Tuesday, July 16, 2013

ஏ ஓடாதீங்க ஓடாதீங்க ஒரு சின்ன கதை சொல்லுதேன்...!

"டைம் ஆகுதுங்க புறப்படுங்க" மனைவி அவசரப்படுத்தினாள்.

"நான் வரலைம்மா நீ போயிட்டு வா" புருஷன்.

"மூன்று வருஷமாக காதலிச்சு கல்யாணம் செஞ்சதுக்காக நம்ம கண்டுக்காம இருந்தவங்க இப்போ என் தங்கச்சி கல்யாணத்துக்கு அழைப்பு வச்சிருக்காங்க, வாங்கங்க போயிட்டு வருவோம்"

"நான் அங்கே வந்தால் எனக்கும் மரியாதை இருக்காது உனக்கும் மரியாதை இருக்காதும்மா இந்த பாழாய் போன ஜாதியால்...நீ போயிட்டு வாம்மா நான் வரல..."

எவளவோ கெஞ்சிப்பார்த்தும் மாரி  மறுத்துவிட்டான், அவன் இனி வரமாட்டான் என்று புரிந்தவுடன் குழந்தையை தூக்கிவிட்டு புறப்பட்டாள் தன் தாய்வீடு நோக்கி...

பஸ் பிடித்து வேர்க்க விறுவிறுக்க வீட்டை நோக்கி ஓடினாள், பின்னே மூன்று வருஷம் போக முடியாத பிறந்த வீடாயிற்றே....

பஸ்ஸின் குலுக்கம் தாலாட்ட பழைய நினைவுகளில் மூழ்கிப்போனாள்....
ஆச்சாரம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவள் அமுதா, அமுதாவின் அப்பா புதிதாக வீடு கட்டும் போது கொத்தனார் வேலைக்குப் போனவன் மாரி, அந்த ஒரு மாதத்திலேயே காதல் வந்து விட்டது இருவருக்கும்.

சாப்பிடப்போறேன்னு மத்தியானம் வீட்டுக்குப் போனாலும் சாப்பிடாமல் திரும்பி வருவான், அமுதா அவனுக்கு இங்கே சாப்பாடு எடுத்து ஒளித்து வைத்துக் கொடுப்பாள், காலையிலும் சாப்பிடாமல்தான் வரவேண்டும் என்று கன்டிஷன் இடும் அளவுக்கு காதல் முற்றி......!

ஓடிப்போயி கல்யாணம் செய்து ஒரு குழந்தையும் பிறந்து விட்டது....ஆனாலும் பெற்றவர்கள் வீட்டிலிருந்து யாருமே பார்க்க வரவே இல்லை இவளும் போகவில்லை.

இந்த நிலையில்தான் தங்கை கல்யாணத்திற்கு அழைப்பு வந்தது, அப்பாவே வந்து பத்திரிகை  கொடுத்துவிட்டு போனார், அதனால்தான் ஆர்வமாக போகிறாள்.

வீட்டிற்கு போனதும், வாம்மா என்று அப்பாவோ அம்மாவோ தங்கையோ அண்ணன்களோ கூப்பிடவே இல்லை, அவள் குழந்தையை யாரும் தொடக்கூட இல்லை, பொண்ணுக்கு அலங்காரம் செய்யும் இடத்தில் தங்கையை தொடக்கூட அனுமதிக்கவில்லை.

எல்லா சொந்தமும் அவளை ஒரு அந்நியமாகவே பார்த்துக் கொண்டிருந்தார்கள், சாப்பாடு வாசனை, அவளுக்கு சாப்பிட ஆசையாக இருந்தது, ஆனால் சாப்பிட யாருமே சொல்லவில்லை.

அவளுக்கு புரிந்தது, குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துவிட்டு, அங்கே தண்ணீர் கூட குடிக்கப் பிடிக்காமல் அடுத்த பஸ்ஸை பிடித்து கணவன் வீட்டுக்கு வந்தாள்.

குடிசைக்குள் மாரி கஞ்சி குடித்துக் கொண்டிருந்தான், இவள் போனதும் இவள் வாயில் கஞ்சியை ஊட்டினான். அவளுக்கு அது தேவாமிர்தமாக இனித்தது, உலகம் புரிந்தது நெஞ்சம் நிறைந்தது....!

டிஸ்கி : பின்னே சிறுகதை நாங்களும் எழுதுவோம்ல.....!



28 comments:

  1. நல்லாத்தான் எழுதிறீங்க. உங்களுக்கு என்ன குறை. நல்ல கருத்து. ரொம்ப நீட்டி முழக்காமல் அளவா இருந்தது. வாழ்க வளர்க

    ReplyDelete
  2. அண்ணே... சூப்பரு... மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு சொல்லிட்டீங்க....

    ReplyDelete
  3. சமகால சூழ்நிலைக்கு ஏற்ப எழுதப்பட்ட கதை... எவ்வளவு சுத்தம் பத்தமாக தன்னை காட்டிக் கொண்டாலும் ஜாதிய வாடை மட்டும் சிலரிடம் அடிக்கத்தான் செய்கிறது.. அருமையான கருத்து...!!

    ReplyDelete
  4. மதியார் வாசல் மிதியாதே...! தொடர்ந்து இது போல் எழுத வாழ்த்துக்கள் அண்ணே...!

