Sunday, July 14, 2013

ரஜினிகாந்த் ஏன் ஏசி'யில் இருக்க வேண்டும்...?

ஏசி'ல இருந்தால் நல்லா வெள்ளை ஆகிறலாம்னு யாருய்யா சொன்னது ? 
நம்ம ரஜினி, கேப்டன் கூடத்தான் ஏசி'ல இருக்காங்க ஏன் நான் கூட ஏசி'லதான் இருக்கேன், நாங்க இன்னும் வெள்ளை ஆகவில்லையே.

[[பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ஆமா...]]
-------------------------------------------------------------------------
காகிதத்தில் எழுதி வச்சா 
செல்லரிச்சு போகுமுன்னு 

கண்ணுக்குள்ளே எழுதி வச்சேன் 
காதலென்னும் காவியத்தை...!

- எங்கிட்டே மோதாதே 
---------------------------------------------------------------------------

அஞ்சும் பொண்ணாப் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான்னு தமிழ்ல ஒரு சொல் உண்டுன்னு என் மலையாளி நண்பன் ஒருத்தன்கிட்டே சொன்னேன், போடாங் கொய்யான்னு அவன் ஒரு கதை சொன்னான்.
"கேரளாவில் மூன்றோ நான்கோ பெண் குழந்தைகள் பெற்ற பெற்றோர்கள் பாக்கியவான்கள், ராஜா மாதிரி கால்மேல் கால்போட்டு உக்கார்ந்து சாப்பிடலாம், காரணம் சொல்றேன் கேளு......முதல் குழந்தையை மட்டும் பத்தாங் கிளாஸ் படிக்க வைத்தால் போதும் அப்புறம் அது எப்பிடியாவது நர்சுக்கு படிச்சு எங்கேயாவது வேலைக்கு சேர்ந்திடும்.

அதோடு பெற்றோர்களின்  கடமை ஓவர், அந்த பொண்ணு சம்பாதிச்சு அடுத்த தங்கச்சியை இன்ஜினியரிங் படிக்க வச்சுட்டு வெளிநாடு போயிரும், அடுத்தவள் சம்பாதித்து அடுத்த தங்கச்சியை எம்பிபி எஸ் படிக்க வைத்து டாக்டராக்கி விடுவாள்.

இப்பிடியே சொல்லிட்டே போகலாம்....அடுத்து....

வெளிநாடு போன அக்கா அங்கேயே இன்ஜினியரிங் வேலைக்கு தங்கச்சியை அழைத்துக் கொண்டு அங்கேயே மனசுக்கு பிடித்தவனை ஊரில் வந்து கல்யாணம் செய்து கொள்கிறாள் மற்றவர்களும் அப்படியே....! வாழ்க்கை ஜெகஜோதியாக ஜொலிக்குறது அவர்கள் தம் வீட்டில்...!

இப்போ சொல்லு எப்பிடி அரசன் ஆண்டி ஆவான்னு ? பெற்றோர்கள் கால்மீது காலை மட்டும் அல்ல தலையணையும் வைத்து சுகித்து வாழ்கிறார்கள்...போடாங்................ நீயும் உன் பழமொழியும்....!"

நான் : இல்ல சேட்டா  இந்த மானம் மரியாத........[[இடைமறிக்குறான்]]

"போடோ  ரெயிம...."

அப்போ இந்த சொல்லு தமிழ்நாட்டுக்கு மட்டும்தானா.....அவ்வவ்.....
-------------------------------------------------------------------------------------

சாதாரணமா பேக்கிங் செய்யப்பட்ட ஜூஸை ஒரு குலுக்கு குலுக்கி விட்டு குடிப்பதுதானே வழக்கம் ? இங்கே ஒரு நாதாரிப்பய மினரல் வாட்டரை வாங்கி குலுக்கிட்டு [[அன்னைக்கு பீரை குலுக்கி லேப்டாப்பை நாசமாக்குன அதே பன்னாடைதான்]]  குடித்தான் பாருங்க விடுவேனா நானு............ எடுத்தேன் பாருங்க ஓட்டம், வீட்டுலப் போயிதான் நின்னேன்.....சேருறது எல்லாமே எகன்னை மொகன்னையாதான் இருக்கானுங்க.

டிஸ்கி : எப்பிடியெல்லாம் தலைப்பு வைக்கவேண்டி இருக்கு பாருங்க, பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி ச்சே மனோ.....20 comments:

 1. தமிழ் பழமொழி மலையாளத்தில் பொய்த்துவிட்டது , கவிதை ரசித்தேன். நன்றி

  ReplyDelete
 2. ரஜினிகாந்த் ஏன் ஏசி'யில் இருக்க வேண்டும்...?

