நான் காந்தி அல்ல என்றுதான் முதலில் பெயர் வைத்தார்கள், காந்தியவாதிகளின் கடுமையான எதிர்ப்பால் "நான் மகான் அல்ல" என்று பெயர் வைத்தார்கள், அதுதான் ரஜினியின் "நான் மகான் அல்ல."
சின்ன வயசுல பேப்பரில் படித்த நியாபகம்...!
------------------------------ ------------------------------ ------------------------------ -----------------
இங்கே மும்பையில் மெட்ரோ ரயில் வருமுன் கட்டப்பட்டு கொண்டிருக்கும் பாலங்கள் எல்லாம் பாளம் பாளமாக இடிந்து விழுந்து கொண்டிருக்குறது அதான் கொஞ்சம் பயமா இருக்கு.
------------------------------ ------------------------------ ------------------------------ -----------------
ஆரம்ப காலத்தில் அதாவது நான் வலைத்தளம் தொடங்கும் முன்பு அநேகம் நாவல்கள் புஸ்தகங்கள் வாசிப்பது உண்டு அதில் மிகவும் பிரபலமான எழுத்தாளர் தமிழ் தமிழ் தமிழன் தமிழன் என்று உயிரை விட்டு எழுதுபவர் ஒருவருக்கு, ஈழத்தில் நடந்த இனப் படுகொலை பற்றி நீங்கள் எழுதினால் பலரை சென்றடையுமே என்று படுகொலை படங்களை அவருக்கு மெயில் அனுப்பினேன்.
வந்த பதில் "இனி நீ எனக்கு இதுமாதிரி மெயில் அனுப்பினால் சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன்"
பின்னே என்ன மண்ணாங்கட்டிக்குடா தமிழன் தமிழ்ன்னு எழுதுறீங்க ? உங்களுக்கு காசு பணம் புகழ் சம்பாதிக்க மட்டும்தான் தமிழனும் தமிழும் தேவைப்படுகிறதா ?
------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
சூது கவ்வும் படம் பார்த்தேன், என்கவுண்டர் வெள்ளைதுரையாக வரும் பிரம்மாவுக்கு பின்னாடி வச்சிருந்த துப்பாக்கிய [[கள்ள]] எடுக்கும்போது துப்பாக்கி வெடித்து இடுப்பை பதம் பார்த்தது இல்லையா ?
உண்மையிலேயே என் நண்பனின் மாமா ஒருவருக்கு இப்படி கள்ள துப்பாக்கி வெடிச்சு புட்டம் பதம் பார்க்கப்பட்ட கதை உண்டு.
என்ன படத்துல நம்ம பிரம்மா துப்பாக்கிய [[கள்ள]] எடுக்கும் போது வெடிச்சுது நம்ம நண்பனின் மாமாவுக்கு பைக்கை கிக்கடிச்சப்போ வெடித்தது.
துப்பாக்கியை பின்னாடி இடுப்பில் வைக்கும் போது புல்லட்டை லோடு செய்து வைக்கனும்னு எந்த பரதேசிங்க இவனுகளுக்கு சொல்லி கொடுத்தானுகளோ தெரியல. இல்லைன்னா லாக் செய்தும் வைக்கலாமே.
------------------------------ ------------------------------ ------------------------------ -----------------
ஒபியம் விளைச்சல் குறைவால் அடிக்கடி போர்களை ஒத்தி வைத்து இருக்கிறார்கள் முகலாயர்கள்...! அப்போ கஞ்சா அடிச்சுட்டுதான் சண்டை போட்டுருக்காங்க இல்லையா ?!!!
------------------------------------------------------------------------------------------------------------
ராத்திரி முழுவதும் நைட் ஆடிட்டிங் பண்ணுறதுக்கு முடியாமல் கம்பியூட்டர் மக்கர் பண்ண, எத்தனையோ முறை ரீஸ்டார்ட் செய்தும் பலனில்லாமல், போடாங் கொய்யா என்று டென்ஷனில் அமர்ந்துவிட்டேன், ஜி எம்"முக்கு என்னடா பதில் சொல்லவென்று.
