்பித்தாள் கண்ணீர்களோடு.......

எனக்கு கொழும்பில் உள்ள வத்தளை'தான் ஊர், இதுக்கு முன்னாடி அந்த ஊரிலிருந்து [[ஊரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது]] இங்கே குடிபெயர்ந்தோம் போரில் அப்பா இறந்துபோனார், என் புருஷன் இயக்கத்தில் இருந்தார், ஒரு சண்டையில் காலை இழந்துவிட்டார், ஆகவே பிழைப்புக்காக கொழும்பு வந்துவிட்டோம்...


வயதான அம்மாவோடும், காலில்லாத புருஷன் இரண்டு வயது மகனையும் வச்சிகிட்டு நான் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமில்லை, சாப்பிட கூட பட்டினியாக இருந்த நாட்களுண்டு, சுர்ரங்களும் சொந்தங்களும் நிலையில்லாமல் வாழும் போது யாரிடம் போயி உதவி கேட்பது....


அழுகிறாள் மூக்கை துடைத்தவாறே, நானும் அழட்டும் அழுதால் மனசு லேசாகுமேன்னு கேட்டுட்டு  இருந்தேன்....அழுது முடித்தாள், இப்போ என்ன பிரச்சினைன்னா நான் வாங்கும் சம்பளமும் டிப்சும் எனக்கு போதவில்லை [[ இவள் மானமுள்ளவள் என்பதற்கு இதுவே சாட்சி, ஏன்னா இங்கே ஹோட்டலில் வெயிட்ரசா வரும் பெண்கள் திசைமாறி, லட்சகணக்கில் சம்பாதிக்கிறார்கள், அதனால்தான் தப்பாக நடந்த அந்த அரபிக்கு செருப்படி கொடுத்திருக்கிறாள்]]


சரி இந்தமாதம் ஊருக்கு பணம் அனுப்பினாயா என்று கேட்டேன், அனுப்பினேன் ஆனால் அது பத்தாது என்று என் மாப்பிளை திட்டுகிறார்'ன்னு சொல்லவும், உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் சொல் நான் அரேஞ்ச் பண்ணித்தாறேன்னு சொன்னதும், ஓ என அழ ஆரம்பித்து விட்டாள், அப்போ என் சுயநலத்திற்காகவே உன்னை நான் ரூமுக்கு கூப்பிட்டேன்னு நீயும் நினைச்சிட்டியே'ன்னு அழ எனக்கு சங்கடமா போச்சு....


பின்னே எப்பிடியோ சமாளிச்சி, சிரிக்க வச்சி, நீ என்ன படித்திருக்கிறாய்'ன்னு கேட்டேன், டிகிரி என்றாள், ஓகே உனக்கு வேறே வேலைக்கு முயற்சி பண்ணட்டுமா ஹோட்டல் இல்லாத கம்பெனிகளுக்கு எனக்கேட்டேன், சரி என்றாள், அவள் முழு டீடெயிலும் கேட்டு வாங்கி வந்துட்டு ரெண்டுநாளா உக்கார்ந்து சிவி தயார்பண்ணினேன் நண்பர்கள் உதவியுடன்.


நானே எங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கோ அங்கெல்லாம் சிவி அனுப்பினேன், ம்ஹும் ஒரு பதிலும் இல்லை, அப்புறமா நண்பர்கள் மூலமா எங்கேடா அக்கவுண்டன்ட் வேக்கன்சி இருக்குன்னு பிரஷர் கொடுக்க, ஒரு பெரிய கம்பெனியில் அவளுக்கு வேலை கிடைத்தது என் மலையாளி நண்பன் மூலமாக....!!!