    ReplyDelete
  5. அன்பின் மனோ - சின்னக் கத அருமையா இருக்கு - இதெல்லாம் எப்பத்தான் மாறுமோ தெரியல - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. சரி...அப்ப எதுக்கு பத்திரிகை வைச்சாங்களாம்??

    ReplyDelete
  7. நல்லாதான் இருக்கு. அவளே வலிய போய் இருந்தா வாம்மா!ன்னு சொல்லி இருக்க மாட்டாங்க. ஆனா, அப்பாவே வந்து பத்திரிகை வச்சு கூப்பிட்டு போய் இருக்கும்போது அப்படி கவனிக்காம விடமாட்டங்கண்ணா!

    ReplyDelete
    Replies
    1. பார்மாலிடிக்கா கூப்பிடுவாங்க ஆனால் வராதேன்னு அதுல ஒரு அர்த்தமிருக்கும்....!

      என் நண்பர்களிடம் நான் நேரில் பார்த்த பார்க்கும் விஷயம் இது...!

      என் பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்....என்னையும் ஒரு காதலை சேர்த்து வைத்ததற்கு இப்பவும் என்னைக் கொல்ல அருவாளோடு திரியும் ஒருவன் இருக்கிறான் ஊரில்....!

      அவன் தங்கச்சிக்கு பிள்ளைகளும் பிறந்து ஒன்றாக இருக்கிறார்கள் ஆனால் என்னை கொல்ல அருவாளோடுதான் இருக்கிறான், சமயம் பார்த்து....!

      நான் ஊர் போனால் அவனை நன்றாக வாட்ச் பண்ணுவார்கள் என் நண்பர்கள்...!

      ஜாதிக்கு ஒரு அழிவு வரணும் அம்புட்டுதான்.

      Delete
  8. அட

    காலத்துக்கேற்ற சிறுகதை

    ReplyDelete
  9. சிறுகதை என்றாலும் மனதில் ஒட்டிக் கொண்ட கதை... பெரும்பாலும் இது போல் சுருங்கச் சொல்லும் கதைகள் வெகுநாட்களுக்கு மனதில் இருந்து மறைவதில்லை...

    ReplyDelete
  10. பின்னே சிறுகதை நாங்களும் எழுதுவோம்ல.....// தொடர்ந்து எழுதுங்கள். நல்லா இருக்கு.

    ReplyDelete
  11. சிறப்பான கதை .தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  12. சிறு கதை என்று சொல்வதை விட,சரியான சாட்டையடி உணர்வு என்று குறிப்பிடலாம்.திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?வாழ்க கவியரசர் புகழ்!

    ReplyDelete
  13. அருமையான சிறுகதை மதியாதார் வீடு மிதியாமை கோடிபெறும் என்ற வாக்கு சும்மா இல்லை!

    ReplyDelete
  14. அழகான சிறு கதை... மாரி மானம் காத்துக் கொண்டான்...!!!

    அழகா சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  15. உண்மையில் சிறுகதை சிறப்பாக இருந்தது உங்களுக்கு சிறுகதையும் வரும் என நருபித்து உள்ளீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  16. சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அருமையான கதை! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  17. #பஸ்ஸின் குலுக்கம்#கலக்கம் தருது பாஸ் உங்கள் உங்கள் வார்த்தைப் பிரயோகம் !வீடு கட்டப்போன இடத்திலே மாரி செய்த நல்ல காரியத்திற்கு மாமனார் 'வூடு கட்டி 'அடித்ததை அடுத்த கதையில் எதிர்ப்பார்க்கிறேன் !

    ReplyDelete
  18. அருமையா எழுதியிருக்கீங்க மனோ ..தொடருங்கள்

    Angelin.

    ReplyDelete
  19. அழைக்கவும் செய்யறாங்க ,அலட்சியமும் பண்ணறாங்க? என்னடா உலகம்?

    ReplyDelete
  20. சின்னக் கதையில் அருமையான கருத்து....

    ReplyDelete
  21. Kathai karutthu
    Nadai arumai

    ReplyDelete
  22. நல்லா இருக்கு மனோ உங்க சிறுகதை! தொடருங்க! :)

    ReplyDelete
  23. அண்ணே... கதாசிரியராவும் கலக்கிட்டிங்க...
    தொடருங்க...

    ReplyDelete
  24. இந்த அவசரமான உலகத்துல கதையெல்லாம் படிக்க ஆளிருக்காங்களா பாஸ்?! ஆச்சர்யமா இருக்கு. அதுக்காக தொடர்ந்து கதை எழுத ஆரம்பிச்சிடாதீங்க!

    ReplyDelete
  25. அன்பின் மனோ - நான் ஏற்கனவே மறுமொழி போட்டுட்டேன் - இப்ப வந்தத்துக்குப் போடாட்டியும் தூங்கறப்ப - ஜாலியா கனவு கண்டுக்கிட்டிருக்கயில - மூடிக்கிட்டிருக்கற கண்ண வந்து குத்துவீங்களாக்கும் - சரி சரி - அப்படியாச்சும் மதுரை பக்கம் வரும் போது எஙக வூட்டுக்கு வாங்க - நல்வாழ்த்துகள் மனோ - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வருவேன் அய்யா சாப்பாடு பலமா இருக்க வேண்டும் ஹா ஹா ஹா ஹா....

      Delete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!