  இது பறுவாயில்ல .பல பேர் ஓசியிலயே இருக்குறாங்க .அதுக்கு இது
  ஒரு சப்ப மேற்றர் சகோ :))))))

  ReplyDelete
 3. சாதாரணமா பேக்கிங் செய்யப்பட்ட ஜூஸை ஒரு குலுக்கு குலுக்கி விட்டு குடிப்பதுதானே வழக்கம் ? இங்கே ஒரு நாதாரிப்பய மினரல் வாட்டரை வாங்கி குலுக்கிட்டு [[அன்னைக்கு பீரை குலுக்கி லேப்டாப்பை நாசமாக்குன அதே பன்னாடைதான்]] குடித்தான் பாருங்க விடுவேனா நானு............ எடுத்தேன் பாருங்க ஓட்டம், வீட்டுலப் போயிதான் நின்னேன்.....சேருறது எல்லாமே எகன்னை மொகன்னையாதான் இருக்கானுங்க.

  நானும் ஏதோ அருவாள தூக்கீற்றீங்க என்று பார்த்தால் வடிவேல மிஞ்சீற்றீங்க சகோ :)))))))))))))))

  ReplyDelete
 4. கேரள மக்கள் உழைப்பாளிகள். பிழைக்கத் தெரிந்தவர்கள்.எந் சூழ்நிலைக்கும் ஏற்று தன்னை மாற்றிக கொள்வதால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
  நல்ல கவிதையை புடிச்சி (படிச்சி) போட்டிருக்கீங்க,

  ReplyDelete
 5. ஹா.. ஹா... கடைசி பஞ்ச் கலக்கல்....

  ReplyDelete
 6. புரூட் சாலட்டை ரசித்த ருசி
  தகவல்களை வழக்கம்போல நகைச்சுவையுடனும்
  ரசிக்கும்படியாகவும் சொல்லிப்போனது மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. ரசிக்க வைக்கும் தகவல்களுடன்...

  கவிதை... அண்ணே... பிரமாதம்...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. மக்கா....
  உங்களுக்கு மதிய லஞ்ச் ஒரு சேச்சி வந்து தரும்னு சொன்ன நியாபகம்....

  ஹா ஹா...

  ReplyDelete
 9. ஹஹா அறிவாளி அறிவாளி

  ReplyDelete
 10. மலையாளிகளை பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை, அவர்களது முன்னேற்றத்தில் மானம் மரியாதை மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது

  ReplyDelete
 11. ரஜினியும் ஏசில இருக்காரு, நீங்களும் ஏசில இருக்கீங்க, அவரும் கருப்பு, நீங்களும் கருப்பு, அவரும் அடிப்பாரு, நீங்களும் அடிக்கிறீங்க, கூட்டிக் கழிச்சுப்பாத்தா எல்லாம் கரெக்டாத்தாண்ணே வருது........?

  ReplyDelete
 12. மினரல் வாட்டரை பழக்க தோசத்துல குலுக்கி இருக்க போறாண்ணே......

  ReplyDelete
 13. கேரளக்காரர்களின் சில செயல்கள் முன்மாதிரி இருக்கு பாராட்ட வேண்டும்.கவிதை ரசனையைக்கூட்டுக்கின்றது.அமெரிக்கா எல்லாம் வேண்டாம் மனோ அண்ணாச்சி அப்படியே பாரிஸ் வாங்கோ பாதுகாப்பாக அடிப்படியில் இருக்களாம்:)))))

  ReplyDelete
 14. கவிதைகள் அருமை! மலையாளிகள் கதை யோசிக்க வைத்தது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 15. ஹா..ஹா.. அந்த கேரளா நாட்டுப் பெண்களின் விளக்கம் அருமை தல... கேரளா என்றாலே இப்போ நர்சுகள் தான் ஞாபகத்துக்கு வராங்க..

  ReplyDelete
 16. ஏன்....மனோ...சும்மா இருந்தா...போய் தூங்குயா.....

  ReplyDelete
 17. ஆஹா தலைப்பிலேயே கலக்கறீங்க மனோ! :)

  ReplyDelete
 18. தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

  Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html

  ReplyDelete
 19. அன்பின் மனோ - வலைச்சரம் மூலமாக இங்கு வந்தென் - படித்தேன் - இரசித்தேன் - நல்லலவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!