சம்பளம் அப்பவே 300 தினார் [[இந்திய மதிப்புக்கு 38000 ரூபாய் இருக்கும்னு நினைக்கிறேன்]] இப்போ கண்டிப்பா அந்த கம்பெனி பொருத்தவரை 800 தினார் கிடைக்கும்னு நண்பர்கள் சொல்கிறார்கள்...!!! அதாவது ஒரு லட்சம் ரூபாய்...!!![[பஹ்ரைன்ல வேலையில்லாமல் இருந்தால் எப்பிடியாவது வேலை கிடைக்க முயற்சிக்கலாம் ஆனால் ஊரில் இருந்து யாரையும் உடனே கொண்டு வரமுடியாது, அதற்க்கு நடைமுறை சாத்தியங்கள் குறைவு]]


கடைசி வேலை நாளன்று வேலையை முடித்துவிட்டு நேரே என்னிடத்தில் வந்தவள், உன் கையை தா மனோ என்றாள், ஹே என்ன இது, ஆட்கள் வந்துபோகும் இடம் நீ போ என்றேன் ஆனாலும் விடவில்லை, என்கையை பற்றி அவள் நன்றி சொன்னபோது, அவள் கையின் அழுத்தம் எனக்கு ஆயிரம் வாழ்க்கை கண்ணீர் கதைகள் சொல்லியது...!!!


ம்ம்ம் அப்புறமென்ன அம்மிணி வாழ்க்கை செம ஜாலி ஆகிருச்சு, டபுள் பெட்ரூம் பிளாட் எடுத்து, ஒரு சிங்களப் பொண்ணும் இவளுமாக தங்கினார்கள், ரூமுக்கு வாடகை கம்பெனி கொடுத்தது, வாரலீவில் நானில்லாமல் இருக்கமாட்டாள், கும்மாளம் போட்டு கொண்டிருந்தோம் நண்பர்களெல்லாம் [[அதெல்லாம் ஒரு காலம்ய்யா]]


எனக்கும் கம்பெனிக்கும் ஏழரை சனி உச்சத்தில் இருந்ததால் வேலையை ராஜினமா செய்து வெளியேவர, ஊருக்கு போயிட்டு திரும்ப வரும் போது அவள் போன் நம்பர் மிஸ்ஸிங், நேரே ரூமுக்கு போனால் அங்கேயும் காலி செய்து போய்விட்டதாக சொன்னார்கள். நானும் அப்படியே விட்டு விட்டேன். இதைபோல ஆண் நண்பர்களும் மிஸ்ஸானது உண்டு...!!!


முந்தாநாள் திடீரென ஒரு போன் மொபைலில் வந்தது, "ஹலோ நான் யாருன்னு "சொல்லு" பார்க்கலாம்"??? ஆஹா பல்பு வாங்கப்போறோமோ நம்ம பதிவர்கள் சங்கமா இருக்குமோன்னு நினைக்கவும், யாரா இருந்தாலும் என்னை ஒருமையில் பேசுவது, அக்காக்களும் தங்கைகளும், அண்ணிகளும்தானே அதுவும் உறவை சொல்லித்தான் ஒருமையில் அழைப்பார்கள் இது என்னடா கூத்து என குழம்ப...[[நண்பன் ஒருவனை எதேயச்சையாக கண்டு அவனிடமிருந்து போன் நம்பர் வாங்கினாளாம்]]


மாமோய் தெரியுதாடா இப்போது என்றாள், ஹேய் நிவேதிதா என்றேன், மாமோய் நான் நிவேதிதா இல்லை நிவேதா, நீ இன்னும் பெயர் உச்சரிப்புல தடுமாறிட்டுதான் இருக்குறியா என அழகாக சிரித்து கலாயித்தாள்....தொடர்ந்து பேசினேன், போன் பேசாததர்க்கு கோபப்பட்டாள், உடனே வீட்டுக்கு அழைத்தாள், எனக்கு இப்போ முன்னே மாதிரி லீவெல்லாம் இல்லை பொறு டியூட்டி முடிஞ்சதும் வாறேன்னு சொல்லி, போனேன்.


