Thursday, July 25, 2013

சேலத்து மாம்பழத்திலும் வில்லங்கமா...?

முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகைகள், மும்பை ரெட்லைட் ஏரியாவில் [[அரசின் அனுமதியில் நடக்கும்]] தொழில் செய்தால் போலீஸ் கைது செய்யுமா? - என்னய்யா உங்க சட்டம்? தமிழ்நாடும் மும்பையும் இந்தியாவுலதானே இருக்கு ?
---------------------------------------------------------------------------------------
நாம ஒன்னு பேசுனா நமக்கு கீழே இருக்குறவன் நாலு பேசுறான், கைபிள்ளன்னு நினச்சிட்டான் போல, உண்மையான சுபாவத்தை இன்னைக்குதான் பார்த்துருப்பான்னு நினைக்கிறேன் - அருவா பலமாக வெளியே வந்துருச்சு, பயபுள்ள ஆடிப்பூட்டான், வெளியே போயி டேமேஜர்ன்னு திட்டி இருப்பானோ ஹி ஹி...?
---------------------------------------------------------------------------------------
சேலத்து மாம்பழம் சேலத்தில் விளையல்லயாமே அப்பிடியா ?  ஒரு பதிவில் படித்தேன், அப்போ அது சேலம் மாம்பழமா இல்ல "சேலத்து" மாம்பழமா ? அப்போ "சேலத்து" என்றால் என்ன? தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.
--------------------------------------------------------------------------------------
கனிமொழிக்கு முக்கிய பதவியை வழங்க கருணாநிதி திட்டம் - இதற்குதான் ஆசைபட்டாயா கருணா ? முக்கிய பதவியை முக்காமல் கொடுப்பதற்கு ?
----------------------------------------------------------------------
ஆங்கிலேயர் ஆட்சியில் நமக்கு குற்றாலத்தில் குளிக்க தடை இருந்தது, ஆங்கிலேயர்கள் மட்டுமே குளிக்கலாம், அதற்காக நம்மாளுங்க கோர்ட் படிகள் ஏறியும் மசியாத அரசாங்கம், தொடர் போராட்டங்களால், அவர்கள் குளிக்கும் போது நாம் குளிக்க கூடாது என்று ஆனதாம்....! எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை ?
-----------------------------------------------------------------------
காசுக்காக தடாலடி செய்திகளை போடும் மீடியாக்களை விட, வலைப்பதிவுகள் காசுக்காக செய்திகள் போடுவதில்லை, பத்திரிக்கைகளுக்கு நன்றி என்று போர்டு போட்டு வந்த சினிமாக்கள் எல்லாம் இப்போது இணையதளங்களுக்கு நன்றி என்று போட்டு வருகின்றன...!
----------------------------------------------------------------------
கச்சதீவை பற்றி வாய் கிழிய பேசும் எழுதும் பத்திரிகை மீடியாக்கள், இந்தியா இலங்கை கடல் எல்லை எங்கே இருக்கிறது என்பதை போயி பார்த்து தங்கள் மீடியாக்களில் வெளி இடலாமே ?
---------------------------------------------------------------------

ஹன்சிகாவுடன் காதல் ஒப்புக்கொண்ட சிம்பு - அய்யோடா சொப்பனசுந்தரி கதை மாதிரி இருக்கே ? ஆமா இது எத்தனை கை மாறி வந்துருக்குன்னு தெரிஞ்சுமா காதல் ? அவ்வ்வ்வ்வ்.....!!!

16 comments:

 1. எப்பவுமே கைப்புள்ளயாவே இருக்கக்கூடாது.. அப்பப்போ கட்டதுரையை காமிக்கணும்... சூப்பர்...

  ReplyDelete
 2. குற்றால உண்மை இன்று தான் தெரியும்...!

  ReplyDelete
 3. குற்றால உண்மை.நிஜம் சுட்டிருக்கிறது.அப்போது/

  ReplyDelete
 4. அவிங்க குளிக்கறப்போ நம்மாளுங்களும் குளிச்சா அவிங்க குளிச்ச தண்ணி பட்டு நாமளும் வெள்ளையாயிருவோம்னு நினைச்சிருப்பாய்ங்க:)

  ReplyDelete
 5. குற்றால உண்மை ஏற்கனவே தெரியும் அண்ணா!

