Tuesday, July 23, 2013

உங்க ஹோட்டல்ல கில்மா உண்டா...?

ஆன் லைன்ல சீப் ரேட்டுல [[ரம்ஜான்]] ரெண்டு பேருக்கு ரூம் புக் பண்ணிட்டு, மூனு பொண்டாட்டி [[அரபி]] ஆறு குழந்தங்கள [[பெரிய]] கூட்டிட்டு வந்தான் பாருங்க, அவரு அறிவாளியாம், நமக்கு அறிவில்லைன்னு சிம்பாலிக்கா நாடகம் காட்டுனான் பாருங்க, விடுவோமா நாம யாரு ? எல்லாருக்கும் எக்ஸ்ட்ரா சார்ஜ் போட்டு அவன் பர்ஸ் வெயிட்டை குறைச்சொம்,வச்சொமில்லை செக்கு.
---------------------------------------------------------------------------------------------

பஹ்ரைனில் சூடு நெருப்பைப் போல கொளுத்துகிறது, ஏசி'யில் இருந்தும் வேர்த்து ஊற்றும் அளவுக்கு சூடு....! கட்டிட வேலை தொழிலார்களை நினைத்தால் மனசு விம்முகிறது...!
---------------------------------------------------------------------------------------------
எங்கள் ஹோட்டலுக்கு ஓமானில் இருந்து வந்த ரெண்டு விருந்தினர் முன்னிலையில் எங்கள் இரண்டு ஸ்டாஃப்கள் கேலியாக அவர்களுக்கு தெரியாது என்று நினைத்து ஹிந்தியில் பேசிவிட, பஞ்சாயத்து என்னிடம் வந்தது.

" ஏன்டா மஸ்கட்ல, ஓமான் நாட்டுல இருக்குற அரபிகளுக்கு ஹிந்தி பேசத்தெரியாவிட்டாலும் அவர்களுக்கு நன்றாக புரியும் என்பது இன்னுமா தெரியாம இருக்கீங்க ?"

"தெரியாம போச்சு சார் எம்புட்டோ மன்னிப்பு கேட்டும் அவனுக உங்ககிட்டே கூட்டிட்டு வந்துட்டானுக"

" சரி அவன் என்ன கேட்டான் முதலில் உங்களிடம் ?"

" உங்க ஹோட்டல்ல கில்மா உண்டா என்று கேட்டான் சார், நான் சொன்னேன் இது இண்டர்நேஷனல் ஹோட்டல் உலக முழுவதும் எங்களுக்கு நாலாயிரத்திற்கும் மேலான ஹோட்டல்கள் உண்டு, இங்கே நல்லவர்கள் மட்டுமே வருவார்கள் என்றேன், அதற்கு அவர்கள் என்னை திட்டினார்கள், அதான் கேலியாக சிரித்து விட்டோம்" என்றான்.

அரபிகளை பார்த்து நான் " ஓகே டியர் கால் போலீஸ்..."

"ஒய்....?"

" நீ கூப்புடுறியா போலீஸை இல்ல நான் கூப்பிடட்டுமா...?" என்று சத்தமாக சொல்லிவிட்டு போலீஸுக்கு போன் செய்வது போல ஆக்க்ஷன் செய்ய....வல்லா..... என்று அலறி ஓடுனாணுக பாருங்க சிரிச்சு வயிறு வலி இன்னும் தீரல...! கில்மா வேணுமாம்ல கொய்யால.

நீதி : எல்லாருக்கும் எல்லா பாஷையும் தெரியும்னு "நம்ம" மனசுல நினச்சுகிட்டு பேசணும் ஆமா....
------------------------------------------------------------------------------------------------ 
என் நண்பன் ஒருவனிடம் ஆயிரம் தினார் [[சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்]] வட்டிக்கு வாங்கிய ஒரு பங்களாதேஷ் பெங்காலி ஒருவன், காசை திருப்பி தர நண்பன் வீட்டுக்கு வருகிறேன் என்று போன் செய்துவிட்டு நண்பன் ரூமிற்கு வந்தவன், பணத்தை கொடுக்குமுன்பே ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டான் அந்த இடத்திலேயே...!