அங்கே அதே சிங்களப் பொண்ணுடன்தான் இருந்தாள், பயங்கர மாற்றம், ஆடம்பரம் [[ஆனால் இவள் வழி விலகவில்லை என்பது சைக்காலஜிக்கா புரிந்து கொண்டேன்]] நான் விரும்பும் கருவாட்டு மீன்கறி மணக்க மணக்க பரிமாறினாள், ஏ யப்பா இதை மாதிரி கறி என் வாழ்க்கையில எங்கேயும் சாப்பிட்டது இல்லை [[கருவாட்டு மீன் கறி]]


ஊரில் இஷ்டம்போல நிலம் வீடுகள், கடைகள் வாங்கி வாடகைக்கு விட்டுருப்பதாகவும், அவள் கணவன் அவைகளை கவனிப்பதாகவும் சொன்னாள், வளமான வாழ்க்கை இப்போது, ஆனால் அனுபவிக்க வேண்டியவர்கள் விதை ஆகிவிட்டார்கள் என விம்மும் போது என் ரத்தமெல்லாம் சோனியா பூந்தியை நினைத்து ரணமாக கொதித்தது....


விடைபெறும் நேரம், மாமோய் அடிக்கடி நான் கூப்பிடலைன்னாலும் நீ வீட்டுக்கு வந்து போகணும், உன்கிட்டே பேசுனா எனக்கு எம்புட்டோ ஆறுதலா இருக்குன்னு சொல்லி கையை பிடித்தாள், அவள் கண்களின் பிரகாசமும், கையின் இறுக்கமும் அநேகமாயிரம் கதைகள் சொன்னது....!!!


ம்ம்ம்ம் இனி மறுபடியும் ஜாலிதான் என நினைத்த எனக்கு, லீவும் கிடையாது ஒரு கோப்பும் கிடையாது என்ற நிஜம் முகத்தில் அறைகிறது...!!! என் தோழி கருப்பு அழகி திரும்ப கிடைத்து விட்டாள்....ஆள் பார்க்க லேசா மாளவிகா மாதிரி இருப்பாள், இதை சொல்லி சொல்லி, அந்த கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாட்டை சொல்லி சொல்லி கலாயிப்பேன். 


உன்னை பற்றி பதிவு போடட்டுமான்னு கேட்டேன், போட்டுக்கோ மாமோய் [[மாமா அல்ல மாமோய்'தான் அவிங்க ஊர்ல நேசிக்கிரவிங்களை மாமோய்'ன்னு கூப்பிடுவது வழக்கமாம்]] ஆனால் நாங்க ஆதியில் இருந்த பூர்வீக ஊரை சொல்லாதே என கேட்டுக்கொண்டாள் என் கருப்பு தேவதை....!!!!


"மனோ"தத்துவம் : சர்வ சிருஷ்டியும் படைத்த தெய்வம் தறாததை எவனும் நமக்கு தரமுடியாது, அதே தெய்வம் தருவதை எந்த கொம்பனும் தடுக்கமுடியாது....!!!!


டிஸ்கி : இன்ட்லி'ல குத்தி பரிந்துரை செய்யவும்....





53 comments:

  1. முத வெட்டு

    என்னது தேவதையாஆ

    ReplyDelete
  2. படிச்சிட்டு வாறன் மக்க

    ReplyDelete
  3. உங்க வீட்க்கு தெர்யுமா ?

    ReplyDelete
  4. அனைத்து போட்டோவும் சூப்பர் .. பதிவு ஹீ ..ஹீ

    ReplyDelete
  5. இன்னும் எத்தன தேவதைகள் இருக்கன்களோ ?

    ReplyDelete
  6. >>மனசாட்சி said...

    படிச்சிட்டு வாறன் மக்க

    என்னது? படிச்சுட்டு வர்றீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. தம்பி, லேப்டாப், தீபாவளிபோனஸ் வாங்கியாச்சா?

    ReplyDelete
  8. மாளவிகவா????? படம் அனைத்தும் ஹிம்....


    உருக்கமான நிகழ்வு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. அடங்கொய்யாலே..

