சைக்கிள்ல குரங்கு பெடல் மிதிச்சு பழகுனப்போ ஒரு பாட்டி மீது போயி மோதி கீழே தள்ளிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடும்போது "எலேய் அருதப்பய மொவன எலேய் நீ துரைராசு மொவன்தானேலேய் [[மகன்]] போலெய் போலெய் உன் வீட்டுக்கே வந்து உன்னை கொன்னேப்புடுவேன்"ன்னு சொல்ல...
அப்புறமாதான் தெரிஞ்சிது எங்க அப்பாவும் சின்ன
பிள்ளையில இந்த பாட்டி மேலே இதே ஸ்டைல்ல சைக்கிளை ஏத்தி இருக்கார், அதான்
கரெக்ட்டா நான் யாருன்னு கண்டுபிடிச்சுருக்கு கிழவி அவ்வவ்....!
எங்க அப்பா சிரிச்ச சிரிப்பு இருக்கே....இப்பவும் அப்பா சிரிப்பு காதில் கேட்கிறது இனிமையாக....!
------------------------------ ------------------------------ ---------------------
அமேரிக்கா வாங்க, கனடா வாங்க,
ஆஸ்திரேலியா வாங்க, சிங்கப்பூர் வாங்க, மலேசியா வாங்க, தாய்லாந்த் வாங்க,
பிலிப்பைன்ஸ் வாங்க, லண்டன் வாங்க, பாரீஸ் வாங்க, சுவிஸ் வாங்க, துபாய்
வாங்க, எகிப்து வாங்க, எத்தியோப்பியா வாங்க, இஸ்ரேல் வாங்கன்னு
கூப்பிடுறாங்களே அல்லாமல் ஒரு செல்லமும் பிளேன் டிக்கெட் அனுப்புறேன்னு
சொல்லவே மாட்டேங்குறாங்க, இது எனக்கு மட்டும்தானா ?
------------------------------ ------------------------------ ------------------------
இப்பமும்
ஊருக்கு போனால் காலை ஆறு மணிக்கு மேல எங்க அம்மா என்னை தூங்க அனுமதிப்பது இல்லை,
எழும்பலைன்னா தெரியாத மாதிரி தண்ணீர் என் முகத்துக்கு வந்துவிடும்.
என் பையன் இப்போ பனிரெண்டு மணி வரை தூங்குறான் அவனை என்ன செய்தும் எழுப்ப முடியவில்லை என்கிறாள் வீட்டம்மா.
"சரி
சரி தூங்கட்டும் தூங்கட்டும், உத்திரவாத காலம்னு ஒன்னு வருமில்லையா அப்போ
தூங்க முடியாதே இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும் விடு" என்றேன்...!
------------------------------ ------------------------------ -------------------------
குழந்தைகள்ன்னா
எனக்கு உசிருன்னு தெரிந்தே பிரித்து வைத்துவிட்டானா ஆண்டவன்....ஐ மிஸ்
யூடா செல்லங்களே, என் குழந்தைகள், அக்காமார், அண்ணனுங்க குழந்தைகள் படை சூழ
தெம்பா நடந்து போன, பர்ஸ் பதம் பார்க்கபட்ட நாட்கள் கவிதையின் உச்சமான
பனித்துளி நினைவுகள்...!
------------------------------ ------------------------------ -------------------------
எங்கள் சொந்தத்தில் ஒரே குடும்பத்தில் தமிழ் பேராசிரியர் மற்றும் ஹெட் நர்ஸ் தம்பதிகளின் பிள்ளைகள் இருவர் அதில் ஒருத்தன் பாதிரியார் [[பாஸ்டர்]] ஆகிட்டான், இன்னொருத்தன் மகா ரவுடி......!
இது எப்பிடி ஒரே வீட்டுக்குள் சாத்தியமாயிற்று என்று இப்போதும் எனக்கு ஆச்சர்யமே....!எங்கள் சொந்தத்தில் ஒரே குடும்பத்தில் தமிழ் பேராசிரியர் மற்றும் ஹெட் நர்ஸ் தம்பதிகளின் பிள்ளைகள் இருவர் அதில் ஒருத்தன் பாதிரியார் [[பாஸ்டர்]] ஆகிட்டான், இன்னொருத்தன் மகா ரவுடி......!
------------------------------
தன் வாழ்வில் முன்னேற விரும்புபவன் ஆறு குணங்களை விட்டுவிட வேண்டும் என்கிறது விதுரநீதி. அவை 1. தூக்கம், 2. சோர்வு, 3. அச்சம், 4. கோபம், 5. சோம்பேறித்தனம், 6. காரியத்தை ஒத்திப்போடுதல்.
------------------------------
பொறுத்தவன் பூமி ஆள்வான்....
- மனோ'தத்துவம் : பொறுத்தவன் ஆண்டி ஆவான்...!
மலரும் நினைவுகள் அருமை.
ReplyDeleteபொறுத்தார் பூமி ஆள்வார்
பொறுங்கள் ஒரு நாள் பிளேன் டிக்கெட் வரும்
///அமேரிக்கா வாங்க, கனடா வாங்க, ஆஸ்திரேலியா வாங்க, சிங்கப்பூர் வாங்க, மலேசியா வாங்க, தாய்லாந்த் வாங்க, பிலிப்பைன்ஸ் வாங்க, லண்டன் வாங்க, பாரீஸ் வாங்க, சுவிஸ் வாங்க, துபாய் வாங்க, எகிப்து வாங்க, எத்தியோப்பியா வாங்க, இஸ்ரேல் வாங்கன்னு கூப்பிடுறாங்களே ///
ReplyDeleteஇப்படி எல்லா நாடுகளையும் வாங்க வருகிற வசதி படைத்தவருக்கு டிக்கெட் வாங்கி தரணுமா என்ன?