ஆம்புலன்ஸ் வர அவர்களே சொல்லிவிட்டார்கள் ஆள் காலி என்று, பெங்காலி பாக்கெட்டில் இவன் காசு, நண்பர் ஒருவர் அவனிடம் கேட்டார் "அவன்தான் செத்து போயிட்டான்னு முதல்லையே உனக்கு தெரிஞ்சுதே உடனே அவன் பாக்கெட்டில் கையை போட்டு பணத்தை எடுக்க வேண்டியதுதானே கேனையா...?"

"அது எப்பிடி இறந்து போனவன் பாக்கெட்டில் கையைப் போட்டு பணத்தை எடுப்பது" என்று மனிதாபிமானம் பேச....எனக்கோ கண்ணில் கண்ணீர் முட்டிவிட்டது, இவளவுக்கும் நண்பன் ஒரு மலையாளி....!
--------------------------------------------------------------------------------------------------
டியூட்டியில் எங்கள் ஹோட்டல் செக்கியூரிட்டி [[அரபி]] ஒருவன், சர் எனக்கு தலை கிறு கிறுன்னு வருது உடனே ஆஸ்பிட்டல் போகனும்னு சொல்லவே....

"அப்பிடியா உடனே இதோ கார் ஏற்பாடு செய்கிறேன்" என்று இன்டர்காம் பட்டனை அழுத்தப் போக.

"சர் சர் வேணாம் என்கிட்டே கார் இருக்கு அதுல போயிக்குறேன்"

"ஏ உனக்குத்தான் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ரடிக்குதே அப்புறம் எப்பிடிய்யா காரை ஓட்டுவே...?" 

"அப்பிடி ஒன்னும் பலமா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்ல சர் நான் போயிருவேன் நோ பிராப்ளம்"

"ஓகே டேக் கேர் ஏதானும் உதவி வேணுமானால் எனக்கு உடனே போன் செய் ஓகே.."

"ஓகே நன்றி சார் [[சுக்ரன்]]..."

நானும் கொஞ்சம் பதட்டமாக எங்கே அட்டாக் கிட்டாக் வந்து பிரச்சினை ஆகிற கூடாது என்று, இவன் கிளம்பி போன டைம் திரும்பி வந்த டைம் எல்லாம் எல்லாம் எழுதி ஜி எம்"மிற்கு ரிப்போர்ட் அனுப்பி வைத்தேன்.

அடுத்தநாள் என்னை சந்தித்த ஜி எம்....."என்ன மனோஜ், நேற்று உசேன் ஹாஸ்பிட்டல் போனானோ ? உனக்கு நல்லா தெரியுமா...? என்றார் 

"சர் அவன்தான் தலை கிர்ர்ரடிக்குது ஹாஸ்பிட்டல் போகனும்னு சொன்னான் அதான் அனுப்பினேன்"

"சரி, தலை கிர்ர்ர்ர்ரடிக்குரவனை அவன் காரில் எப்படி போக அனுமதித்தாய் ? "

"அவன் என்னால் போக முடியும் என்று தீர்க்கமாக சொன்னதால் அனுப்பினேன் சர்..."

"நீ உருப்படுறாப்ல இல்லே மனோஜ்..."

புரிஞ்சிபோச்சு எனக்கு செக்யூரிட்டி எனக்கு பல்பு கொடுத்துட்டான்னு...!

"என்னாச்சு சர்...?"

"அடேய்.......... அவன் நீ ரிப்போர்ட் எழுதி அனுப்பிய டைம் முழுவதும் அவன் கேர்ள் ஃபிரண்ட் கூட k f c ரெஸ்ட்டாரண்ட்ல இருந்து சாப்புட்டுகிட்டு இருந்தான், நானும் அங்கேதான் இருந்தேன்"

ச்சே இப்பிடியா பல்பு குடுப்பானுக முடியல....!