காலையில் டியூட்டி மாற வந்த பெண் ரிஷப்சனில் வந்தவளிடம், இவளுக்கு என்னத் தெரியப்போகுதுன்னு சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன், எங்கே காட்டு என்றவள் என்ன மந்திரம் செய்தாளோ, அப்புறம் மக்கர் பண்ணாம சமத்தா ஆடிட்டிங் செய்ய உதவுச்சு, ம்ம்ம்ம்ம் "பெண்கள் என்றால் இப்போது கம்பியூட்டரும் இறங்க ஆரம்பிச்சுடுச்சு" போல....!
எழுத்தும் உபதேசமும் ஊருக்குத்தான் தங்களுக்கில்லை என்பது போலத்தான் நிறையப் பேர் நடந்துக்கறாங்க மனோ...! நானும் பார்த்து நொந்ததுண்டு. ‘நான் மகான் அல்ல’ தலைப்புக்கு நீங்க சொன்ன விவரம் சரிதான். கம்ப்யூட்டர் உண்மையில பெண்ணைக் கண்டு இரங்கியிருக்காது நண்பா... பயந்திருக்கும்! ஹா.. ஹா... ஹா...!
ReplyDeleteஎழுத்தும் உபதேசமும் ஊருக்குத்தான் தங்களுக்கில்லை என்பது போலத்தான் நிறையப் பேர் நடந்துகொள்கின்றார்கள்.
ReplyDeleteபுகழ் சம்பாதிக்க தான் தமிழ்... இல்லையென்றால் டமில்...
ReplyDeleteதிறமையான ரிஷப்சனிஸ்ட்....!
அண்ணே... அந்த ரிஷப்ஷனிஸ்ட் வெலாசம்....வெலாசம்.
ReplyDeleteஇனிய வணக்கம் மக்களே...
ReplyDeleteபாலம் கட்டவேண்டிய காசில்
வேறு எங்கேயாவது உட்பாலம்
கட்டிக்கொண்டிருந்தால் இப்படித்தான் நடக்கும் போல...
==
கூர்முனை ஏந்திவிட்டால்
தார் ஊற்றி முழுக்கினாலும்
பார்த்து கொதித்தெழும்
நேர்ச்சி உணர்வுகளை
நீர்த்துப்போகச் செய்யாது
தூர்த்துஎடுப்பவனே கலைஞன்...
===
கடைசி ஒன்னு டாப்பு... சுவரஸ்யமாய் ஒரு கதம்ப பதிவு நல்லாயிருக்கு அண்ணா :)
ReplyDeleteமிகவும் நன்றாக இருந்தது!அந்த நண்பர் சைபர் கிரைமில் புகார் கொடுக்கவில்லையே?/// "பெண்கள் என்றால் இப்போது கம்பியூட்டரும் 'இறங்க' ஆரம்பிச்சுடுச்சு" போல....!///'கிறங்க'(மயங்க)..........!!!!
ReplyDelete\\\\இங்கே மும்பையில் மெட்ரோ ரயில் வருமுன் கட்டப்பட்டு கொண்டிருக்கும் பாலங்கள் எல்லாம் பாளம் பாளமாக இடிந்து விழுந்து கொண்டிருக்குறது அதான் கொஞ்சம் பயமா இருக்கு\\\\ ஆஹா "கல்"மாடி இங்கேயும் புகுந்துட்டுதா???
ReplyDeleteபாலம் மீது வருமா மெட்ரோ இல்லை பாதைசாரிகள் மீது விழுமா பாலம்
ReplyDeleteபாவம் மக்கள்:)) பல்சுவைக்கதம்பம் போல பதிவு முகலயர் கேடீங்களா??:)))
This comment has been removed by the author.
ReplyDeleteநீண்டகாலத்தின் பின் மகேந்திரன் அண்ணாச்சியை உங்கள் வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி நலம்தானே பாவலரே?
ReplyDeleteசுவையான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇங்கே பெரும்பாலும் ஊருக்குத்தான் உபதேசம் அண்ணா...
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்.
அட... எழுதுவது அவர்கள் தொழில்! சம்பாதிக்க வழி.... தமிழ் உணர்வு எனச் சொல்வதெல்லாம் சும்மா! இதையெல்லாம் நம்பக்கூடாது மனோ! :)
ReplyDeleteஇங்க கூட கம்ப்யூட்டர்ல கொஞ்சம் பிரச்சனை! :)