Monday, July 22, 2013

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

பதிவுலகம் தன்னை மறுபடியும் மீண்டும் ஒரு எழுச்சிக்கு தயார்படுத்த எழும்புவதில் எனக்கு எல்லையில்லா சந்தோசம், காணாமல் போன பதிவர்கள் புத்துணர்ச்சியோடு திரும்பி வருவது மனதுக்கு சந்தோசம், இதில் டெரர் குரூப் தம்பிகள் உற்சாகத்தோடு மீண்டும் எழுத வேண்டும், விக்கி உலகம் விக்கி'யும் பதிவுகள் அதிகம் எழுதவேண்டும் என்பது என் ஆவல்...!

காணாமல் போன கனவுகள் [[http://rajiyinkanavugal.blogspot.com/2013/07/blog-post_8644.html]] தலைப்பில் பதிவுகள் எழுதி வரும் தங்கை ராஜி'யின் "என் முதல் கணினி அனுபவம்" என்ற தொடருக்கு அவரின் பதிவுலேயே தொடர் எழுத எனக்கும் அழைப்பு இருக்கும் என்ற பயத்தில்தான் அவரின் பதிவை வாசித்தேன்.

அப்பாடா என் பெயர் இல்லையென்றதும் சந்தோஷத்தில் கமெண்டிவிட்டு ஓடியே போனேன்.

ஆனால் நாம ஓடினாலும், நீ எங்கே போனாலும் உன்னை விடுறதா இல்லைன்னு தம்பி தமிழ்வாசி பிரகாஷ் மாட்டிவிட்டுட்டான், என்ன செய்ய உங்க தலை எழுத்து ஹி ஹி இதோ எனது கணினி அனுபவங்களை சொல்றேன்.

எனக்கு வேலை பார்க்கும் இடத்தில்தான் கணினி அறிமுகம் அதுவும் பஹ்ரைனில், ஆரம்ப காலத்தில் நான் வெயிட்டராக வேலை செய்யும் போது வேலை சம்பந்தப்பட்ட ஃபைல்களை, பில்களை சேவ் செய்து வைப்பதுதான் என் வேலை.

படிப்படியாக பதவி உயர்வு பெற்று உயர்ந்து ரிஷப்ஷன் இன்சார்ஜ் ஆனபிறகுதான் கம்பியூட்டர் என் வசம் ஆனது என்றாலும், அது வேலை விஷயத்திற்குதான் பயன்பட்டது.

அந்த நேரத்தில் நண்பர் ஒருவருக்கு வேலையும் விசாவும் அரேஞ்ச் செய்து கொடுத்ததுக்கு அன்பளிப்பாக, நான் ஒரு முறை ஊர் வரும்போது, தனது லேப்டாப்பை என் மகனுக்கு கொடுத்துவிடு என்று சொல்லி அன்பளிப்பாக தந்தார்.

அதை ஊருக்கு [[லேப்டாப்கள் ஊரில் பெரிய பணக்காரர்களின் கையில் இருந்த நாட்கள்]] கொண்டு போயி நானும் மகனும் வீடியோ கேம் விளையாடினோம்.

அந்த சமயம் என் அக்கா பொண்ணு வந்து எனக்கு லேப்டாப்பின் சில விஷயங்களை சொல்லி தருவாள், நானும் சந்தேகங்களை கேட்டறிந்து லேப்டாப் கை வண்ணத்திற்கு வந்தது.

இங்கே பஹ்ரைன் வந்து வேலையில் ஜாயின் செய்யும்போது என்னை புதியதாக நட்சத்திர ஹோட்டலுக்கு அனுப்பினார்கள் அங்கே நெட் கனெக்ஷன் இருந்தபடியால், தமிழ் நியூஸ் பேப்பர் படிக்க கூகுளில் தட்டும்போது பல பதிவுகள் கண்ணுக்கு தெரிய, பதிவர்களுக்கு அவர்கள் மெயிலில் கமெண்ட்ஸ் அனுப்புவேன்.

எனக்கு அப்போது வலைத்தளம் இல்லாதிருந்தது. அப்புறம் மெதுவாக பேஸ்புக் நண்பர்கள், வலைத்தள நண்பர்கள் மூலமாக கணினியில் கலக்கி வருகிறேன்...!
front office சம்பந்தப்பட்ட வேலைகள்தான் எனக்குத் தெரியும் கணினியில், ஆனால் ஆடிட்டிங் சுத்தமா தெரியாது அதற்க்கு தனி கோர்ஸ் உண்டாம், இப்போது எங்கள் ஹோட்டல் நைட் ஆடிட்டிங்கையும் நான்தான் செய்கிறேன் ஒரே மாதத்தில் நைட் ஆடிட்டிங் நான் படித்து முடித்தது, எனக்கு டிரைனிங் தந்த பஹ்ரைன் அரபியே ஷாக் ஆகிவிட்டான்...!

எனக்கு முன்பு மூன்றுபேர் நைட் ஆடிட்டிங் தெரியாமல் கற்று கொடுத்தும் புரியாமல் வேறு இடங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர், எங்கள் ஹோட்டல் ஜி எம் இப்பவும் சொல்வார், "மனோஜ்........... ஜி எம் ஆகும் நாள் தூரத்தில் இல்லை அவன் கைகளுக்குள்தான் இருக்கிறது" என்பார்.

ஆக இதுதான் என் கணினி அனுபவம்.....அப்பாடா தப்பிச்சேன் நான் இனி யாரை கோர்க்கலாம் ?