  ReplyDelete
 6. நல்ல பதிவு மனோ ! என்னுடைய ஊர் ஸ்பெஷல் பதிவுகளை படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்....... சேலத்தை சுற்றி மாம்பழ தோட்டங்கள் நிறைய, நான் அங்கு சென்று மாமரம் வளர்ப்பு, பழுக்க வைக்கும் முறைகளை தெரிந்து வந்திருக்கிறேன். வியாபரதிர்க்காக பெரிய நகரமான சேலத்திற்கு வருவதால் அந்த பெயர்..... இது சேலத்திற்கு மட்டும் இல்லை, மதுரை மல்லிகை என்பது திண்டுக்கல், மானாமதுரை பகுதிகளில் இருந்து வருகிறது, ஆனால் மதுரையில் கிடைப்பதால் அது மதுரை மல்லி !

  ReplyDelete
  Replies
  1. ஒ மதுரை மல்லியும் மதுரை இல்லையா ? தகவலுக்கு நன்றி சுரேஷ்.

   Delete
 7. அண்ணே....
  ரெண்டுமே ஓடுன வண்டிதானே... இதுல ஹா...ன்னு மட்டும் நினைக்க வேண்டாமே....

  கச்சத்தீவு - சரியான கேள்வி செய்வாங்களா?

  அப்ப அப்ப அருவாவை எடுத்துருறீங்க....

  ReplyDelete
 8. குற்றாலம் பற்றிய தகவல் புதிது! சுவையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 9. //சேலத்து மாம்பழம் சேலத்தில் விளையல்லயாமே அப்பிடியா ? ஒரு பதிவில் படித்தேன், அப்போ அது சேலம் மாம்பழமா இல்ல "சேலத்து" மாம்பழமா ? அப்போ "சேலத்து" என்றால் என்ன? தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.//
  மாம்பழம் விளைச்சல் முதல் பல ரகங்கள் வரை கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள கிராமங்களில் தான் அதிகம். இப்போது தனி மாவட்டமாக உள்ள கிருஷ்ணகிரி சிலவருடங்களுக்கு முன் வரை தருமபுரி மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. அதற்க்கு பல வருடங்களுக்கு முன் இரண்டுமே சேலம் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. அப்போது சேலம் மாவட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி வந்ததால் சேலத்து மாம்பழம் என்றானது. உண்மையில் கிருஷ்ணகிரி மாம்பழம் என்று இருக்க வேண்டும்! இப்போதும் மாம்பழக் கண்காட்சி வருடாவருடம் நடப்பது கிருஷ்ணகிரியில் தான்!

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி நண்பா.

   Delete
 10. தொகுத்து வழங்கியமைக்கு நன்றி....

  ReplyDelete
 11. குற்றாலத் தகவல்கள் புதிது நன்றி

  ReplyDelete
 12. Bandhu அவர்கள் சொன்ன தகவல்தான் சேலத்து மாம்பழம் குறித்த சரியான தகவல்... கிருட்டிணகிரி என்னுடைய பிறந்த மாவட்டம்...மேலும் மாம்பழ சீசனில் எங்களூருக்குச் சென்றால் மாம்பழம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எதிர் வீடு பக்கத்து வீடு நண்பர்கள் அனைவருமே ஏதோ ஒரு மாம்பழ தோட்டத்து சொந்தக்காரர்களாகவோ, இல்லை குத்தகைக்கு எடுத்தவராகவோ இருப்பர்...பகிர்ந்த வண்ணம் இருப்பர்...மாம்பழம் வீட்டில் இல்லாத நாட்களே இல்லை எனலாம்....

  ReplyDelete
 13. bandhuJuly 26, 2013 at 8:58 AM

  //சேலத்து மாம்பழம் சேலத்தில் விளையல்லயாமே அப்பிடியா ? ஒரு பதிவில் படித்தேன், அப்போ அது சேலம் மாம்பழமா இல்ல "சேலத்து" மாம்பழமா ? அப்போ "சேலத்து" என்றால் என்ன? தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.//
  மாம்பழம் விளைச்சல் முதல் பல ரகங்கள் வரை கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள கிராமங்களில் தான் அதிகம். இப்போது தனி மாவட்டமாக உள்ள கிருஷ்ணகிரி சிலவருடங்களுக்கு முன் வரை தருமபுரி மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. அதற்க்கு பல வருடங்களுக்கு முன் இரண்டுமே சேலம் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. அப்போது சேலம் மாவட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி வந்ததால் சேலத்து மாம்பழம் என்றானது. உண்மையில் கிருஷ்ணகிரி மாம்பழம் என்று இருக்க வேண்டும்! இப்போதும் மாம்பழக் கண்காட்சி வருடாவருடம் நடப்பது கிருஷ்ணகிரியில் தான்!
  /// அதே தான் மக்கா

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!