Thursday, July 11, 2013

கள்ள நோட்டை நாம் அறிவது எப்படி ?

நல்ல நோட்டா... கள்ள நல்லநோட்டா என்பதை
மக்கள் தெரிந்துகொள்வது எப்படி? 


              சமீபத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கைது செய்திருக்கிறது போலீஸ். அப்படியென்றால் நம் கையில் வைத்திருக்கும் எந்த நோட்டும் கள்ளநோட்டாக இருக்கலாம். எப்படி தெரிந்துகொள்வது? நாம் பயன்படுத்தும் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சென்னையிலுள்ள ரிசர்வ் பேங்க் இந்தியாவின் (Reserve Bank of India) தலைமை அலுவலக கருவூல பகுதி அலுவலர்களிடம் கேட்டபோது,  “நல்லநோட்டு...தனிச்சிறப்பு வாய்ந்த காகிதமும் நன்கு கூழாக்கப்பட்ட பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நோட்டுகளை எண்ணும்போது  'பட பட'வென சத்தம் உண்டாகும். ஆனால், கள்ளநோட்டில் தரம் குறைந்த காகிதம் பயன்படுத்தப்படுவதால் தடிமனையும் தரத்தையும்  வைத்து கண்டுபிடிக்கலாம். இரண்டாவது... புற ஊதா விளக்கு ஒளியில் (அல்ட்ரா வைலட் லைட் எனப்படும் விளக்குகள் தனியாகவே இருக்கின்றன!) நன்றாக ஜொலிக்கும் மையினால் (fluorescent Ink) நல்லநோட்டு அச்சடிக்கப்படுகிறது. பணத்தில் உள்ள நம்பர்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே சீராக இருக்கும். மேலும், சிவப்பு நிறத்தில் பெரிதாக பளிச்சென்று தடிமனாக இருக்கும். 1000 ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல் பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் சிவப்புநிறத்திலும் அச்சடிக்கப்படுகிறது. 



ஆனால், கள்ளநோட்டில் பெரும்பாலும், வரிசை எண்கள் ஒரே சீராக இல்லாமல்...எண்களில் சைஸ் சிறியதாகவும்...இடைவெளி விட்டும் இருக்கலாம். மேலும், கள்ளநோட்டுகள் புற ஊதா விளக்கொளியில் (அல்ட்ரா வைலட் லேம்ப்) ஜொலிக்காது. மூன்றாவது...500....1000 ரூபாய் நோட்டுகளில் மத்தியில் மதிப்பு இலக்கம் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். சற்றே சாய்த்துப்பார்த்தால் அந்த பச்சை நிறம் நீல நிறமாக மாறித்தெரியும். கள்ளநோட்டில் பச்சைநிறம் நீலநிறமாக தெரிய வாய்ப்பில்லை. நான்காவது...மகாத்மா காந்தி படத்திற்கு இடதுபுறம் இருக்கும் 100, 500,1000 ரூபாய் நோட்டுகளில் பாதுக்காப்பு இழை சாளரம் சாளரமாகத் தெரியும். மேலும்...வெளியே பாதி தெரிந்தும், உள்ளே பாதி பொதிந்தும் இருக்கும். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். பாரத் என்று ஹிந்தியிலும், RBI (RESERVE BANK OF INDIA-வின் சுருக்கம்!) என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி அச்சடிக்கப்படிருக்கும். 1000 ரூபாய் நோட்டில் கூடுதலாக... 1000 என்ற இலக்க எண்ணும் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். 2005 க்கு பின்பு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளில் பச்சையாக தெரியும் இழை வெவேறு கோணங்களில், பார்க்கும்போது நீல நிறமாக தெரியும். அல்ட்ரா வைலட் வெளிச்சத்தில் முன்பக்க எழுத்துக்களும் சேர்த்து மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், கள்ளநோட்டிலோ வெள்ளி நிற பெயிண்ட் ஒட்டப்பட்டிருக்கலாம். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாக தெரியாது. பாதுகாப்பு இழை போன்ற ஒன்றை ஒட்டியிருப்பார்கள். கறுப்புக்கோடு வரைந்திருப்பார்கள்.