சுகமான நினைவுகளை சுபராக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteபாட்டியின் ஞாபக சக்தி கலக்கல்
குழந்தைகளின் பிரிவு வரிகளில் புரிகிறது...
ReplyDeleteவிதுரநீதி அருமை... உண்மை...
குழந்தைகளைப் பிரிந்து இருப்பது கஷ்டம் தான் மனோ.....
ReplyDeleteபிரிவு கடினமே... வேறுவிதமான பிரச்சனைகள் இல்லையென்று ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்...
ReplyDeleteசைக்கிள் சிரிக்க வைத்தது.
ReplyDeleteகுழந்தைகள் -- இங்கிட்டும் அதே நிலைதான் அண்ணா....
பசங்க தூங்கும்போது பார்த்தா அவ்வளவு ஆசையா இருக்கு..... எந்திருச்சு விளையாட ஆரம்பிச்சா டெர்ரரா இருக்கு........எந்த பாட்டி என் வீட்டு கதவை தட்டுமோ அப்படின்னு இருக்கு :-)
ReplyDeleteகுழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய அவல நிலையை நானும் ஒருகாலத்தில் அனுபவித்திருக்கிறேன். மணம் முடித்து வெளிநாட்டில் குடியேறியுள்ள என் மகள் இப்போதும் கூறுவாள். 'எங்களுக்கு வேணுங்கறப்போ நீங்க இருக்கலையேப்பா! நாங்க அம்மாக் கூடத்தான வளர்ந்தோம்?' அது காலத்தின் கட்டாயம் என்பது அவர்களுக்கு புரிந்ததே இல்லை. அன்று குழந்தைகளை விட்டு பிரிந்திருந்த பல பெற்றோர்கள் இன்றும் அதே நிலையில்தான்.... தனிமையில்.... அன்று தனித்திருந்த பிள்ளைகள் இன்று தங்கள் குடும்பத்துடன் வெளியூரில், வெளிநாட்டில் வாழ்வதை வீடியோ சாட்டில் பார்த்த்க்கொண்டு.....அன்று நாம் ஏன் பிரிந்திருக்க வேண்டியிருந்தது என்று அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்று நினைத்திருந்த பெற்றோர் இன்று அவர்கள் ஏன் தங்களை விட்டு பிரிந்து போய்விட்டனர் என்று புரிந்துக்கொள்ள முடியாமல்.....
ReplyDelete//கண்டுபிடிச்சுருக்கு கிழவி அவ்வவ்....!// ஹா ஹா ஹா
ReplyDeleteஅப்போ அடுத்து உங்க குழந்தைகளும் அந்த பாட்டி மேல சைக்கிள் விடுவாங்களோ?
ReplyDeleteஎன்ன மூணுதலைமுறையிடமா? பாட்டி இருக்குமா!!!
Deleteபிரிவு என்பது துயரமானது தான்..ஆனாலும் இது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது.
ReplyDeleteபிரிவு என்பது வருத்தம் தருவதே;ஆனால் வாழ்க்கை ஓட்டத்தில் சிலருக்கு அவசியமானதாகி விடுகிறது.என்ன செய்ய?
ReplyDeleteநல்ல கதம்பம்
சுவையான பகிர்வு! குரங்கு பெடல் சைக்கிள் அனுபவம் எனக்கும் உண்டு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபிரிவுகளின் துயரம் மனதை வாட்டும் போது கவிதை என்பதே
ReplyDeleteமருந்தாகிறது .மன வலிகளை மறந்து மகிழ்வுடன் வாழுங்கள் .
சைக்கிலோட நிக்கும் சின்னப் பய புள்ளைங்க தினாவெட்டப் பாரு
யாரு என்ன சொன்னாலும் ஓடுவத நிறுத்த மாட்டோமில்ல :)
இதுதான் குழந்தைப் பருவமா .மறக்க முடியாது அந்த நினைவுகளை .
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ .
சைக்கிளில் குரஞ்குப்பெடலும்,தபால்பை டரவுசரும்,கையோரம் கிழிந்த சட்டையுமாய் திரிந்த காலங்கள் நம்மில் நிறைந்து பரிமாறப்பட்டவையாய்/
ReplyDeleteநல்ல பகிர்வு.குழந்தைகளைப்/பிள்ளைகளைப் பிரிந்து ஊருக்கு சென்றிருக்கும் போதில் வலி எனக்கும் தெரிவதுண்டு,கூடவே அவர்களும்..............ஹூம்!///இடமிருந்து வலமாக இரண்டாவது 'வீராங்கனை' எனக்கு டிக்கட் போட்டிருக்கு,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteபிரிவுகள் விரும்பிவருவது இல்லை ,என்ன அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் எல்லாம்! பாட்டி சிரிப்பு வெடி :)))சில நேரங்களில் சில மனிதர்கள் போல போதகர் ஒரு புறம் ரவுடி இன்னொருபுறம்!
ReplyDeleteம்ம்ம் ரசிக்கும் விதமான பகிர்வு!
வருஷத்துக்கு 11 மாதங்கள் பிள்ளைகளை பிரிந்து இருந்து விட்டு ,12 வது மாதம் அவர்களுடன் இருக்கும் போது அவர்கள் எதை செய்தாலும் ரசிக்கத்தான் தோன்றுகிறது .அதட்டவோ அல்லது அடிக்கவோ தோன்றுவதில்லை. பிள்ளைகள் உடன் இருந்து வளர்வதை பார்க்கும் பாக்கியம் நமக்கு இறைவன் இந்த ஜென்மத்தில் தரவில்லை போலிருக்கிறது .
ReplyDelete