மெட்ராஸ் பவன் சிவகுமார் 

கோவைநேரம் ஜீவா 

கே ஆர் விஜயன் 

உணவு உலகம் ஆபீசர் சங்கரலிங்கம் 

நாய் நக்ஸ் அண்ணன் நக்கீரன் 

மாட்டுனாயிங்கபா......வாங்க வாங்க பதிவுலகத்திற்கு உயிர்கொடுப்போம், வசதியாக இதோ சென்னை பதிவர்கள் சந்திப்பும் நடைபெற இருக்கிறது இல்லையா....!

25 comments:

  1. தொடருக்கு அவரின் பதிவுலேயே தொடர் எழுத எனக்கும் அழைப்பு இருக்கும்
    >>
    அண்ணா! உங்களை நான் கூப்பிட்டால் நான் என்னை கூப்பிட்ட மாதிரி!! தேவையா இந்த சுய விளம்பரம்?! அதான் மத்தவஙக்ளை கூப்பிட்டேன். அப்புறம் நம்மளை குடும்ப பதிவர்கள்ன்னு கட்டம் கட்டி கும்முவாங்க. தேவையா இதெல்லாம்?!

    ReplyDelete
  2. பேஸ்புக்கில் தான் அதிக கலக்கல்...!

    கே ஆர் விஜயன் அவர்களை மாட்டி விட்டதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. அண்ணனுக்கு தங்க மனசு.....

      Delete
  3. மக்கா.... முதல் அனுபவமே லேப்டாப் தானா?

    அதான் உமக்கு லேப்டாப் மனோ என்ற இன்னொரு பெயரும் இருக்கே??

    ReplyDelete
  4. மனோஜ்........... ஜி எம் ஆகும் நாள் தூரத்தில் இல்லை அவன் கைகளுக்குள்தான் இருக்கிறது"///

    ஆகா... பக்ரைனில் கலக்க இருக்கும் மக்கா வாழ்க வாழ்க....

    ReplyDelete
  5. சூப்பர்.... கோர்த்துவிட்ட ஆட்களும் சூப்பர்...

    ReplyDelete
  6. சுருக்கமாக அருமையாக
    அனுபவத்தை பதிவு செய்தது பிடித்திருந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நல்ல அனுபவம்...

    கணினியில் எல்லோருக்கும் இருக்கும் அனுபவங்களைப் படிக்க ஆவல்.... :)

    ReplyDelete
  8. /கணினியில் கலக்கி வருகிறேன்...!//

    கப்புல கலக்குவதுதான் எனக்கு தெரியும் அது எப்படிங்க கணணியில் கலக்கி வரீங்க அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லி தாங்களேன்

    ReplyDelete
  9. ரைட்டு.. ஆரம்பிச்சிட்டிங்களே....

    ஒருத்தரையும் விடாதீங்க

    ReplyDelete
  10. யாரு இந்த மெட்ராஸ்பவன் சிவகுமார்?

    ReplyDelete
    Replies
    1. இது வேறயா ? அவ்வவ்....

      Delete
    2. மெட்ராஸ்க்கு நான் பொறி வச்சேன் இப்டி கவுத்துட்டீங்களே...

      Delete
    3. ஹா ஹா ஹா ஹா அட அப்பிடியா...?

      Delete
  11. ஹா ஹா ஹா ஹா...விடமாட்டீங்களே....

    ReplyDelete
  12. உங்கள் ஆர்வமும் முயற்சியும் உழைப்பும் சூப்பர். மிக உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அடடா வட போச்சே...........

    ReplyDelete
  14. சீக்கிரம் ஜி.எம் ஆக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. முதல் கன்னி அனுபவம்னு படிச்சிட்டேன் சே......

    ReplyDelete
    Replies
    1. முதன்முதலா மேடையேறும்போது கன்னிப் பேச்சுனு சொல்ற மாதிரி ,இதையும் கன்னி கணினி அனுபவம்னு சொல்லலாமே.. :-)

      Delete
  16. ஹா.ஹா..முதல் அனுபவமே ஓசி லேப்டாப்பில் அமைந்து விட்டது. சுகமான அனுபவங்களை சுவைபட சொல்லியிருகீங்க தல..

    ReplyDelete
  17. நல்ல அனுபவம் சகோ..
    //மனோஜ்........... ஜி எம் ஆகும் நாள் தூரத்தில் இல்லை அவன் கைகளுக்குள்தான் இருக்கிறது" என்பார்.//வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டா! ஆளாளுக்கு தொடர் பதிவு எழுதி கலக்குறீங்களே! சூப்பர்! கலக்குங்க! கலக்குங்க! நன்றி!

    ReplyDelete
  19. தொடர் பதிவு மீண்டும் வலையகத்தில் கலக்குகிறது...
    அருமையா எழுதியிருக்கீங்க... குறிப்பா விஜயன் அண்ணா உள்ளிட்டோரை தொடர் எழுத அழைத்தமைக்கு... மாட்டிவிட்டமைக்கு நன்றி அண்ணா...

    ReplyDelete
  20. , காணாமல் போன பதிவர்கள் புத்துணர்ச்சியோடு திரும்பி வருவது மனதுக்கு சந்தோசம், இதில் டெரர் குரூப் தம்பிகள் உற்சாகத்தோடு மீண்டும் எழுத வேண்டும், விக்கி உலகம் விக்கி'யும் பதிவுகள் அதிகம் எழுதவேண்டும் என்பது என் ஆவல்...!////////////////////


    உண்மை மக்கா.....நம்ம பதிவு...வர வேண்டிய நேரத்தில் வரும்...வேய்ட்டீஸ்....மக்கா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!