    இந்தாலு ஒன்னோடு விடுவாருன்னு பார்த்தா தொடர்கதையாக்கிட்டாரு...

    ReplyDelete
  10. அண்ணே இந்த விஷயத்துக்கு நான் சொல்லும் பதில்....பகிர்வுக்கு நன்றி...தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. படங்களும் பதிவும் அருமை
    தொடர (பதிவை) வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. யோவ்...

    கருப்புன்னா ஆந்திரா இல்லன்னா தமிழ்நாடா...

    ஏன் ஆப்பிரிக்கா வெஸ்ட்ண்டிஸ் இப்படி இருக்க கூடாதா..?

    ReplyDelete
  13. அப்ப ஒரு குட்மானிங்ல ஆரம்பிச்சிருக்கு எல்லாம்...

    ReplyDelete
  14. இதுக்குமேல என்னால முடியல சாமி...

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. மேட்னி ஷோவுல விக்ரமன் படம் பார்த்தது மாதிரி இருந்தது...

    ReplyDelete
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. ஆட்டோகிராஃபை எடுத்துவிடுலேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மையிலேயே ஏகப்பட்ட ஆட்டோகிராஃப் வெச்சிருப்பார் போல இருக்கே? இன்னும் எத்தன?

    ReplyDelete
  18. அப்புறம் இன்னும் சினேகா, பாவனா, திரிஷா சாயல்ல எல்லாம் இருப்பாங்களே அதெல்லாம் எப்போ ரிலீஸ்?

    ReplyDelete
  19. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. கருப்பா இருந்தாலும் களையா இருந்துட்டா டாப்புத்தான்........ (ஹி..ஹி....)

    ReplyDelete
  21. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. அண்ணே! இதெல்லாம் அண்ணிக்கு தெரியுமாண்ணே! சும்மாத்தான் கேட்டேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  23. ஏழ்மை சூழலிலும்
    தன்மானம் காப்பவர்கள் தமிழர்கள் என்பதில்
    மிகவும் பெருமை கொள்கிறேன் மக்களே...

    வழிந்த.. கதையையும் சொல்லி.
    அந்த பெண்ணிற்கு மனம் நிறைந்த வேலை
    எடுத்து கொடுத்ததை சொன்னபோது..
    நீங்க எங்கேயோ போய்டீங்க....

    அந்த சகோதரி எங்கிருந்தாலும்
    சிறப்பொடு வாழட்டும்..

    ReplyDelete
  24. தொடர்கதையா இந்த வாழ்க்கை......

    ReplyDelete
  25. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    மனம்நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  27. வாத்துக்கள்!

    #யோவ், அத்தாச்சிட்ட போட்டு வுட்டாத்தான் அடங்குவீர் போல தெர்தே!

    ReplyDelete
  28. மறுபடியும் ஒரு ஆட்டோகிராப் :)

    ReplyDelete
  29. //ஊரில் இருந்து யாரையும் உடனே கொண்டு வரமுடியாது, அதற்க்கு நடைமுறை சாத்தியங்கள் குறைவு//

    அட்ரா... அட்ரா... முன் எச்சரிக்கை - உசார் பார்ட்டி மக்கா ...

    ReplyDelete
  30. சி.பி.செந்தில்குமார் said...
    >>மனசாட்சி said...

    படிச்சிட்டு வாறன் மக்க

    என்னது? படிச்சுட்டு வர்றீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ஆமா ஆமா வேற வேலை

    ReplyDelete
  31. தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ!... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

    ReplyDelete
  32. மக்கா, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. நல்ல கதையா இருக்கே
    இது எல்லாம் வீட்டுக்கு தெரியுமா? அதான் நீங்க கருவாட்டு மீன் கறி சாப்பிட்டது இப்பிடி சாப்பிட்டது இல்லைன்னு சொன்னீங்களே

    கடைசியா சொன்ன தத்துவம் உண்மை

    ReplyDelete
  34. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆட்டோகிராஃபை எடுத்துவிடுலேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மையிலேயே ஏகப்பட்ட ஆட்டோகிராஃப் வெச்சிருப்பார் போல இருக்கே? இன்னும் எத்தன?//

    நான் வேலை பார்க்கும் ஃபீல்டு அப்பிடியா இருக்கு ஒய்...தொடரும் ஹி ஹி...