பாதுகாப்பு இழையில் நிறம் மாறும் தன்மை இருக்காது. இதெல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் தெரியும்.  ஐந்தாவது...ஒளி ஒதுக்க முறையில் மகாத்மா காந்தியின் உருவம் சினிமா ஸ்லைடுபோல் தத்ரூபமாக தெரியும். நகல் (செராக்ஸ்) எடுக்கமுடியாத பல்திசைகோடுகளும் இருப்பதை மகாத்மாகாந்தியின் உருவத்தை வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும். காகித தயாரிப்பு நிலையிலேயே, நீர்குறியீடும் (வாட்டர்மார்க்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கள்ள நோட்டிலோ உண்மையான நோட்டை காப்பியெடுக்கும் முயற்சியில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இல்லாமல்...கார்ட்டூன் படம்போல் இருக்கலாம். வெளிச்சத்தில் பணத்தை தூக்கிப்பார்த்தால் இந்த வித்தியாசத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதையெல்லாம்...குறைந்த பணத்தை கையில் வைத்திருக்கும்போது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டுபோகும்போது வங்கிகள் அதற்கான தரமான மெஷின்களை வைத்து கள்ளநோட்டா நல்லநோட்டா என்று கண்டறிய வேண்டும். மேலும், வங்கிப் பணியாளர்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்” என்கிறார்கள் ஆலோசனையாக.


நன்றி : ம . மனோ மற்றும் நக்கீரன் 

18 comments:

  1. அவசியம் அனைவரும் மனதில்
    பதிந்து வைத்துக் கொள்ளவேண்டிய பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இன்றைக்கும் மிகவும் தேவையான தகவல்...

    விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
  3. இதைப் பற்றிய பதிவொன்றை நானும் எழுதி இருக்கிறேன். நீங்கள் கூடுதலாக பல தகவல்கள் விளக்கமாக தந்திருக்கிறீர்கள். நல்ல பயனுள்ள பதிவு நன்றி

    ReplyDelete
  4. Replies
    1. வாய்க்கா சண்டை நடந்து கழட்டி விட்டுட்டேன் நண்பா.

      Delete
  5. அன்பின் மனோ - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. அவசியமான அனைவரும் அறிய வேண்டிய பகிர்வு....
    பகிர்வுக்கு நன்றி அண்ணா....

    ReplyDelete
  8. கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் வழி இதெல்லாம் இல்லண்ணா! நோட்டை நாலா, எட்டா மடிச்சு ஒரு டேபிள் மேலயோ இல்ல தரையில வச்சோ குத்து, குத்தனும். அப்புறம் நோட்டை திறந்து பார்த்தா காந்தி தாத்தா கண்ணாடி உடைஞ்சிருந்தா அது கள்ள நோட்டு, உடையாம இருந்தா அது நல்ல நோட்டு.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சிரிக்க வைத்த நகைச்சுவை இது நீங்கள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம்

      Delete
    2. ஐ இது நல்லா இருக்கே....!

      அண்ணன் ஊருக்கு வரும்போது லட்சம் லட்சமா பணம் கொண்டு வருவேனாம், தங்கச்சி எல்லா நோட்டையும் ஒன்னொன்னா குத்தி குத்தி கள்ள நோட்டு நல்ல நோட்டுன்னு கண்டு பிடிப்பியாம் ஹா ஹா ஹா ஹா....சிரிச்சு முடியல....

      Delete
  9. இப்போது மிகவும் அவசியம் இந்த தகவல் எங்கும் போலி ஆகிவிட்ட நிலையில்!

    ReplyDelete
  10. அனைவரும் அறிய வேண்டிய பதிவு

    ReplyDelete
  11. கண்டுபிடிக்காத மாதிரி கள்ளநோட்டு அடிப்பது எப்படி?னு ஒரு பதிவு போடுங்க மக்கா.,:-)
    ///
    நல்ல தகவல்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு .வி.குமரகுருபரன் திருவாளப்புத்தூர் Kumarakurubaran

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!