படங்களுக்கு நன்றி கூகுள்.


23 comments:

  1. பஹ்ரைன்ல கில்மாவா...? சிங்கப்பூர் னு நெனைச்சுடானுவ போல... நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்தீங்க போங்க ..

    ReplyDelete
  2. கில்மாவிற்கு செம வெட்டு...!

    மனிதாபிமான நண்பருக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. மனிதாபிமான மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். அந்த நண்பருக்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
  4. //"அது எப்பிடி இறந்து போனவன் பாக்கெட்டில் கையைப் போட்டு பணத்தை எடுப்பது" என்று மனிதாபிமானம் பேச...//


    நாட்டில இந்த மாதிரி மனுஷங்க இருக்கிறதாலதான் கொஞ்சமாச்சும் மழை பெய்யுது...

    ReplyDelete
  5. ஏற்கனவே இருக்கிற 3-4 பத்தாதுன்னு கில்மா வேறயா...வெளங்கிரும்.

    ReplyDelete
  6. அந்த மலையாள நண்பருக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  7. அட மனோவுக்குக் கூட பல்பு குடுக்க இயலுமா - பலே பலே - நல்வாழ்த்துகள் மனோ - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. கில்மா செம்ம... பல்பு 200 வாட்ஸ் வாங்கி இருப்பீங்க போல...

    ReplyDelete
  9. ஐயோ வெயில் இங்கும் (பாரிசிலும்)கொழுத்துகின்றதே
    உண்மையில் கட்டிடப்பணியாளர்கள் பாவம் தான்!

    ReplyDelete
  10. பதிவு செம... பல்பு மக்கா செமையா வாங்கி இருக்கீங்க போல...

    ReplyDelete
  11. அனுபவங்கள் சுவையானவை! மலையாளியின் மனிதாபிமானம் வியக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
  12. சுவாரஸ்யமான பிளாக் எனில்
    அது நாஞ்சிலார் பிளாக்தான்
    அதற்கு இந்தப் பதிவும் சாட்சி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அண்ணே உங்க ஹோட்டல்ல கில்மா உண்டா இல்லையான்னு கடேசி வரைக்கும் சொல்லலியே....?

    ReplyDelete
  14. மனிதர்களில் எத்தனை நிறங்கள்?
    ஆமா,கில்மா ன்ன என்ன?

    ReplyDelete
  15. கில்மா, கிர்ர்ருக்கு நடுவே மனிதாபிமான மலையாளி நண்பன்...

    நண்பனுக்கே பாராட்டு....

    அருமை அண்ணா....

    ReplyDelete
  16. நல்ல அனுபவங்கள்.... மனிதாபிமானம் .... வாழ்க அந்த நண்பர்....

    ReplyDelete
  17. மலையளியில் கூட இப்படி பட்ட ஆள

    ReplyDelete
  18. ஒரு அருமையான பல்சுவை விருந்து சாப்ட்டா மாதிரி இருந்துது உங்க பதிவு. கேலி,கிண்டல், சீரியஸ்னு ஒரு தமிழ் படம் மாதிரி....நல்லா எழுதறீங்க. இன்னைக்கித்தான் இங்க வந்தேன். இனி அடிக்கடி வருவேன்.

    ReplyDelete
  19. ச்சே மனோவுக்கு இப்பிடியா பல்பு குடுப்பானுக முடியல....நகைச்சுவை மன்னன் மனோ !

    ReplyDelete
  20. மனிதாபிமான நண்பருக்கு வாழ்த்தும், பல்ப் குடுத்த நண்பருக்கு கண்டனத்தையும் சொல்லிடுங்கண்ணா!

    ReplyDelete
  21. malayaligalil Miga Miga Nallavargalum undu, aanaal pala nallavargalaippol avargal veliyey therivdhillai.

    Nallavar & vallavaraaga veliye therinthavargalil MGR matrum TN Seshan iruvarum migavum siranthavargal

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!