    ReplyDelete
  35. என் ராஜபாட்டை"- ராஜா said...
    உங்க வீட்க்கு தெர்யுமா ?//

    இதையெல்லாமா போயி வீட்டுல சொல்லிட்டு இருப்பாங்க ஹி ஹி...

    ReplyDelete
  36. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி, லேப்டாப், தீபாவளிபோனஸ் வாங்கியாச்சா?//

    எலேய் நக்கலாடா உனக்கு, நான் இருப்பது அரபி நாட்டுல....!!!

    ReplyDelete
  37. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அப்புறம் இன்னும் சினேகா, பாவனா, திரிஷா சாயல்ல எல்லாம் இருப்பாங்களே அதெல்லாம் எப்போ ரிலீஸ்?//

    ஒரு பில்டப்புக்கு சொன்னா விடமாட்டீங்க போல ஹி ஹி...

    ReplyDelete
  38. உங்கள் நட்பின் ஆழத்தையும் அன்பை மதிக்கும் நற் குணத்தையும் கண்டு
    மகிழ்ந்தேன் .இலங்கைத் தமிழ்ப் பெண் மீண்டும் உங்கள் நட்பை இழக்காமல்
    வந்து சேர்ந்தது அவள் செய்த புண்ணியம் போலும் !...வாழ்த்துக்கள் சகோ .உங்கள் நட்பு தொடரட்டும் .அதற்காக வலைத்தள உறவுகள் எங்களை மறந்துவிடாதீர்கள் (சும்மா சும்மா .......)மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  39. கதை அருமை படங்கள் தான் ...............இவ்வலவு நடிகைகளை ஒரே பதிவில் தந்து புண்ணியம் தேடி கொண்டீர்களோ!

    ReplyDelete
  40. நீங்க பாட்டுக்கு பொசுக்குன்னு உண்மையா உடைச்சுட்டீங்களே, உண்மையா யாராவது அன்னிகிட்டு போட்டு கொடுத்துட்டாங்கன்னா என்ன பண்ண போறீங்க? எதுக்கும் ஏதாவது ஒரு பிளான் பண்ணி வச்சுக்குங்க

    ReplyDelete
  41. நல்ல பகிர்வு மாளவிகா படங்களுடன்! :-)).

    தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. நல்ல உணர்வுள்ள பதிவு நண்பரே

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  43. அசத்திட்டீங்க போங்க.. அடுத்து யார் இருக்கா!!.. :))

    என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. தன்னம்பிக்கை பெண்..அதுவும் எங்கள் ஊர் என்றால் சும்மாவா..தன்நம்பிக்கை அதிகமாகதான் இருக்கும்(நான் பொதுவா சொன்னன்)

    ReplyDelete
  45. அருமையான மலரும் நினைவுகள்!

    ReplyDelete
  46. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  47. "மனோ"தத்துவம் : சர்வ சிருஷ்டியும் படைத்த தெய்வம் தறாததை எவனும் நமக்கு தரமுடியாது, அதே தெய்வம் தருவதை எந்த கொம்பனும் தடுக்கமுடியாது....!!!!

    அருமையான தத்துவம்.

    ReplyDelete
  48. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  49. இனிய காலை வணக்கம் மனோ அண்ணா,

    பதிவை முழுமையாகப் படிக்கையில் மனதில் வெறுமை மிஞ்சுகிறது.

    உங்கள் உயர்ந்த குணத்திற்கும், உதவும் மனப்பாங்கிற்கும் தலை வணங்குகிறேன்.
    you are so great Boss.

    ReplyDelete
  50. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் உளம் கனிந்த இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  51. இனிய பகிர்வு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!